ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான். அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு.
- அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தலத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது.
- சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது.
- சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
- இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கின்றார்.
- இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன.
- 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார்.
- சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.
- இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர்.
- இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை.
- இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
- முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.
- குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம்.
- திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு.
- இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..................தொடரும்!
பிரம்மம்
ReplyDeleteமுருகப்பெருமான் அருளிய 'பிரம்மம்' எனும் இந்த நூல் கலியுகத்தின் நான்காம் மறை நூலாகும். நான்மறை நூல்களிலே உயர்வு நிலைக்கொண்ட சூட்சம இரகசியங்களை இந்நூல் விளக்குகின்றது. அறியாமை விலகி, அஞ்ஞானமும் அழிந்து ஒளிரூபம் கண்டிடவும், ஒலிரூபம் கொண்டிடவும், நான்காம் வேத நூலாகிய "பிரம்மம்" உதவிடும். இந்நூலினைக் கரங்களிலே ஏந்தி நின்றால் ஆத்மக் கருக்கள் யாவும் விடுதலையுறும் என்று முருகப்பெருமான் கூறுகின்றார். 'பிரம்மம்' எனும் நாமம் கொண்ட இவ்வேத நூல் சுழுமுனை நாடிகள் குறித்தும், சூட்சம நாடிகள் குறித்தும், சூட்சம வழித்தடங்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றது. சூனியப் பிரம்மம் எனும் வெற்று நிலையினை எவ்விதம் உணர்வது என்றும் அற்புதமாக விளக்குகின்றது இந்நூல். நான்காம் வேத நூல் என்கின்ற இறுதி நூலான 'பிரம்மம்' கபால வாயில் குறித்தும், மோட்சநிலை என்பது என்ன என்றும் தெள்ளத்தெளிவாய் விளக்குகின்றது. எத்தருணத்தில் கபால வாயில் என்பது திறவு கொள்கின்றது என்றும், அதை நாம் எங்கனம் உணர்வது எனும் சூட்சம அறிவினை புகட்டுகின்றது. எவ்விதம் பஞ்சபூத மூலக்கூறுகள் அனைத்தும் சிரசின் உச்சியினை அடைகின்றது என்றும், அவையாவும் எவ்விதம் சூட்சம வாயில்களின் மூலம் சிரசின் மையத்தினை அடைகின்றது என்றும் வியப்பூட்டும் வகையில் வர்ணிக்கிறது இந்நூல். மூன்றாவது விழி, மூன்றாவது செவி, மூன்றாவது நாசி மற்றும் வாய்ப்பகுதி குறித்து ஆறுமுகனார் எடுத்துரைத்திட்டக் கருத்துக்களை அறிந்தால் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம். பிரமத்தினை கற்றறிந்தால் ஞானம் பெருகிடும். பிரம்மத்தினை உணர்ந்து கொண்டால் பரப்பிரமத்தினையும் உணரலாம், பேரானந்தம் அடையலாம்.
https://enlightenedbeings.org/
அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.
இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம் என தொடர்ந்து வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம். அப்போது தான் சென்ற ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.
கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்)
10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.
Read more - https://tut-temples.blogspot.com/2020/10/tut_19.html
நீங்கள் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/IbkU3xfCRumHLVJPI8yoYR
சம்போ மகாதேவ தேவா மகா நீலகண்டா மகா தாட்டகாசா சரணம் சரணம் ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDeleteShambo Mahadeva
ReplyDelete