​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 18 October 2020

சித்தன் அருள் - 947 - ஆலயங்களும் விநோதமும் - திருநோக்கிய அழகியநாதர் கோயில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை மாவட்டம்!


திருநோக்கிய அழகியநாதர் கோயில், தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி கிராமத்தில் அமைந்த சிவன் கோயிலாகும்.

பிரம்மா சிவனின் கோபத்தை அனலாகத் திரட்டி கடலுக்குள் செலுத்தினார். கடலுக்குள் புகுந்த அனல் குழந்தையாகப் பிறக்கவே, அதற்கு ஜலந்தரன் என பெயரிட்டனர். ஜலந்தரன் முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொந்தரவு கொடுத்தான். அவனை அழிப்பதற்கு அவனுடைய மனைவியான பிருந்தையின் பதிவிரதத்தை அழிக்கவேண்டும் என்று திருமால் அறிந்தார். அதனை அறிந்த அவள் தீயில் புகுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். ஜலந்திரனும் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்றான். சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து ஜலந்திரனை எடுக்கக் கூறியபோது அது சக்கரமாகி அழித்தது. பிருந்தையின் சாம்பலில் திருமால் கலந்தார். வைகுண்டம் இருண்டது. அப்போது பார்வதி, லட்சுமியிடம் திருப்பாச்சேத்தி இறைவனை வழிபட்டால் அவளுடைய கணவனை அடையலாம் என்று கூறவே திருமகளும் அவ்வாறே செய்தார். சிவன் சில விதைகளை கொடுத்து பிருந்தையில் சாம்பலில் தூவச் சொல்ல அதிலிருந்து துளசி தோன்றவே, திருமால் சிவனை அர்ச்சித்துவிட்டு மீதியை மாலையாக்கி அணிந்தார். அதனால் சோம வாரத்தில் இறைவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

  • 1300 ஆண்டுகள் பழமையான கோவில்.இங்கு வந்து இறைவனை தரிசித்தால், செல்வம் பெருகும்.
  • திருமணத்திற்கு பின் கருத்து வேறுபாட்டால் தம்பதியர் பிரிந்திருந்தால், இங்கு வந்து அழகியநாதரை தரிசித்தால் போதும், ஒன்று சேருவர்.
  • இசைக்கு அதிபதியான நடராஜர், இங்கு ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார்.
  • இங்கு திங்கட்கிழமை அன்று மட்டும், சிவபெருமானுக்கு, துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
  • துளசியை சிவபெருமான் உருவாக்கிய இடம்.
  • உச்சிகால பூசையின் பொழுது, இரண்டு மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
  • இரண்டு மரகத லிங்கங்களை ஒரே நேரத்தில் பார்ப்பது அபூர்வம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

5 comments:

  1. Om lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    எவ்வளவு புராணங்கள் நிறைந்த பூமி நம் பூமி

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  4. ஓம் மகேஷ்வரா மகாதேவ தேவா சர்வேஷ்வரா சரணம் சரணம் ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete