அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 9 - நிறைவு பகுதி
வாக்குரைத்த நாள் :- 01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை
வாக்குரைத்த இடம் :- சென்னை
=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
================================================
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 9 - நிறைவு பகுதி )
================================================
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 19 :- ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
( திருவாசகம் சிவபுராணம் )
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
===============================================
# இடைவிடாமல் புண்ணியங்கள் செய்தால் எப்படி வாக்குகள் வரும் என்று பின் வரும் வாக்குகளை படித்து அறிந்து , அனைவரும் அனுதினமும் புண்ணியங்கள் செய்யுங்கள்.
===============================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட உன்னிடத்திலிருந்தே கேட்கின்றேன். வரட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேள்விகள் உங்களிடத்திலிருந்தே கேட்கின்றேன். வரட்டும்.
===============================
# செய்யும் புண்ணியங்கள் உங்களை பாதுகாக்கும்
===============================
அடியவர் 19 :- ஐயா, அன்னதானம் 12 வருஷமா பண்ணிட்டு இருக்கோம். ஐயா, வாரத்துல ஒரு நாள் டெய்லி பண்றோம். ஆனா ஜனங்க வந்து நிறைய பேர் கேட்டுட்டே இருக்காங்க. ஒரு நாள் வாரத்துக்கு 250 பேர் செய்ய முடியாது. இனிமேல் பண்ண முடியல. ஐயா, அதான் ஐயாவுடைய ஆசியும் …..
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அவையே உன்னை பாதுகாக்கும் என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( செய்யும் அன்னதானம் புண்ணியங்கள் ) அதுவே பாதுகாக்கும்.
குருநாதர் :- அப்பனே, வள்ளல் சோதிக்கின்றான். கவலைவிடு.
சுவடி ஓதும் மைந்தன் :- வள்ளல் பெருமான் என்ன பண்றாரு? இவன் என்ன பண்றான்? பாருன்னு சோதிக்கிறாரு. நீ கவலை விடு என்று சொல்லிவிட்டார். அடுத்து நெக்ஸ்ட்,
=====================================
# புண்ணியம் செய்திருக்கிறாய். அப்புண்ணியமே வழிநடத்தும். கவலையில்லை.
====================================
அடியவர் 19 :- ( குடும்ப ஆரோக்கியம் குறித்த கேள்வி )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அப்பனே புண்ணியம் செய்திருக்கிறாய். அப்பனே, அப்புண்ணியமே வழிநடத்தும். கவலையில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் இருக்குது. அந்த புண்ணியமே என்ன பண்ணும்? இதுக்காக தேவையானதெல்லாம் உங்களுக்கு வந்து தேவையான இடத்துல எப்ப வேணாலும் வரும்ன்றாரு. அடுத்து,
அடியவர் 19 :- ( ஐயா, ………………)
குருநாதர் :- தாயே சொல்லிவிட்டேன். கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த புண்ணியம் நீங்க செஞ்சிருக்கீங்க பாருங்க. அந்த புண்ணியம் என்ன பண்ணும்? ஏதோ ரூபத்துல உங்களுக்கு அது சொல்லுது. கவலைப்படாதீங்க. மறைமுகமா சொன்னாரு. அந்த புண்ணியம் வந்து அந்த அப்படியே தேங்கி நிக்குது. அது என்ன பண்ணும்? ஒரு நாள் வந்து அதே வந்து உங்களுக்கு வந்து செயல்படும். என்ன தேவையோ, அது கொடுக்கும். அது உங்களுக்கு
அடியவர் 19 :- (.........................)
குருநாதர் :- நிச்சயம், எவை என்று கூட கவலை விடு. தாயே , நிச்சயம், தன்னில் உள்ள புண்ணியங்கள் பின் பாதுகாக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, ஏதோ ஒன்னு விஷயத்துல வந்து உங்களை பாதுகாத்துரும். கவலைப்படாதீங்க. அம்மா, சரிங்களா?
======================================
# தினமும் அன்னதானம் செய்ய ஆசி கேட்ட போது
======================================
அடியவர் 19 :- ஐயா, இப்போ நான் டெய்லி வேலைக்கு போறேன். தினமும் அன்னதானம் செய்யணும்னு ஆசை இருக்கு.
குருநாதர் :- அப்பனே , நிச்சயம், தன்னில் கூட அப்பனே, பின் அதாவது சிறுக சிறுக பெருகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது வாய்ப்பு அமையும்ன்றாரு. வாய்ப்பு அமையும், அமையும் அம்மா.
=================================
# யானே மருத்துவனாகவும் வந்து உங்களை காக்கின்றேன்.
=================================
அடியவர் 19 :- (.........................)
குருநாதர் :- எவை என்று புரிய, கவலை விடு, தாயே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிந்து கூட, நிச்சயம். பின் ஏன், எதற்கு என்று, பின் ஒருவன் எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், தன்னில் கூட இவ்வாறாக மருத்துவனாகவும் யான் வந்து, பின் உங்களை காக்கின்றேன்.
குருநாதர் :- கவலைகள் வேண்டாம். எம்முடைய ஆசிகளோடு தான்.
================================
# பிறந்த தேதி தெரியவில்லை , ஜாதகம் கணிக்க….
# செய்யும் புண்ணியங்கள் உங்களை வழிநடத்தும் …ஜாதகம் தேவை இல்லை.
================================
அடியவர் 19 :- ஐயா, இவங்களுடைய பிறந்தது வந்து, டேட் இது எதுவும் எழுதி வைக்கல. இது அது மேல,
குருநாதர் :- தாயே , பின் தேவையில்லை. அவையெல்லாம் தூரம் எடுத்து போடுங்கள்.
====================================
# நிச்சயம் புண்ணியம் செய்து கொண்டே இரு
====================================
அடியவர் 19 :- அம்மாவுடைய ஆரோக்கியம்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட பின் புண்ணியம் செய்து கொண்டே இரு. அப்பனே, இது உனக்கு பின் சொல்கின்றேன். அப்பனே, நல்ல முறையாக. அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாமே செஞ்சுட்டே இருங்க. அந்த புண்ணியம் தவறாம செய்யுங்கன்றாரு. வந்து மீதி எல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஐயா,
அடியவர் 19 :- ( ….. ….. ….. …… )
குருநாதர் :- எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட போதும். பரிகாரங்கள் எவை என்று அறிய
=========================
# ராகு கேது - விளக்கங்கள்
=========================
குருநாதர் :- சொல்லி இருந்தேனே முன்பே நிச்சயம். பின் எவை என்று கூற அனைவரும் அப்பனே, பின் ராகு கேதுவுகள் தான் பிணைந்து இருக்கின்றார்கள். அவையெல்லாம் யானே எடுத்து விடுவேன். கவலை வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "ராகு கேது தோஷத்தால தான் கல்யாணம் தள்ளிப் போகுதுன்னு எல்லாரும் சொல்றாங்க, ஆனா அதையே காரணமா சொல்லிட்டு இருந்தா எப்படி? இப்போ வயசாகிடுச்சு, அவருக்கும் அதே தோஷம் தான் இருக்குன்னா, வெறும் பரிகாரம் மட்டும் பண்ணா போதுமா, அது பலிக்குமான்னு ஒரு கேள்வி வருதுல்ல? அங்க தான் அகத்தியர் வர்றாரு. ராகு கேது விஷயத்தை எல்லாம் அவர் தான் சரி பண்ணி, இந்த ……………….. தடையை உடைச்சு வழியைக் காட்டுவாரு. அதனால கவலைப்படாம இருங்க, அந்த அகத்தியரே முன்னாடி நின்னு எல்லாத்தையும் கூட்டி முடிச்சு வைப்பாரு; கண்டிப்பா சீக்கிரமே ……………….. நடக்கும், பாருங்க!" )
=====================================
# புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் , அனைத்தும் உண்டு.
=====================================
அடியவர் 19 :- ஐயா, வேலை
குருநாதர் :- அனைத்தும் உண்டு. உனக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே உண்டுங்க. ஐயா, தேடுங்க. ஐயா, எல்லாம் உண்டுங்க. ஐயா,
அடியவர் 19 :- சரிங்க.
குருநாதர் :- அப்பனே, ஆசிகள். நிச்சயம், தன்னில் கூட.
=========================================
# ராகு கேது பஞ்சாயத்துகள் - கருணை கடல் தான் சரி செய்வார்கள்
=========================================
குருநாதர் :- அப்பனே, பின் குடும்பத்தில் எது என்று அறிய அப்பனே, பின் ராகு கேதுக்களின் தாக்கம் அதிகம் என்பேன் அப்பனே. அதை யானே சீர் செய்வேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, இன்னும் பரிகாரங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால், அப்பனே, செப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
குருநாதர் :- ஆசிகள், ஆசிகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஆசிகள். அடுத்துங்க, ஐயா.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 20 :- ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட பின் கேட்டதை நிச்சயம் நிறைவேறும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க என்ன கேட்க போறீங்களோ, அது நிறைவேறும். ஐயா, சொல்லிட்டேன்.
அடியவர் 20 :- ரொம்ப நன்றி.
=========================================
# விதியில் பல போராட்டங்கள் இருப்பவர்களை குருநாதர் அவர்களிடம் அழைத்து அனைத்தும் நீக்குவார்கள்.
=========================================
அடியவர் 20 :- ( …………………. )
குருநாதர் :- அப்பனே, கவலை விடு. நிச்சயம், தன்னில் கூட அப்பனே, விதியில் பல போராட்டங்களை அப்பனே, பின் இருப்பவர்களை யானே, நிச்சயம், தன்னில் என்னிடத்தில் அழைத்து, அப்பனே, அனைத்தும் நீக்குவேன்.
குருநாதர் :- அதுபோலத்தான் நீங்கள் கவலை விடு. என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கின்றேன்.
அடியவர் 20 :- ( …………………. )
குருநாதர் :- அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, அனைத்தும் செய்கின்றேன். நலம்.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 21 :- ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
நால்வர் துதி :-
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
குருநாதர் :- அம்மையே, இவருடைய ஆசிகள் பலமாக. கவலைகள் வேண்டாம். நிச்சயம், தன்னில் கூட
அடியவர் 21 :- ( ………………. )
குருநாதர் :- ( ………………. )
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 22 :- ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
==========================================================
( இவ் அடியவருக்கு இல்லத்தில் 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) குருநாதர் அருளால் நிறைவாக நடந்தது. இவ் அடியவர் , குருநாதர் உரைத்த பல , பல , பல ஆலயங்களுக்கும் கடந்த 1 வருடமாக சென்று வழிபாடு வருகின்றார். குருநாதர், சித்தர்கள் உரைத்த அனைத்து வழிபாடுகளையும் ஒன்று விடாமல் நடத்தி வந்துள்ளார்கள். இவ் அடியவரை குருநாதர் அழைத்து வாக்குகள் அருளினார்கள். )
==========================================================
குருநாதர் :- அப்பனே, நலமாக, நிச்சயம், யானே வந்து நடத்தி தந்தேன் அப்பனே. யானும் லோபாமுத்திரையும் உன் அருகில்தான் உட்கார்ந்திருந்தோம் அப்பனே. போதும், நிச்சயம். சுகனும் ( சுகர் பிரம ரிஷி ) வந்திருந்தானப்பா. நலங்களாக போகனும் வந்திருந்தானப்பா. நிச்சயம், நாராயணன் வந்திருந்தானப்பா. காமாட்சியும், கவலை இல்லை. அப்பனே, நிச்சயம், பின் முடியும் வரை யானே அங்கு இருந்தேன் அப்பனே. நலங்கள். அப்பனே, பின் உண்ண உணவும் அருமையாக கொடுத்தாய்!!! ஆசிகள், ஆசிகள்.
அடியவர்கள் :- ( அங்கு பலத்த கை தட்டல்கள் , அங்கு சந்தோசங்கள் அனைவருக்கும் )
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 22 :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
அடியவர் :- பாடல் படிச்சிட்டீங்களா?
குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள் அப்பனே, நலங்களாகவே, நிச்சயம், தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, அஷ்டமி, அதாவது தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி, தன்னில் கூட. அப்பனே, நலமாக. அப்பனே, பூசணி , தன்னில் கூட அப்பனே, தீபம் ஏற்றிக் கொண்டே வா. அப்பனே, அனைத்தும், அப்பனே, வேண்டுதல் நிறைவேறும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தொடர்ந்து இடைவிடாமல் செய்து கொண்டே வரவேண்டும் )
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 23 :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
( மந்த்ராலய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் புகழ்பெற்ற தியான ஸ்லோகம்)
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச |
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் நல்ல ஆசிகள் என்பேன். அப்பனே, குருவோன் அப்பனே, பின் நிச்சயம். அப்பனே, வழி நடத்துவான் என்பேன் அப்பனே. கவலை விடு. அப்பனே, அனைத்தும் அவனே கதி.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு குருவானவர் வழிநடத்தினே இருப்பார். எல்லாமே அவரே கதி.
குருநாதர் :- அப்பனே, இப்போது சொன்னாயே, அவனும் துணை என்பேன் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஸ்ரீ ராகவேந்திர சுவாமி. பரிபூரணமா உங்களுக்கு துணை ஆசி இருக்குது. )
குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகளிலும் கூட கவலை இல்லை என்பேன் அப்பனே.
====================================
# ஈரேழு பதினான்கு உலகங்களின் கருணைக்கடல் அளிக்கும் மதிப்பு
====================================
குருநாதர் :- பல வழியிலும் கூட. அப்பனே, நீ, அப்பனே, பின் நீ என்னென்ன செய்தாயே என்பதெல்லாம் நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. அதற்கு நிச்சயம் மதிப்பு உனக்கு என்ன வேண்டுமோ அதை யான் தருவேன். கவலை விடு.
====================================
# பல பிறவிகளில் செய்த புண்ணியங்கள் ரகசியங்கள்
====================================
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது பார்த்ததில்லை. பல பிறப்புகளை உன்னை பார்த்திருக்கின்றேன் அப்பனே, நிச்சயம். பல மனிதருக்கு, அப்பனே, பின் எவ்வாறு உதவிகள் செய்துள்ளாய் என்பதெல்லாம் அப்பனே. புண்ணியம் தேங்கி கிடைக்கின்றது அப்பா, கவலை விடு.
===================================
# இல்லத்தில் இருந்து சூரியனை பார்த்து திருவலஞ்சுழி விநாயகப் பெருமானை வழிபட அருள் ஆசிகள்
===================================
குருநாதர் :- அப்பனே, நல் விதமாக. அப்பனே, இதனால். அப்பனே, நல்ல முறையாக. அப்பனே, எதை என்று அறிய அப்பனே.
குருநாதர் :- இதனால் அப்பனே, ஒரு முறை. அப்பனே, பின் அதாவது பின் வலஞ்சுழி . அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் முறையாக, அப்பனே, அதாவது பின் இல்லத்திலே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் கும்பகோணத்தில். அப்பனே, இருக்கும் தலத்தில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது அங்கு இருக்கும் என்று எண்ணி, அப்பனே, அதிகாலையில். அப்பனே, பின் சூரியனை பார்த்து வணங்கிக் கொண்டே வா அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- ( கும்பகோணம் திருவலஞ்சுழி கோயிலுக்கு நீங்க நேர்ல போகணும்னு அவசியம் இல்லைங்க. வீட்ல இருந்தே அந்தத் திருவலஞ்சுழித் தலத்தை மனசுல நினைச்சுக்கிட்டு, அங்க இருக்கிற சுவாமியை அங்கேயே பார்க்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க. தினமும் அதிகாலையில சூரியனைப் பார்த்து வணங்கும்போது, அந்தத் தெய்வத்தையே நினைச்சு மனமுருகி கும்பிட்டு வாங்கன்னு அகத்தியர் சொல்றாரு. இப்படித் தொடர்ச்சியா செஞ்சுட்டு வந்தாலே போதும், )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட காலங்கள் காலங்களாக சேவைக்காக பிறந்தவன் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே, கவலை விடு. யான் பார்த்துக் கொள்கின்றேன் அனைத்தும்.
குருநாதர் :- அப்பனே, வழியும் நடத்துவேன் அப்பனே.
குருநாதர் :- முன்னோர்கள் ஆசியும் குலதெய்வத்தின் அனுக்கிரகமும். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே,
குருநாதர் :- இதனால் வந்த வேலை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கின்றாய் அப்பா. பின் எவை என்று அறிய. கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க எதற்காக இந்த உலகத்துக்கு வந்தீங்களோ, அந்த வேலையை இப்போ சரியா செஞ்சுகிட்டு இருக்கீங்கன்னு அவர் சொல்றாரு. பொதுவா ஒருத்தர் செய்ற வேலையை மத்தவங்க அவ்வளவு சீக்கிரம் பாராட்டிச் சொல்ல மாட்டாங்க, ஆனா இவர் நீங்க வந்த நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு கச்சிதமா செஞ்சிருக்கீங்கன்னு மெச்சுகிறார். நாம எதைச் செஞ்சாலும் அதுல இறைவனோட அருள் கலந்திருக்கணும்; அந்தப் புண்ணியம் இருந்தா மட்டும்தான் நாம செய்ய வந்த வேலை நமக்கே சரியா பிடிபடும். நீங்க வந்த வேலையைச் சிறப்பா செஞ்சதுதான் உங்க பிறப்போட ரகசியமேன்னு அவர் ரொம்ப தெளிவா சொல்லிட்டாரு." )
குருநாதர் :- அப்பனே, அனைத்தும் தெரிந்து கொள்வாய். பின் அனுக்கிரகங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெய்வத்தை பற்றி அனைத்தும் தெரிந்துவிடும்.
குருநாதர் :- அப்பனே, ஞானம் வந்துவிடும் அப்பா. அவ்வளவுதான் வாழ்க்கை.
குருநாதர் :- அப்பனே, கவலைகள் வேண்டாம் என்பேன். போகனும் துணை இருக்கின்றான். பின் நலங்களாக சித்தர்கள். அப்பனே, நாங்கள் வழி நடத்துகின்றோம் கவலை விடு. அப்பனே.
==================================
# யானும் லோபாமுத்திரையும் அடிக்கடி உன் இல்லத்திற்கு வருவோம். ஆசிகள்.
=================================
குருநாதர் :- அப்பனே, எங்களுடைய ஆசிகள் பரிபூரணம். கடை நாளும் உண்டு. கவலை விடு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- யானும் லோபாமுத்திரையும் அடிக்கடி உன் இல்லத்திற்கு வருவோம். ஆசிகள்,
சுவடி ஓதும் மைந்தன் :- ("அகத்தியரும் லோபாமுத்திரை தாயாரும் அடிக்கடி வர்றாங்கன்னா அது சாதாரண விஷயம் இல்ல, ரொம்பப் பெரிய பாக்கியம்! அவங்க வர்றப்போ நாம எதையும் கேட்டுட்டு இருக்கக் கூடாது, அவங்க வந்தாலே எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க. இப்போ இவருக்குத் தன்னோட பாதை எதுன்னு தெளிவா தெரிஞ்சு போச்சு, சரியான வழியிலயும் பயணிக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த வழியில போனா அறிவும் ஞானமும் தானா வந்து சேரும், அதன் மூலமா இறைவனை முழுசா உணர முடியும். கடைசியில அகத்தியரே 'நானே வந்துட்டேன்'னு சொல்லிட்ட பிறகு, அவருக்கு என்ன தேவையோ அதை அவரே முன்னின்று நடத்தி வைப்பாரு; அதனால இனி கவலைப்பட எதுவுமே இல்லை!" )
அடியவர் 23 :- (தந்தை முக்தி குறித்து கேட்டபோது)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் என்னிடத்தில் தான் இருக்கின்றான். கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கூட தான் இருக்கிறார்.
குருநாதர் :- அப்பனே, அதுவும் நீ செய்த புண்ணியங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுவும் நீங்க ஏதோ புண்ணியம் செஞ்சுக்கிறீங்க. அதனால என் கையில வந்து பத்திரமாதான் இருக்கிறார். போக பண்ணிட்டாரு.
அடியவர் 23 :- வருத்தத்தோடு போனார்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதனால்தான் அப்பன் நிச்சயம் எதை செய்து பின் அனுப்ப வேண்டும் என்பதை எல்லாம் யாம் அறிவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு என்ன செய்து மரியாதை என்ன? அந்த ஆன்மாக்கு இது பண்ணனுமோ நான் செஞ்சுறேன். கவலைப்படாதீங்க. ஐயா,
அடியவர் 23 :- நன்றி. நன்றி. ஐயா, நன்றி.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 24 :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
அருள் ஞான ஜோதியே அகத்தின் ஜோதி
தனிப்பெருங் கடவுளே அகத்தீசர் ஆவார்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்திலே இருக்கின்றேன். அப்பனே, உன்னை இயக்குவேன் அவ்வளவுதான் ஆசிகள்.
===============================================
# அடுத்த அடியவர் வாக்கு
===============================================
அடியவர் :- ( ……… )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதைப் பற்றியும் கேட்டு விடாதே. யான் வந்துவிட்டேன். அவ்வளவுதான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- தெய்வமே குருநாதர்
சுவடி ஓதும் மைந்தன் :- நீ எதைப் பற்றியும் கேட்கக்கூடாதுப்பா. நாங்க வந்துட்டோம். அவ்வளவுதான்.
அடியவர் :- அடிக்கடி வாங்க. ஐயா ( பாசத்துடன் தந்தையை அழைத்தார்கள் )
======================================
# பல கர்ம வினைகள் நீக்கி, புண்ணியத்தை வாரி வழங்குவேன்.
======================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் வருவேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலை விடு. அனைத்துக்கும் அப்பனே நல்லது செய்து. அப்பனே, பின் பல கர்ம வினைகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் நீக்கி, அப்பனே, புண்ணியத்தை வாரி வழங்குவேன். கவலை இல்லை அப்பனே,
குருநாதர் :- அப்புண்ணியத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு. அப்பனே, பல மக்களுக்கு அனைவரும் பின் சேவை செய்க. அப்பனே ஆசிகள்.
==========================================
# அனைவரும் ஒன்று கூடி நல்லது செய்து நினைக்கின்றார்களோ அவர்களுக்கு யானே பின் நன்மை செய்வேன். அனைத்து தோஷங்களையும் கழிப்பேன்
==========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கு அப்பனே, பின் அனைவரும் ஒன்று கூடி அப்பனே, நல்லது செய்து நினைக்கின்றார்களோ அவர்களுக்கு யானே பின் நன்மை செய்வேன் அப்பனே. அனைத்து தோஷங்களையும் கழிப்பேன் அப்பனே.
குருநாதர் :- ஆனால் தெரியாமல் அதை வேண்டும், இதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தேவையில்லை என்னிடத்தில் அப்பனே. அனைவரையும் பின் உணர்ந்தவன் யான்.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 25 :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
குருநாதர் :- அப்பனே, நலங்களாக கவலை விடு. அப்பனே, சில மாற்றத்தை நிச்சயம் தன்னில் கூட அனுதினமும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அமைதியாக. அப்பனே, பின் அதிகாலையிலே. அப்பனே, ஓடு.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 26 :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குருநாதர் :- ( ***** விதி ரகசியங்கள் **** )
==============================
# அனைவருக்கும் பொது வாக்கு - ராகு கேது
==============================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அப்பனே, இதனால். அப்பனே, ஏன் எதற்கு அப்பனே, பின் குழந்தை பிறப்பு , திருமணங்கள் தாமதம் ஆகின்றது என்றால் அப்பனே, அனைத்தும் ராகு கேதுக்களால் தான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவை எளிதில் நீக்க முடியாதப்பா. இதனால். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் சரியாகவே. அப்பனே, பின் அதாவது இதை நீக்க. அப்பனே, பின் அதாவது பின் அரச மரத்தில் இருக்கும் பிள்ளையோனை அப்பனே, சுற்றி சுற்றி வருதலே சிறப்பு. இதனால் அப்பனே, சொல்லிவிட்டேன். அனைவருக்குமே.
===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================
அடியவர் 27 :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வளவு வாழ்க என்று சொன்னாலும் முதலிலே சொல்லிவிட்டேன் அப்பனே. இப்பொழுது இல்லை என்பேன் அப்பனே.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் :- (இவ் சத் சங்கத்திற்கு வராதவர்களுக்கு ஆசிகள் கேட்ட பொது வாக்கு )
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அடுத்தடுத்து சொல்கின்றேன். பொறுத்திரு, நிச்சயம் வருவேன் என்று சொல்லிவிட்டேன்.
அடியவர் :- அடிக்கடி வரணும். ஐயா, அடிக்கடி வாங்க. ஐயா,
குருநாதர் :- என்னை தேடி அலைந்தவர்கள் தான் வருவேன். கவலையும் இல்லை.
========================
# சத்சங்க நிறைவு வாக்கு
========================
குருநாதர் :- அம்மையே, பின் அன்னையே, அனைவருக்குமே உங்களுடைய ஆசிகள் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை. அனைவருமே, நிச்சயம் எதை செய்து தருகின்றேனோ, நிச்சயம் அதை பின் நிச்சயம் யான் செய்து தருவேன்.
குருநாதர் :- அதாவது உங்கள் மனதில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறிந்தேன்.
குருநாதர் :- ஆனாலும், நிச்சயம் அதை சொன்னாலும் யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னாலும் மீண்டும் பின் உங்கள் மனது பின் எதையோ கேட்டுக்கொண்டே தான். ஏனென்றால் இவையெல்லாம் நிச்சயம் ஊறிவிட்டது உடம்பில்.
குருநாதர் :- அதனால் இதைத்தான் பின் கேட்பீர்கள். அதனால் யானும் வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன் எதை என்று புரிய, பின் இத்தனை நிச்சயம் நேரங்கள். ஆனால் கவலை இல்லை.
குருநாதர் :- அனைவருக்குமே யான் பின் என்ன செய்ய வேண்டுமோ நியாயமான கோரிக்கைகள். ஆனாலும் புண்ணியம் எவை என்று நிச்சயம் தன்னில் கூட அனைவரிடத்திலுமே. இதனால் யானே செய்கின்றேன். யானே செய்கின்றேன். அடுத்த முறை சொல்கின்றேன். ஆசிகள், ஆசிகள்.
=========================================
# அடியவர்கள் குருநாதருக்கு பாடல்கள் பாடினார்கள்
=========================================
சித்தர் நாயகன் ; தமிழ் பித்தர் சேவகன்
சக்தி தாயவள் ; ப்ரிய பக்த பாலகன்
அத்தி மா முகன் ; வினை தீர்த்தமானவன்
தீர்த்த மாமலை ; திவ்ய ஆர்த்தி மங்களன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்குகள் நிறைவு அடைந்தது )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete