​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 31 October 2016

சித்தன் அருள் - 487 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


திருப்பதியை பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூற வேண்டுமப்பா. பெருமாளின் அம்சம், அங்கு இருக்கிறது என்பது உண்மை. அங்குள்ள வராகர் சன்னதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும். அச்சன்னதியிலே ஹயக்ரீவரும், அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும். திருப்பதி என்பது சாக்ஷாத் பூலோக வைகுண்டம்தான்.

4 comments:

  1. About Tirupati, so many glorious facts can be told. It is true that Perumal’s amsam is there. By saluting at the Varaha temple there, children’s intellect will improve; in this sannidhi, both Hayagriva and Saraswati do tapas in arupa. Before entering the main temple, visit Varaha temple and salute there. Tirupati is truly a Vaikunt in this earth.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்,

    நான் தினமும் 108 முறை அகத்தியர் நாமம் எழுத ஆர்வமாக இருக்கிறேன்.

    எந்த கிழமை ஆரம்பிக்கலாம்.

    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நம இவற்றில் எது சரியானது .என் விருப்பம்
    ஓம் அகத்தீசாய நமஹ.


    அகத்திய பெருமானே தங்கள் திருவடிகளை சரணடைந்து தங்களின் திருநாமத்தினை எழுத ஆரம்பிக்கும் என்னை ஆசீர்வாதம் செய்து வெற்றி பெறச் செய்யுங்கள். என் வாழ்வு தங்கள் கைகளில்..

    ReplyDelete
    Replies
    1. நல்லதை செய்யவேண்டும் என்று நினைத்தபின், எல்லா நேரமும் நல்ல நேரம் தான். உங்கள் மன விருப்பப்படியே நடக்கட்டும். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்திருங்கள். கருணையுடன் அகத்திய பெருமான் சரியான வழி நடத்திட மனம் இறங்குவார்.

      Delete