​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 25 October 2020

சித்தன் அருள் - 953 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவில், கோடகநல்லூர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லா வருடமும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரமும், திரயோதசி திதியும் ஒன்று சேருகிற நாளில் கோடகநல்லூர் பிரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில், அகத்தியர் உத்தரவின் பேரில், அடியவர்கள் ஒன்று சேர்ந்து பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக பூஜைகளை ஏற்பாடு செய்து வருவதை அறிவீர்கள். அகத்தியர் அடியவர்கள் ஒரு கருவியாகத்தான் செயல்படினும், உண்மையிலேயே, அகத்தியர் பெருமான்தான் இந்த பூசையை நடத்துகிறார் என்பது, முன்பு நடந்த பூஜைகள் சாட்சி.

சித்தன் அருள் 850வது தொகுப்பில், கீழ் வருமாறு உரைக்கப்பட்டிருந்தது.

 "29/10/2020 - வியாழக் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி- உத்திரட்டாதி நட்சத்திரம்.

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."

"இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது."

நம் குருநாதர், அகத்தியப்பெருமான் பூசை செய்ய, பெருமாள் ஆனந்தமாக அமர்ந்து அதை ஏற்று வாங்கிக்கொள்கிற முகூர்த்தம் அது. அந்த நாளில், கோடகநல்லூர் கோவிலில் இருக்கவே கொடுத்து வைக்க வேண்டும்.

தமிழக எல்லை கடந்து வருவதில் பிரச்சினை உள்ளதால், இந்த முறை அடியேனால் பங்கு பெற முடியாது என்பதில் சற்று விசனம் இருப்பினும், அகத்தியப்பெருமான், பூஜை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்கிறார்.

ஆம்! திருமதி. லட்சுமி என்கிற அகத்தியர் அடியவர், அகத்தியர் ஆணையை சிரம் மேற்கொண்டு, அன்றைய தினம் பூஜைக்காக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அகத்தியர் அடியவர்களுக்கு, அதிக சிரமமின்றி கோடகநல்லூர் வந்து போக முடியும். ஆகையினால், அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுதலை வைக்கிறேன்.

பூஜைக்கு முன்னரும், பூஜை முடிந்த பின்னரும், கோவிலை சுத்தப்படுத்தி கொடுத்துவிட்டு செல்லுங்கள். இந்த உழவாரப்பணியை யாரும் செய்யலாம். யாரேனும் மேலும் பங்கு பெற விரும்பினால், திருமதி.லட்சுமியை அங்கேயே தொடர்பு கொண்டு உதவலாம்.

உங்கள் பிரார்த்தனையை, மனதை அகத்தியப்பெருமானிடம் கொடுத்துவிட்டு, அன்றையதினம் உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.

எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பாக மாறும்.

அபிஷேக/பூஜைக்கான பொருட்களை வாங்கி செல்லலாம்.  மறக்காமல் பச்சை கற்பூரம் பெருமாளுக்கு வாங்கிக்கொடுங்கள்.

மற்றவை அகத்தியர் அருளால்!




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

19 comments:

  1. ayya, lakshmi amma vai eppadi thodarbu kolvathu. phone no kuduthaal udhaviyaga irukkum.

    ReplyDelete
    Replies
    1. திருமதி.லட்சுமியின் செல் நம்பர் எனக்கும் தெரியாது. ஒரே வழி, கோடகநல்லூரில் சந்திப்பதுதான்.

      Delete
  2. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  3. Om lobamudra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  4. Om shrimp lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  5. ஐயா, பெருமாள் அபிஷேகம் ஏற்பாடுகள் குருவின் அருளால் செய்ய பட்டு வருகின்றன. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். உதவி செய்ய நினைப்பவர்கள் 29ம் தேதி சற்று முன்னதாக வந்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. என்னால செல்ல முடியாது , என்னால முடிஞ்ச ஒரு 150 அனுப்புறன்.
      100 பெருமாளுக்கு 50 அகத்தியற்கும் அங்க பூஜைக்கு எதாவது வாங்கி கொடுகிரிங்களா?

      Delete
  6. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  7. என்னால செல்ல முடியாது , என்னால முடிஞ்ச ஒரு 150 அனுப்புறன்.
    100 பெருமாளுக்கு 50 அகத்தியற்கும் அங்க பூஜைக்கு எதாவது வாங்கி கொடுகிரிங்களா?

    ReplyDelete
    Replies
    1. No way it is possible, unless you are present in Kodaganalloor. Pray from wherever you are. Thats all.

      Delete
    2. Thank you sir, Pondicherry swaminathan sir accept my request. And I too pray from here.

      Delete
  8. Vanakkam sir, As per ur guidance all will be done with the grace of sri lobha mudra samedha agathia peruman. Om lobha mudra samedha agasthia peruman thiruvadigale potri.

    ReplyDelete
  9. Good evening Sir, I would like to send some money for poojai.Please let me know how to send?

    ReplyDelete
    Replies
    1. No way it is possible, unless you are present in Kodaganalloor. Pray from wherever you are. Thats all.

      Delete
  10. ஐயா அன்பு வணக்கங்கள். ஓம் பூதேவி நீலதேவி சமேத ப்ரஹன்மாதவ பெருமாள் திருவடிகள் போற்றி! ஓம் லூபாமாதா சமேத அகத்தியர் அப்பா திருவடிகள் போற்றி! குரு, இறை அருள் சிறப்பு அபிஷேகம் நடைபெற கூட்டுவித்து உள்ளது. 2018இல் கலந்து கொண்டு தங்கள் அன்பு, இறை குரு அருள் பெற்றோம். மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. அனைவரும் 2021ம் வருடம் கலந்து கொள்ள பிரார்த்திக்கிறோம் ஐயா.

    ReplyDelete
  11. ஓம்குருநாபெருமாவிஎன்னையும்ககோடகநல்லூர் பூசையில் பங்கெடுக்க அருள் தாருங்கள்... ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete