​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 20 October 2020

சித்தன் அருள் - 949 - ஆலயங்களும் விநோதமும் - பெருமாள் கோவில், கூடல்மாணிக்கம்,இரிஞ்ஞாலகுடா, திரிச்சூர், கேரளா!


கூடல்மாணிக்கம் கோயில், கேரள மாநிலத்தின், திரிசூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடா,அருகேயுள்ள மனவளச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலில் பிரதான கட்டமைப்பு, கோட்டைகளுடன் கூடிய சுவர்களுடன் அமைந்துள்ளது. பிரதான கட்டமைப்பைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அதில் ஒரு குளம் சுவர் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. இராமரின் மூன்றாவது சகோதரரான பரத வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பழங்கால கோயில் கூடல்மாணிக்கம் கோயிலாகும். இருப்பினும் கோயிலின் முக்கியச் சிலை விஷ்ணுவாகும்.

ஒருநாள், இங்கு பிரதிஷ்டை செய்துள்ள, மஹாவிஷ்ணுவின் சிலையின் சுழுமுனையிலிருந்து ஒரு வெளிச்சம் வந்து கொண்டே இருந்தது. இது எப்படி நடக்கிறது, என்ன செய்வது எனத்தெரியாமல், காயம்குளம் என்கிற பகுதியை ஆண்டு வந்த மகாராஜாவின் கைவசம் இருந்த நவரத்தினங்களை கொண்டு வந்து, அந்த ஒளியின் உறைவிடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். எனினும் அந்த ஒளியின் ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாமல் போகவே, பூசாரியின் கையிலிருந்த மாணிக்கக்கல், சிலையின் ஆகர்ஷண சக்தியால் இழுக்கப்பட்டு, சிலையின் சுழுமுனை வழி, உள்ளே சென்று விட்டது. இரண்டு மாணிக்கங்கள் ஒன்று கூடியதால், "கூடல் மாணிக்கம்" என அழைக்கப்பட்டது. 1907இல் மீண்டும் ஒரு ஒளி கடைசியாக தோன்றியது என்கிறார்கள்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

  • கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை பூஜைகள் மற்றும் மூன்று சீவேலிகள் (சுவாமி புறப்பாடு) இருப்பது வழக்கம். ஆனால் கூடல்மாணிக்கத்தில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே உள்ளன. சீவேலியும் இல்லை. இந்த சன்னதியில் மதிய பூஜை மற்றும் பந்தீரடி பூஜை இல்லை. 
  • வருடாந்த திருவிழாவின் போது மட்டுமே தெய்வம் ஊர்வலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. 
  • எந்த தீபாராதானையும் இல்லை. தீபாராதானை இல்லாத ஒரே கோயில் இதுவாகும்.
  • பூஜைக்கு ஊதுபத்திகள் மற்றும் கற்பூரம் பயன்படுத்தப் படுவதில்லை.
  • தெய்வத்திற்கான மலர் பிரசாதம் தாமரை, துளசி மற்றும் அரளி ஆகியவை மட்டுமே.
  • ஆனால் அவை கோயில் வளாகத்தில் வளர்க்கப்படுவதில்லை.
  • பூசைக்காகவோ அல்லது மாலைகளை தயாரிப்பதற்காகவோ வேறு எந்த பூவும் எடுக்கப்படுவதில்லை. 
  • தாமரை மாலை தெய்வத்திற்கு ஒரு முக்கியமான பிரசாதமாகும். 
  • 101 தாமரை பூக்களுக்கு குறையாத ஒரு மாலை தெய்வத்திற்கு அணிவிக்கப்படும்.
  • கட்டிடக்கலைக்கு, மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். ஆகையினால், பழங்கால கட்டிடக்கலையை படிப்பவர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள், இன்றும் இந்த கோவிலை ஒரு முன்மாதிரியாக வைத்து கற்று வருகிறார்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

4 comments:

  1. Om lobha mudra samedha agasthia peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. ஓம் நமோ நாராயணா பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்தா மாதவா ஜனார்த்தனா ஸ்ரீ சக்ரபாணி நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் நமோ நாராயணாய நம

    ReplyDelete
  4. Sangameshwarar Sharanam

    ReplyDelete