அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 7
வாக்குரைத்த நாள் :- 01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை
வாக்குரைத்த இடம் :- சென்னை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
================================================
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 7 )
================================================
===================================
# சிவபதம் அடைய வேண்டுதல்கள்…
==================================
அடியவர் 12 :- சார். எனக்கு என்னுடைய வாழ்நாள் வரைக்கும் அகத்தியர் பெருமான் கூட இருந்து, நான் யாருக்கும் துன்பம் கொடுக்காமல், நோய் எல்லாம் வராம, ராத்திரி படுத்தோமா? காலம்பர சிவபதம் அடையனும். அதுக்கு எனக்கு அகத்தியர்………
குருநாதர் :- எதை என்று புரியாது. தாயே, கவலை வேண்டாம். நல்வதியாகுது. நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் வழி செய்வேன் யானே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே என்ன பண்ணுவாரு? நானே வழி செய்வேன்.
அடியவர் 12 :- நோய் இல்லாமல் இருக்கணும், சார்.
குருநாதர் :- தாயே, நிச்சயம் எவராலும் இருக்க முடியாது,
அடியவர் 12 :- அது யாருக்கும், இறைவன் ஒரு வயசுக்கு மேல வந்து….
அடியவர் :- நோய் வரத்தானே வரத்தான் செய்யும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (நோய்) வரத்தானே செய்யும் என்று சொல்றார் அம்மா.
அடியவர் :- மனித உடம்பே இயந்திரம்னு சொல்லி இருக்காரு.
குருநாதர் :- தாயே, உன் வயதில் இருப்பவர்கள் அனைவரிடத்திலும் கேட்டுக்கிட்டு வா. இதற்கு பதில் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உன் வயது எவ்வளவுமா?
அடியவர் 12 :- எனக்கு 71, சார்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அம்மா, 71 வயசு . யாரும்மா இருக்காங்க இங்க வந்து?)
மற்றொரு அடியவர் : - எனக்கு 70 அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- (உங்க வயசு 70 தானா? அப்ப உங்க வயசு கம்மிதான்.)
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- தாயே, கவலையை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அம்மா, முதல்ல இந்த கவலையை விடுங்க. வயசானா எல்லாருக்கும் ஏதோ ஒரு நோய் வர்றது இயற்கைதான்மா, அதை யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது. இது எல்லா மனுஷங்களுக்கும் வர்றதுதான். அதனால நீங்க இப்ப என்ன பண்ணனும்னா, மனசை தளரவிடாம வேண்டிக்கணும். 'யாருக்கும் எந்த நோயும் வரக்கூடாது, எல்லாரையும் நீதான் பாதுகாக்கணும்'னு மத்தவங்களுக்காக மனசார நினைங்க அம்மா. அப்படி நீங்க மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைச்சாலே, உங்க உடம்பு தானாவே தேறிடும், உங்களுக்கு எல்லாம் நல்லபடியாவே நடக்கும் அம்மா!. ஆசிகள் நல்லா உங்களுக்கு இருக்கு அம்மா..")
============================================
# சித்தன் அருள் வலைதளம் தொடர அருள் ஆசி கேட்ட பொது உரைத்த வாக்கு
============================================
குருநாதர் :- சித்தன் அருள் தொடரத்துக்கு அகத்தியர் பெருமானுடைய அருள் வேணும். ( அந்த அய்யா அவங்க ) மனசு வருந்தி ஒரு வார்த்தை சொல்லிட்டாரு. அந்த சித்தன் அருளை தொடரனும்…..
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாரெல்லாம் யார் நடத்துவது என்று தெரியவில்லை அவனுக்கே.
குருநாதர் :- தாயே, எதை என்று கூற, ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளேன். அவ்வளவுதான்.
அடியவர் 12 :- ஏன்னா இந்த தடவை மனசு வருந்தி அவர் சொல்லிட்டாரு. அதுதான் எனக்கு (மனசு கஷ்டமா இருக்கு ).
குருநாதர் :- தாயே, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, எவை எவ்வாறாக பின் நிச்சயம் பின் மக்கள் பலபேர் எதை என்று அறிய, நிச்சயம் சந்தோஷப்படுத்துவதே நிச்சயம் தன்னில் கூட பெரும் புண்ணியம். நிச்சயம் எவை என்று அறிய.
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட மனிதனின் மனது மாறிக்கொண்டே இருக்கும். அவ்வளவுதான்.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 13 :- ( பின் வரும் , அகத்திய மாமுனிவர் துதி பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே …!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே …!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ….!
வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ …!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை
நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்
பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே – என்றும்
தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்
குருநாதர் :- தாயே, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் செய்கின்றேன். கவலை விடு.
=========================================
# மீண்டும் சித்தன் அருள் சேவை குறித்த வாக்குகள்
=========================================
குருநாதர் :- பின் எவை என்று புரிய, அதாவது உன் பக்கத்தில் இருப்பவர்கள் சொன்னாள் அல்லவா? எதை என்று கூற (சித்தன் அருள் சேவையை) நிறுத்துகின்றேன் என்று நிச்சயம் எவை என்று மக்களுக்கு யான் சேவையை பின், எவை என்று புரிய பின் யான் நிறுத்தினால் மட்டுமே உண்டு.
குருநாதர் :- ஆதியிலிருந்தே தொடங்குவேன் யான். நிறுத்தினேன்னா என்ன? மனிதர்கள் தான் நிச்சயம் இங்கு மூடர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்ப உலகம் வந்து? அப்ப இருந்து குருநாதர் வந்து. அப்ப இருந்தே குருநாதர் என்ன பண்றாரு? அந்த சேவை செஞ்சுட்டு இருக்காரு. அந்த சேவை செஞ்சுனே இருக்கிறார். ஆனால் மனிதன் உணரவில்லை.
குருநாதர் :- பல செய்தேன். ஆனாலும் நிச்சயம் நன்றி கெட்ட மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- பல விஷயங்கள் நான் செஞ்சு தந்துக்கிறேன் ஆனால் என்ன பண்ணுவாரு? கடைசில அகத்தியன் வந்து, செய்யலையேன்னு திட்டுவாரம்பா.
குருநாதர் :- இப்படித்தான் மனிதன். அதனால்தான் நன்றி கெட்ட எவை என்று அறிய நிச்சயம் பழைய மொழியும் ஒன்று உண்டு.
=========================================
( இவ் அடியவருக்கு குருநாதர் பல அருள் ஆசிகள் கொடுத்தார்கள். இவ் அடியவர் கெட பல கேள்விகளுக்கும் அருள் உரைத்தார்கள். அவ் வாக்கில் உள்ள பொது வாக்குகளை இங்கு காண்போம் )
=========================================
குருநாதர் :- இதனால் எவை என்று புரிய தாயே, பின் நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம். நிச்சயம் எது என்று புரிய பின் அனைத்தும் யானே செய்கின்றேன் எவை என்று புரிய.
=======================================
# அனைத்தும் சொல்லிவிட்டாலும் நிச்சயம் இறைவனை மதிக்க தெரியாமல் பின் மனிதன் போய்விடுவான்.
=======================================
குருநாதர் :- அதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் மாயை மறைத்து வைத்திருக்கின்றது.
குருநாதர் :- அனைத்தும் கூட நிச்சயம் அதாவது யான் சொல்லிவிட்டால் நிச்சயம் நீயும் கேட்டு விடுவாய். நிச்சயம் உடனடியாக.
குருநாதர் :- ஆனாலும் பின் விதி ஒன்று இருக்கின்றது. அனைத்தும் யான் அறிந்தவன்.
குருநாதர் :- அதனால்தான் நிச்சயம் அனைத்தும் பின் சொல்லிவிட்டாலும் நிச்சயம் தன்னில் கூட பின் மதிக்க எவை என்று கூற இறைவனை மதிக்க தெரியாமல் பின் மனிதன் போய்விடுவான்.
=========================================
# மற்றவர்களுக்காக வேண்டிக்கொள். தானாகவே நடக்கும்.
=========================================
குருநாதர் :- எவை என்று கூற நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களுக்காக வேண்டிக்கொள். தானாகவே நடக்கும்.
=========================
# பொதுநலம் விரும்பு. பிறர் நன்மை விரும்பு.
# சுயநலம் வேண்டுதல் தவிர்
=========================
குருநாதர் :- சுயநலமாக என்று வேண்டிக்கொள்ளாதே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "மத்தவங்களுக்காக வேண்டிக்கிறதுதான் நிஜமான பக்தி. 'எல்லாரும் நல்லா இருக்கணும்பா'ன்னு மனசார நினைங்க. நீங்க எங்க போனாலும், உங்களை பத்தி மட்டும் நினைக்காம மத்தவங்களுக்காகவும் என்னைப் பார்த்து வேண்டிக்கணும். 'ஐயா, எல்லா பிள்ளைகளுக்கும் நல்லபடியா கல்யாணம் நடக்கட்டும்'னு நீங்க வேண்டிக்கிட்டு இருக்கீங்க பாத்தீங்களா, அதே மாதிரி எப்பவும் வணங்குங்க. நீங்க உங்களுக்காக எதையும் கேட்காம, மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைச்சாலே போதும். நான் எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன், எல்லாரும் நல்லா இருப்பீங்க!" )
================================================
# அனைத்தும் ஒரே இடத்தில் நிச்சயம் சொல்லிக் கொண்டிருந்தால் அதற்கு மதிப்பு இருக்காது.
================================================
அடியவர் 13 :- (..................................... )
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது வேண்டாம். நிச்சயம் இடம், பொருள், ஏவல் ஒன்று இருக்கின்றது அல்லவா? அப்பொழுதுதான் அனைத்தும் செப்புவேன்.
குருநாதர் :- தாயே , அனைத்தும் ஒரே இடத்தில் நிச்சயம் சொல்லிக் கொண்டிருந்தால் அதற்கு மதிப்பு இருக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்தும் ஒரே இடத்துல வச்சு சொல்லிக் கொண்டிருந்தால் மதிப்பு இருக்காது.
=======================================
# யாருக்கு இறை நம்பிக்கை இருக்கின்றதோ சில சோதனைகளை கொடுத்து அனைத்தும் செய்வார் இறைவன்.
=======================================
குருநாதர் :- தாயே , நிச்சயம் நம்பிக்கை வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு சுற்றினாலும், அதனால் நிச்சயம் இறைவன் அனைத்தும் எந்தனக்காக செய்வான் என்று யாருக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றதோ சில சோதனைகளை கொடுத்து அனைத்தும் செய்வான் இறைவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "இறைவனை வேண்டுறோம்னா முதல்ல அவர் மேல முழு நம்பிக்கை வைக்கணும். 'நமக்காக அவர் கண்டிப்பா செய்வாரு'ங்கற அந்த அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்துச்சுன்னா போதும். இடையில கொஞ்சம் சோதனை எல்லாம் செஞ்சு நம்மள சோதிச்சுப் பார்த்தாலும், அதுக்கான நேரம் வரும்போது அந்தப் பலனை அவர் கண்டிப்பா வந்து செஞ்சு கொடுப்பாரு!" )
அடியவர் 13 :- குடும்பத்துல மூத்த தலைவரா, பொறுப்பா இருக்காரு குருநாதர் தான். அவர் இந்த குடும்பத்தை நல்ல முறையில வழிநடத்தி போகணும். அதுக்கு நான் என்ன செய்யணும்?
குருநாதர் :- தாயே, எவை என்று அறிய நிச்சயம், நிச்சயம் நீ சொல்லித்தான் யான் செய்ய வேண்டுமா, என்ன தாயே?
சுவடி ஓதும் மைந்தன் :- நீ கேட்டுத்தான் நான், சொல்றதை செய்ய வேண்டுமா? என்ன தாயேன்னு கேக்குறாரு வந்து
===================================================
# கருணைக்கடல் , நம்மிடம் முதலில் அழிப்பது சில பாவங்கள், வினைகளையே.
====================================================
குருநாதர் :- நிச்சயம் என்னை நம்பி வந்துவிட்டால் முதலில் சில பாவங்கள் வினைகளை அழிப்பேன். தாயே, எது என்று அறிய பின் நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- சில பாவ வினைகள்னா முதல்ல என்ன பண்ணுவாரு? அழிப்பார். அப்பதான் என்ன பண்ணுவாரு? கொடுப்பார்.
==================================================
# நமது பாவ வினைகளை அழிக்கும் வரையில் , பொறுமை மிக மிக அவசியம்.
==================================================
குருநாதர் :- நிச்சயம் அதனுள்ளே நிச்சயம் இடைவெளிதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( 'இடைவெளி'னா என்னன்னு தெரியலையா அம்மா? அதுக்கு அர்த்தம் 'பொறுத்திருக்கணும்' அப்படின்னு அர்த்தம். அந்த பிரேக் டைம்ல நீங்க சும்மா இருக்காம, உங்களால முடிஞ்ச ஏதோ ஒரு சின்ன நல்ல விஷயத்தை பண்ணிக்கிட்டு அப்படியே காலத்தை ஓட்டலாம். அந்தப் பொறுமைதான் ரொம்ப முக்கியம்!" )
அடியவர் 13 :- அப்ப இன்னும் பொறுத்திருக்க வேண்டும். ஐயா,
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் ஒரு கவலை விடு. எப்பொழுது வேண்டுமானாலும் யான் செய்வேன்.
==============================================
# அனைவருக்கும் தொழில் , திருமணம் இவையெல்லாம் ஒரு அடிப்படை
==============================================
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட தொழில் எவை என்று புரிய? நிச்சயம் அதாவது திருமணம் இவையெல்லாம் நிச்சயம் ஒரு மனிதனுக்கு அடிப்படை.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் ஒரு அடிப்படை மாதிரி. இதெல்லாம் நடந்துரும் அம்மா.
===========================================
# ஏன் இறைவனால் திருமண தாமதங்கள் உண்டாகின்றது ?
===========================================
குருநாதர் :- ஏன் எதற்கு என்றால், நிச்சயம் யாரிடத்தில் பின் தவறு இருக்கின்றதோ அதற்கு நிச்சயம் ஈசன், அதாவது நிச்சயம் சிறிது தாமதமாக்கித்தான் செய்வான்.
குருநாதர் :- ஏனென்றால் ஆணோ பெண்ணோ நிச்சயம் பாதிக்கக்கூடாது அல்லவா?
குருநாதர் :- தாயே, எதை என்று புரிய புரிந்துகொள்.
அடியவர் 13 :- முன்னோர்களோட ஆசீர்வாதம்
குருநாதர் :- எவை என்று நிச்சயம் உண்டு.
==========================================
# இறைவன் யோசித்து யோசித்து தான் அனைத்தும் செய்வார்.
==========================================
குருநாதர் :- தாயே, யோசித்து யோசித்து கேட்கின்றாய். இதுவே நிச்சயம் தன்னில் கூட அதேபோலத்தான் நிச்சயம் தன்னில் இறைவன் படைத்தான். யோசித்து யோசித்து தான் செய்வான். அனைத்தும் எவ்வாறு நலங்களா இல்லை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து கேள்வி கேளுங்க அம்மா?
அடியவர் 13 :- அவ்வளவுதான் அய்யா. எல்லாமே செஞ்சு கொடுத்தா சரிங்க ஐயா. அவ்வளவுதான் பெரியவரே.
=================================================
# பிள்ளையானுக்கு அனுதினம், மூன்று மாதங்கள், அரச மரம் + தியானங்கள் + 21 தீபங்கள்.
=================================================
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் அனுதினமும் பின் எவை என்று கூற பின் எதற்கு பிள்ளைகள் என்று கேட்டு விட்டாய். மீண்டும் சொல்கின்றேன்.
குருநாதர் :- பின் அதாவது அறிந்து கூட பின் அனுதினமும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அரச பின் மரத்தை நிச்சயம் தன்னில் கூட பின் தியானங்கள் செய்து பிள்ளையோனுக்கு நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் 21 தீபங்களை நிச்சயம் தன்னில் கூட பின் மூன்று மாதங்கள் ஏற்றி வரச் சொல். நிச்சயம் பின்பே நான் உரைக்கின்றேன் சிறப்பாக.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment