​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 13 February 2022

சித்தன் அருள் - 1086 - திருவோணம் நட்சத்திர பிரார்த்தனை- விளக்கம்!



அகத்தியப் பெருமானின் ஒரு உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை​ (நீரில் ஜபம் செய்து, பூமியில் அர்க்கியமாக விட)​ அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்​ ​​சொன்னார். அதன் படி, அதை செய்ய விரும்பும் அடியவர்களுக்காக, சித்தன் அருள் அருளில் ஒவ்வொரு மாத திருவோணம் நட்சத்திர நாட்கள் தெரிவிக்கப்படுகிறது.

அது ஏன் திருவோண நட்சத்திரத்தை தெரிவு செய்து நமக்கு உரைத்தார் என்ற கேள்வி எழுந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக எங்கு தேடியும் பதில் கிடைக்க வில்லை.

​சமீபத்தில், சித்தன் அருளுக்காக, "கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகளை" தேர்ந்தெடுக்கும் பொழுது, இந்த கேள்விக்கான பதில் கிடைத்தது.

"ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, யமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள்.  ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்ய வேண்டும். அச்சிரவணர்களை ஆராதித்தால், அந்த ஜீவன் யமபுரியை வந்து சேர்ந்த போது, அவன் செய்த பாபங்களையெல்லாம் எடுத்து யமனுக்குச் சொல்லாமல், அவன் செய்த புண்ணியங்களை சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள். ஆகையால், பன்னிரு சிரவணர்களை ஆராதித்து வருவது மிகவும் நன்மையை மறுமைக்குத் தரவல்லது" என்று திருமால் கூறியருளினார்.​

நான்முகன் ஒரு தர்ப்பைப்  புல்லை எடுத்தெறிந்து நீண்ட கண்களையுடையவர்களும் மிக்க மேனியழகுயுடையவர்களும், மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து, யமதர்மனைப் பார்த்து "தர்மனே!உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல் புரிவதையும் அவர்களுடனேயே இருப்பவர்களைப் போல, இப்பன்னிருவரும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதையெல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள்.  இவர்களைக் கொண்டு ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, சிஷையும் ரக்ஷையும் செய்வாயாக!". என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தார்.  காலனும் பிரமனை வணங்கி விடைபெற்று அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தையடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும் பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத்  தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயினன்.  

இந்த 12 ச்ராவணர்கள் ஒன்று சேர்ந்து "சிரவண நட்சத்திரமாக" இருப்பதால், அகத்தியப் பெருமான் நம்மை திருவோண நட்சத்திரத்தன்று பிரார்த்தனை செய்து ஒரு புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வழி காட்டினார். "சிரவணம்" என்கிற வடமொழி சொல், தமிழில் "திருவோணம்" என்று கூறப்படுகிறது.

எப்படிப்பட்ட மிகச்சிறந்த வழி இது என் உணர்ந்தார்கள், குருநாதர் கூறுவது போல் செய்து, புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்! 

13 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. அகஸ்தியர் அருளால்,அவர் என்னையும் நேசித்து இப்பூஜையை என்னையும் செய்ய வைத்து விட்டார். மகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
    Replies
    1. I am doing regularly and i am forcing to my family member's also to do this poojai.

      Delete
  3. அப்படியே அந்த 12 ச்ராவணர்கள் பெயர்களை சொல்லி அவர்களை பூஜை செய்யும் முறைகளையும் சொல்லுங்கள் மகரிஷி..

    ReplyDelete
  4. புண்ணிய ஆத்மா எதை பற்றியும் கவலை பட தேவை இல்லை. அவனுக்கு தப்பிக்க வழி தேவை இல்லை. பாவம் செய்பவர் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை ஏன் காப்பாற்ற வேண்டிய வழிபாடு பற்றிய ரகசியத்தை சொல்கிறீர்கள் அகத்தியரே... பூமியில் தான் சட்டத்தில் ஓட்டை உள்ளது என்று நினைத்தால் அங்குமா ஓட்டை உள்ளது... ஒன்று மட்டும் புரிந்தது. அகத்தியர் தன் பக்தர்களுக்காக எதையும் செய்வார் எல்லா தெய்வரகசியத்தையும் சொல்லி காப்பாற்ற துடிக்கிறார் என்று...நடத்துங்கள் மகரிஷி.....

    ReplyDelete
    Replies
    1. Mam, I also feel big paavams should not be hided. I think it should be reasonable ones like unknowingly spoken harsh words or killing insects etc... or realized mistakes. I do not think big ones are forgiven. Even then if Agathiyar's devotees have sins carried to their next birth, Agathiyar mentions he talks to Brahma for all his devotees. He takes care of his devotees in their next births too.

      Delete
    2. வணக்கம்! அடியவர் ரம்யா சொன்னது ஓரளவுக்கு சரி. சித்த மார்க விதிமுறை படி, தன்னிடம் சரணடைந்த ஒரு ஜீவனிடம் கருணை காட்ட வேண்டும். ஆனால், அந்த ஜீவனுக்கான நிலையை இறைவனின் தீர்ப்புக்கு விட்டு, சித்தர்கள் உதவி செய்வார்கள். குற்றங்கள், இருவகை படும். அன்னிக்கு கூடிய குற்றம், மன்னிக்க முடியாத குற்றம். மன்னிக்க கூடிய குற்றம் கரைக்கப்படும். மன்னிக்க முடியாத குற்றத்தை, ஏதேனும் ஒரு ஜென்மமெடுத்து அந்த ஆத்மா, கழிக்கத்தான் வேண்டும்.

      ஆதலால், ச்ராவணர்களை வழிபடு என்று கூறியது அனைத்து குற்றங்களையும் கரைத்து விடும் என்று நினைக்காதீர்கள். மன்னிக்க கூடாத குற்றங்கள், இதில் சேராது.

