அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5 ( விஞ்ஞான வாக்கு )
நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/live/AzhIXYoqaoM
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
================================
வணக்கம் அடியவர்களே,
இந்த பகுதி 5, இதன் முந்தைய பகுதி 4 - இரண்டும் மிக , மிக பொறுமையாக படித்தால் மட்டுமே - இவ் வாக்கின் ஆழ் ரகசியங்கள் உங்களுக்கு புரியும். தெளிவு உண்டாகும்.
இடைக்காடர் சித்தர் பல பல யுகமாக இறைவனை வேண்டி ,வேண்டி, மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்று கூத்தாடி கூத்தாடி , அதன் பின் பல யுகங்கள் கடந்து , இப்போதுதான் இறைவன் அனுமதி கொடுத்துள்ளார்கள்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், அன்புடன் இறைவன் ஆதி ஈசன் அருளால் இப்போது இங்கு நீங்கள் படிக்க உள்ளீர்கள் என்பதை அறியத்தருகின்றோம்.
வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.
================================
================================
# அன்புடன் இடைக்காடர் சித்தர் வாக்கு
================================
அண்ணாமலையோனே, உண்ணாமலையோனே, பாதம் பணிகின்றேனே, செப்புகின்றேனே , இடையன்.
============================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5 ( விஞ்ஞான வாக்கு )
============================================
===============================
# ஏன் இத்தனை ஞானிகள் புவியை நோக்கி மக்களுக்கு சொல்ல வேண்டும்?
===============================
# இடைக்காடர் சித்தர் , இப்போது அனைவருக்கும் பதில் சொல்ல ஒரு 5 நிமிட நேரம் ஒதுக்கினார்கள்.
===============================
இடைக்காடர் சித்தர்:- ஆனாலும் இத்தனை ஞானிகள் ஏன் புவியை நோக்கி மக்களுக்கு சொல்ல வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நிமிடம் முதல், ஐந்து நிமிடம் வரை நேரத்தை ஒதுக்குகின்றேன் யானே.
அடியவர் :- அப்பா
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஏன் இத்தனை சித்தர்கள் ஏன் இத்தனை கடவுள்கள்? ஏன் இத்தனை ஞானிகள்? வந்து பூலோகத்துக்கு வரணும்? இதை நான் வந்து நீங்க சொல்லியே ஆகணும். ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடம் வரை நான் உங்களுக்கு அவகாசம் கொடுக்கிறேன்.
ஓதுவார் அடியவர் :- இப்படி ஆச்சு போய் இந்த உண்மை நிலை அறிந்து இறைவனை அடையனும்.
அடியவர் :- புரிஞ்சுக்கணும்.
அடியவர் :- உண்மை நிலையை புரிஞ்சுக்கோங்க. எல்லா பேருக்கும் வாய்ப்பு கொடுக்குறாங்க. அவங்க அவங்க எந்திரிச்சு சொல்லுங்க. எந்திரிச்சு உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.
அடியவர் 5 :- பெண் அடியார்களுக்கு முதல் வாய்ப்பு. சொல்லுங்க அம்மா.
============================
# கிடைத்த பொன்னான வாய்ப்பை முதலில் பயன்படுத்தினர் ஒரு அம்மை அடியவர் #6. அவர் எழுந்து நின்று பதில் அளித்தார்கள். இடைக்காடர் சித்தர் அப்போது அவர் வாழ்வின் விதி ரகசியங்களை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு எடுத்து உரைத்தார்கள்.
============================
அடியவர் 6:- ( எது உண்மைன்னு தெரியாம, மாயையில வந்து நம்ம வந்து சிக்கிட்டு ரொம்ப குழப்பத்திலேயே இருக்கிறோம். இப்ப குருநாதர் நிறைய விஷயங்கள் சொல்ல, சொல்ல… மாணிக்கவாசகர் பத்தியே நாங்க வேற ஒரு வரலாற்றை படிச்சிட்டு இருக்கிறோம். அதுவே எங்களுக்கு இவ்வளவு நாள் தெரியாது. இப்ப இடைக்காடர் சித்தர் அய்யா சொல்றப்பதான், இவ்வளவு நாள், இவ்வளவு புரியாமல் இருந்திருக்கிறோமே அப்படிங்கிற மாதிரி….)
இடைக்காடர் சித்தர்:- இதை எவை என்று கூற சொல்கின்றேன். எழுந்து நின்று விட்டாய்.
===============================
# மாணிக்க வாசகருக்கு முழு வேலை :- சிறைச்சாலையில் செல்லுதல். மீண்டும் வெளியே வருவது.
===============================
இடைக்காடர் சித்தர்:- பின் மாணிக்கவாசகன் எதை என்று புரிய முதன் முதலில் இவனுக்கு வேலையே, சிறைச்சாலையில் செல்லுதல். மீண்டும் வருவதே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவருக்கு வேலையே என்னவாம்? சிறைச்சாலை போறது, வரதுதான் இவருக்கு வேலையே என்று சொல்கின்றார் அய்யா. )
மற்றொரு அடியவர் :- ( அதாவது பூமிக்கு போய் மீண்டும் திரும்பி வருவதா அய்யா ?)
சுவடி ஓதும் மைந்தன் :- இல்லை இல்லை. இது மாணிக்கவாசகர்.
=============================
# மாணிக்கவாசக பெருமான் உரைத்த “அப்பா” என்ற மந்திர சொல்லின் மகிமை - எதனை முறை சிறையில் அடைத்தாலும் “வெளியே எடு அப்பா” என்று வேண்டிய உடன் , ஈசனார் அருளால் சிறை தானாக திறந்து , வெளியே வந்துவிடுவார்.
=============================
இடைக்காடர் சித்தர்:- ஏன் எதற்கு எவை என்று அறிய, நிச்சயம் நல்லதை சொல்வான். ஆனால் சிறையில் அடையுங்கள் என்று அரசன் உத்தரவிடுவான். ஆனால் அங்கு (சிறையில் ஈசனாரை) கேட்பான். “வெளியே எடு அப்பா” என்று. நிச்சயம் (சிறை) திறந்துவிடும். ஓடோடி வந்துவிடுவான். எப்படி தப்பித்து விட்டான் என்று அரசன் நிச்சயம் தன்னில் கூட (குழம்பிப் போய் விடுவான்) .
அடியவர்கள் :- ( பரவசத்தில் பலத்த கைதட்டல்கள், சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, ஒரு வரத்தை ( வாங்கியதாக காகபுசண்டர் மாமுனிவர் ) அவர் ( முன்பு வாக்கில் ) சொன்னார் இல்லையா ? ( அதை இடைக்காடர் சித்தர் அய்யா) கண்டினியூ பண்றாரு ( இங்க)
அடியவர் 6:- ம் ….
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாரு? இவர் வந்து சிறையில் அடைச்சிருவாங்க. ஏன்னா இவர் இருந்தா …
ஒரு அடியவர் :- ( எப்படியாவது உண்மையை சொல்லிவிடுவார்… )
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மை சொல்லிவிடுவார்… அப்ப அரசன் என்ன பண்ணுவானாம்?
அடியவர் 6:- அவரை சிறையில் அடைச்சிருவாரு…
சுவடி ஓதும் மைந்தன் :- ஜெயில்ல போட்டுருவாங்க…
அடியவர் 6:- ( அரசனுக்கு எதிராக, இறைவன் உண்மையை சொல்வதால் …இவர் மீது குற்றம் சாற்றி ) பொய் சொல்றர்னு சொல்லிட்டு…
சுவடி ஓதும் மைந்தன் :- ( மாணிக்கவாசக பெருமான் அவர் சந்தோஷமா போயிருவார். ஜெயிலுக்கு வந்து அப்ப, என்ன பண்ணுவாராம்? ஜெயில்ல போய் “அப்பா”ன்னு ஈசனை கூப்பிடுவாராம். உடனே ஜெயில் டக்குனு திறந்துருமாம். அப்ப ஓடோடி போயிடுவாராம். எஸ்கேப் ஆயிடுவாராம். அப்புறம் திரும்ப அரசன் என்ன பண்ணுவான்?
மற்றொரு அடியவர் :- யோசிப்பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- எங்கடா யோசிப்பானாம். எங்கடா இங்க ஆளை காணும்? இங்கதான் வச்சேன்னு சொல்லிட்டு அரசன் யோசிப்பானாம். )
============================
# மாணிக்கவாசக பெருமான் - ஒவ்வொரு சிறையில் இருந்து தப்பித்து தப்பித்து , உலகெங்கும் பரப்பினார் சைவத்தை.
============================
இடைக்காடர் சித்தர்:- இவ்வாறாவே தப்பித்து தப்பித்து, பல தேசத்திற்கு சென்று, நிச்சயம் பரப்பினான் சைவத்தை.
அடியவர் 6:- ( இந்த கதையை எங்களுக்காக சொன்னதுக்கு ) நன்றிங்க அய்யா !!!!!
அடியவர்கள் :- ( பரவசத்தில் கைதட்டல்கள் )
அடியவர் 6:- மாணிக்கவாசக பெருமான்…. மிக பெரியவங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப இதே மாதிரிதான். மாணிக்கவாசக பெருமான் அந்தந்த ஊருக்கு போய், அரசனை இறைவனிடம் மாட்டிவிடுவது. ஐயா அதாவது மாணிக்கவாசக பெருமான் இறைவனை , சைவத்தை பற்றிய உண்மையை சொன்னவுடன் , அரசனால் தனது பதவிக்கு ஆபத்து என்று , “இவன் திருடன். இவனை சிறையில் அடையுங்கள் “ என்று சொல்லிவிடுவான். ஆனா மாணிக்கவாசக பெருமான் அங்க போயிட்டு என்ன செய்தற் அய்யா ?)
மற்றொரு அடியவர் :- சைவத்தை பரப்புவது…
சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்தந்த தேசத்திற்கு சென்று , சென்று உலகம் முழுதும் சைவத்தை எடுத்து உரைத்தார் )
==============================
# ஏன், எப்போது உலகில் பெருத்த அழிவுகள் உண்டாகும் ?
==============================
(உதாரணமாக 2026 ஆம் ஆண்டு உலகில் பெரும் சண்டை ஏற்பட்டு பல உயிர் சேதங்கள், அழிவுகள்)
==============================
இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் உலகம் முழுவதும் பின் சைவத்தை கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அழித்திடு ஈசா என்று. அதாவது அழித்திடு அப்பா என்று அவனை. இதனால்தானே அழிவுகள்.
==============================
# "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்"
==============================
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் என்ன சொன்னாரு. இன்னொரு வேண்டிக்கிறார் சைவம். சைவம் என்ன?
அடியவர் 6:- ( சைவம் தழைக்க வேண்டும் என்று ஈசனிடம் …)
சுவடி ஓதும் மைந்தன் :- மாமிசம் சாப்பிடாம இருக்கணும். அப்படி இல்லை என்றால் , ( ஈசா !!!!!) நீ அழகா உலகத்தை அழிச்சிடு.
அடியவர் 6:- எல்லா உயிர்களையும் அன்பா நினைக்கணும்.
===============================
# இறைவா !!!!! என் போல் எவ்வுயிரும் கஷ்டப்படக்கூடாது
===============================
இடைக்காடர் சித்தர்:- அனைத்தும் உயிரும், என் போலே கஷ்டப்படுமே. யான் சிறுவயதிலிருந்து அனுபவித்திருக்கின்றேனே
சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் என்ன சொல்றாரு?
அடியவர் 6:- என்னைப் போல கஷ்டப்படக்கூடாது. எல்லா உயிர்களையும் சமமா….
============================
# அடியவர் # 6 - தனி வாக்குகள் - கூட்டுப்பிரார்தனையில்
============================
இடைக்காடர் சித்தர்:- அறிந்தும் அவ் கஷ்டமும் நீ பட்டிருக்கின்றாய் உனக்கு கிடைத்துவிடும். கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- சில விஷயங்கள்ல நீ கஷ்டமும் படுத்துகிற வந்து
அடியவர் 6:- ( கண்டிப்பாக அய்யா. )
இடைக்காடர் சித்தர்:- இறைவனும் ( விதி ரகசியங்கள் ) விட்டுவிடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விதி ரகசிய விளக்கங்கள் )
இடைக்காடர் சித்தர்:- இன்னும் ( விதி ரகசியங்கள் ) …. யாம் அறிவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விதி ரகசிய விளக்கங்கள் ) விதி அது மாதிரி இருக்குது.
==========================
# அனைத்தும் அறிவார்கள் சித்தர்கள்
==========================
இடைக்காடர் சித்தர்:- இதை என்று அறிவித்து அறிவோம் யாங்கள். நிச்சயம் மனிதர்களை.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க மனசை பத்தி எங்களுக்கு தெரியும்.
இடைக்காடர் சித்தர்:- உன் விதியில் பிரம்மன் ( விதி ரகசிய விளக்கங்கள் ) என்று விதி நிச்சயம் ( விதி ரகசிய விளக்கங்கள் )
அடியவர் 6:- குருநாதர் தான் மாத்திக் கொடுக்கணும் அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுடைய விதியில் என்ன தெரியுமா எழுதி இருக்காராம்? ( ……………விதி ரகசிய விளக்கங்கள் ……….. )
அடியவர் 6:- ( உரைத்த விதியை பிரதிபலித்தார் இங்கு ) சில நேரங்கள் அப்படித்தான் அய்யா ( நடக்கின்றது எனக்கு)
=============================
# இவ் அம்மைக்கு (அடியவர் # 6) மாமருந்தாக வந்த மகிமை புகழ் வாக்கு.
=============================
=============================
# “அம்மையே கவலைகள் விடு. அகத்தியன் பரிபூரணமாக இருக்கின்றான்.”
=============================
இடைக்காடர் சித்தர்:- இதைத்தன் அறிய அம்மையே, கவலைகள் விடு. அகத்தியன் பரிபூரணமாக இருக்கின்றான்.
அடியவர்கள் :- ( பரவசத்தில் பெருத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் இருக்கிறதுனால, நீங்க தப்பிச்சிட்டீங்க.
அடியவர் 6:- குருநாதர் தான். இப்போதும் அவர் காலை தான் புடிச்சிட்டு இருக்கிறேங்க அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான், அகத்தியர் இருக்காருமா. அதனால நீங்க தப்பிச்சிட்டீங்க.
=============================
# ஏன் பாவப்பட்ட அனைத்து மனிதர்களுக்கும் பொது வாக்குகள்?
=============================
இடைக்காடர் சித்தர்:- இதனாலே இப்பாவப்பட்ட ஜென்மத்திற்கு, சித்தர்கள் யாங்கள் வந்து வந்து நிச்சயம் உதவிடுகின்றோம் இன்னும் கூட. பல பல ஞானிகள் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்கு, சித்தர்கள், இன்னும் ஞானிகள் வந்து உதவுகின்றோம்.
===========================
# மனிதனை திருத்தவே போராடினார்கள் இன்னும் ஞானிகள் பலர் பலர்.
===========================
இடைக்காடர் சித்தர்:- இன்னும் ஞானிகள் பலர் பலர். மனிதனை திருத்தவே போராடினார்கள் எவை என்று கூற, அறிந்தும் கூட. பின் நீங்களே சொல்லுங்கள் ?
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் பல ஞானிகள் என்ன செஞ்சாங்க? திருத்த போராடுனாங்க. ஆனா என்ன மனுஷன், அதை ஏற்கவில்லை.
இடைக்காடர் சித்தர்:- அறிந்தும்
============================
# அனைவரின் விதியினை மாற்றினால் என்ன ஆகும் ?
============================
மற்றொரு அடியவர் :- ( எல்லாரோட விதியையும் மாற்றி விட்டால் , திருந்தி விடுவார்களே என்ற நோக்கில் சில கேள்விகள் கேட்டார்கள் )
இடைக்காடர் சித்தர்:- எவை எது என்று புரிய, மாற்றினால் என்ன ஆகும்? எதை என்று புரிய புரிந்து பேசு.
சுவடி ஓதும் மைந்தன் :- மாற்றினால் என்ன ஆகும்? புரிந்து பேசு.
===============================
# நாம் ஏன் பிறந்தோம்? என்ற அதிர்ச்சியான உண்மை நிலை தெரியவரும் - பூமி என்ற சிறைச்சாலை தொடர்பான வாக்கு.
===============================
இடைக்காடர் சித்தர்:- அப்பா எதை என்று அறிய பின் நல் மனது இல்லாதவர்கள், போட்டி பொறாமை குணம் உள்ளவர்களே, அக்கிரகங்களில் இருந்து இங்கு வீழ்ந்தவர்கள் தான் அப்பா. அதனால்தான் அப்பா அனுபவித்தே ஆகவேண்டும், பின் குழந்தாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த கிரகத்தில் இருந்து எப்படி மனிதர்கள் விழுகிறார்கள் இங்க ? போட்டி பொறாமை, நல் மனசு யாருக்கு அந்த கிரகங்களில் இல்லையோ , பாருங்க அவங்க எல்லாரையும் என்ன பண்ணிடுறாங்க? பூமிக்கு தள்ளிடுறாங்க ஐயா. நீ அனுபவிச்சிட்டு வாடா. பொறாமையில் இருந்த இல்ல நீ? பொறாமைப்பட்டே பூமியில் வாழ். அய்யா புரியுதுங்களா?
மற்றொரு அடியவர் :- பனிஷ்மெண்ட் ஏரியா.
சுவடி ஓதும் மைந்தன் :- பனிஷ்மெண்ட் ஏரியாங்கயா இது. சிறைச்சாலைங்கயா இது. அப்ப புவி என்பது என்ன?
மற்றொரு அடியவர் :- சிறைச்சாலை
சுவடி ஓதும் மைந்தன் :- சிறைச்சாலை.
===============================
# ஏன் கிரகத்தில் இருந்து ஞானிகள் , பூமிக்கு வந்தார்கள் ?
===============================
இடைக்காடர் சித்தர்:- இச் சிறைச்சாலையிலிருந்து, எப்படி (மீண்டு) வருவது என்பது, முதலில் ஞானிகள் தான் நிச்சயம் வந்தார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதற்காகத்தான் இந்த ஞானிகள் என்ன பண்ணாங்க? ஐயா அந்த சிறைச்சாலையில் இருந்து நம்மை வெளியேற்ற தான் வந்து அந்த ஞானிகள் வந்தாங்க. ஐயா புரியுதுங்களா?.
அடியவர் :-வழி சொல்லக்கூடியவர்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- (அனைத்து ஞானிகளும்) நமக்கு வழி சொல்லக்கூடியவர்கள்.
============================
# இவ் பூமி என்ற சிறைச்சாலையில் யான் சுகமாக இருக்கின்றேன் என்று சொல்லும் மனித முட்டாள்கள்.
============================
இடைக்காடர் சித்தர்:- இதனால்தான் இத்தனை எத்தனை தேவாரம் இன்னும் பின் திரட்டு இன்னும் எத்தனை எத்தனை, இன்னும் கீதை இன்னும் எத்தனை எத்தனை, அப்பப்பா!!!! மனிதன் யான் சிறையிலே இருக்கின்றேன். அதுதான் என்பதற்கு சுகமாக இருக்கின்றது என்று சொல்கின்றானே… எவ்வளவு பெரிய முட்டாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "எனக்கு இந்தச் சிறைச்சாலைதான் சார் ஜாலி! ஆமா, இந்த உலகமே ஒரு ஜெயில் மாதிரிதான். இங்க இருக்கிற மனுஷங்க எப்படின்னா—பொய் சொல்றது, மத்தவனைப் பார்த்துப் பொறாமைப்படுறது, ஏமாத்துறது... இதையே ஒரு வேலையா, இதுலயே பின்னிப் பிணைஞ்சு வாழ்ந்துட்டு இருக்காங்க. நாம என்னதான் ஒதுக்கப்பட்டவனா இருந்தாலும், கீழ இருந்தாலும், மனுஷன் என்ன சொல்றான்னு பார்த்தா, 'அப்பப்பா! எனக்கு இந்தச் சிறைதான் சுகம்'னு சொல்றான். அதாவது இந்த அழுக்கு, பொய், பொறாமை இதுதான் அவனுக்குச் சொர்க்கமாத் தெரியுது. இதுக்குள்ளயே சிக்கித் தவிக்கிறதுதான் அவனுக்குப் புகழாத் தெரியுது. இதுல ஒருத்தன் இறங்கிட்டான்னா, அந்த மாயையில இருந்து வெளியே வரவே மாட்டான்; அப்படியே அதுக்குள்ளேயே பின்னிப் பிணைந்து கிடப்பான், புரியுதுங்களா?" )
=================================
# வந்த ஞானிகள் அனைவரையுமே, மனிதன் அடித்து துரத்தி விட்டான்.
=================================
இடைக்காடர் சித்தர்:- ஆனாலும் எதை என்று கூற, ஏன் அழிவுகள்? இவ் அழிவுகளில் இருந்து தடுக்கவே நிச்சயம், ஞானிகள் பலர் யான் புவிக்கு சென்று விடுகின்றேன். புவிக்கு சென்று விடுகின்றேன். திருத்துகின்றேன் என்றெல்லாம் நிச்சயம் வந்தார்கள் அப்பா வந்தார்கள். எத்தனை எத்தனை ஞானியர்கள்?
இடைக்காடர் சித்தர்:- ஆனால் வந்தவர்கள் நிச்சயம் மனிதன் அடித்து துரத்தி விட்டான், ஞானிகள் அனைவரையுமே.
====================================
# இயேசுநாதர் , இறைவனிடம், புவியில் உள்ள அனைவரையும் யான் திருத்துகின்றேன் என்று சபதம் போட்டு, மன்றாடி வந்தார்.
===================================
இடைக்காடர் சித்தர்:- அப்பா எதை என்று அறிய அறிய மன்றாடி மன்றாடி வந்தான் இயேசுவே, மனிதனுக்காக. உலகத்தில் அதாவது புவியில் உள்ள அனைவரையும் யான் திருத்துகின்றேன் என்று சபதம் போட்டு வந்தான் அப்பா. நிச்சயம் பாவம் அப்பா. பாவம் அவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப இயேசுநாதர் என்ன செய்தார் ? இறைவனிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார். நான், என் மக்களை திருத்துவேன் அன்பால என்று. எல்லாம் பண்ணுவேன் என்று சொன்னாராம். ஆனால் என்ன ஆச்சு? அவ் மாபெரும் ஞானியை அழவைத்து கொன்றார்கள். நீ ஏன் இங்கு வந்தாய் ? நீயே வேண்டாம். போ என்று )
இடைக்காடர் சித்தர்:- இதை என்று அறிய நபிகள் நாயகமோ இன்னும் யான் மக்களை திருத்துகின்றேன் என் மக்கள் என் வழியில் வருவார்கள் என்று. ஆனால் வரவில்லையே. அவனையும் எப்படி வரலாறு என்று சொல்வான், எவை என்று புரிய, இன்னும் பின் சித்தர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த நபிகள் நாயகத்தோட அசல் வரலாறு யாருக்காவது தெரியுமா? யாருக்கும் சரியாத் தெரியாதுப்பா. ஆனா அவர் என்ன பண்ணாராம்? 'நான் மக்களைக் காப்பாத்தப் போறேன்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தாராம். 'என் ஜனங்க என்பேன் னாடி வருவாங்க, நான் சொல்றதெல்லாம் அப்படியே கேட்பாங்க'ன்னு நம்பிக்கையாச் சொன்னாராம். ஆனா கடைசியில என்ன ஆச்சு? வரலாறே தெரியாமப் போச்சு பாத்தியா! ஆனா, உண்மை என்னவா இருந்தாலும் சரி, நாங்க சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிட்டே தான் இருப்போம்." )
===============================
# புத்தர் பிரான் பற்றிய ரகசியங்கள்
===============================
இடைக்காடர் சித்தர்:- இதை என்று அறிய பின் மகா புத்தன் எவை என்று புரிய, நிச்சயம் பின் அதாவது புவிக்கு செல்கின்றேன் இறைவா, உன் ஆசிப்படியே. நிச்சயம் அனைத்து மக்களையும் திருத்துகின்றேன் என்று. ஆனாலும் அவனையும், வாழ்க்கை, அதாவது வரலாறை பற்றி எங்கு இருக்கின்றான் என்றே தெரியாமல். ஆனாலும் சொல்லுவோம் அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப புத்தர் என்ன பண்றாருயா? நானும் திருத்துறேன். நானும் என் மக்கள் என் வழியில வருவாங்கன்னு சொன்னாங்களாம். கடைசில என்ன பண்ணாங்க?
அடியவர் :- அவரோட வரலாறும் மறைக்கப்பட்டுவிட்டது.
இடைக்காடர் சித்தர்:- அப்பா தேவையில்லாதவை எல்லாம் பேசி பேசி, மனதை குழப்பி விட்டார்கள் அப்பா, அவனை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மனுஷங்க என்ன பண்ணிட்டாங்க? )
அடியவர் :- குழப்பிட்டார்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- (மனுஷங்க அவரை குழப்பிட்டார்கள் )
==============================
# சித்தர்கள், அனைத்து ஞானிகளையும் மீண்டும் புவிக்கு அழைத்து வருவார்கள்
==============================
இடைக்காடர் சித்தர்:- மீண்டும் எதை என்று அறிய இதனால்தான் அறிந்தும் அறிந்தும், இவைதன் மீண்டும் அவர்கள் எல்லாம் பின் அழைத்து வருகின்றேன் மீண்டும். நிச்சயம் நீங்கள் காப்பாற்றுவீர்கள் நிச்சயம் என்று. யான் அழைத்தே வந்தே தீருவேன் அனைத்தும். அவர்கள் முயற்சி வீணாகாது.
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்ராங்க?
அடியவர் :- எல்லா ஞானிகளையும் கூட்டிட்டு வரேன்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து,
அடியவர் :- உங்களை எல்லாம் திருத்துறதுக்கு, வருவாங்கன்னு,
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பா மீண்டும் அவங்க என்ன பண்ணுவாங்க ?
அடியவர் :- பூமிக்கு வருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமிக்கு வருவார்கள். கண்டிப்பாக…
அடியவர் :- வருவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடிச்சு திருத்துவார்கள்.
அடியவர் :- அடிச்சு (இங்க) கவனிக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா ஐயா?
======================================
# ஒவ்வொரு ஞானியின் வாழ்க்கையும் தெரிந்து கொண்டால், நமக்கு என்ன பலன்?
======================================
இடைக்காடர் சித்தர்:- இவ்வாறாக நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அறிந்து கூட இவ்வாறாக ஒவ்வொரு ஞானியின் வாழ்க்கையும் தெரிந்து கொண்டால், நிச்சயம் அவனது ஆற்றல் உங்களுக்கும், பின் நிச்சயம் பின் அதிவேகமாக ஏறுகின்ற பொழுது, உங்களுக்கும் நிச்சயம் பின் மனிதனை மனிதை அதாவது காப்பாற்ற வேண்டும் அனைத்து உயிர்களும் என்ற எண்ணம் வரும் அப்பா… வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தூய ஞானிகளின் திருப்பெயரை உச்சரிப்பதும் அவர்களை நினைப்பதும் நம்முள் நேர்மறை ஆற்றலைப் பெருகச் செய்து, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டி நற்பணிகள் செய்யும் உயரிய எண்ணத்தை நமக்குள்ளே விதைக்கும். அவ்விறைநிலை மனிதர்களிடம் பொதிந்துள்ள நற்குணங்களை வெளிக்கொணர்ந்து, "பிறருக்கு நன்மையே செய்ய வேண்டும்" என்ற அறச்சிந்தனையை நம்மில் இயல்பாகவே தூண்டிவிடும். )
=============================
# ஏன் ஞானிகள் எழுதி வைத்ததை நல் முறையில் படிக்க முடியவில்லை ?
=============================
இடைக்காடர் சித்தர்:- அப்பா அறிந்தும் இவர்கள் அனைவரும் நிச்சயம் மனிதர்கள் பின் ஒருவனை அறிந்தும் எதை என்று புரியாமலும். ஆனாலும் பின் இன்னும் எப்படி எப்படி நிச்சயம் மனிதன் அழித்துக் கொள்கின்றான்? இதனால் பின் யார் பொறுப்பு எது என்று அறிய. இவ்வாறெல்லாம் நிச்சயம் ஞானிகள் எவ்வாறெல்லாம் எழுதி வைத்தார்கள் அப்பா? நிச்சயம் அதை படித்தாலே முன்னேறி விடுவான். எப்படி படிப்பான் அப்பா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( சிறையில் இருப்பவன் எப்படி படிப்பான்?. ஐயா ( ஞான நூல்கள் ) புக் நிறைய வச்சிருக்காங்க. இப்படி எல்லாம் இருந்தா நீ வந்து அடுத்த நிலைக்கு முன்னேறி போய்விடுவாய் என்று)
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாருன்னா, அதனாலதான் இத்தனை புக் எழுதி வச்சுக்கிறாங்க. இதெல்லாம் நீ படிச்சேன்னா உன் வாழ்க்கை மாறிடும். இது மாதிரி நல்லவனா நீ நடந்துட்டேன்னா என்ன ஆகும்? உன்னை நீ வெல்லலாம். உன்னை நீ வென்றிட்டு , இறைவனைக் கண்டிட்டு, நீ அங்க அடுத்த கிரகத்துக்கு போயிடலாம்)
அடியவர் :- எந்த கிரகத்திலிருந்து வந்தோமோ அந்த கிரகத்துக்கு போயிடலாம் போயிடலாம்.
================================
# உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், ஞானிகள் சந்தோஷம் அடைவார்கள்.
================================
இடைக்காடர் சித்தர்:- அப்பப்பா அதனால்தான் கலியுகத்தில் பெரும் அழிவுதான் வரப்போகின்றது. இதனால்தான் உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால் அப்பா, நிச்சயம் பல ஞானிகள் சந்தோஷம் அடைவார்கள் என்பேன் அப்பனே.
================================
# அடியார்க்குத் துணையாக மீண்டும் வரும் சக்திமிக்க ஞானிகள்.
================================
இடைக்காடர் சித்தர்:- மீண்டும் அப்பனே பின் உலகத்திற்கு வந்து அனைத்து காரியங்களும் உங்களுக்காக செய்து வைப்பார்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் ஞானிகளை அழைக்கவே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை உங்களுக்கு புரியட்டும்.
================================
# பொறாமை நீங்கிய பக்தியும் - ஞானிகள், சித்தர்களின் நன்மையும்
================================
இடைக்காடர் சித்தர்:- பின் நீங்களே பின் நீங்களாகவே நிச்சயம் அவர் ஞானிகளை நினைத்துக் கொள்ளுங்கள்.
இடைக்காடர் சித்தர்:- அனைத்தும் எவை என்று கூற பின் நம் தன்னை இவ்வாறு நினைக்கின்றார்களே. மக்கள் போட்டி பொறாமை இல்லை என்றே,
நிச்சயம் வருவார்கள் அப்பா !!!!!
வருவார்கள் !!!!!
நன்மை செய்வார்கள் !!!!!
செய்தே தீருவார்கள் !!!!!
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர் :- எல்லாவித எந்தவித தீ எண்ணங்கள் எல்லாம் நல்ல எண்ணங்களோட அந்த ஞானிகள் பெயரை உச்சரிச்சு நாம மனசுல நினைச்சுட்டோம்னா, நிச்சயம் நமக்கு நல்லது செய்ய, அந்தந்த கிரகங்களில் இருந்து இறங்கி வருவாங்க. பூமிக்கு அதுக்காக நாங்களும் கூப்பிடுறோம். நீங்களும் உங்க எண்ணத்தால நல்ல எண்ணத்தால நினைங்க. அவங்க வருவாங்க. நிச்சயம் நமக்கு பூமிக்கு நல்லது செய்வாங்கன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு குறையா இருந்தாலும், நிறைய ஞானிகள் இருக்காங்க. அந்த ஞானிகள் எல்லாம் நினைச்சுக்க சொல்றாரு வந்து..
அடியவர் :- ஏன்னா கலிகாலத்தில் நிறைய அழிவுகள் காத்துக்கிட்டு இருக்கு அப்படின்னு சொல்றாங்க.
============================
# ***** ஆதி ஈசனின் பேரருள் கிடைக்கும் ரகசியங்கள் *****
============================
============================
# ***** ஈசனுக்கு நிச்சயம் தன் அடியார்களையே பின் அதிக அளவு பிடிக்கும். *****
============================
இடைக்காடர் சித்தர்:- அதனால்தான் அப்பனே ஈசனுக்கும் பின் நிச்சயம் அதாவது தன் அடியவர்களையே பின் அதிக அளவு பிடிக்கும் என்பேன் அப்பனே.
இடைக்காடர் சித்தர்:- ஏனென்றால் மக்களுக்காக போராட வந்தவர்கள் என்பேன் அப்பனே. அவர்கள் எல்லாம் பின் ஈசன் வேண்டாம் வேண்டாம் என்று. இருப்பினும் நான் செல்வேன் என்று. பின் அடம் பிடித்து வந்தவர்கள் நிச்சயம் தன்னில் கூட.
==============================
# ***** அவ் அடம் பிடித்தவர்களை, முதலில் வணங்கினால் மட்டுமே, ஈசனின் கிருபை கிடைக்கும் *****
==============================
இடைக்காடர் சித்தர்:- அதனால்தான் அவ் அடம் பிடித்தவர்களை, முதலில் வணங்கினால் மட்டுமே, ஈசனின் கிருபை கிடைக்கும்
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர் :- எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி இருக்காங்க பாருங்க. இந்த ஞானியர்கள் சில பேர் அடம் பிடிச்சு வந்தவங்க எல்லாம், ஈசன் வேணாம் வேணாம்னு தடுத்தும், கேளாம பூமியில மக்கள் நல்வாழ்வுக்காக பாடுபட்டு, இங்க வந்து இறங்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்ப அவங்களை நாம முதல் நினைச்சோம்னா ஈசன் தடுக்க நினைச்சா கூட, உடனே இறங்கி இங்க வந்துருவாங்கப்பா. அவங்களை நினைங்க அப்படின்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப அடியார்கள் எத்தனை அடியார் இருக்காங்க? 63 நயன்மார்கள், இவர்களை வாழ்க்கை வரலாறு எல்லாம் நீங்க படிக்கணும். படிச்சு இப்படி எல்லாம் வாழ்ந்துக்கிறாங்கன்னு சொல்லிட்டு, அவங்களை நினைச்சு வழிபட்டால் , என்ன ஆகும்? அவங்க இறங்கி வந்துருவாங்க. இந்த 63 நன்மார்களை தாண்டி போய் தான், நீங்க ஈசனை பிடிக்க முடியும். இல்லையென்றால் முடியாது. ஏன்னா ஈசன் என்ன பண்ணாராம்? வேணாம்ப்பா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. பூமிக்கு போனா ஒத்து வராது உங்களுக்கு. நீங்க கஷ்டம் தான் படப்போறீங்க. இங்கேயே நின்னுடுங்கப்பா என்று சொன்னார். இருந்தாலும் அவங்க என்ன பண்றாங்க? மனிதனை திருத்துவதற்காக அனுபவிச்சு நமக்கு சொன்னாங்க…)
=============================
# ஒவொரு ஞானியும் பல கஷ்டங்களை அனுபவித்து , அனுபவித்தே எழுதினார்கள்
=============================
இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் பின் உரித்த இன்னும் இன்னும் ஞானிகள் ஒவ்வொன்றாக அனுபவித்து தான் எழுதினார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொன்னும் ஞானி என்ன பண்ணாரு?
அடியவர் :- எல்லாத்தையும் அனுபவிச்சு தான் எழுதுறாங்க… எல்லா உண்மைகளையும்….
================================
# திருமூலர் சித்தர் - 3000 ஆண்டுகள் - ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய உடலை எடுத்து (அல்லது உடம்பைப் புதுப்பித்து), மனிதனாக வாழ்ந்து, இந்த உடம்பின் ரகசியம் மற்றும் ஆன்மாவின் உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
================================
================================
# 3000 வருடங்கள் - 3000 உடல்கள்: இவ்வாறு தொடர்ந்து 3000 ஆண்டுகள் வாழ்ந்த அவர், ஒவ்வோர் ஆண்டும் ஒரு திருமந்திரத்தைப் பாடி, மொத்தம் 3000 மந்திரங்களை வழங்கியுள்ளார். மனித உடல் எடுத்தால் அதன் பக்குவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்துக் காட்டியவர்.
================================
================================
# யார் பெரியவர்?: "எவன் பெரியவன்?" என்று தேடுபவர்களுக்கு, 3000 ஆண்டுகள் உடலைத் தக்கவைத்து, மாற்றி, மக்களுக்கு உண்மையைச் சொன்ன அந்த மூலனே (திருமூலர்) தேவன் அவரே பெரியவர்.
================================
இடைக்காடர் சித்தர்:- இதை என்று அறிய, யான் பின் தேவனே திருமூல தேவனையே யான் பெருமையாக சொல்வேன்.
