அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் கோவில், ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறு.
1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது.
பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் 'பச்சோட்டு ஆவுடையார்" என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் 'பச்சோட்டு ஆளுடையார்" என காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?
- இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவன் தலம் இதுவாகும். இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம்.
- கோயிலின் பின்புறம் சிவன், தனது நகத்தால் நிலத்தில் கீறின பொழுது உருவான அற்புத சுனை உள்ளது. 'நிகபுஷ்கரணி" என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கைக்கு சமமானது.
- 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 'குடம்" அளவுக்கு இருந்த இந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது 'சிறிய செம்பு" அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...........தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm lobha mudra thayar samedha agasthiaperuman thiruvadigale potri.
ReplyDeleteஓம் நமசிவாய
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏
தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலைநாதனே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDeleteஓம் ஸ்ரீ மாதா லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி
ReplyDeleteAum Nama Shivaya
ReplyDelete