      Delete
    3. புண்ணிய ஆத்மா என்றால் இந்த பூமியில் பிறக்கவே மாட்டார்கள் என்பது பெரியோர் சொன்னது. அதனால் ஐயா சொல்வது போல் மன்னிக்க கூடியதை மன்னித்து விடுவார்கள். அகத்தியர் பிள்ளைகள் நாம் இப்பூவுலகை மத்த உலகோடு ஒப்பிட்டு பெரியவர் சொன்ன வாக்கை நாம் இகழ்ந்து பேச கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

      Delete
    4. *🌸அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*🙏

      *🌸மனித மதியானது விதிவழியாக செல்லும்பாெழுது இறைவனும், நாங்களும் வெறும் பார்வையாளராகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது. அது எங்ஙனம் சாத்தியம்? அது எங்ஙனம் நியாயம்? என்றெல்லாம் மனிதன் வினவலாம். படைத்த இறைவனுக்கு பாெறுப்பில்லையா? ஞானிகளுக்கு பாெறுப்பில்லையா? மனிதர்கள்தான் அறியாமையால் தவறு செய்தால் அல்லது உழன்றால் அதிலிருந்து அவர்களை கரை சேர்க்க வேண்டாமா? என்ற ஒரு வினா எழலாம். அப்படி கரை சேர்ப்பதற்குதான் விதியை எதிர்த்து ஒரு மனிதன் பயணம் செய்ய வேண்டும் என்பதற்குதான் இறைவனின் அருளாணைக்கேற்ப யாம் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலையிலே சில நுணுக்கமான வாக்குகளையெல்லாம் கூறுகிறாேம். ஆனால் 'நடைமுறையில் இவையெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. நடைமுறையில் இவற்றை பின்பற்ற முடியாது' என்று மனிதன் தனக்குத்தானே சமாதானம் கூறிக்காெண்டு மீண்டும் விதிவழியாகத்தான் செல்கிறான்.*

      *🌸கேள்வி : சத்சங்கமாக அன்பர்களை அழைத்து வாக்கு அருள வேண்டும் :*🙏

      *அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

      *🌸இறைவன் அருளாலே மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா? மகான்கள், மகான்கள் நிலையிலேயே மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் 'எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்?' என்பதை புரிந்துகாெள்ளாமல் அதற்கு குதர்க்கமான பாெருளைத்தான் பல மனிதர்களும் காெள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயாே அவர்கள் விதி அனுமதித்தால், யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலம் வழி நடத்துவாேம்.*

      *🌸பாெதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணிணாலும், எமைப் பாெருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறாேம். எனவே இறைவனிடம் எல்லாேரும் பிராத்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.*

      🙏 *-சுபம்-* 🙏

      *🌸ஓம் லாேபாமுத்ரா தேவி சமேத அகத்தீசாய நம! 🙏*

      *🙏 குரு திருவடி சரணம்!🙏*

      *🌸குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும், தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு (ஒரு சில வருடங்களுக்கு முன்).*

      Delete


    5. *🌸ஆன்மீகம் என்றாலே தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) நாங்கள் (சித்தர்கள்) சுட்டிக்காட்டுகின்ற வழியானது மிக, மிக ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே ஏற்றுக்காெள்ளப்படாத வழிமுறையாகத்தான் இருக்கும். நீ கற்ற, கற்கின்ற ஆன்மீக நூல்கள், நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன், உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள், இதுவரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம்கூட நாங்கள் (சித்தர்கள்) காட்டுகின்ற வழியிலே முரணாகத் தாேன்றும்.*

      *🌸எமது வழிமுறையில் வரவேண்டும் என்று நீயாே, உன்னாெத்து சிலராே எண்ணலாம். நாங்கள் (சித்தர்கள்) வாழ்த்துகிறாேம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையாே அல்லது உளவியல் நன்மையாே வந்துவிடாதப்பா. அதிக துன்பங்களும், அவமானங்களும் வரும். அதை சகித்துக் காெள்கின்ற பாெறுமையும், சகிப்புதன்மையும் இருந்தால் எமது (அகத்திய மாமுனிவர்) வழியில் நீயும் வரலாம். யாங்கள் (சித்தர்கள்) தடுக்கவில்லை. வந்து வெற்றிபெற நல்லாசி கூறுகிறாேம்.*

      *🌸யாம் பலமுறை கூறியிருக்கிறாேம். நாங்கள் (சித்தர்கள்) பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லாேரும் இறைவனுக்கும், எமக்கும் சேய்கள்தான் (பிள்ளைகள்தான்). ஆனாலும்கூட இறைவனுக்கும், மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும், மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பாெழுது அகலும்?*

      *🌸தீவிர பற்று, தன் பிள்ளைகள் மேல் காெண்டிருக்கின்ற பாசம், அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும்கூட தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமாபாதகமாகத் தாேன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை.*

      🌸எனவே *சுயநலமும், தன்முனைப்பும், தீவிர பாசமும், ஆசையும், பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனை காலம் இருந்தாலும், இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்துகாெள்ள முடியாது.*

      🙏 *-சுபம்-*🙏

      *🌸ஓம் லாேபமுத்திரா தேவி சமேத அகத்தீசாய நம!🙏*

      *குரு திருவடி சரணம்!*🙏

      *🌸குறிப்பு : "தினம் அகத்தியர் வாக்கு" இப்பதிவு தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

      Delete
  5. ஓம் அகத்தீசாய நம மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  6. Om Namashivaya
    Om Namashivaya
    Om Namashivaya

    ReplyDelete
  7. அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்

    ReplyDelete