​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 14 October 2020

சித்தன் அருள் - 943 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ சிவசைலநாதர் கோவில், சிவசைலம், அம்பாசமுத்திரம், தமிழ்நாடு!


சிவசைலநாதர் கோவில், சிவசைலம், அம்பாசமுத்திரம் ஊருக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு, சிவசைலம் சொந்த ஊர். அவரது துணைவி பரமகல்யாணிக்கு பக்கத்தில் அமைந்துள்ள கீழ்ஆம்பூர், தாய் வீடு.

சரி இங்கு தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பொதுவாக எல்லா கோவில்களிலும் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருமண வைபவம் நடக்கும். ஆனால் இந்த கோவிலில் மட்டும், மனிதர்களுக்கு நடப்பதுபோல், மறுவீடு சடங்கு நடத்தப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகு, ஸ்வாமியும் அம்பாளும், கீழ் ஆம்பூருக்கு பல்லக்கில் எழுந்தருளி, மூன்று நாட்கள் இருந்து, அனைவரையும் அருளியபின், சிவசைலத்துக்கு, ஊர்க்காரர்கள் செய்யும், சீர் மரியாதையை வாங்கிக்கொண்டு திரும்பி செல்வர். இதுபோல், இறை மூர்த்தங்கள், வேறு எங்கும் மறுவீடு செல்வதோ, ஊர்காரர்கள் சீர் மரியாதை செய்வதோ கிடையாது. அம்பாளை தங்கள் வீட்டு பெண்ணாகவும், சிவபெருமானை தங்கள் வீட்டு மாப்பிளையாகவும் ஊர்காரகள் பார்ப்பது வேறு எங்கும் கிடையாது.

அங்கு வசித்த அக்னிஹோத்ரி என்கிற தம்பதிகளுக்கு, சந்ததி இல்லாமல் போகவே, அம்பாள் கனவில் வந்து "கிணறு வெட்டுங்கள். அதில் கல்யாணியாக நான் கிடைப்பேன். அதை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள்" என அம்பாள் கூறியதற்கு ஏற்ப, சிலை கிடைக்கவே, அதுவே கீழாம்பூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிவசைலம் கோவிலில் 11 வது நாள் நடக்கும் தேரோட்டத்தில், அம்பாளின் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பர்.

இந்த கோவிலில், சிவன் சன்னதிக்கு முன்பில், ஒரு உரலும், உலக்கையும் வைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாதவர்கள் அதில் போடப்பட்டிருக்கும் மஞ்சளை இடித்து, பொடியாக்கி கொஞ்சம் பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இப்பகுதியை ஆண்ட சுதர்சன பாண்டியன் என்கிற மன்னன், தினமும் இறைவனை தரிசிக்க வருவான். ஒருநாள் மன்னர் வராததை கண்ட, பூஜாரி, மன்னருக்கு அணிவிக்க வைத்திருந்த மாலையை அங்கு வந்து வேண்டிக்கொண்ட ஒரு பெண்மணிக்கு கொடுக்க, அவரும் கழுத்தில் அணிந்துகொண்டார். சோதனையாக அதன் பின்னர் மன்னர் தரிசனத்துக்கு வந்தார். அந்த பெண்மணியிடம் மன்றாடி அந்த மாலையை திருப்பி வாங்கி, மன்னர் வந்ததும் அவருக்கு அணிவித்தார் பூஜாரி. மன்னர் உற்று பார்த்த பொழுது, ஒரு நீண்ட முடி அந்த மாலையில் இருந்தது. இதைக்கண்ட மன்னர் கோபமுற்று பூஜாரியை வினவ, அவரும் அது சிவபெருமானின் சடையில் உள்ள முடி என்றுவிட்டார்.

அவ்வாறாயின் அதை உறுதி செய்ய கர்பகிரகத்துக்கு வெளியே நின்று பார்க்க தீர்மானித்து, எல்லா பக்கத்திலிருந்தும், சுவரில் ஓட்டை போடச்சொன்னான். நேர்மையான பூஜாரியை காப்பாற்ற எண்ணிய சிவபெருமான், மன்னன் எந்த பக்கத்திலிருந்து நோக்கினும், சடை முடி தெரிய அமர்ந்திருந்தார். மன்னரும் அமைதியுற்றார். இன்றும் அந்த துவாரங்கள் வழியாக பார்த்தால், சன்னிதானத்தில் இறைவன் சடை முடியுடன் அமர்ந்திருப்பதை காணலாம்.

இன்றும் லிங்கம் ஜடாமுடியுடன் காட்சி தருவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த கோவிலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியானது, எழுந்து செல்ல தயாராக நிற்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலில், மிகுந்த உயிரோட்டமாக நந்தியின் சிலையை செய்த உடன், அது உயிர் பெற்று கிளம்ப முயற்சித்தது எனவும், உலகின் முதல் சிற்பியான மாயன் இதைக்கண்டு, தன கையிலிருந்த உளியை அதன் மீது எறிந்தார். முதுகில் உளிபட்டு, குறை ஏற்பட்டதால், அங்கு சிலையாகவே அமர்ந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நந்தியின் முதுகில் உளி பட்ட தழும்பை காணலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................தொடரும்!

5 comments:

  1. அற்புதம் ஐயா
    ஓம் நமச்சிவாய
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  3. ஒம் ஈஸ்வராய நமக

    ReplyDelete
  4. ஓம் மூத்தோனே போற்றி. ஓம் ஓதிமலை ஆண்டவர் போற்றி.ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி.
    அய்யா வணக்கம் , குமர கடவுளை வணங்க செவ்வாய் , சிவனை வழிபட திங்கட்கிழமை , பெருமாளை வழிபட சனிக்கிழமை என்று நாட்கள் உள்ளதுபோல் சித்தர்களில் அகத்தியர் , நந்திஷ்வர் , போகர் என்று ஒவ்வொரு சித்தர்களுக்கும் உகந்த நாட்கள் பற்றி கூறவும் ( வியாழக்கிழமை குரு நாள் ,மற்ற நாட்களை பற்றியும் கூறவும் ). நன்றி. குரு பாதம் பணிகின்றேன்.

    ReplyDelete
  5. Shambo Mahadeva

    ReplyDelete