​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 3 March 2026

சித்தன் அருள் - 2139 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 3



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 3

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===============================================
# இவ் சத் சங்கம் குறித்த ஒரு விளக்க பதிவு குறிப்பு.
===============================================

( குறிப்பு :- இந்த சத்சங்கத்தில் பங்கேற்ற அடியவர்கள், கடந்த ஆண்டு பெங்களூர் சத்சங்கத்திலிருந்து தொடங்கி கந்தர் அனுபூதியை படித்தும் பாராயணம் செய்தும், அதை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றும் வந்தவர்கள். 

மேலும், குருநாதர் கூறியபடி நவதானிய தீபங்களை முறையாக ஏற்றி வழிபாடு செய்தும், அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களின் யாத்திரையையும் நிறைவேற்றியும் உள்ளனர். அதுமட்டுமல்லாது, குருநாதர் அருளிய நவ கைலாயம், நவ திருப்பதி போன்ற புனித யாத்திரைகளையும் செவ்வன செய்து முடித்துள்ளனர்.

அதன் பின், ராமேஸ்வரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தல், கடலில் பால், புனித நீர், தீபம் விடுதல், பித்துருக்களுக்கான தர்ப்பணங்கள் போன்ற அனைத்தையும் முறையாக செய்து முடித்தனர். 

கூட்டுப் பிரார்த்தனையில் சித்தர்கள் கூறும் அனைத்து பரிகாரங்களையும் வழிமுறைகளையும் முறையாக செய்து கொண்டே வருகின்றவர்கள்…

இவ்வாறு குருநாதர் கூறிய உத்தரவுகளை முழுமையாக அனுசரித்து வந்த இந்த அடியவர்களை, குருநாதர் தனிப்பட்ட முறையில் அழைத்து, ஒவ்வொருவருக்கும் வாக்குகளையும் நல்லாசிகளையும் வழங்கினார்.

குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார்:
“யார் ஒருவர் சித்தர்களைப் பேச்சு நடக்கின்றார்களோ, அப்படியே பின்பற்றி வருகின்றார்களோ, அவர்களுக்கு எங்களுடைய வாக்குகளும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.”

குருநாதருடைய வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, குருநாதருக்கு நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் குருநாதருடைய பிள்ளைகளே. ஆனால் குருநாதருடைய வாக்குகளை யார் பின்பற்றி கேட்டு வருகின்றார்களோ, அவர்களுக்கு வாக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இதை அடியவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குருநாதருக்குரிய விஷயங்களை அப்படியே செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால்தான் குருநாதருடைய வாக்குகள் கிட்டும்.

அந்த உத்தரவின்படி நடந்த இந்த சத்சங்கத்தில் ,  அடியவர்களுக்கு, குருநாதர் நேற்று வாக்குகளையும் அருளாசிகளையும் வழங்கினார். அந்த வாக்குகளில் உள்ள பொதுவான உபதேசங்களை இப்பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறோம்.) 

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

================================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று 
நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 3)
================================================

=================================================
# ஏறத்தாழ 100+ நாட்களுக்கு மேல் நவகிரக தீபம்  ஏற்றியவர் இவ் அடியவர் (#2) - என்ற தகவலை அடியவர்கள் அறிய தருகின்றோம். இவ் சத்சங்கத்தில் வாக்கு வந்த அனைவரும், குருநாதர் சொல்லியவாறு அப்படியே பல வழிபாடுகளை செய்து வந்துள்ளனர். அதனால் இவர்களுக்கு மட்டும் இவ் சத்சங்கம் நடந்தது.
=================================================


குருநாதர் :-  எதை இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பல ஆலயங்கள் இருக்கின்றது. எவை என்று கூற பின் இன்னும் பின் சிவாலயங்கள். அதற்கெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய வருங்காலத்தில் பின் சென்று நிச்சயம் தரிசித்து வா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் பல ஆலயங்கள், சிவாலயங்கள் எல்லாம் இருக்குது. இது தான் உன்னுடைய வேலை. அப்பதான் உண்மை நிலை தெரியும்.

குருநாதர் :-   தாயே, நிச்சயம் கேள் இன்னும் . 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கேட்கலாம். கேளுங்க, கேளுங்க. 

அடியவர் 2:-  ( *** சில கேள்விகள் ***  ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( விளக்கம் அளித்தார்கள். இறைவன் எதற்காக இவ் அடியவரை அனுப்பினர்களையோ , அதற்கு தகுந்தாற்போல் ஒரு வேலை அமைந்ததை அப்போதுதான் அங்கு அனைவரும் உணர்ந்தார்கள் )

அடியவர் 2:-  ( ………… )

குருநாதர் :-   தாயே, பின் உன்னை பற்றி, உன்னை பற்றி நீ கவலைப்படு. நிச்சயம் பின் உன் பாதை பின் எவை என்று கூற பின் போய்க்கொண்டே இருக்கும். தானாகவே பின் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால உன்னை பற்றி நீ கவலைப்பட்டுக்கோ. அவங்க பத்தி எல்லாம் விட்டுக்கோ. 

அடியவர் 2:- ( *** சில கேள்விகள் ***  ) 

குருநாதர் :-  (  *** தனி வாக்கு ***  ) 

=========================================
# இப்போது 3ஆம் அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார் 
=========================================

அடியவர் 3:- ( நூலை பார்த்து, பாடல் பாட ஆரம்பித்தார் )

குருநாதர் :-   தாயே, நில். நிச்சயம் பின் எவை என்று கூற பின்  இவ்வாறெல்லாம் பின் நிச்சயம் எவை என்று கூற பின் படிக்கக்கூடாது. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  புக் எல்லாம் பார்த்து எல்லாம் படிக்கக்கூடாது. 

அடியவர் 3:-  ( பின் வரும்  பாடல் பாட ஆரம்பித்தார் )

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

குருநாதர் :-   தாயே, ஏன் இப் பாடலை  பாடினாய்? 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் )

அடியவர் 3:- விநாயகப் பெருமானின்…. முதல் பாடல் …..

==============================================
# அரச மரத்தை சுற்றி வந்தால் பல நன்மைகள் நிச்சயம் நடக்கும். 
# தீபத்தை ஏற்றி சுற்றி வாருங்கள்.உங்கள் எண்ணங்கள்  பலிதமாகும்.
==============================================

குருநாதர் :-   எதை என்று புரிய, புரிகின்றதா? நிச்சயம் தன்னில் கூட. ஒன்றை சொல்கின்றேன். என்ன வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் மனதில் விழுகின்றதோ, அதற்கு தகுந்தார் போல் நிச்சயம் தன்னில் கூட பின் அரசமரம் , பின் பிள்ளையோன் இருப்போன் அல்லவா? அதை சுற்றி வந்து கொண்டே இரு. 

குருநாதர் :-  நீ பாடலை பின் பாடிக் கொண்டே இரு. நிச்சயம் தீபத்தை ஏற்றிக் கொண்டே இரு. உன் எண்ணம் நிச்சயம் தன்னில் கூட பின் பலிதமாகும் . பின் பல நிச்சயம் தன்னில் கூட நன்மைகள் நடக்கும். 

================================================
# அரச மரம் குறித்த பல ரகசியங்கள் அடங்கிய வாக்கு பின்வரும் பதிவுகளில் படிக்கவும்.
================================================
#அன்புடன் அகத்திய மாமுனிவர் - 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1,2,3,4,5,6,7,8,9,10,11
சித்தன் அருள் - 2095, 2096, 2097, 2098, 2099, 2100, 2101, 2102, 2103, 2104, 2105
================================================

குருநாதர் :-  தாயே, நல் விதமாக இன்னும் கேள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கேட்கலாம். கேளுங்க, கேளுங்க. 

அடியவர் 3:-  போன முறை வந்து பிறவி நோக்கமும் என்னன்னு சொல்றேன்னு ஐயா சொல்லி இருந்தாங்க. 

குருநாதர் :-   தாயே, நிச்சயம் அவ் நேரம் அதாவது எவை என்று புரிய, அதனாலதான் நிச்சயம் இதை யான் சொன்னேன். இதை நீ செய்து கொண்டே வா.  தானாக யானே வந்து செப்புவேன். எதை என்று புரிய பின்  அதாவது நிச்சயம் அகத்தியன் சொல்வானா என்று நீ நினைத்தாயா என்ன? 

அடியவர் 3:-  (.......)

குருநாதர் :-   என்னை அது தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகின்றாய்? சொல்லி கொடு.

குருநாதர் :-   நிச்சயம்  தன்னில் எதை என்று அறிய. நிச்சயம் அதாவது சிவபுராணத்தை பாடிக்கொண்டே இரு இப்பொழுது . 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்தை பாடிக்கிட்டே இருக்கணும். 

குருநாதர் :-  தாயே, இன்னும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் சித்திரை, பின் வரட்டும் பின்பு உரைப்பேன் அதைப்பற்றி . 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப உரைக்கிறாரு? 

அடியவர் 3:-  சித்திரை மாசம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (சித்திர மாசத்து மேல, உங்க பிறவியை பற்றி  சொல்வார்.) 

குருநாதர் :-  தாயே, இவ்வளவுதானா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவுதானா? இது தானே கேட்க வந்தேன்னு கேட்கிறார். 

=======================================
# மரம் நடுவது மிக அவசியம் …புண்ணியம் ….
=======================================

அடியவர் 3:-  இப்ப நிறைய வந்து இப்ப மரங்கள் நம்ம பொதுவா வந்து மரங்கள் எல்லாம் ரொம்ப அழிந்து கிட்டே வருது. அதற்கு அந்த மரம் நடுவதற்கு, தேரைய சித்தர் அய்யா வாக்கு ….. 

குருநாதர் :-   தாயே, நிச்சயம் இதை நீ செய்தே ஆக வேண்டும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட. 

===========================================
# உழவார பணி - நிச்சயம் அனைத்து புண்ணியங்களும் பின் சிவபுண்ணியங்கள் நிச்சயம் தேடி வரும். அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்.
===========================================

குருநாதர் :- பின் எவ்வாறு என்பதெல்லாம் இன்னும் கூட பின் உழவார பணிகெல்லாம்.,நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அப்பனே சிலர் அப்பனே பின் நிச்சயம் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியை செல். நிச்சயம் அனைத்து புண்ணியங்களும், பின் சிவ புண்ணியங்களும் நிச்சயம் தன்னில் கூட தேடி வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப… 

அடியவர் :- உழவார பணி பண்ணனும். மரம் நட வேண்டும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  உழவார பணி போகணும். மரம் நட வேண்டும். அதுக்கு  வந்து சிலர் பேரை நான் தேர்ந்தெடுத்து சொல்றேன். அவங்க கூட போயிட்டு எல்லாத்தையும் நீங்க செய்யுங்க அம்மா என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு புரியுதுங்களா? அம்மா.

அடியவர் :-  (யாத்திரை குழு அன்பர்கள் எல்லாம் உழவார பணி, மரம் நட வேண்டும்..அதுக்கு… )

===========================================
# எப்பொழுது வாக்குகள் செப்பினால் சக்திகள் ?
===========================================

குருநாதர் :-   தாயே, கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட எப்பொழுது எவை செப்ப வேண்டும் என்பவை எல்லாம் யான் அறிவேன். 

குருநாதர் :-  ஏனென்றால் எப்பொழுது எதை செப்பினால் பின் நிச்சயம் உங்களுக்கு சக்திகள் என்றெல்லாம் யான் அறிவேன். 

குருநாதர் :-  ஏனென்றால் நிச்சயம் அச் சக்திகளுக்கு அதாவது நிச்சயம் பின் சக்திகள் இல்லை என்றாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுது எதை செப்ப வேண்டுமோ அப்பொழுது பின் செப்பினால் அச் சக்தி தானாக வந்துவிடும். 

குருநாதர் :-  அதனால்தான் அனைவருக்கும் பின் பொறுத்திரு, காத்திரு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

அடியவர் 4:- ( திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 51  உருவாய் அருவாய் பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

=================================
# அப்பனே, வருவாய் வேண்டுமா? 
=================================

குருநாதர் :-   அப்பனே, வருவாய் வேண்டுமா? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  வருவாய் வேண்டுமா என்று கேட்கின்றார் ஐயா. 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் இப்பொழுது என்ன கேட்டாய்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இப்ப என்ன கேட்டாய் என்று கேட்கின்றார் அய்யா ?)

அடியவர் :-   குருநாதர் கிட்ட என்ன கேக்குறீங்கன்னு?. 

அடியவர் 4:-  வாழ்க்கையில தான் என்ன நடக்க போகுதுன்னு தெரியல. 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முருகனே வருவாய் என்று கூறிவிட்டாய் அப்பனே. வருவாய். இதனைத்தான் யான் சொன்னேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- வருவாய் யாரு? 

அடியவர் :- துட்டு ( பணம் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் தான்  வருவாய். வருவாய் என்று சொல்றீங்க இல்ல? அது என்ன சொன்னார் அகத்தியர்? 

அடியவர் :-  அந்த வருவாய் தான் முருகன் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் தான்  வருவாய், வருவாய் என்று. 

மற்றொரு அடியவர் :- பணம் வருதுன்னு சொல்லல….. முருகனே வருவாய். 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் அவன் வருவாயும் இவன்தான் கொடுக்க வேண்டும் என்று. அப்பனே, அனைத்தும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  யார் கொடுக்க வேண்டும்? முருகன் தான். முருகன் தான் வருமானத்தை கொடுக்கணும். 

=======================================
# விதி ரகசியங்கள் ……. ( தனி வாக்குகள் )
=======================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் உன் விதியில் வருமானம் ( **** விதி ரகசியங்கள் **** ……………. …………… …………..  ……………  ……………….  ………………….  ………………..  ……………)  அதனால்  அப்பனே பின் கட்டிப்போட்டு எவை என்று இறைவன் உன்னை கட்டிப்போட்டு விட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( **** விதி ரகசிய விளக்கங்கள் **** ……………. …………… …………..  ……………  ……………….  ………………….  ………………..  ……………  )

குருநாதர் :-   அப்பனே, இப்பொழுது என்ன செய்வாய் அப்பனே? அதை அப்பனே எவர் அவிழ்க்க வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  கட்டி போட்டதை யார் அழிக்கிறது? முருகப்பெருமான் தான்.

குருநாதர் :-   அப்பனே, மீண்டும் பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த பாடலை மீண்டும் பாடுங்க. 

அடியவர் 4:- ( மீண்டும் திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 51  உருவாய் அருவாய் பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் அக்கட்டை எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் பின் அழித்திட முருகன் மட்டுமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த கட்டு இருக்குது பார்த்தீங்களா? உங்களுக்கு போட்டு கட்டு. நீங்க எதுவுமே தாங்க முடியலைங்க ஐயா. புரியுதுங்களா? உங்களோட லைஃப் அப்படியும் போக முடியல. 

அடியவர் :- ரொம்ப கஷ்டப்படுறீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படியும் போக முடியல , இப்படியும் போக முடியல. உங்களுக்கு ஒரு ஒரு கயிறு போட்டு, ஒரு கம்பி போட்டு, என்னங்க கயிறு போட்டு கட்டா என்ன ஆகும்? 

அடியவர் :-  எங்கிட்டயுமே போக முடியாம அப்படியே இருக்கும். 

========================================
# நம் அனைவருக்கும் கஷ்டங்கள் குறித்த புரிதல் உண்டாக்கும் அருமையான வாக்கு. இவ் வாக்கினை படித்து தெளிவு அடையுங்கள். இறைவனை முழுமையாக சரணடையுங்கள்.
========================================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவை மட்டுமில்லாமல் கிணற்றில் தண்ணீர் இருக்கின்றது. அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் கிணற்றில். 

குருநாதர் :-   அப்பனே, பின் அதாவது எவை என்று அறிய. அப்பனே, பின் கழுத்தை மட்டும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கயிற்றால் கட்டி, அப்பனே, பின் அதாவது நிச்சயம் பின் எவை என்று புரிய, அப்பனே, பின் எது என்று அறிய பயம் காட்டிக்கொண்டே பின் இருக்கின்றான் இறைவனே என்பேன்  அப்பனே. அதனால்  நீ பொறுத்தே ஆகவேண்டும். 
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள்  :-  ( இது எப்படி தெரியுங்களா அய்யா ? அவர் கூறுவது என்னவென்றால்: வாழ்க்கை சில நேரங்களில், கழுத்தில் கயிறு கட்டி கிணற்றில் இறக்கப்படுவது போல பயமுறுத்தும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. கிணற்றின் தண்ணீரைப் பார்த்து நடுங்கும் அந்த பயம் எல்லோருக்கும் வரும்; அதுவே மனிதனின் கஷ்டம். இறைவன் அந்த கயிறை இறக்கி நம்மை அச்சத்தில் நிறுத்துகிறான் போலத் தோன்றும்; “நான் உள்ளே விழுந்துவிடுவேனோ?” என்ற அச்சத்தில் நாமே தள்ளாடுகிறோம். ஆனால் அந்த பயமூட்டும் சூழ்நிலையையே நம்மை நிறுத்தி வைக்கிறவன் இறைவன் — நம்மை சோதித்து, நம்முடைய நிலையைப் புரிய வைக்கவும், நம்மைத் தாங்கிக் கொள்ள கற்றுக்கொடுக்கவும்.)
குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது கூட, அப்பனே, பயந்தான் உனக்கு. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் இறைவா என்று நிச்சயம். 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள்  :-  (  அவர் கூறுவது: “கிணற்றின் விளிம்பில் நின்று, எப்போது தண்ணீரில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் நடுங்குவது போல வாழ்க்கையின் சில தருணங்கள் இருக்கும். அந்த ‘நின்னு, நின்னு’ என்று தள்ளாடும் பயம் நம்மை உள்ளுக்குள். அந்த நேரத்தில் மனிதன் தன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, ‘இறைவா , நீதான் எல்லாம் செய்றே?’ என்ற எண்ணத்துடன் இறைவனை நோக்கி திரும்ப வேண்டும். பயம் வந்தால் யாராலும் அதை முழுமையாகப் புரிந்து சொல்ல முடியாது; அது உள்ளுக்குள் எழும் அச்சம். அந்த அச்சத்தில் நாமே, ‘இறைவா, உனக்கே ஒப்படைக்கிறேன், நீ என்ன வேண்டுமானாலும் செய்’ என்று மனதை ஒப்படைக்கிறோம். அப்போதுதான் இறைவன் நம்மை தைரியமாக நிற்கச் செய்கிறார். மனிதன் அந்த பயத்தில் மூழ்கி, ‘விட்டுரு, விட்டுரு’ என்று துடிக்கும் நிலையில் இருந்தாலும், இறைவன் நம்மை காப்பாற்றும் வண்ணம் அந்த நிலையை நமக்காகவே உருவாக்கி வைத்திருக்கிறார்.) 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இறைவா, நீ என்ன வேணா பண்ணிக்கோப்பா என்று சொல்லிவிட்டு , உங்களை . தைரியமா, தில்லா , நில்லுன்றாருங்க ஐயா.

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் முருகனே அப்பனே, அதாவது வருமானத்தை கொடுப்பான் என்பேன் அப்பனே. கவலையை  விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :- முருகன் ஏதோ ஒரு ரூபத்துல….. 

====================================
# பழமொழி - “எருமை மாடு மேலே, மழை பெஞ்சா மாதிரி”
===================================

குருநாதர் :-   அப்பனே, உண்ணால்  பல வேலைகள். எதை என்று புரிய அப்பனே, ஈசனுக்கு. அப்பனே, அதனால், அப்பனே, நிச்சயம். அப்பனே, பொறுத்திரு என்பேன் அப்பனே. யார் எதை சொன்னாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது பின் எவை என்று ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே. எருமாட்டின்  தன்னில் அப்பனே, பின் மழை இருந்தால் என்ன அப்பனே? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (யார் என்ன சொன்னாலும், எதை பண்ணனும், என்ன பண்ணனும்? பொறுமை வேண்டும். எருமை மாடு மேலே மழை பெஞ்சா மாதிரி  போயிட்டே இருக்கும். யார்  எது சொன்னாலும் சரி. அப்ப கண்டுக்க கூடாது. கண்டுக்க கூடாதுங்க. ஐயா, போயிட்டே இருக்கணும்.)

குருநாதர் :-   அப்பனே, இன்னும் கேள் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கேட்கலாம். 

=============================================
# எனக்கு யாரும் இல்லை என்று,  யாரும் எண்ணக்கூடாது. 
============================================

அடியவர் 4:- ( ………தனி கேள்விகள் ……………) யாரும் இல்ல. 

குருநாதர் :-   அப்பனே, பின் அது தான் பொய். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அது தான் பொய் என்றார். 

மற்றொரு அடியவர் :- இறைவன் ( உங்களுடன் இருக்கின்றார்) 

குருநாதர் :-   அப்பனே, எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இங்கு வந்து, அப்பனே, உணவை கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனைத்தும் கொடுத்து, அப்பனே, யாரும் இல்லை சொல்லிவிட்டார்களே  அப்பனே, இதற்கு என்ன அர்த்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இங்க வந்து டீ சாப்பிட்டு, நல்லா சாப்பிட்டு, 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

மற்றொரு அடியவர் :-  இத்தனை பேரை பார்த்து, 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இத்தனை பேர் பார்த்து எல்லாம் பண்ணியே, எப்படி நீ யார் இல்லாம சொல்லலாம்னு சொல்றாரு? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யார் இல்லை என்றால், அப்பனே, யான் வந்து எப்படி வாக்குகள் செப்புவேன்? அப்பனே, சொல்?  

சுவடி ஓதும் மைந்தன்  :-  யார் இல்லைன்னு சொல்லிட்ட. நான் எதுக்கு உனக்கு வாக்கு சொல்லிக்கிறேன்னு கேக்குறாரு. சொல்லுங்க, ஐயா. 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய? எவை போல்? பின் நிச்சயம், அப்பனே, பின் சொல்லக்கூடாது என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் நிச்சயம் ஒரு தேநீர், தேநீர். அப்பனே, பின் கொடு என்றால் யாரோ ஒருவர், அப்பனே, எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் உனக்கு தரமாட்டேன் என்று யாராவது சொல்லச் சொல். அப்பனே.

குருநாதர் :-   பின் நிச்சயம் நீர் கொடு. எவை என்று புரிய? நிச்சயம், பின் அதாவது அறிந்தும் புரிந்தும் கூட. பின் அதாவது உன்னிடத்தில் இல்லை என்று யாராவது சொல்லட்டும். பார்ப்போம். அப்பொழுது யான் இதற்கு பதில் அளிக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  நீர் கேளுங்க. தண்ணிர்  கொடுப்பான்னு யாராவது வந்து உனக்கெல்லாம் கிடையாதுன்னு யாராவது சொல்லட்டும். 

குருநாதர் :-   ( …………தனி வாக்குகள் …………… )

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( ………தனி விளக்கங்கள் ……………… )

குருநாதர் :-   அப்பனே, கவலை விடு. அப்ப, நிச்சயம் தன்னில் கூட உனக்கும் ஒரு வேலை வைத்திருக்கின்றேன் அப்பனே. பின் போக போக தெரியும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :- உனக்கும் ஒரு வேலை வச்சுக்கிறோம்பா. அது போக போக தெரியும்பான்றார். 

குருநாதர் :-   அப்பனே, கவலைகள் வேண்டாம். அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, இன்னும் கேள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- இன்னும் கேட்கலாம். 

===========================================
# உழவார பணி - ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றேன்
===========================================

அடியவர் 4:- (உழவார பணி )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அவையும் நீ தொடர்வாய் என்பேன். அப்பனே, கவலை வேண்டாம். அப்பனே, அதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றேன் அப்பனே. 

குருநாதர் :-  ( ******** விதி ரகசியங்கள் *************) 

குருநாதர் :-   அப்பனே, என்ன வேண்டும்? கேள். —------ வேண்டுமா? கேள். 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் :- ( அவ் அடியவரால் கேட்டாக இல்லாத கேள்வியை அவர் சார்பாக கேட்டார்கள் )

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் , அப்பனே, கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. யான் பார்த்துக் கொள்கின்றேன். சில ரகசியங்களை சொன்னாலும் புரியாதப்பா உனக்கு. 

==================================
# அனைவரின் பிறப்பின் நோக்கம் 
==================================

குருநாதர் :-   அப்பனே, பின் அனைவருக்கும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்ந்து தெரிந்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கை பெற்று ஒன்றும் எவை என்று கூட. பின் அதாவது ஒன்றுமில்லை. நிச்சயம் என்று பின் தெரிந்த பொழுதுதான். அப்பனே, பின் அதாவது ஈசனை கண்டடைகின்றான் மனிதன். இதுதான் பிறப்பு. 

=========================================
# தேவைக்காக இறைவனை வணங்க கூடாது.
# அப்படி வணங்கினாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை.
=========================================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தேவைக்காக இறைவனை வணங்கக்கூடாது சொல்லிவிட்டேன். அப்படி வணங்கினாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  தேவைக்காக எப்பவுமே இறைவனை வணங்கக்கூடாது. அப்படி வணங்கினாலும் 

அடியவர் :- எதுவும்  நடக்காது. எதுவும்  கொடுக்க மாட்டார் இறைவன். 

குருநாதர் :-   அப்பனே, அப்பொழுது எதை கொடுப்பான்? இறைவன் சொல்லுங்கள். அனைவருமே 

அடியவர் :- கஷ்டத்தை கொடுப்பாருங்க. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப எதை கொடுப்பார்? 

அடியவர் :-  கஷ்டத்தை தான் கொடுப்பாரு. 

குருநாதர் :-   அப்பனே, பின் இதை யாரே சொல்லிவிட்டேன். விடு, 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை தான் நான் சொன்னேன்ப்பான்றாரு. எதை கொடுப்பார்? கஷ்டம், கஷ்டம். 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் இல்லை. 

மற்றொரு அடியவர் :- பக்குவத்தை கொடுப்பாரு. 

========================================
# பாவ புண்ணியங்கள் - இறைவனிடத்தில்
========================================

குருநாதர் :-   அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அதாவது அப்பனே சேகரித்து. அப்பனே, காசுகளை. அப்ப, நிச்சயம் தன்னில் கூட. பின், நிச்சயம் தன்னில் கூட. ஒரு பின் உருண்டையை சேகரித்து. நிச்சயம் தன்னில் காசுகளை எப்படி எடுப்பாய் என்பேன் அப்பனே. இதே போலத்தான். அப்பனே, நிச்சயம் பின் எவை என்று ஒரு பாவ புண்ணியங்கள். அப்பனே, இறைவனிடத்தில் என்பேன் அப்பனே. 

========================================
# இறைவன் கொடுக்கும் சந்தர்ப்பத்தை யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை
========================================

குருநாதர் :-  இதை வைத்துக்கொண்டு, பிழைத்துக்கொள் என்று ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான். ஆனால் சரியாக யார் பயன்படுத்துவதில்லை. 
சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இறைவன் மனிதனுக்கு நேரடியாகப் பணம் கொடுக்க மாட்டார்; வங்கியில் இருப்பு இருந்தால் மட்டுமே பணம் எடுப்பது போல, மனிதன் செய்த புண்ணியம் தான் அவனுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்களாக திரும்பி வரும். பாவமும் புண்ணியமும் இரண்டும் இறைவனின் கையில்தான் இருக்கின்றன; ஆனால் அவர் மனிதனுக்கு முதலில் சிறிதளவு புண்ணியம் கொடுத்து, “இதைக் கொண்டு நல்லபடியாக வாழ்ந்து கொள்” என்று ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அந்த புண்ணியத்தை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை உயர்வு பெறும்; பயன்படுத்தாமல் விட்டால், “உனக்கு கொடுத்தது போதும்” என்று சொல்லுவது  போல, இறைவன் புண்ணியத்தை நிறுத்தி, மனிதன் செய்த செயல்களின் விளைவாக பாவத்தின் சுமையை அனுபவிக்கச் செய்கிறார் . இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவது மனிதனின் பொறுப்பு; ஆனால் பெரும்பாலோர் அதை உணராமல் விட்டுவிடுகிறார்கள். )
குருநாதர் :-   அப்பனே, அதனாலதான் எண்ணம் போல் வாழ்க்கை என்று. 

குருநாதர் :-   அப்பனே, கவலைப்படாதே. அப்பனே, நிச்சயம் ஏதோ ஒரு  ( ****** தனி வாக்குகள் ***** )  ஏற்படுத்துகின்றேன். 

குருநாதர் :-   ( ****** தனி வாக்குகள் ***** ) 

குருநாதர் :-   அப்பனே , நிச்சயம் அப்படி. நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட. பின் ஈசனுக்கு அப்பனே சேவைகள் அப்பனே, பின் செய்து கொண்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உதவி கிடைக்கும் என்பேன். அப்பனே, ஆசிகள் ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அம்மா, யாருக்கு வாக்கு வேணும்னா, அவங்க பாடல் பாடணும்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment