​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 4 October 2020

சித்தன் அருள் - 933 - ஆலயங்களும் விநோதமும் - ஐயாறப்பர் கோவில், திருவையாறு, தமிழ்நாடு!


திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.

சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார். அத்துடன் நில்லாது, ஐயாற்றெம்பெருமான் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன

இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்துவந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்துகொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன், இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரியவந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். ஆகவேதான் தன்னைத்தானே வழிபடுவது என்ற ஐதீகத்தில் இரு இலிங்கங்களும் ஒரு அம்பாளும் வைத்து பூசிக்கப்படுகின்றன. இந்த அற்புதத்தையொட்டியே இன்றும் இக்கோயிலில் சித்திரை ஆயில்யத்தன்று சுவாமி புறப்பாடும் செய்து, இறைவனாக வந்த சிவாச்சாரியார், பூஜை முறையினராகிய சிவாச்சாரியார் என்ற ஐதீகத்தில் இருவருக்கும் பரிவட்டம் சார்த்தி, சுவாமியுடன் வலம் வரும் சிறப்பு விழா நடைபெறுகின்றது. இந்த அதிசயத்தையே மாணிக்கவாசகர் தம் அமுத வாக்கில் –ஐயாரு அதனில் சைவனாகியும்– என்று குறித்துள்ளார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் “தரும சம்வர்த்தினி” என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். 

எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். 

மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுத்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. 

இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத் ததக்கது.

இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரைப் பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு “ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி” எனப் பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு “ஐயாறப்பா” என உரக்க குரல் கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. இந்த அதிசயத்தை வேறு எங்கும் காண முடியாது!

இக்கோவிலின் தெற்கு கோபுரவாசலில் அமர்ந்திருக்கும், ஆட்கொண்டீஸ்வரருக்கு, வடைமாலை சார்த்துகிறார்கள். சிலவேளை லட்சம் வடகளினால் ஒரு மாலை உருவாக்கி சார்த்துகிறார்களாம்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

8 comments:

  1. Thank u very much sir for your posts which are precious to save. But it is very time consuming fir u to type all the details. I salute sir. U are dedicating ur time for the sake of us. U r the thudhan from thatha to us. I know he is with u always.

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    Very true ayya. You are giving daily arul with so much effort by typing everything. Thanks a lot ayya.

    எம்பெருமான் அகத்தியர் அய்யன் தங்களுக்கு எல்லா அருளும் தந்து நல்லபடியாக தங்களைப் பார்த்துக்கணும்

    ReplyDelete
  3. Sir, Thirumanjanam for perumal in kodaganallur will be conducted by thatha on 29.10.20.I want to
    Participate and do some work. Please guide ma. Is there rest room facility? Or else we can arrange readymade ones for the devotees sir

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் லட்சுமி அவர்களே!
      இந்த முறை, அகத்தியப்பெருமான் நடத்துகிற  கோடகநல்லூர் பூஜை, எப்படி நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. இன்றுவரை, கேரளா தேசத்திலிருந்து, தமிழகத்துக்குள், பொது போக்குவரத்து தொடங்கவில்லை. இப்போது இருக்கும் சூழ்நிலையில் (31/10/2020 வரை) ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்படுகிறது. தினமும் நோய் வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை, இங்கும் அங்கும் கூடி வருவதால், எந்நேரமும் முழு ஊரடங்காக மாறலாம் என்று பேச்சும் இருக்கிறது.
      தமிழகத்துக்குள் இருப்பவர்கள், கோடகநல்லூர் செல்ல முடிந்தால், நதியில் நீராடி, இறைவனை தரிசித்து, பிரார்த்தனையை கொடுத்துவிட்டு செல்லலாம். இதற்கு மேல் அபிஷேக பூஜைகள், நடக்கும் என்று அடியேனுக்கு தோன்றவில்லை.
      அங்குள்ள வீடுகளில், கேட்டால், பெண்களுக்கு அனுமதி கொடுப்பார்கள்.
      ஏதேனும் செய்தி இருந்தால், அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
      ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
      அக்னிலிங்கம்!

      Delete
  4. Ok sir. Thank u sir. Let us pray for the good.

    ReplyDelete
  5. ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    அற்புதம் ஐயா 🙏

    ReplyDelete
  6. ஓம் நமசிவாய ஓம் அப்பா போற்றி போற்றி ஐயா போற்றி போற்றி ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  7. Aum Nama Shivaya

    ReplyDelete