​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 21 October 2020

சித்தன் அருள் - 950 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பரசுராமர் கோவில், திருவல்லம், திருவனந்தபுரம்!


பாரத கண்டத்தில், பரசுராமருக்கென அமைந்த ஒரே கோவில் இங்குதான் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்கிற பாதையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

அவரின் தந்தை ஜமதக்னியின் உத்தரவின் பேரிலும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற கருத்துக்கு ஏற்பவும், தன தாயின் தலையை கொய்து, பின்னர் தந்தையின் தபோ பலத்தால் தாயை உயிர்ப்பித்து எழச்செய்தாலும், பரசுராமரை ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இறைவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்த அவருக்கு, இறைவனே ப்ரத்யக்ஷமாகி, லிங்கத்தை கொடுத்து, அவர் அதை பிரதிஷ்டை செய்து, தன் பாபத்தை போக்கிக்கொண்டார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

 • இந்த கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் என மூன்று தெய்வங்களும் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.
 • சிவலிங்கத்தை இறைவனிடமிருந்து பெற்று, பரசுராமர் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
 • அப்படி பிரதிஷ்டை செய்து பூசை செய்யும் பொழுது பதிந்த, பரசுராமரின் கால் சுவடுகள் இன்றும் அந்த கோவிலில் பாதுகாக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது.
 • பரசுராமர் தன் தாய் தந்தையருக்கு இங்கு தர்ப்பணம் கொடுத்ததால், பிதுர் தர்பணத்துக்கும், பிதுர் தோஷங்களுக்கும் மிக சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
 • "வல்லம்" என்றால் தலை. அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபரின் தலை முதலில் திருவல்லத்தில் இருந்ததாகவும், பின்னர் திவாகர முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க தனது உடலின் நீளத்தை தற்போதைய கோவிலின் வீதிக்கு பெருமாள் சுருக்கிக்கொண்டதாகவும் புராண வரலாறு.
 • பரசுராமர் சிவபெருமானையும், விபாகரண மகரிஷி விஷ்ணுவையும், வேதவ்யாஸரையும், ஆதி சங்கரர் பிரம்மாவையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது.
 • பத்மனாபாரின் தலை திருவல்லத்திலும், உடல் அனந்தசயனத்திலும், பாதம் திருப்பாதபுரம் என்கிற இடத்திலும் இருந்ததாக நம்பப்படுவதால், அனந்த பத்மநாபரை தரிசிக்க வருபவர்கள், திருவல்லத்தில் தொடங்கி, அனந்தசயனம் தரிசித்து பின்னர் திருப்பாதபுரத்தில் பாத தரிசனத்துடன் முடிக்க வேண்டும் என்றும் ஒரு முறை உள்ளது.
 • இதை ஒரு தவணை கோவில் என்று கூறலாம். இன்று பூசை செய்கிற பூசாரி, மறுநாள் விட்டு அதற்கு அடுத்த நாள்தான் பூசை செய்யலாம் என்கிற முறை இருக்கிறது. 
 • உள்ளே காண்கிற ரகசியத்தை வெளியே கூறவும் கூடாது என்கிற கட்டுப்பாடும், பரசுராமர் விதித்திருக்கிறார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......................தொடரும்!

5 comments:

 1. சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 2. அகத்தீசாய நம

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 4. Sir , can you please provide details about 3rd temple the thirupathapuram. Not able to locate in internet easily. ஓம் அகத்தியர் நமஹ. ஓம் நமகுமராய போற்றி.

  ReplyDelete