​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 9 October 2020

சித்தன் அருள் - 938 - ஆலயங்களும் விநோதமும் - கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, தமிழ்நாடு!


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.

இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப் பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!

  • இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது.
  • சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
  • அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
  • வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
  • இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
  • வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
  • ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.
  • ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது.பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது.
  • ஒரு குடும்பம் உருவாகத் தேவையான, தடை விலகலை பிள்ளையார் பார்த்துக் கொள்கிறார். திருமணம் நடைபெற வைக்க "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்க "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது. இவர்கள் அனைவரையும் மேற்பார்வையிட்டபடி வடக்கு நோக்கி பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.
  • எல்லா கோவில்களுக்கும் புஷ்கரணி  இருக்கும். இங்கு இருக்கும் குளம், கோவிலுக்கு முன்புறத்தில், பிள்ளையார் பார்வை படும் விதத்தில் அமைந்துள்ளது. பக்தர்களின் திருஷ்டி தோஷங்களை தன் நயனத்தினாலேயே விலக்கி, இக்குளத்தில் கரைப்பதாக ஐதீகம். தரிசனம், கைமேல், உடன் பலன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

6 comments:

  1. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    ReplyDelete
  2. Om sri lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri

    ReplyDelete
  3. முத்தனே போற்றி போற்றி
    ஆனை முகத்தோனே போற்றி போற்றி


    கற்பக விநாயகர் போற்றி போற்றி

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ர சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  5. மூத்தோனே முதல்வா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  6. Aum Gham Ganapathaye Namaha............

    ReplyDelete