இடைக்காடர் சித்தர்:- ஒவ்வொரு வருடத்திற்கும் பின் மனிதனாக பின் வாழ்ந்து, பின் உடம்பை அழித்து, இதுதான் என்ற உண்மையை மக்களுக்கு பின் ஒரு வருடத்தில், பின் நிச்சயம் தன்னில் கூட பின் 3000 பின் வருடங்கள். பின் உடம்பை மாற்றி 3000 உடம்புகளை மாற்றி பக்குவத்தை எதை என்று கூற பிறந்து, பின் மனித பின் மனித உடம்பை எடுத்தால், இப்படித்தான் என்று.
இடைக்காடர் சித்தர்:- பின் 3000 உடம்பை எடுத்திருக்கின்றான். பின் எவன் பெரியவன் எதை என்று அறிய? மூலனே தேவன் !!!!!.
அடியவர் :- சிவாய நம !!!!! சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- ( திருமூலர் என்ன பண்ணிக்கிறாராம்? 3000 உடம்பு எடுத்துக்கிறார். இப்பஒரு உடம்பு இருக்குன்னா, இவர் 60 வருஷம் வாழ்வார் இல்லயா? ஒவ்வொரு வருஷத்துல ஒவ்வொரு உடம்பு எடுத்து யாரு? )
அடியவர் :- திருமூலர்
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வருஷத்துல என்ன கஷ்டம் வருதுன்னு சொல்லிட்டு, அதை கூறியே பாடலை எழுதி, இது முடிஞ்சு போச்சு சாப்டர். திருப்பி உடம்பை அழித்து . அடுத்த உடம்பு எடுத்து, எத்தனை உடம்பு எடுத்துக்கிறார்?
அடியவர் :- 3000
சுவடி ஓதும் மைந்தன் :- 3000 உடம்பை எடுத்து எழுதிக்கிறாருங்க ஐயா.
அடியவர் :- அப்பா
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு உடம்புக்கும் ஒவ்வொரு பாடல்.
அடியவர் :- இத்தனைக்கும் அவங்க பெரிய ஞானி. அவங்களால வந்து நேரடியா வந்து சொல்ல முடியும். இருந்தாலும் மனிதனா வாழ்ந்து தான் அதை சொல்லணும்னு நினைச்சு சொல்லி இருக்காங்க பாருங்க. எவ்வளவு பெரிய உயர் நோக்கம் இது. வாழ்ந்தே…. மனிதனா வாழ்ந்து சொல்லி இருக்காங்க. சும்மா சொன்னா கேட்க மாட்டான்னு.
===============================
# திருமந்திரம் படித்தாலே , நிச்சயம் ஞானம் பிறந்துவிடும்.
===============================
இடைக்காடர் சித்தர்:- இவை அறிவித்து இதனை நிச்சயம் எதை என்று புகுபிக்க, இதை நிச்சயம் படித்தாலே ஞானம் பிறந்துவிடும்.
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- மூலர் திருமந்திரத்தை படிச்சாவே….
அடியவர் :- ஞானம் பிறந்துவிடும்
=============================
# சிவவாக்கியர் மறைத்த தங்கம் , பணம் ரகசியங்கள்
=============================
இடைக்காடர் சித்தர்:- வாக்கியனோ எதை என்று அறிவித்து, ரகசியம் தெரியும் எதை என்று அறிய. நிச்சயம் நீரை ஓரிடத்தில் இட்டால் தங்கமாக வரும். பணமும் வரும் என்று புவி தன்னிலே. ஆனாலும் மக்களுக்கு அவ் ரகசியத்தை சொல்லிவிட்டால் மனிதன் வீணாக போய்விடுவான் என்று அவ் ரகசியத்தை வாக்கியோன் மறைத்து விட்டான்.
அடியவர் :- ரசவாதம்
சுவடி ஓதும் மைந்தன் :- ரசவாதம் யாரு?
அடியவர் :- சிவவாக்கியர்
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாம் எதுக்கு, தங்கத்துக்கு ஆசைப்படுறீங்க இல்லயா ? ஒரு இடம் இருக்குதாம். அது தண்ணி ஊத்துனா என்ன ஆகுமா?
அடியவர் :- தங்கமா மாறிடுமாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- தங்கமா மாறிடுமாம்
அடியவர் :- சொன்னா…. நீங்க எல்லாம் மாறிடுவீங்க….
========================
# இறைவனால் மாயை/பணம் எளிதாக வரவழைக்க முடியும்
========================
இடைக்காடர் சித்தர்:- அப்பப்பா அறிந்தும் நிச்சயம், அதாவது பின் மாயை எளிதாக வரவழைக்க முடியும் இறைவனால். ஆனாலும் அதனால் கெடுவான் என்றுதான் இழுத்து வைத்திருக்கின்றான் இறைவன்.
அடியவர் :- மாயை எளிதா கொடுத்துருவார் இறைவன் ஆனா மனுஷன் அதனால கெட்டுப்போயிருவான்னா இறைவன் நிறுத்தி வச்சிருக்கிறார்
சுவடி ஓதும் மைந்தன் :- பணம் வந்து ஈஸியா கிடைச்சிரும். ஆனா…?
அடியவர் :- இங்க மாயை எது? பணம் தங்கம். அதை தான் சொல்றாங்க மாயைன்னு.
=============================
# இறைவன் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார் - நீங்கள் மற்றவர்களுக்காக இருந்தால்..
=============================
இடைக்காடர் சித்தர்:- (இறைவன்) தேவையானதை மட்டும் கொடுப்பான். ஆனால் நிச்சயம் அதுவும் கூட பின் மற்றவர்களுக்காக இருந்தால் அள்ளிக் கொடுப்பான்.
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர் :- தகுதி பார்த்து கொடுப்பாரு. அதுவும் தேவையானதை கொடுப்பாரு. அதுவும் பிறருக்காக அப்படின்னு நினைச்சா, அள்ளிக் கொடுப்பாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அள்ளிக் கொடுப்பார்.
==================================
# அனைத்து கிரகங்களிலும் மனிதன் வாழ்கின்றான்
==================================
இடைக்காடர் சித்தர்:- இவை அறிவித்து அதனை கூட. ஏனென்றால் நீங்களும் எதை உண்மை நிலை. இதனால் அனைத்து கிரகங்களும் கூட மனிதன் வாழ்கின்றான் எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லா கிரகத்திலும்?
அடியவர் :- மனிதன் வாழ்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் வாழ்கின்றான்.
====================================
# புண்ணிய ஸ்தலங்கள் , நதிகள் உருவான ரகசியங்கள்.
====================================
இடைக்காடர் சித்தர்:- இவ்வாறாகவே புண்ணிய ஸ்தலங்கள் பின் பல வழியில் கூட பின் அதாவது பின் புவி தன்னிலே ஏற்படுத்தி ஏற்படுத்தி, மக்களுக்காக பல நதிகளையும் உருவாக்கி, இங்கு சென்றால் தரித்திரம் நீங்கும். மீண்டும் மேலோகத்திற்கு வந்துவிடலாம் என்றெல்லாம், நிச்சயம் உருவாக்கினார்கள். ஏன்? இறைவன் என்ன முட்டாளா என்ன? நிச்சயம் இவ்வாறெல்லாம் செய்வதற்கு?
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர் :- இந்த புண்ணிய ஸ்தலங்கள் நதிகள் இதெல்லாம் உருவாக்கினது எல்லாமே வந்து மனிதனை வந்து கடைத்தேற்றுவதற்கு தான்
சுவடி ஓதும் மைந்தன் :- இத்தனை நதிகள், இத்தனை திருத்தலங்கள் எதுக்கு?
அடியவர் :- மனுஷனை திருத்துவதற்கு.
==============================
# திருத்தலங்கள், அப்பனே பின் நிச்சயம் மனிதனை திருத்துவதற்கே
==============================
இடைக்காடர் சித்தர்:- அப்பனே திருத்தலங்கள், அப்பனே பின் நிச்சயம் மனிதனை திருத்துவதற்கே எதை என்று புரிய அப்பனே. இதனால் அப்பனே நிச்சயம் அதாவது மீண்டும் சொல்கின்றேன்.
===============================
# எது மனிதர்கள் வாழ தகுதியான இடம் அல்ல?
===============================
இடைக்காடர் சித்தர்:- அதாவது புவி தன்னில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எதை என்று உணர உணர அறிந்தும் பிறர் அறியா வண்ணம் கூட இருந்தாலும், பின் தகுதியான இடமல்ல புவி தன்னில் வாழ்வதற்கு. மீண்டும் இதையே யான் தெரிவிப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, என்ன ஆகும்? தகுதியான இடம் ?
அடியவர் :- வாழ தகுதி இல்லாத இடம் பூமி. இதைத்தான் திருப்பி, திருப்பி சொல்றாங்க.
இடைக்காடர் சித்தர்:- அதனால்தான் நிச்சயம் சித்தர்கள் ஞானிகள் இன்னும் பல வகையான ரிஷிகள் வந்து இறைவனைத் தேடுக தேடுக. இறைவனை வணங்குக வணங்குக என்றெல்லாம் மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்
இடைக்காடர் சித்தர்:- ஏன் எதற்கு இப்படியும் சொல்லலாமே. அவ்வாறு பின் திருத்தலம் எதை புரிய அவ் கிரகத்தின் பயனால், அங்குதான் ஏற்படுத்தினோம் சித்தர்கள் யாங்கள். அங்கு சென்றாலே நிச்சயம் அவருடைய பண்பும் உங்களுக்கு வந்துவிடும்.
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? ஏன் திருத்தலம் போறோம்? அந்த கிரகத்தில் வாழ்ந்து இருக்கிறாங்க பாருங்க, அதனோட ஒளி அங்கங்க படுகின்ற பொழுது, நீங்க அங்க போனாவே என்ன ஆகும்?
அடியவர் :- அந்த தன்மை உங்களுக்கு வந்துரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த தன்மை உங்களுக்கு வந்துரும். உங்களுக்கும்
அடியவர் :- நமக்கும்…
சுவடி ஓதும் மைந்தன் :- தானாக வந்துவிடும்
==============================
# திரு அண்ணாமலை ரகசியங்கள்
# தர்ம தேவன் சனி தேவனின் கதிர்கள் அதிகமாக விழும் இடம்
==============================
இடைக்காடர் சித்தர்:- அறிந்தும் அதாவது பின் சரியான நீதிபதி நிச்சயம் சனி சனி அவனே ஆனாலும் அதிகமான விழும் அதிகமாக விழும் இடம் திரு அண்ணாமலையே அறிந்தும் எது என்று கூற.
அடியவர்கள் :- ( பரவசத்தில் , உண்மை நிலை அறிந்து கை தட்டல்கள் )
==============================
# திரு அண்ணாமலையில் அனைவருக்கும் உணவு கிடைக்கும் ரகசியங்கள்
==============================
இடைக்காடர் சித்தர்:- அதனால்தான் (தர்ம தேவன் சனி தேவன்) அவன் நியாயாதிபதி அல்லவா? அதனால்தான் அனைவருக்கும் சோறு கிடைக்கின்றது.
அடியவர் :- ஏன் இங்க எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்குதுன்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அதிக அளவு அந்த…
அடியவர் :- சனியுடைய கதிர்வீச்சு எவ்வளவு திருவண்ணாமலையில் விழுது
சுவடி ஓதும் மைந்தன் :- திருவண்ணாமலையில் அதிகமா விழுது. அதனால திருவண்ணாமலைக்கு… ஏன்னா சனி பகவான் யாரு?
அடியவர் :- நியாயாதிபதி
சுவடி ஓதும் மைந்தன் :- நியாயாதிபதி. அப்ப பசித்தவருக்கெல்லாம் சோறு கொடுக்காம இருப்பாரா அவர்? அப்ப யார் வந்தாலும் சோறு கிடைக்குமாம். அப்படின்னு சொல்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- திருவண்ணாமலையில் வந்தவனுக்கு
அடியவர் :- சோத்து பிரச்சனை இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- சோறு பிரச்சனை இல்லை. ஆமா ஏதோ ரூபத்துல ஏன்னா சனி பகவான் நியாயாதிபதிங்க ஐயா.
==============================
# திரு அண்ணாமலை ரகசியங்கள்
# கேது தேவனின் கதிர்கள் அதிகமாக விழும் இடம்
# இங்கு வந்தாலே நிச்சயம் அறிவு ஏற்படும்.
==============================
இடைக்காடர் சித்தர்:- இதை அறிவித்து இன்னும் ஞானம் பெறுவோன் அறிந்தும் கேதுவானவன். அதுவும் இங்குதான் விழுகின்றது. இதனால் வந்தவன் பிழைத்துக் கொள்வான்.
இடைக்காடர் சித்தர்:- ஏன் எதற்கு? அறிவுள்ள கிரகம் கேது. இங்கு வந்தாலே நிச்சயம் அறிவு ஏற்படும். எப்படி ( மேல் கிரகத்தில் இருந்து பூமியில் ) நாம் வீழ்ந்தோம்? (மீண்டும்) எப்படி எழப்போகின்றோம் என்று? அப்பப்பா புரிந்து கொண்டீர்களா?
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன வருது?
அடியவர் :- கேது
சுவடி ஓதும் மைந்தன் :- கேது. அப்ப, திருவண்ணாமலை தொட்டவுடனே என்ன ஆகும்?
அடியவர் :- ஞானம் பிறக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஞானம் வரும். ஏன்டா நம்ப என்ன தப்பு செஞ்சோம்?
அடியவர் :- என்ன தப்பு செஞ்சோம் ?எதனால நம்ம தோல்வி அடைஞ்சோம்?
சுவடி ஓதும் மைந்தன் :- தோணும்…. அதை தோணிட்டு
அடியவர் :- திருப்பி வெற்றி பெறுவதற்குரிய வழியை… சரியான வழியை கண்டுபிடிப்பான். திருவண்ணாமலை வந்தா.
==============================
# கிரகங்களின் கதிர்வீச்சுகள் விழும் இடங்களின் ரகசியங்கள்
==============================
இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் நிச்சயம் இதை என்று பிரதிபலித்து, இன்னும் பல இடங்கள் உள்ளது. அவையும் நிச்சயம் பின் அடுத்தடுத்த வாக்கில் சித்தர்கள் செப்புவார்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் அதிகம். ஃபர்ஸ்ட். இதை பிரதிபலித்து இன்னும் அதிகமாக இடம் இருக்கு.
அடியவர் :- இன்னும் நிறைய ஸ்தலங்கள் இருக்கு, இதுபோல. அதெல்லாம் சொல்றோம். சித்தர்கள் சொல்லுவாங்கன்னு இருக்காங்க.
==========================
# ஒரு சித்தனே சொல்லும் ஆச்சரியம்
==========================
# சாதாரணமாக காகபுசுண்ட மாமுனிவர் வாக்கு உரைக்க வரமாட்டார்கள். அப்படி வந்து உரைத்தது ஆச்சரியமே !!!!
==========================
இடைக்காடர் சித்தர்:- இதனால்தான் புசண்டனே வரமாட்டான் ஆனால் வந்தும் செப்புவது பின் ஆச்சரியமே
அடியவர் :- சிவாய நம
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா காகபுசுண்ட மாமுனிவர் இதெல்லாம் சொல்ல மாட்டாரு.
அடியவர் :- ( ரெண்டு தடவை தானே வாக்கு சொல்ல வந்திருக்காங்க காகபுசுண்ட மாமுனிவர் ஐயா இதுவரைக்கும் ? திருவண்ணாமலைக்கு? )
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப காகபுசுண்ட மாமுனிவர் வந்து மாணிக்கவாசப் பெருமான் பற்றி வாக்கு சொன்னதும் ஒரு ஆச்சரியம் தான்… )
அடியவர் :- சிவாய நம !!!!!
===============================
# பாடல் பெற்ற ஸ்தலங்கள் - பாழடைந்து வருகின்றது.
===============================
# அனைத்தையும் மீட்டெடுப்பார்கள் சித்தர்கள்
===============================
# இன்னும் வேகமாக வருவார்கள் ஞானிகள்.
===============================
இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் உணர்ந்து கொண்டு இதைத்தன் இதனால்தான் பாடல் பெற்ற ஸ்தலங்களை பின் இன்னும் கூட பின் அதாவது எங்கெங்கு கிரகங்கள் பல வழியில் கூட பின் அங்கு விழுகின்றது. நிச்சயம் அங்கு சென்றாலே (நலம்). ஆனாலும் பாழடைந்து வருகின்றது. மீண்டும் அதை மீட்டெடுத்து, வழியில் நல் மக்களை எதை என்று புரிந்தும் கூட, இன்னும் வேகமாக வருவார்கள். பின் ஞானிகள்.
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாங்களாம் வந்து?
அடியவர் :- ஞானிகள் எல்லாம், இன்னும் வந்து, நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன வரும் வந்து ?
அடியவர் :- உண்மை நிலை தெரியும்
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மை நிலை தெரியும்.
==============================
# அனைத்து கிரகங்களின் ஒளி படும் புனித இடம் - ஜெருசலம்…
==============================
# என் இங்கு மதம் உண்டானது ? என்ன ரகசியம் ?
==============================
இடைக்காடர் சித்தர்:- எதை எவை என்று புரிய அனைத்து ஞானிகளும் பின் செல்கின்றாரே. அங்கெல்லாம் நிச்சயம் அனைத்தும் ஒன்றாக பின் இணைந்து தான் பின் விழுகின்றது. அது தன், அதாவது எதை என்று கூற மதத்தை ஏற்படுத்திக் கொண்டான். தான் தான் மதம் என்று. இதுவும் கூட பின் ஜெருசலம்… இன்னும் கூட.
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு ஒரு இடத்துலயும் எல்லா கிரகங்களும் ஒளியை விழுமாம். அது முதல்ல ஜெருசலம் அப்படினு சொல்றாரு.. இதே மாதிரி எல்லா மதத்திலும் இருக்குது.. அப்புறம் மெக்கா
அடியவர் :- மெக்கா
சுவடி ஓதும் மைந்தன் :- இதை என்ன பண்ணாரு எண்ணித்து என்று புடிச்சு வச்சுக்கினானாம் ஐயா புரியுதுங்களா இது எந்த இது உந்தன்னு சொல்லிட்டு பிடிச்சு வச்சுக்கிட்டாங்க
இடைக்காடர் சித்தர்:- இதைத்தன் பின் அவ்வாறே பின் புத்தனும் எதை என்று அறிய. ஏனென்றால் இவரெல்லாம் ஞானி. நிச்சயம் பின் அவ்விடத்தில் தங்கியிருந்தார்கள். அவ்விடத்தில் தங்கி பல வழிகளில் கூட பின் உண்மை நிலை செப்பினார்கள். ஏனென்றால் மனிதனுக்கு எவை என்று கூற பின் ஞானிகள் அதாவது எங்கு பின் பிறந்தால் நிச்சயம் ஆற்றல் பெருகி மனிதனை திருத்த முடியும் என்று. இதனால்தான் அங்கெல்லாம் உட்கார்ந்து, பல வழிகளில் கூட மனிதனுக்கு பரப்பினார்கள் எண்ணற்ற விஷயங்கள். இப்பொழுதும் அவ்வழி பின் இயங்கிக் கொண்டே இருக்கின்றது அம்மையே !!!!! அப்பனே !!!!!
அடியவர் :- அதாவது அந்த ஞானிகள் வந்து எங்கெங்கெல்லாம் பிறந்திருக்காங்களோ அந்த இடங்களுக்கு எல்லாம் சக்தி இருக்குன்றாங்க. அந்த இடத்துல பிறந்து அந்த இடத்துல வந்து அவங்க அமர்ந்து நமக்கு உபதேசிச்ச, பாட்டு படிச்ச இடங்கள் எல்லாமே, ரொம்ப ரொம்ப முக்கியமான இடங்கள் அங்கு சில அருள்கள் எல்லாம் இருக்கு. அதனால அந்த இடங்கள் எல்லாம் நமக்கு சூட்சுமமா சொல்லி இருக்காங்க. அங்க போனா நிறைய சக்திகள் பெருகும் அப்படின்றதுதான் சொல்றாங்க அவங்க.
இடைக்காடர் சித்தர்:- இதைத்தன் காதுக்கு சோறு போடுக இப்பொழுது
சுவடி ஓதும் மைந்தன் :- காதுக்கு சோறு போடுகன்னா ( என்ன அர்த்தம் )…
அடியவர் :- பாட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- பாட்டு பாட சொல்றாங்க ஐயா.
==============================
# உடல் உறுப்புகளை செயல்பப்பட வைக்கும் நாதஸ்வர, மேளதாளங்கள்
==============================
இடைக்காடர் சித்தர்:- எவைத்தன் ஏன் எதற்காக இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.
இடைக்காடர் சித்தர்:- மேளதாளங்களில் கூட அறிந்தும் உள்ளுறுப்புக்கள் செயல்பட வைக்கின்றது.
==================================
# ஏன் திருமணங்களில் நாதஸ்வரத்தை இசைக்கின்றார்கள்?
==================================
இடைக்காடர் சித்தர்:- அதனால்தான் திருமணத்தில் கூட இன்னும் பின் எதை என்று கூற பின் நாதஸ்வரத்தை அறிந்தும் எதை இசைக்கின்றார்கள். அப்பொழுது உள்ளிருப்பவை எல்லாம் இயங்கும். ஏன் எதற்காக பின் இடையிடையே பின் பாட்டை படிக்கச் சொன்னார்கள் சித்தர்கள் என்பதை எல்லாம் நான் தெரிவிக்கின்றேன்.
==============================
# எந்த ஒரே ஒரு பாடலை அனைவரும் ஒன்றாக பாடினால் , முருகப்பெருமான் கட்டாயம் விளையாடியே தீருவார்?.
==============================
இடைக்காடர் சித்தர்:- ஏன் எதற்கு பின் முருகனை பாடலை எதை என்று கூற யானும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். அப்பாடலுக்கு முருகன் விளையாடியே தீருவான். பின் பாடு அழகாக.
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- மருதமலை மாமணியே முருகையா பாடல் பாடுங்க அய்யா.
==========================
மருதமலை பாடல் ……..
==========================
பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகையா பாடலை பாட ஆரம்பித்தார்கள்….)
Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=7h11m52s
End - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=7h18m28s
==========================
சொற்றுணை வேதியன்
==========================
பாடகர் :- ( சொற்றுணை வேதியன் பாடலை பாட ஆரம்பித்தார்கள்….)
Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=7h18m28s
End - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=7h18m28s
( இதனை தொடர்ந்து மீண்டும் இடைக்காடர் சித்தர் வாக்குகள் உரைக்க ஆரம்பித்தார்கள்…அதனை அடுத்த பதிவில் காண்போம்….
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete