அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 15.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - பகுதி 6
வாக்குரைத்த நாள் :- 15.03.2026 (ஞாயிற்றுக்கிழமை), (இரண்டாம் நாள் , இரண்டாம் புனித தலம்) - ( DAY 2 , 2nd PLACE )
வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- பஞ்சார் வெந்நீர் ஊற்று (Banjar Hot Spring / Air Panas Banjar), ஜாலான் பன்ஜார், பன்ஜார், கேக். பன்ஜார், கபுபாதேன் புலேலெங், பாலி 81152, இந்தோனேஷியா
கூகிள் மேப் லிங்க் (Google Map link) :-
https://maps.app.goo.gl/o1fH24cSecoijnYq5
Address:- Banjar Hot Spring / Air Panas Banjar, Jalan Banjar, Banjar, Kec. Banjar, Kabupaten Buleleng, Bali 81152, Indonesia
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, நலன்கள்.
அப்பனே, பல வகைகளில் கூட இவ்வுலகத்தை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட திருத்த பல ஞானிகள் அப்பனே வந்தனர்.
ஆனாலும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை அப்பா.
இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதனால் மறைமுகமாக இன்னும் கூட அப்பனே, நிச்சயம் ஒருநாள் இன்னும் அழிவுகள் வரும்.
அப்பொழுது தேடித் தேடி, இறைவனை, தேடித் தேடி இறைவனைப் பின், அதாவது எங்கிருந்து, எதை என்று கூட, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட வருவார்கள் அல்லவா?
அப்பொழுது யாம் , வருவோம் என்றெல்லாம் நினைத்து, பின் அமைதியாக அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன், அப்பனே.
இன்னும் கூட, அப்பனே, அடி தன்னில் கூட,
அப்பனே, மண் தன்னில் கூட.
இதனால் அப்பனே, ஒவ்வொருவனும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு விசித்திரமானதெல்லாம் ஏற்படுத்தி இருக்கின்றான் என்பேன், அப்பனே.
கலியுகத்தில் அப்பனே, பல மனிதர்களுக்கு அப்பனே, பின் அதாவது நோய்கள் தான், பின் கஷ்டங்கள்.
===========================
தெய்வ இயந்திரமான மனித உடலும், அதனை சீரமைக்கும் ரகசிய ஞானிகளும்!
இறைவனால் படைக்கப்பட்ட மனித உடல் என்னும் இயந்திரம் நோய்களால் பழுதாகும் போது, அதனைச் சரிசெய்ய எங்கு செல்வது என மனிதர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த உடலைச் சீரமைக்க, படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசிய ‘மெக்கானிக்’குகளாகிய ஞானிகளை பூமிக்கு அடியில் ஆங்காங்கே இறைவன் அமர்த்தியுள்ளான்.
இந்த மகான்களைத் தேடிச் செல்பவர்களுக்கு மட்டுமே நோய்கள் நீங்கி, ஆயுள் நீட்டித்து, நல்வாழ்க்கையும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
ஞானிகள் எவ்வாறு மனிதர்களின் கர்மவினைகளைத் தீர்த்து, உடலைச் சீரமைக்கிறார்கள் என்ற மாபெரும் ரகசியத்தை பின் வரும் வாக்கில் படித்து, ஞானிகளை போற்றி வணங்குங்கள்!
===========================
அதாவது எதை என்று புரியாமலும் கூட, அப்பனே, பின் எவை என்று கூட,
அதாவது, பின் மனிதனின், அப்பனே, நிச்சயம், மனிதனின், நிச்சயம், அப்பனே, பின் அதாவது இயந்திரம் என்பேன், அப்பனே.
அவ் இயந்திரம் எங்கெங்கு பழுதாகின்றது என்பது யாருக்கும் தெரியாதப்பா.
அப்பனே, அவ் இயந்திரத்தை, பின் நிச்சயம், பின் பழுது செய்ய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அப்பனே.
மீண்டும், அப்பனே, அவ் உடம்பை இயக்க, அப்பனே, பின் யார், அப்பனே, பின் அவ் இயந்திரத்தை தயாரித்து அனுப்புகின்றார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, எங்கெங்கு, அப்பனே.
இதனால்தான், அப்பனே, நிச்சயம், இவ் இயந்திரத்திற்கு ஒவ்வொரு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தற்பொழுது, அப்பனே, வேலையாள் என்று, அப்பனே, இருக்கின்றார்களே…
அப்பனே, அவர்கள் நிச்சயம் அங்கங்கு இருக்கின்றார்கள், அப்பனே. பின் மண்ணுக்கு அடியில்.
அப்பொழுது எவை என்று புரிய, அப்பனே, அங்கங்கு சென்றால் மட்டுமே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவர்கள் பழுது பார்த்து, நிச்சயம் தன்னில் கூட இயந்திரத்தை மீண்டும் இயக்குவார்கள். அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே.
மீதி எல்லாம் ஆகாது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே.
ஏதோ சில சில இறைவன் அனுக்கிரகத்தால், அப்பனே, நிச்சயம் பின் நல்லது நடக்கலாமே தவிர, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, அதாவது ஒரு வாகனத்தை, அப்பனே, பின் எதை என்று இயக்கிக் கொண்டு…..
அப்பனே, பின் அதை தன், அப்பனே, பின் அதாவது பழுதாகி….
பழுதாகிவிட்டால் எங்கு செல்வீர்கள் அப்பனே? நிச்சயம் தன்னில் கூட.
நேரடியாக, அப்பனே, நிச்சயம் பழுது பார்ப்பவர் இடமே செல்வீர்கள் என்பேன் அப்பனே.
அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தேடி அடைவீர்கள் அல்லவா?
அப்பனே, இறைவன் மிகப்பெரிய ஆள்.
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
(இறைவன்) தான் தான், அப்பனே, சீடர்களை, அப்பனே, பின் அங்கங்கு அமைத்துள்ளான் என்பேன் அப்பனே… பழுது பார்க்க.
இதனால், அப்பனே, பின் மனிதனின், அதாவது இவன் மனிதனின் உடம்பு, அதாவது இயந்திரம் பழுதானால், அப்பனே, எங்கு நீங்கள் செல்வீர்கள் அப்பனே?
நிச்சயம் உடனடியாக (மருத்துவரிடம்) மனிதனிடத்தில் தான் செல்கின்றீர்களே என்பேன் அப்பனே.
இதுதான், அப்பனே, எதை என்று அறிய அப்பனே.
பின் ஏதோ சில விஷயங்கள் (மருத்துவன்) அவனுக்கு தெரியும், அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
நிச்சயம் பெரிய விஷயங்கள் தெரியாதப்பா, அப்பனே.
இவைதன், அப்பனே பழுது எவை என்று, அப்பனே நிச்சயம் நீக்க, அப்பனே, பல வகையில் கூட ஆங்காங்கு, நிச்சயம், பின் ஞானிகள் தவம் ஏற்று ஆங்காங்கு இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அவ்வாறு தேடி வந்தால் மட்டுமே, அப்பனே, பழுது நீக்கி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்வாழ்க்கை பெற முடியும், அப்பா.
அப்படியே, பின் பழுது நீக்கி, அப்பனே, இன்னும் ஆயுள்கள், பின் நீண்டிட்டு, பின் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவார்கள்.
இதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஞானிகளின்.
இதனால்தான், அப்பனே, பல வழியிலும் கூட, பின் ஞானிகள் இவ்வுலகத்திற்கு வந்தார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, அப்பனே.
தன்னை இகழ்ந்து, தன் மீது காரி உமிழ்ந்த மனிதர்களின் அத்தனை பாவங்களையும், கர்ம வினைகளையும் ஒரு மாபெரும் ஞானி தன் மேல் விரும்பி ஏற்றுக்கொண்டார்.
இந்த மாபெரும் தியாகத்தின் விளைவாக, அந்த ஞானியின் தூய உடலில் கொடிய தொழுநோய் (குஷ்டம்) உருவானது.
ஆனால், இரக்கமற்ற மனிதர்களோ அவரைத் தொடக்கூடத் தயங்கி, எங்காவது போய் சாகட்டும் எனப் புனிதமான கங்கை நதியில் ஈவிரக்கமின்றி வீசியெறிந்தனர்.
தன்னலமற்ற ஒரு மகானின் நெஞ்சை உருக்கும் தியாக வரலாற்றையும், ஈசனின் சோதனையையும் படித்துத் தெரிந்து, ஞானிகள் திருவடிகளை போற்றி வணங்குங்கள்!
===========================
இதனால், அப்பனே, ஒரு ஞானி பற்றி விளக்கப் போகின்றேன்.
அப்பனே. இவைதான், பின் ஞானி சாதாரணமான இல்லவன் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட
எப்பொழுதும், அப்பனே, பின் பார்வதி தேவியின், அப்பனே, பின் எவை என்று கூற, பின் அதாவது விசாலாட்சியை, அப்பனே, எப்பொழுதும் மனதில் நினைத்து நினைத்து வாழ்பவன்.
அதாவது, பின். அதாவது, பின் அனைத்தும் அவளே என்று வாழ்பவன், அப்பனே.
===========================
# ஓம் “அருந்தையன்” ஞானி திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!
===========================
இதனால் எதை என்று புரிய, அப்பனே. இவன் நாமமும், பின் அருந்தையன், அருந்தையன் என்றே, பின் எதை என்று அழைத்து அழைத்து, அப்பனேநிச்சயம் தன்னில் கூட, அப்பனே.
ஏனென்றால், அப்பனே, எதை என்று கூற..
இவன் தன் பின் பெற்றோர்கள், இன்னும் முன்னோர்களுக்கு முன்னோர்கள் பல வழியிலும் கூட, பின் மக்களுக்கு சேவை செய்தனர் என்பேன் அப்பனே.
சேவை செய்து, அப்பனே நிச்சயம் தன்னில் கடைசியில், அப்பனே பின் அனைத்தும் இழந்து, அப்பனே, இவனை பெற்றெடுத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அதாவது காசி, பின் விசாலாட்சி எது என்று, அப்பனே பின் அங்கேயே, அப்பனே நீ அம்மையே, நீதான், பின் துணை, இவனுக்கு யாருமில்லை.
எங்களுக்கும் வயதாகிவிட்டது….
பின் அனைத்தும், பின் நாங்கள் பெற்றிருந்தோம்.
ஏனென்றால், பின் கொடுத்தது ஈசன், அதாவது, பின் தந்தை.
அனைத்தும், நிச்சயம் தன்னில் கூட, அவனுக்கே சொந்தம் என்று, அனைத்தும் எடுத்துக்கொண்டான்.
அவ்வளவுதான்.
இதுவும், பின் எஞ்சியது, அவ்வளவுதான்.
பின் ஏனென்றால், பின் அவன், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, தந்தை பல வேளைகளில் இருப்பான்.
தாயவள், நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, அங்கே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
இவன்தான் பெரிய ஞானி ஆனான், அருந்தையன். எதை என்று புரிய, அப்பனே.
இவன் தன் பின் வாழ்க்கை வரலாற்றை , அதாவது, சுலபமாக முடித்து விடுகின்றேன் , அப்பனே. எதை என்று அறிய , அப்படி இன்னும், அப்பனே, ஆழ்ந்து.
இதனால், அப்பனே, வளர்ந்தான் என்பேன் அப்பனே.
அதாவது, ஆங்காங்கு திரிந்து கொண்டான் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அப்பனே.
பின் எவை ஆனாலும், பின் தாயவளோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பனே. பின் அதாவது, பின் எதை நினைத்துக் கொண்டே…
அங்கு வரும் அடியார்களிடம், நிச்சயம், அதாவது, தர்மம் ஏந்துவது…
உண்ணுவது….
உறங்குவது….
பின் தண்ணீர் இல்லை என்றால், நிச்சயம் தன்னில் கூட…
இப்பொழுதெல்லாம் சாக்கடை என்கிறார்களே. அந்நீரை அப்படியே உட்கொள்வது, இவை என்று செய்து கொண்டிருந்தான்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் இவனை கூட, பின் அதாவது, நிச்சயம் தரித்திரவன், தரித்திரவன் என்றெல்லாம்…
எங்கெங்கெல்லாம் நீர் செல்கின்றதோ, அங்கெல்லாம், நிச்சயம் எதை என்று புரிய, நிச்சயம் எவை என்று கூட, அப்படியே, பின் உட்கொள்வான். எதை என்று கூற,
பின் மனிதனின் எவை என்று, கழிவு நீர் கூட உட்கொண்டான். எதை என்று புரியாமலும், எவை என்று அறியாமலும், அப்பனே.
இப்படித்தான், அப்பனே, ஞானிகள் வாழ்ந்தார் என்பேன், அப்பனே.
அவ் ஞானிகள், அதனால்தான், பின் ஈசனுக்கு எவை என்று கூட…
அதாவது, இறைவனுக்கு பிடித்து, அப்பனே, பின் பல வழியில் கூட, நன்மைகளை, அப்பனே, செய்து..
நிச்சயம் தன்னில் அவர்கள் இன்னும் அழியாமல் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
===========================
# ஈசனின் சோதனை நிச்சயம் சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே.
===========================
இதனால், ஈசனின் சோதனை, அப்பனே, நிச்சயம் தன்னில் சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே.
ஈசனின் சோதனை, பின் ஒருவனுக்கு வந்துவிட்டால், அப்பனே, பின் அவன் தன், அப்பனே, பின் அதாவது, ஈசன், அப்பனே, பின் உலகத்தை விட்டு எவை என்று கூட போக போவதில்லை.
பின் பெயரும், பின் மாறப்போவதில்லை.
அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அவ் ஞானிகளின் பெயர்களும், அப்பனே, மறையப் போவதில்லை.
ஆனாலும், மனிதன் வேண்டுமென்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் யாங்கள் எழுதியுள்ள சுவடிகளை மறைத்து வைக்கலாம்.
===========================
# மீண்டும் சித்தர்களின் இதிகாசங்கள் ஆரம்பம்…
===========================
ஆனாலும், மீண்டும், அப்பனே, பின் ஒரு இதிகாசம் தொடரும் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டோம், அப்பனே. எதை என்று, அப்பனே..
பின் அதாவது, மனிதன், அப்பனே, எதை ஏதோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றான், அப்பனே. புதிது, புதிதாக, அப்பனே.
யாங்கள் எவை என்று கூற, அப்பனே, பின் கண்டுபிடித்ததை, அப்பனே, பின் அப்படியே, எதை என்று கூற, மீண்டும், அப்பனே, எழுப்புவோம், அனைத்தும் என்பேன் அப்பனே.
எதை என்று, அப்பனே, பின் மனிதனை, அப்பனே, எப்பொழுது, அப்பனே, பின் சாகாமல், அப்பனே, வைத்திருக்கலாம் என்பவை எல்லாம் இவ்வுலகத்தில் இருக்கின்றது என்பேன், அப்பனே சில சக்திகள்.
அங்கெல்லாம் சென்றால், அப்பனே, மாறிவிடும் என்பேன், அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில் கூட இளமையானவனும் முதுமை ஆகலாம் என்பேன், அப்பனே.
முதுமை ஆனவனும், அப்பனே, இளமை ஆகலாம் என்பேன், அப்பனே.
அங்கங்கு , அப்பனே, அவ்வளவு சக்திகள் இருக்கின்றது என்பேன் அப்பனே.
===========================
மனிதனின் குறுகிய ஆசைகளும், அறியப்படாத பிரபஞ்ச ரகசியங்களும்!
மனித புத்தியானது திருமணம், வேலை, பணம், வீடு, குழந்தை என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே எப்போதும் சிக்கி உழல்கிறது.
இந்த மாயையினால், தன் பிறவியின் நோக்கத்தையும், நோய்களுக்கான கர்ம வினைகளையும் மனிதனால் சரிவரப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
முதுமை அடைந்தவனும் மீண்டும் இளமையாக மாறக்கூடிய எண்ணற்ற அதிசய ஆற்றல்களும், சூட்சும ரகசியங்களும் இந்தப் பூமியில் மறைந்து கிடக்கின்றன.
உலக மாயைகளில் இருந்து விடுபட்டு, அறியப்படாத ரகசியங்களை உணர்ந்து இறைவனைக் காண உதவும் அந்த சூட்சுமங்களை பின் வரும் வாக்கில் உணர்ந்து, ஞானிகள் திருவடிகளை போற்றி வணங்குங்கள்!
===========================
ஆனால், மனிதன் என்னவோ, அப்பனே, நிச்சயம் வாழ்ந்து ஒரே இடத்தில் வாழ்ந்து, மனிதனுக்கு என்ன தேவை என்றால், அப்பனே, இப்பொழுது, அப்பனே, பின் திருமணம், அப்பனே, வேலை, அப்பனே, பணம், ஒரு இல்லம், அப்பனே, பின் மிஞ்சி போனால், ஒரு குழந்தை கேட்பான்.
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
இவ்வளவுதான் மனிதனின் அறிவுகள் என்பேன் அப்பனே.
இவ்வளவு அறிவுகள் வைத்துக்கொண்டு, அப்பனே, மீதி எப்பொழுது???? எதனை தெரிந்து கொள்ளப் போகின்றான்??? என்பேன் அப்பனே.
இதனால்தான், அப்பனே, மனிதனுக்கு, அப்பனே, இதன் வழியே பல கஷ்டங்கள் கொடுத்து…
அப்பனே, பல வழிகளில் உணர்ந்து கொள்ளத்தான்…
அப்பனே, நிச்சயம் தன்னில், ஈசன், அப்பனே, பின் பிறப்பு, பிறப்பு….
மனிதனுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே.
உண்மை நிலையில், அப்பனே, ஒரே பிறவியிலே, பின் அறிந்து கொள்ள, அப்பனே, முயற்சி, அப்பனே, எடுத்தால்…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கவலை வேண்டாம்.
===========================
# மாபெரும் ரகசியம் ……
===========================
எவ்வளவு கஷ்டங்கள் வருகின்றதோ, அப்பனே, அவ்வளவுக்கு, அவ்வளவு நோய்கள் தீரும் என்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் இறைவனின் கட்டாயம் என்பேன், இறைவனின் நிலையிலே என்பேன், அப்பனே.
ஆனால், மனிதனோ நோய் வந்துவிட்டது, எது என்று புரியாமலும், எவை என்று அறியாமலும், அப்பனே.
இதனால் ஒவ்வொரு அப்பனே, பின் வினைக்கும் எவை என்று கூட சரியாகவே, அப்பனே, பின் இறைவன் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான், அப்பனே. நலங்களாகவே
இதனால், அப்பனே, நீங்கள் செய்யும் வினை, அப்பனே, இறைவன் அனுபவிப்பதா இல்லது, அல்லது பின் நீங்களே அனுபவிப்பதா என்பது எல்லாம், அப்பனே, பின் குறித்து வைத்துக்கொண்டு பார்த்தால், அப்பனே, இன்னும், அப்பனே, சூட்சமங்கள்,
அதாவது ரகசியங்கள் பல உள்ளது என்பேன் அப்பனே.
இவ் தேசத்தில் என்பேன், அப்பனே.
அவ் ரகசியங்கள் எல்லாம் எப்பொழுது தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள் என்பேன், அப்பனே.
அவ் ரகசியத்தை எல்லாம் தெரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொண்டு, தெளிவு பெற்றால்தான், அப்பனே, இறைவனையும் காண முடியும் என்பேன், அப்பனே.
இல்லை என்றால், நிச்சயம் வீணை என்பேன், அப்பனே.
பிறவி பிறந்தது வீணை என்பேன், அப்பனே.
இதனால் கடைசியில் உன்னை எதற்காக அனுப்பினேன்???
இவ்வான்மாவை எதற்காக அனுப்பினேன், இவ்வுடம்பையும் கொடுத்து???
எதை என்று புரிய என்றெல்லாம் ஈசன், அப்பனே, நிச்சயம் தன்னில் மீண்டும் வருந்துவான் என்பேன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
மீண்டும் இப்படித்தான் என்று, என்று, அப்பனே.
அதனால் புரிதல் வேண்டும், உண்மை வேண்டும், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, பின் அதாவது, பின் மனிதன் எதை எதையோ, அப்பனே, பின் எவை என்று கூட சாதிக்கின்றான், அப்பனே.
ஆனாலும், அப்பனே, பக்தியில், அப்பனே, சாதிக்க, அப்பனே, முடியவில்லையே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
ஏன் என்றால், அப்பனே, உண்மை நிலை தெரியவில்லை என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, இன்னும் இன்னும் கலியுகத்தில் உண்மை நிலை தெரியவில்லை என்றால்…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழிந்து…
அப்பனே, பின் தான் மட்டும் அழியாமல்…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று கூற , பின் பிறரையும் அழித்து…
அப்பனே, பின் எதை என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதனால்தான், அப்பனே, சித்தர்கள் யாங்கள் விடைப்போதில் இத்தனை, அப்பனே.
ஆனாலும் மீண்டும், அப்பனே, மனிதர்கள் எதை எதையோ சொல்லிக் கொண்டிருப்பார்கள், எவை என்று புரியாமலும், எவை என்று அறியாமலும். ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே.
ஏனென்றால், அப்பனே, பின் எவை என்று கூற, பைத்தியக்காரன் போல திரிவான் மனிதன் என்றால், அப்பனே,
அவனுக்கு பின் மனசாட்சியோடு எதை என்று கூற , எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் தெளிவு இருக்கின்றதா என்று சொன்னாலும் இல்லையப்பா.
ஏன், எதற்கு என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், பின் இன்னும், அப்பனே, பின் எப்படி என்றெல்லாம், அப்பனே, பின் இன்னும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்களே என்பேன் அப்பனே மனிதர்கள்.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் அவர்களுக்கெல்லாம் நேர்வழி காட்ட வேண்டும் என்பதே, அப்பனே, பின் கலியுகத்தின், அப்பனே, பின் சித்தர்களினுடைய, அப்பனே, பின் நிச்சயம் எது என்று புரிய.
===========================
# குருநாதர் உரைத்த கூட்டு பிரார்த்தனை , நவக்கிரக தீபங்கள் - இவை குறித்து பரிகாசம் செய்த மனித மூடர்களுக்கு இறுதி எச்சரிக்கை………
===========================
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொன்னேனே, முன்னே, அப்பனே.
பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட பிரார்த்தனை செய்யுங்கள்.
இன்னும் (நவக்கிரக) தீபம் ஏற்றுங்கள் என்றெல்லாம், அப்பனே.
பரிகாசம் செய்தான் என்பேன், அப்பனே..
எப்படி?
ஏது?
என்று கூட அழிவா வரப்போகிறது? என்று, அப்பனே, நிச்சயம் தன்னில்…
இப்போது பார்த்தீர்களா, அப்பனே…
===========================
(2026 ஆம் ஆண்டு நடந்து கொண்டுள்ள ஆபத்தான பல இயற்கை மற்றும் மனிதனால் செயற்கை பேரழிவுகள் , மக்களுக்கு பல கஷ்டங்கள் உண்டாகும் நிகழ்வுகள்….)
===========================
நிச்சயம் சொன்னவன் (பரிகாசம் செய்த மூடர்கள்) எல்லாம், அப்பனே, (இப்போது) நிச்சயம் காப்பாற்றச் சொல் பார்ப்போம் அப்பனே.
நிச்சயம் தன்னில் உள்ள வாய் தான், அப்பனே, நிச்சயம் மனிதனுக்கு.
===========================
# இனிமேல் சித்தர்களை , சித்தர்கள் உரைக்கும் வாக்குகளை
# எவன் ஒருவன் தவறாக பேசுகின்றானோ..
# அவன் பல்லை சித்தர்கள் உடைப்போம்…
# அவன் பேச முடியாமல் போகும்
# அவனுக்கு பல நோய்கள் உண்டாகும்
===========================
அதனால்தான், அப்பனே, வாயை….. முதலில், அப்பனே, எவன் ஒருவன் பக்தி, அப்பனே, இனிமேல், அப்பனே, பின் எவை என்று சுலபமாக, அதாவது தவறாக பேசுகின்றானோ…
அவன் வாயடியிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் பல்லை, அப்பனே, பின் உடைப்போம்….
அப்பனே நிச்சயம் பேச முடியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…
பல நோய்களை, அப்பனே, அவனே, அப்பனே, நிச்சயம் பெற்று எவை என்று கூற, அப்பனே.
ஏனென்றால், பின் வார்த்தை…
“““““““““ அகத்தியன் ஒரு வார்த்தை விட்டுவிட்டால், அது சாபமாக போய்விடும். ””””””””
ஆனாலும், அப்பனே, பின் எவை என்று விட்டு விடுகின்றான், அப்பனே.
(மூடர்கள், சித்தர்களை பற்றி தவறாக வார்த்தையை விட்டுவிடுகிறார்கள். அதையே இங்கு “ விட்டு விடுகின்றான்” என்று குருநாதர் உரைக்கின்றார்)
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவரின் பெருங்கருணை
===========================
பின் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று.
ஆனாலும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் விட்டு விடுகின்றேன், அப்பனே புரியாமலும்…
(அதாவது அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று குருநாதர் தனது பெருங்கருணையால் விட்டு விடுகின்றார்…)
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை யான் சொல்வதில்லை என்பேன் அப்பனே.
===========================
# குருநாதர்:-
===========================
# “அகத்தியன் ஒரு வார்த்தை விட்டுவிட்டால், அதற்கு நிச்சயம் பலன் அதிகம்.”
===========================
யானே எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அகத்தியன் ஒரு வார்த்தை விட்டுவிட்டால், அப்பனே, அதற்கு நிச்சயம் தன்னில் பலன் அதிகம் என்பேன் அப்பனே.
நிச்சயம் (அகத்தியன்) சொல் சொல்லுத்தான் என்பேன், அப்பனே.
அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தீயவை நடந்தாலும், நிச்சயம் தன்னில் கூட யாங்கள் பின் நல்லதாக செய்வோம் என்றெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட..
பின் அதாவது விதியில் கடுமையான போராட்டம் இருந்தாலும், நிச்சயம் தன்னில் கூட யாங்கள் மாற்றுவோம் என்று, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இனிப்பை கொடுத்து கொடுத்து, அப்பனே, அழைத்துக் கொண்டே வருகின்றோம் என்போம் அப்பனே.
அதை மனிதன் பின் உணர்ந்து விட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பெறும்….. அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே.
மனிதனுக்கு உடனடியாக அனைத்தும் கிடைத்து விட வேண்டுமாம், எதை என்று புரிய, அப்பனே.
ஆனால் மனிதனுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…
அப்பனே, திருமணம், அப்பனே, பின் எவ்வளவு வயதுகள் ஆகின்றது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட?????
பின் குழந்தை, அப்பனே, பிறந்து, அப்பனே, பின் சில விஷயங்களை தெரிந்து கொண்டுதான், அப்பனே, நிச்சயம் எவை என்று புரிய, அப்பனே.
ஆனால் மனிதனுக்கு கேட்ட வரத்தை உடனடியாக கொடுத்து விட வேண்டும் என்றால், அப்பனே, எப்படியப்பா???
நிச்சயம் அவ் வரத்தை எப்படி, எதை என்று அறிய….
எப்படி, பின் அதாவது கொடுத்தாலும்…
அதை உபயோகிக்க தெரியாதப்பா…
நிச்சயம் மற்றவர்களை, அப்பனே, பாழாக்கி விடுவான் என்பேன் அப்பனே.
இதுதான், அப்பனே.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…
===========================
# மீண்டும் “அருந்தையன் ஞானி” குறித்த வாக்கு தொடர்கின்றது…..
===========================
இதனால், அப்பனே, அறிந்து கூட, அவ் ஞானி ஆனவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட….
இவ்வாறே வளர்ந்து வளர்ந்து….
பின் ஆனாலும், அனைவரும் இவன் தரித்திரன், தரித்திரன் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட….
பின் இவன்… எவை என்று புரியாமலும்…
இவன் தன் இங்கு ஏன் வந்தான் என்றெல்லாம், அப்பனே, காரியும் துப்பினார்கள் என்பேன் அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு எல்லாம் ( கஷ்டப்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் ) …
ஆனாலும், அப்பனே, பின் (அருந்தையன் ஞானியிடத்தில்) வருவோர்கள் (அனைவரையும்) …
ஆனாலும், இவன் சிரித்துக் கொண்டே, நிச்சயம் தன்னில், ஈசனே, இவருக்கெல்லாம் தெரியாது.
ஆனாலும், இவருடைய வினை என்ன செய்யப் போகின்றது என்பது நிச்சயம், அதை யான் அறிவேன்.
ஆனால் மனிதன் அறியப் போவதில்லை.
அதனால், நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.
===========================
# ஓம் “அருந்தையன்” ஞானி திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!
===========================
===========================
# பின் வரும் வாக்கை 3 முறை படிக்கவும்.
===========================
இதனால்….
“““““““““ நிச்சயம் இவர்களுடைய பாவத்தை அனைத்தும் யான் ஏற்றுக் கொள்கின்றேன் ”””””””””
என்று அவ் ஞானி உரைத்தான்.
இதனால், அனைவரும் திட்டி தீர்த்தார்கள்.
பின் காரியம் துப்பினார்கள் நிச்சயம் தன்னில் கூட…
அவ்வாறு பின் செய்த எவை என்ற வினைகள் எல்லாம் இவனை சார்ந்தது.
—-- இதனால், இவன் தனக்கு பின் தொழுநோய் உருவாகிற்று. —--
நிச்சயம் தன்னில் கூட இதனால் எவை என்று புரிய…
பின் ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட…
(“அருந்தையன்” ஞானி) இவனை யாரும் தொடவில்லை நிச்சயம் தன்னில் கூட.
அவ்வாறும்… இவ்வாறும்… திரிந்தான் எவை என்று…
ஆனாலும், பின் காசி விஸ்வநாதனையும் எவை என்று கூட காணச் சென்றான்.
ஆனாலும், அங்கும் பின் துரத்தினார்கள்.
பின் விசாலாட்சியும்… பின் ஆனாலும், இவன் தன் எவை என்று கூற..
பின் இவ்வாறாகவே, பின் அதாவது, நிச்சயம் இங்கு இருந்தால், நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய….
நிச்சயம் எதை என்று புரியாமலும், பின் இவனை அதாவது, நிச்சயம் அனைவருக்கும் வந்துவிடும்.
(அதாவது இவ் ஞானியை மக்களிடையே வைத்திருந்தால் , தொழு நோய் அனைவருக்கும் வந்துவிடும் என்ற பயம் வந்துவிட்டது)
இதனால், பின் மறைவாக இவன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, கங்கையில் வீசி விடலாம் நிச்சயம் தன்னில்….
அதிக அளவு தண்ணீரில் பின் அடித்துச் செல்லட்டும் என்று
சில பேர், நிச்சயம் அப்படி இல்லை.
பின் அதாவது கங்கையில் பின் இட்டாலும், நிச்சயம் தன்னில் கூட…
பல மனிதர்கள் எவை என்று கூற … ஏதோ இவன் காப்பாற்று எவை என்று கூற.
மீண்டும், இவன் தன் ஏதோ வித்தை ஏதும் வைத்திருப்பான்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட இவனை பின் (உடல்) தெரியாமலே , பின் எரித்து விடுவோம் என்று.
இதனால், பல வழி எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால், நிச்சயம் இவன் புரிந்து கொண்டான்.
ஏதோ நிலை எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
இதனால், இவனை எதை என்று புரிய, கங்கை தன்னிலே எதை என்று கூட.
அதனால், அனைவரும் சேர்ந்து கங்கை மிகப் புனிதமானது.
இதனால், அதில் வீசி விடுவோம்.
அடித்துச் செல்லட்டும் எங்கேயாவது….
பின் சாகட்டும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், அப்பனே, இறைபலம், அப்பனே, உணரவில்லை.
இறை பலம் ஒன்று இருக்கின்றது என்று, இப்புவி தன்னில் கூட,
அப்பனே, இதே போலத்தான், அப்பனே, மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே.
அனைத்தும் நாம் சாதித்துக் கொள்ளலாம்.
அனைத்தும் தீர்த்துக் கொள்ளலாம்.
அனைத்தும் வரும் என்று அப்பனே.
ஆனால், இறை பலம் ஒன்று இருக்கின்றது.
அதன்படியே நடக்கும் என்பது, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் யாரும், அப்பனே, எதிர்நோக்கவில்லை அப்பா.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சமமாகவே…
இதனால், அப்பனே, தூக்கி எறிந்தனர் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
அழகாக, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அழகாய் எவை என்று சில நேரங்கள், பின் அடித்து…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கரை ஓதுங்கினான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, பின் அதாவது கரை ஓதுங்கினான் அப்பனே, எவை என்று அறிய…
அப்பனே, திரிவேணி, அப்பனே, இப்பொழுதும் கூட…பின் மூன்று சங்கமிப்பு நதிகள் கூட… அப்பனே, பின் கரை ஓதுங்கினான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
( -------- இங்கு இறைவியின் திருவிளையாடல் ஒன்று. “அருந்தையன்” ஞானி வீசப்பட்டது காசியில். ஆனால் அன்னை பார்வதி தேவி “அருந்தையன்” ஞானியை கொண்டு வந்தது திரிவேணி சங்கமத்தில். —-- )
===========================
அன்னை பார்வதியின் அரவணைப்பும், நோய்களைத் தீர்க்கும் வெந்நீர் ஊற்றும்!
கங்கையில் வீசப்பட்டு கரை ஒதுங்கிய அந்த ஞானியை, அன்னை பார்வதி தேவி நேரில் வந்து தன் மடியில் கிடத்தி ஆறுதல் கூறி அரவணைத்தாள்.
அன்னையின் கட்டளைப்படி வேற்று தேசம் (பாலி) சென்ற அந்த ஞானி, பூமிக்கு அடியில் ஆழமாகச் சென்று அங்கிருந்த இயற்கை சக்தியின் ஆற்றலைப் பெற்றார்.
மண்ணின் அடியில் பொங்கிய அந்த வெந்நீர் ஊற்று அவரது தொழுநோயைக் குணப்படுத்தியதோடு, அங்கு வரும் கோடிக்கணக்கான மக்களின் நோய்களையும் தீர்த்தது.
பாலியில் உள்ள பஞ்சார் வெந்நீர் ஊற்றின் (Banjar Hot Spring) பிரம்மாண்டமான தெய்வீக வரலாற்றையும், ஞானிகளின் எல்லையற்ற அருளையும் பின் வரும் வாக்கில் படித்து, ஞானிகள் திருவடிகளை போற்றி வணங்குங்கள்!
===========================
ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற…
பின் அழகாக எதை என்று புரிய, அப்பனே, பின் பார்வதி எவை என்று கூற, தேவியும் வந்து, நிச்சயம் தன்னில் கூட…
அப்பனே, எவை என்று கூற, மகனே, எதை என்று கூற….
இவ்வளவு கஷ்டங்கள் ஏன், எதற்கு என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட…..
அழகாக, பின் அதாவது மடியில் உறங்கு, நிச்சயம் தன்னில் கூட….
ஏதோ, பின் அதாவது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட…
பின் அழகாக, பின் இவ்வளவு எதை என்று கூற..
அனைவரும் என்னை வெறுத்தார்கள்.
ஆனால், தாயே, நீ வெறுக்கவில்லை. நிச்சயம் தன்னில் கூட….
என் தாய் மீது, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அழுது புலம்பிட வேண்டும் நிச்சயம் தன்னில் கூட…
பின் அதாவது இவ் சந்தர்ப்பத்தை இவ்வுலகத்தில் யாருக்காவது கிடைக்குமா என்றால், நிச்சயம் தன்னில் கூட…
பின் (நீ) நினைத்தால்தான் உண்டு என்று, நிச்சயம் தன்னில் கூட…
அழகாக படுத்துறங்கினான் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
தாயே !!!!!, நிச்சயம் தன்னில்….
யான் குழந்தையை போலே எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட….
பின் பாசத்தை பார்க்கவே முடியவில்லை.
இப்பொழுதுதான் பார்க்கின்றேன்.
இவ்வளவு வயதாகி என்றெல்லாம்.
நிச்சயம், அப்பனே, நிச்சயம், பின் வயது எதை என்று அறிய…
அப்பனே, பின் அதாவது பொறுத்தே ஆகவேண்டும் என்பேன் அப்பனே…
இறை ஆசிகள் கிடைக்க.
அப்பனே, எப்பொழுது எவ்வயதில் கிடைக்கும் என்பதை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட..
பின் அதாவது, அப்பனே, பின் ஏதாவது எதிர்பார்ப்போடு, பின் வாழக்கூடாது என்பேன் அப்பனே.
சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே.
அதனால் அதாவது எதிர்பார்ப்போடு வாழ்ந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்றும் கிட்டாது என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, எதை என்று அறிய அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, அப்பனே, அதாவது எதை எதை என்று புரிய , நிச்சயம் எதை, எது என்று புரிய, அப்பனே, பின் அதாவது இவ்நோயால் ( தொழுநோய் ) , நிச்சயம் தன்னில் கூட சில தேசங்கள் பாதிக்கப்படும். நிச்சயம் தன்னில் கூட.
அதாவது, பின் எவை என்று கூட நீ அங்கு சென்றுவிடு.
அதாவது ஒரு தேசத்துக்கு எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் சென்றுவிடு.
இதனால், நிச்சயம் தன்னில் கூட அங்கு இருப்பவர்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட…
இப்பொழுதே அங்கு பல, பின் எவை என்று கூற, பின் நோய்கள், பின் எவராலும் காப்பாற்ற முடியவில்லை.
அங்கு செல், குழந்தாய், நிச்சயம் தன்னில்…
உனக்கு எவை என்று கூற, பரிபூரணமாக விளக்கமும் கிட்டும் நிச்சயம் தன்னில்.
நீ அனைவரையும் காப்பாற்றலாம் நிச்சயம் தன்னில் கூட.
===========================
# ஏன் இவ் வாக்குகள் இப்போது அனைவருக்கும் ?
===========================
உன் புகழ், நிச்சயம் தன்னில் கடைநாள் வரும்.
நிச்சயம் தன்னில் , மறைந்தாலும், நிச்சயம் சித்தர்கள் எடுத்து இவ்வுலகத்திற்கு பரப்பி விடுவார்கள்.
இதனால், எவை என்று கூற பல, பின் உண்மைகள் நீயும் வந்து, பின் அதாவது கலியுகத்தில் சில ஆண்டுகள், நிச்சயம் தன்னில் கூட மறைந்து வாழ வேண்டும் என்பது ( விதி ).
அதனால் அங்கே (இந்தோனேசியா , பாலி ) சென்றுவிடு. எதை என்று புரிய, நிச்சயம் எவை என்று என்றெல்லாம், என்றெல்லாம், நிச்சயம்.
அதாவது இங்கே வந்தான் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.
இதனால் அழகாக, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, எது என்று அறிய.
இவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் எதை உணர்ந்து உணர்ந்து.
===========================
# அருந்தையன் ஞானி மூலம் - எப்படி “பஞ்சார் வெந்நீர் ஊற்று (Banjar Hot Spring / Air Panas Banjar)” - உருவானது? என்ற இறை ரகசியங்கள்.
===========================
இதனால் பல வழியிலும் கூட, பின் இன்னும், பின் தவங்கள் செய்தான். இங்கிருந்து எதை என்று அறிய, நிச்சயம் தன்னில்.
===========================
# (எப்படி அனைவரின் துன்பங்களை, துயரங்களை போகலாம் என்று தவங்கள் செய்தார்கள். அதன் மூலம் பூமியின் ஆழத்திற்கு செல்ல வேண்டும் என்று உணர்ந்தார்)
===========================
அழகாக, நிச்சயம் தன்னில் அவனை, பின் அதாவது அடியில் சென்று மண்ணுக்குள்ள செல்ல செல்ல, நிச்சயம் தன்னில் இன்னும், பின் (பஞ்சார் வெந்நீர் ஊற்று) சீறி பாய்ந்தது.
இன்னும் கூட பல, பின் இன்னும் பல வழிகளில் கூட பல இயற்கை உரங்கள் (இவ்விடத்தில் வெளியே வந்தது).
இன்னும் அடியில் செல்வோம் என்று…….
அடியில் செல்ல செல்ல (பஞ்சார் வெந்நீர் ஊற்று) மேலோங்கி . நிச்சயம் தன்னில் கூட அவன் நோயும் குணமாயிற்று. நிச்சயம் தன்னில் கூட, பின் அவ் எவை என்று கூற.
இன்னும் கூட, பின் எவை என்று கூற, பின் அவை, பின் அதாவது அவன் தன், பின் அதாவது அடியோடு, பின் ஊசியின் மூலம், பின் அதாவது செல்கின்றார்கள் இப்பொழுதெல்லாம் எவை என்று கூற,
பின் அதாவது குற்றி குற்றி, ( மனித உடம்பில் ஊசியை குத்தி , குத்தி மருத்துவம் ) அப்பனே.
ஆனாலும் இவன் ஈசனின் அருளை பெற்றதால், நிச்சயம் (பூமியின்) அடிக்குச் சென்று, நிச்சயம் (பூமியின் மையத்தை) நெருங்க நெருங்க , (பூமி இவ்விடத்தில்) பிதுங்கி பிதுங்கி, மேல் நோக்கி நின்றது (பஞ்சார் வெந்நீர் ஊற்று - Banjar Hot Spring / Air Panas Banjar) இவன் சக்தியால், நிச்சயம் தன்னில் கூட.
பின் இவன் உடம்பும் சரியாகிவிட்டது.
===========================
( அதாவது இங்குள்ள பஞ்சார் வெந்நீர் ஊற்று இவ் உலகிற்கு வெளி வந்தவுடன் , அருந்தையன் ஞானி பெற்றிருந்த தொழுநோயும் முழுவதும் குணமாகிவிட்டது )
===========================
பின் வருவோருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட பல நோய்களும் சரியாகி, இன்பமாக, நிச்சயம் தன்னில் கூட சில சில வியாதிகளும் சரியாகி, எவை என்று கூட, பின் இன்னும் கூட, பின் அப்பனே நல்விதமாக, அப்பனே.
இதனால், அப்பனே, பின் அதாவது, அப்பனே, பின் (தொழுநோய் போன்ற) அதனுடைய (தொடர்புடைய நோய்கள்) , அப்பனே, நிச்சயம் சரியாக வேண்டுமென்றாலும், ஈசனின் கிருபை, நிச்சயம் வேண்டும் என்பேன் அப்பனே.
இன்னும் கூட, அப்பனே…...
===========================
# மூத்தோன் , பிள்ளையார் குறித்த வாக்கு.
===========================
இதனால், அப்பனே, இன்னும், அப்பனே. ஞான பிள்ளையோனை பற்றியும் கூட, அப்பனே. இவ்விடத்தில், அப்பனே, சிறப்புகள் எல்லாம், அப்பனே, இருக்கின்றது என்பேன்
இன்னும் வரும் காலத்தில், யான் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய.
அப்பனே, இன்னும், இன்னும், அப்பனே, பின் அவ் (அருந்தையன்) ஞானியின், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பிள்ளையோன் மட்டும், நிச்சயம், தன்னில் கூட.
பின் அதாவது, எவை என்று கூற…
===========================
# அருந்தையன் ஞானி அன்னை பார்வதி தேவியின் மடியில் உறங்கி கொண்டு இங்கு இருப்பதால் , அவ் அருந்தையன் ஞானியை பார்க்க பிள்ளையான் இங்கு வந்து கொண்டே இருக்கின்றார்.
===========================
பின் தன் எவை என்று கூற, அன்னையை மட்டும், நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, மடியில், நிச்சயம், தன்னில் கூட, பின் உறங்கி, எவை என்று ஒரு சந்தோஷம் அவனுக்கு…
ஆனாலும், ஒரு முனிவன் உறங்கி, எதை என்று கூற , இன்று இருப்பதால், நிச்சயம், தன் அவனைக் காண இங்கு அடிக்கடி வந்து கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே.
கவலையில் இல்லை என்பேன் அப்பனே.
இதனால்தான், அப்பனே, நிச்சயம், நன்மைகளாக ஆகட்டும் என்பேன் அப்பனே.
அதனால் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, அப்பா.
===========================
# வருங்காலதில் உங்கள் சந்ததிகளுக்கு உதவும் இவ் வாக்குகள்….
===========================
ஏனென்றால், அப்பனே, எதை என்ற, அப்பனே, பின் வரும் காலத்தில், எவை என்று கூற இவையெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்பனே, மனிதர்கள் என்பேன் அப்பனே.
===========================
# ஒரே ஒரு அருந்தையன் ஞானி - தனது கடும் துயரத்தால், ஆழ்ந்த தவ வலிமையால், பல கோடிக்கணக்கான மனிதர்களின் துயர் நீக்கினார். இன்றும் நீக்கிக்கொண்டே இருக்கின்றார்…இதே போல பல கோடி ஞானிகள் உள்ளனர்….
===========================
இதனால்தான், அப்பனே, சித்தர்கள் எவை என்ற, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது, ஒரு ஞானி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல லட்சக்கணக்கான, அதாவது பல கோடிக்கணக்கான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதர்களை, அப்பனே, பின் அதாவது, துயர் தூக்கினான் என்பேன் அப்பனே.
அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஞானி, ஞானிகள் எல்லாம், அப்பனே, பின் வரச் செய்வோம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
(அவர்கள் அனைவரும் கலியுகத்தில் மக்கள்) துயர் தீர்ப்பார் என்பேன் அப்பனே.
கலியுகத்தின் அப்பனே, நிச்சயம் கட்டாயம், அப்பனே, பின் அழிந்து போவது தான் என்பேன் அப்பனே.
ஆனாலும், அப்பனே, ஞானிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, கருணை உள்ளவர்களை, அப்பனே, ஏன் என்று, அப்பனே, அப்பனே, பின் நல்மனதாகவே, அப்பனே, நிச்சயம் இருப்பவர்கள் எல்லாம், அப்பனே, பின் ஆறுதல் படுத்தி, அப்பனே, அனைத்தும் செய்வார் என்பேன் அப்பனே.
ஆசிகள் இன்னும், அப்பனே, ரகசியங்கள் இருக்கின்றது. அப்பனே, எவை என்று கூற இவ் தேசங்கள் பல பல, எவை என்று, அப்பனே, பின் உண்மை அடிகள், அப்பனே, நிச்சயம், அவையெல்லாம் வருங்காலத்தில் சொல்வேன்.
ஆசிகள் !
ஆசிகள் !!
ஆசிகள் !!!
===========================
# பஞ்சார் வெந்நீர் ஊற்று விவரங்கள்
===========================
வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- பஞ்சார் வெந்நீர் ஊற்று (Banjar Hot Spring / Air Panas Banjar), ஜாலான் பன்ஜார், பன்ஜார், கேக். பன்ஜார், கபுபாதேன் புலேலெங், பாலி 81152, இந்தோனேஷியா
கூகிள் மேப் லிங்க் (Google Map link) :-
https://maps.app.goo.gl/o1fH24cSecoijnYq5
Address:- Banjar Hot Spring / Air Panas Banjar, Jalan Banjar, Banjar, Kec. Banjar, Kabupaten Buleleng, Bali 81152, Indonesia
===========================
வடக்கு பாலியின் (Buleleng) அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள 'பஞ்சார் வெந்நீர் ஊற்று', இயற்கையின் அற்புதம் மற்றும் ஆன்மீக ஆற்றல் சங்கமிக்கும் ஒரு சிறப்பான இடமாகும் .இதன் முக்கியச் சிறப்பம்சங்கள் இதோ:
1. கந்தக நீரின் மருத்துவ குணம் (Healing Power of Sulfur):
பூமியின் அடியில் இருந்து இயற்கையாகச் சுரக்கும் இந்த வெந்நீரில் 'கந்தகம்' (Sulfur) அதிக அளவில் நிறைந்துள்ளது. சித்த மருத்துவத்தில் கந்தகத்திற்குத் தனி இடம் உண்டு; பல்வேறு வியாதிகளைத் தீர்க்கும் சஞ்சீவியாகக் கந்தகம் கருதப்படுகிறது. மிதமான சூடுள்ள (சுமார் 37°C) இந்த நீரில் நீராடுவது தீராத தசை வலிகள், மூட்டு வலிகள் மற்றும் பலவிதமான தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
2. நாகச் சிற்பங்களின் வழியே பாயும் தீர்த்தம் (Sacred Naga Spouts):
இந்தக் குளத்தில் நீர் வெறுமனே தேங்கி நிற்பதில்லை. கற்களால் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட எட்டிற்கும் மேற்பட்ட 'நாகர்களின்' (Dragon / Naga) வாயிலிருந்து இந்த வெந்நீர் சீறிப் பாய்கிறது.
3. மூன்று நிலைக் குளங்கள் (Three-Tiered Pools):
இங்கு மூன்று விதமான குளங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன:
(3.1) முதல் நிலை: அதிக வெப்பமான நீர் நேரடியாகச் சுரக்கும் சிறிய குளம்.
(3.2) இரண்டாம் நிலை: முதல் குளத்திலிருந்து வழிந்தோடி வரும் சற்றுப் பெரிய குளம். குடும்பமாகச் சென்று நீராடவும், அமைதியாக அமரவும் இது ஏற்றது.
(3.3) மூன்றாம் நிலை: சுமார் 3 மீட்டர் உயரத்தில் இருந்து நாகங்களின் வாயிலிருந்து நீர் மிக வேகமாகத் தலையில் கொட்டும் அமைப்பைக் கொண்டது. இது உடலுக்கு ஒரு இயற்கையான மூலிகை மசாஜ் போன்ற ஆழமான புத்துணர்வைக் கொடுக்கும்.
4. ஆன்மீக மற்றும் உடல் தூய்மை (Purification):
பாலி மக்கள் இதனை வெறும் சுற்றுலாத் தலமாகப் பார்ப்பதில்லை. இது கர்ம வினைகளையும், உடலின் மாசுகளையும் அகற்றும் 'புனித நீராடல்' (Melukat) தலமாகவே கருதப்படுகிறது. அடர்ந்த மரங்கள், பறவைகளின் சத்தம் மற்றும் செடிகள் சூழ்ந்த இந்த அமைதியான சூழலில் மிதமான சுடுநீரில் அமர்ந்து தியானிப்பது மனதிற்கு எல்லையற்ற விடுதலையைத் தரும்.
"இயற்கை அன்னை தன் மடியில் கனிவோடு வைத்திருக்கும் இந்த வெந்நீர் ஊற்று, நமது உடலின் வலிகளை மட்டுமல்ல, ஆத்மாவின் சோர்வையும் நீக்கிப் புத்துணர்வு தரக்கூடிய ஒரு அற்புதத் தலமாகும். சித்தர்கள் போற்றும் கந்தகச் சத்து நிறைந்த இந்த நீரில் நீராடுவது ஒரு தெய்வீக அனுபவமே."
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)



No comments:
Post a Comment