​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 3 March 2026

சித்தன் அருள் - 2138 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 2

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===============================================
# இவ் சத் சங்கம் குறித்த ஒரு விளக்க பதிவு குறிப்பு.
===============================================

( குறிப்பு :- இந்த சத்சங்கத்தில் பங்கேற்ற அடியவர்கள், கடந்த ஆண்டு பெங்களூர் சத்சங்கத்திலிருந்து தொடங்கி கந்தர் அனுபூதியை படித்தும் பாராயணம் செய்தும், அதை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றும் வந்தவர்கள். 

மேலும், குருநாதர் கூறியபடி நவதானிய தீபங்களை முறையாக ஏற்றி வழிபாடு செய்தும், அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களின் யாத்திரையையும் நிறைவேற்றியும் உள்ளனர். அதுமட்டுமல்லாது, குருநாதர் அருளிய நவ கைலாயம், நவ திருப்பதி போன்ற புனித யாத்திரைகளையும் செவ்வன செய்து முடித்துள்ளனர்.

அதன் பின், ராமேஸ்வரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தல், கடலில் பால், புனித நீர், தீபம் விடுதல், பித்துருக்களுக்கான தர்ப்பணங்கள் போன்ற அனைத்தையும் முறையாக செய்து முடித்தனர். 

கூட்டுப் பிரார்த்தனையில் சித்தர்கள் கூறும் அனைத்து பரிகாரங்களையும் வழிமுறைகளையும் முறையாக செய்து கொண்டே வருகின்றவர்கள்…

இவ்வாறு குருநாதர் கூறிய உத்தரவுகளை முழுமையாக அனுசரித்து வந்த இந்த அடியவர்களை, குருநாதர் தனிப்பட்ட முறையில் அழைத்து, ஒவ்வொருவருக்கும் வாக்குகளையும் நல்லாசிகளையும் வழங்கினார்.

குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார்:
“யார் ஒருவர் சித்தர்களைப் பேச்சு நடக்கின்றார்களோ, அப்படியே பின்பற்றி வருகின்றார்களோ, அவர்களுக்கு எங்களுடைய வாக்குகளும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.”

குருநாதருடைய வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, குருநாதருக்கு நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் குருநாதருடைய பிள்ளைகளே. ஆனால் குருநாதருடைய வாக்குகளை யார் பின்பற்றி கேட்டு வருகின்றார்களோ, அவர்களுக்கு வாக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இதை அடியவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குருநாதருக்குரிய விஷயங்களை அப்படியே செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால்தான் குருநாதருடைய வாக்குகள் கிட்டும்.

அந்த உத்தரவின்படி நடந்த இந்த சத்சங்கத்தில் ,  அடியவர்களுக்கு, குருநாதர் நேற்று வாக்குகளையும் அருளாசிகளையும் வழங்கினார். அந்த வாக்குகளில் உள்ள பொதுவான உபதேசங்களை இப்பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறோம்.) 

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

================================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று 
நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 2)
================================================

================================================
# ஆன்மா என்பது ஒரு சிறிய துகளே. 
# பெரிதாகி மீண்டும் வெடித்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை.
================================================


குருநாதர் :- நன்மைகளாகவே இதனால்தான் நிச்சயம் தன்னில் ஒரு ஆன்மா. அதாவது நிச்சயம் தன்னில் கூட ஆன்மா என்பது ஒரு சிறிய துகளே. 

குருநாதர் :- அத்துகள் பெரிதாகி, பெரிதாகி மீண்டும் வெடித்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை.

அடியவர் :- போன கூட்டு பிரார்த்தனையில சொன்னாங்க, 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு ஆன்மா என்பது என்னது? சிறிய துகழ், அது பெரிதாகி, பெரிதாகி என்ன ஆகுது?

அடியவர் :- வெடிச்சு…

சுவடி ஓதும் மைந்தன் :-  வெடிச்சிருது. அவ்வளவுதான்.

============================================
# யாரும் உரைக்காத  சித்தர்கள் அதி  ரகசியங்கள் 
============================================
# உங்களுக்கு எப்போது அனைத்தும் கிடைக்கும் இவ்வாழ்வில் ? 
============================================

குருநாதர் :-  பின் அதற்கும் நிச்சயம் பெரிதாக எவை என்று கூட எவ்வளவு என்ன ஏது என்று பின் அறிய தீனிகள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நிச்சயம் அனைத்தும் கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ( ஆன்மா வளரும்போது அதுக்கு என்ன தீனி தேவையோ அதை கொடுக்கணும்னு அவர் சொல்றாரு; அதைப் போலத்தான் மனுஷனும். சொல்லி விட்டு, “அதுக்கு தேவையான ஊட்டம் கொடுக்கணும்”ன்னு மீண்டும் வலியுறுத்துறார். நீங்க இப்ப ஒரு துகள் மாதிரி இருக்கீங்க; உங்களுக்கு என்ன ஊட்டம் தேவையோ, அதைத்தான் சரியாக கொடுத்தா தான் அது வளரும்னு அவர் சொல்லுற கருத்து. )

==========================================
# ஏன் உங்களுக்கு கஷ்டங்கள் வருகின்றது ?
==========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அதை நிச்சயம் அவ் பின் எதை என்று கூட பின் அறிந்து கூட பின் அதற்கு அத்துகளுக்கு சரியாக பின் தீனி கொடுப்பதே இல்லை. பின் எதை கொடுத்துவிட்டால் அத்துகள் பின் எதை என்று கூட பின் அழிந்து கொண்டே. இதனால்தான் மனிதனுக்கு கஷ்டங்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :-   ( ஆன்மாவுக்கு என்ன தீனி தேவையோ, அதையே சரியாகக் கொடுக்கணும்; கொடுக்கலன்னா அது மெதுவா பலம் குறைந்து அழியும் நிலைக்கு போயிடும். அந்த “அழியும் நிலை”ன்னா இங்க சொல்ற கஷ்டம்—ஆன்மா தாங்க முடியாத நிலை. துகளுக்கு (அணுத் துகளின் உண்மை) எதுவும் தெரியலேங்க…) 

அடியவர் ஒருவர் :- ( அதுக்கு என்ன அய்யா செய்யணும்? )

குருநாதர் :-  அப்பா, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இத்துகளுக்கு ( இப்போது வாக்கு உரைத்த அடியவருக்கு ) இன்னும் அப்பனே காந்த சக்தி இப்பொழுது சொன்னேனே. பின் என்ன என்று மறந்துவிட்டாயா? 

சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த துகளுக்கு ( இப்போது வாக்கு உரைத்த அடியவருக்கு ) காந்த சக்தி யாரு? 

அடியவர் :- முருகர். 

அடியவர்கள் :- சரி அய்யா 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அந்த இந்த இந்த துகளுக்கு யார் சொந்தக்காரர்? 

அடியவர்கள் :-  முருகர். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருகர் தான். 

========================================
# காந்தத்துக்கு வடக்கு–தெற்கு திசை என்ற இயல்பான ஈர்ப்பு விதி இருக்கிறது; அதனால்தான் வடக்கு–தெற்கு சேரும்போது மட்டும் ஈர்ப்பு உருவாகும், வடக்கு–வடக்கு அல்லது தெற்கு–தெற்கு வச்சா உடனே தள்ளி விலகும்.
========================================

குருநாதர் :-  அப்பா, நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் காந்தகத்தில் நிச்சயம் தன்னில் கூட மற்றொன்று  அதாவது பின் சில திசைகள் சென்றால் பின் ஒட்டிக் கொள்ளவே முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   காந்தகம் சில விஷயங்கள் என்ன பண்ணும்? 

அடியவர் :-  ஒட்டாது, 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒட்டாது

அடியவர் :-   நம்ம இரும்பா இருந்தோம்னா ஒட்டும் அப்படித்தானே  அய்யா. அப்ப இரும்பா இருக்குறதுக்கான இதெல்லாம் நம்ம பண்ணனும்னு சொல்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில திசைகள்ல இருந்தா விலகும் ஐயா.

அடியவர்கள் :- காந்தத்தின் வடக்கு தெற்கு ஒட்டும், வடக்கும் தெற்கும் ஈர்க்கும் ஐயா. வடக்கும் வடக்கும் வச்சா ஈர்க்காது. விலகும் , 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமாம்…விலகும் அய்யா  

=======================================================
# அனைத்து மனித ஆன்மாக்களின் அதாவது துகளின் தன்மை என்ன?.
=======================================================

குருநாதர் :-  அப்பனே, மனிதர்கள் அனைவரும் அவ்வாறே. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப மனிதர்கள் எல்லாமே…… 

அடியவர் :-  அதே மாதிரிதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதே மாதிரிதான் இருக்கிறது. 

அடியவர் :-   வடக்கு, வடக்கு ( ஒட்டாது ). 

======================================================
# உங்கள் உள் உள்ள ஆன்மா என்ற துகள், எப்போது இறைவன் என்ற காந்தகத்தில் திடீரென்று ஒட்டிக்கொள்ளும் ?
=====================================================

குருநாதர் :- இதனால் பல வழியில் கூட பின் உண்மைகளை தேடி அலைந்து திரிந்து இறைவனை பின் நிச்சயம் சென்றால்தான், திடீரென்று சிக்கிக் கொள்ளும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ( அப்ப என்ன ஆகும்? உங்கள் ஆன்ம என்ற துகள் இறைவன் என்ற கந்தகத்தில் ஓட்ட முடியாது. நீங்க பல வழிகளில் வந்து உண்மைகள் தெரிந்து, இறைவனை அடைந்து, அளந்து  திரிந்தால்  மட்டும்தான் பொசுக்குன்னு, ஏதோ ஒரு பக்கத்துல பொசுக்குன்னு ஒட்டிக்கும். ) 

==============================================
# ஏன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு துன்பங்கள்?
==============================================

குருநாதர் :- அப்பனே, உண்மை பற்றி மனிதன் உணரவில்லை. அப்பா, இதனால்தான் அப்பனே துன்பங்கள். அப்பனே, பின் இதனால்தான் அப்பனே பின் இறை பலம் தோற்று விடுகின்றது கலியுகத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உண்மை என்ன? அது யாரும் உணரல. அதனால என்ன ஆகுது? வந்து இறைபலம் தோற்று, இறைபலம் தோற்று விடுகின்றதுன்றாரு. 

================================================
# நம் அன்பு குருநாதர் , பல யுகங்களுக்கு முன்பே கலியுகத்தில் இன்னும் என்னென்ன நடக்க உள்ளது என்பதை அறிந்துள்ளார்கள்.
================================================

குருநாதர் :-  அப்பனே, கலியுகத்தில் இன்னும் என்னென்ன, ஏது என்றெல்லாம் அப்பனே பின் அறிந்து, அப்பனே, நிச்சயம் அறிந்திருக்கின்றேன். அப்பனே, பின் அதாவது பல யுகங்களுக்கு முன்பே.

குருநாதர் :-  அப்பனே, அவையெல்லாம் வருங்காலத்தில் என் பக்தர்களுக்கு செப்புவேன் அப்பனே. அப்பனே, அன்புடனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- என் பக்தர்களுக்கு அதெல்லாம் நான் வந்து வருங்காலத்துல நிச்சயம் சொல்லுவேன். 

=====================================================
# கருணைக்கடல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளித்தார்கள் 
===================================================== 

குருநாதர் :-  அப்பனே, கவலை வேண்டாம் என்பேன் அப்பனே. பின் அனைவரும் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. இப்பொழுது என்ன வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்தை யானே கொடுக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சொல்லிட்டேன் உனக்கு. எல்லாரும் இருக்காங்க. எல்லாருக்கும் நான் வாக்கு சொல்லணும்ன்றாரு. அகத்தியர் வந்து ஒரு சந்தர்ப்பத்தை திருப்பி கொடுக்கிறேன். ஐயா, இதெல்லாம் கொடுக்க மாட்டாரா? அவர் 

அடியவர் 1 :- அகத்தியர் ஐயா வந்து எப்பவுமே வழிகாட்டுதலா என் கூட இருந்தா போதும் ஐயா. 

குருநாதர் :-  தாயே, எது என்று அறிய பின் நிச்சயம் பின் அவ்வழிகாட்டி பின் அதாவது ஆசிகள் பின் இருப்பதினால்தான் உனை அழைத்து, முதலில் எதை என்று கூற, வாக்கு கேட்டுக்கொண்டிருக்கின்றாய். மறந்துவிட்டாயா? 

சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? அதனால, அந்த அருள் இருந்ததுனால தான் உங்களை…. ( இங்கு அழைத்து வாக்குகள் கொடுக்கின்றார்கள் )

=================================================
# கருணைக்கடல் , இவ் சத்சங்கத்திற்கு வந்த அடியவர்களை முன் பிறவியில்  பார்த்துள்ளார்கள். 
=================================================

குருநாதர் :- இதனால் அனைவரையுமே நான் பார்த்தவன் தான். நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற. இப்பிறப்பில் அல்ல, பின் எப் பிறப்பிலே. அதனால்தான் ஒவ்வொரு பாடலை நிச்சயம் பாடு என்று. நிச்சயம் அவ்வாறாக பாடிட்டு அறிந்து கூட பின் செப்பு எவை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (எல்லாரையும் ஒவ்வொரு ஜென்மத்திலும் நான் பார்த்தவன்தான்; ஆனா உங்களெல்லாருக்கும் ஒரே பிறவியிலே திடீர்னு அருளாசி கொடுக்கல. அதனால்தான் நீங்க எல்லாரும் பல பிறப்புகளை எடுத்துவந்தவங்க—அந்த புண்ணியத்தால்தான் இப்ப நான் உங்களை இப்படி நடத்திக்கிட்டிருக்கேன்) 

அடியவர் :- ( நாங்கள் எல்லாம் பாட்டு பாடி,   வாக்கு ஆசி கொடுக்கிறார் ) 

===================================================
# 7 பிறவிகளில் , முதல் மனித பிறவியில் பிறந்தவர் , அகத்திய மாமுனிவரை பற்றி என்ன சொல்லுவார்கள் ?
===================================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் ஒரே பிறவியில் பிறந்தவனுக்கு என்ன சொன்னாலும் அகத்தியன் பொய் என்றுதான் சொல்லுவானப்பா. 

================================================
# எப்போது ஒரு ஆன்மா, தனது  உண்மை நிலையை  அறியும் ?
================================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் இத் துகளானது ( ஆன்மா )  பல வழியில் கூட அப்பனே, பின் பல பிறப்புகள் எடுத்து எடுத்து வந்தால்தான் அப்பனே, உண்மை நிலையை அறியும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த துகள் என்பது, மனிதன். பல பிறப்புகள் எடுத்து, எடுத்து வந்தால்தான், சித்தர்களை….….

அடியவர் :- உணர முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உணர முடியும். 

==================================================
# இவ் சத்சங்க அடியவர்கள் , பல கஷ்டங்கள் பட்டு இறைவன் ஆலயங்களுக்கு சென்றுள்ளனர். பல வழிபாடுகள் செய்துள்ளனர்
==================================================

குருநாதர் :-  அப்பனே, சித்தர்களை அதாவது உணர எவை என்று அறிய அப்பனே பல பக்குவங்கள் அப்பனே. 

குருநாதர் :-   பல கஷ்டங்கள் இருந்தால் மட்டுமே நாங்கள் தேடி வருவோம் என்போம் அப்பனே. 

குருநாதர் :-   கஷ்டம் இல்லை என்றால் அப்பனே, நிச்சயம் நீங்கள் யாரோ, யாங்கள் யாரோ. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப எல்லாருமே கஷ்டப்பட்டாதான் அனுபவம். கஷ்டப்பட்டா மட்டும்தான் நாங்கள் தேடி வருவோம். நீங்களும் எனக்கு தேடி வருவீங்க. அப்ப கஷ்டப்படலைன்னா… 

அடியவர் :- இறைவனை உணர முடியாது…. 

==========================================
# எப்போது அமைதி , சந்தோசம் கிடைக்கும் ?
==========================================

குருநாதர் :- அப்பனே, அதனால் அதாவது அப்பனே, புவியில் வந்த வேலை என்ன வேலை என்று அறிந்து கொள்ள வேண்டும், மனிதன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பொழுதுதான் அப்பனே ஆன்மா சாந்தி அடையும் என்பேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே, பின் சாந்தி அடையாது அப்பனே. 

குருநாதர் :-  அனைவரும் கெட்டுக்கொண்டே இருக்கும் அப்பனே. 

அடியவர் :- இந்த பிறப்போட நோக்கத்தை தெரிஞ்சுக்கணும்னு குருநாதர் சொல்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது தெரியலைன்னா… 

அடியவர் :- கஷ்டப்பட்டுட்டு தான் இருப்போம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  கஷ்டப்பட்டுனே இருக்கணும். திருப்பி என்ன பண்ணுவான்? பேயா வந்து கூட வந்து தொல்லை பண்ணி இருப்பான் வந்து. அதனால வந்து இந்த பிறவி உண்மை பிறவி தெரிஞ்சுக்க வேண்டும். 

===============================================
# இறைவன் வைக்கும் பாடத்தின் பெயர் என்ன ? 
================================================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் கஷ்டம் என்ற பாடத்தை இறைவனே நடத்துகின்றான். 

குருநாதர் :-  அப்பனே, இக் கஷ்டம் என்ற பாடத்தில் அப்பன் நிச்சயம் தேர்ச்சி பெறுவதும். அப்பன் நிச்சயம் தன்னில் கூட தோல்வியாவதும் உங்கள் இடையேயே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த கஷ்டம் என்ற பாடத்துல… 

அடியவர் :-  தேர்ச்சி, பாஸ் ஆகுறது ஃபெயிலியர் நம்ம  கையிலதான் இருக்குது.

குருநாதர் :-  உங்களிடையே கேட்கின்றேன்.  எப்படி? 

சுவடி ஓதும் மைந்தன் :-   இதை நான் எப்படி தேர்ச்சி பெறுவேன்? உங்களிடையே கேட்கின்றேன்னு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தார். கேளுங்க. எப்படி தேர்ச்சி பெறுவது? எப்படி தோல்வி அடைவது?  கேளுங்க அய்யா.

அடியவர் 1:- இந்த கஷ்டத்தை தாங்கிட்டு மீறி வரணும். அப்போ அவங்களுடைய துணை வேணும். அதுக்கு ….

=================================================
# இறைவன் வைக்கும் தேர்வில் , நீங்கள் தேர்ச்சி பெற்றுள்ளீர்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?
=================================================

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய பின் கஷ்டத்திலும் இறைவன் நினைத்துக் கொள்ளவே வேண்டும். 

குருநாதர் :-  இறைவன் நமக்கு உதவியே செய்வான் என்று. இதுதான் நிச்சயம் தேர்ச்சி. 

குருநாதர் :- ஆனாலும் பின் இறைவன் கொடுக்கவில்லை என்றால் இறைவன் இல்லை, நிச்சயம் தன்னில் கூட பின் ஏதோ ஒன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது என்ன சொல்றாருன்னா… கஷ்டத்திலயும்… 

அடியவர் :- இறைவன் நமக்கு இருக்கிறாருன்னு சொல்லணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (இறைவன் இருக்கின்றார் என்று ) சொல்லிட்டே இருக்கணும்.  திடீர்னு வந்து, கஷ்டம் அதாவது நிறைய கொடுத்துட்டார் என்றால்,  அட போடா, என்ன இறைவனை வணங்கியும் பிரயோஜனம் இல்லை. அந்த நிலைக்கு வரக்கூடாது. 

அடியவர் 1:- நம்ம குறைகள் தீராவிட்டாலும் கடவுள் இல்லைங்கிற நிலைக்கு வரக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கடவுள் இல்லைன்னு நினைக்கக்கூடாது. என்னடா?  கடவுளை வணங்கி வணங்கி ஒன்னும் பிரயோஜனம் இல்லைன்னு சொல்லிட்டு, இருக்கக்கூடாது. 

================================================
# கஷ்டம் வரும் போது , கஷ்டம் இறைவனால் அருளால் தான் என்று உணர வேண்டும்.
================================================
# கஷ்டத்தில் தான் இறைவன் இறுக பற்றவேண்டும். நம்பிக்கை இழக்கக்கூடாது.
=================================================

குருநாதர் :-  மீண்டும் கணக்கை முதலில் இருந்தே தொடங்குவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி அந்த நிலைமைக்கு வந்துட்டோம்னா என்ன ஆகும்? ஃபர்ஸ்ட் ல  இருந்து வரணும். 70% வந்துட்டீங்க. 90% அதாவது 90% வந்துட்டீங்க. சரி, என்னடா? கடவுள் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்லிட்டு , திருப்பி… 

அடியவர் 1:- ஃபர்ஸ்ட் ல இருந்து வரணும். 

==================================================
# உங்கள் உடம்பும் உயிரும் யாருக்கு சொந்தமானது ?
==================================================

குருநாதர் :-  இதனால் அப்பனே, உடம்பும், உடம்பும் அப்பனே, பின் உயிரும் இறைவனுக்கு சொந்தமானது. இதனால்  அப்பனே, பின் இதை எப்பொழுதும் தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது எதை கொடுப்பான் என்று அவனுக்குத்தான் தெரியும். சொல்லிவிட்டேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உடம்பும் உயிரும், உயிரும் இறைவனுக்கு சொந்தம். 

================================================
# இறைவன் கொடுத்த உடம்பை நன்கு பராமரிக்க வேண்டும்.
===============================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் இவ் உடம்பு அப்பனே  வைத்துக்கொண்டு பலர் எவ்வளவு என்றெல்லாம் செய்கின்றார்கள். அப்பனே தவறுகளை என்பதை எல்லாம் அப்பனே எதை எதையோ பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட கெடுத்து கெடுத்து உடம்பை அப்பனே. இதனால் அப்பனே, பின் அதாவது உண்மை புரிதல் ( நிலையை )  தெரிந்து கொள்ளவே மாட்டான் அவன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இறைவனின் உடம்பு என்றால் அது அவருக்கே சொந்தம்; அப்ப என்ன பண்ணணும்? அந்த உடம்பை நாமே நல்லா பராமரிக்கணும்னு அவர் சொல்றார். அவருடைய உடம்பு, இறைவன் அவர் கொடுத்த உடம்பு—அதை நன்றாக வைத்தால்தான் உண்மை நிலை நமக்கு தெரியும். பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நல்லா குளிச்சிட்டு, உடம்பை எப்படி கரெக்டா வச்சுக்கிறாங்களோ, அதே மாதிரி இறைவன் கொடுத்த உடம்பையும் நாமே கவனிக்கணும். ஆரோக்கியமா இருக்கணும்னா அந்த உடம்புக்கு தேவையான ஆரோக்கியமான உணவு, பழக்கம் எல்லாம் எடுத்துக்கணும்; இல்லேன்னா அது சரியா இருக்காது.) 


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே, இப்ப கலியுகத்தில் பின் நிச்சயம் யாரால் கெடும்? பின் மனிதனாலே கெடும். இதனால்தான் அப்பனே, இன்னும் உண்மைகள் சொல்லப் போகின்றேன், பொறுத்திருந்தால். அப்பனே நலங்கள். என்ன வேண்டும் கேள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப  இதெல்லாம் தேவையில்லை. திருப்பி சொல்லுவேன். நான். இப்ப உனக்கு என்ன வேணும்னு கேளுங்க? 

அடியவர் 1:- நாங்க, இது நாள் வரைக்கும், என் வாழ்நாளில்,  இது நாள் வரைக்கும் கடவுள்ட்ட போய் இந்த மாதிரி கணவன் வேணும், இந்த மாதிரி ஒரு படிப்பு வேணும், இந்த மாதிரி ஒரு வேலை வேணும்னு நான் கேட்டதே இல்லைங்க. எல்லாமே கடவுள்தான் அமைச்சு கொடுத்திருக்கார். 

================================================
# இறைவன் உங்களுக்கு எழுதிய விதியை , இறைவனால்  உங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுத, நீங்கள்  என்னென்ன செய்ய வேண்டும் ?......
=================================================

குருநாதர் :-  தாயே, எவை என்று புரிய, நிச்சயம் இப்பொழுதுதான் சொன்னேன், எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. அனைத்தும் அதாவது இறைவனுக்கு சொந்தம். 

குருநாதர் :-  இறைவன் தீர்ப்பு, தீர்ப்பு தான். 

குருநாதர் :-   அனைவருக்கும் நிச்சயம் தன்னில் தீர்ப்பு எழுதி வைத்து தான் அனுப்புகின்றான். 

குருநாதர் :-  அதன்படியே தான் நடக்கும் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அவை மீறி நடக்க வேண்டும் என்றால் பெரும் நிச்சயம் தன்னில் கூட பக்தி வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும்? என்பவையெல்லாம் வருங்காலத்தில் நான் தெளிவுபடுத்துகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (பிக்ஸ் டெபாசிட்.  எல்லாமே மெமரி கார்டுல என்ன பண்ணாரு? எழுதி அனுப்பிச்சிருக்காரு. ( உங்கள் மூளையில் ) சொருகி வச்சிருவார். இதுதான் நடக்கும்னு சொல்லிட்டாரு. அதை மீறி ஒன்னும் நடக்காது. ஒருவேளை அந்த மெமரி கார்டு வந்து மாத்தணும்னா என்ன செய்யணும் ?)

அடியவர் :-  (நிறைய புண்ணியம் பண்ணனும். நிறைய விஷயம் செய்யணும் )


சுவடி ஓதும் மைந்தன் :-  (நிறைய விஷயம் பண்ணா மட்டும்தான் அந்த மெமரி கார்டுல இருக்கிறதை மாத்தி எழுதுவார். இல்லைன்னா என்ன ஆகும்? அப்படியே செல்லுக்கு வந்துட்டுதான் தான் இருக்கும். வந்து அது நிறைய பேருக்கு தெரியாது இல்ல? அந்த மெமரி கார்டுல வந்து யார் வந்து போட்டாங்களோ, அவங்க மட்டும்தான் என்ன ஆகும்? மாத்த முடியும், ஆபரேட் பண்ண முடியும். இல்லையென்றால் உங்களுக்கு அந்த காந்த சக்தி யார் கொடுக்கிறதுன்னா? முருகப்பெருமான் ) 

================================================
# நம் அன்பு குருநாதருக்கு, நம் தந்தைக்கு , கருணைக்கடல், அகத்திய மாமுனிவருக்கு,  எப்படி நாம் அனைவரும்  நன்றி செலுத்துவது ?
================================================


குருநாதர் :-  தாயே, தந்தையே, கவலைகள் வேண்டாம். பின் அடுத்த முறையும் வாக்குகள்  செப்புவேன். 

அடியவர் 1 :- நன்றி குருநாதா. 

குருநாதர் :-  ஆனாலும் பின் நன்றி  எதை என்று கூற பின் ,  யான் சொல்வதை  பின் செய்தாலே நன்றி. 

அடியவர்கள் :-  ( இலகு சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  நன்றி சொல்லாதீங்க அம்மா. எப்ப தெரியுமா நன்றி?  இறைவன் சொல்றதை செய்தா மட்டும்தான் நன்றி. 

அடியவர் :- நன்றி சொல்றாருன்னு அர்த்தம்…

குருநாதர் :-  எதை புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் உரைக்கின்றேன். பின் எவை என்று அறிய பின் விதியும் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட பொறுத்திருந்தால் 

குருநாதர் :-  ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து யார் வேணும்னா பாடுங்க. 

அடியவர் :-  ஒரு பாட்டு  பாடி வாக்கு அய்யா கிட்ட கேளுங்கள்.

========================================================
# கருணைக்கடல் வாக்கு கேட்க, அடியவர் 2 எழுந்து நின்று பாட ஆரம்பித்தார்
=======================================================


அடியவர் 2:-  ( பின்வரும் பாடலை அருமையான ராகத்தில் பாடினார்கள் ) 

என்னப்பன் அல்லவா… என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா… என் தாயும் அல்லவா

பொன்னப்பனல்லவா… பொன்னம்பலத்தவா

சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்

கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே

ஆடிய பாதனே… அம்பல வாணனே
ஆடிய பாதனே… அம்பல வாணனே

நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ

=====================================
# நம் அப்பன் , இறைவன் -  ஒரு பிள்ளைக்கு கொடுக்க மாட்டானா என்ன ?
========================================

குருநாதர் :-  தாயே, முதலில் என்ன சொன்னாய்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல என்ன சொன்னாய்? 

அடியவர் 2:-  என் அப்பன்…

குருநாதர் :-  நிச்சயம் பின், அப்பன் ஒரு பிள்ளைக்கு கொடுக்க மாட்டானா என்ன ? 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு அப்பன், கொடுக்க மாட்டானா என்ன? 

குருநாதர் :-  ஏன்? எதற்கு கொடுக்கவில்லை? எதை என்று புரிய நிச்சயம் என்றால், நிச்சயம் பின் அதாவது பின் பொய் வேடம் போடுகின்றாளா? அதாவது நடிக்கின்றாளா? என்றெல்லாம் இறைவன் பார்ப்பான். ஏனென்றால் வரத்தை கொடுத்து கொடுத்து…( இறைவன் ஏமாந்து விட்டார் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   (இறைவன் என்ன பண்ணுவாரு? நீங்க  என்னப்பன்னு அன்பு பண்ணாலும் என்ன பண்ணுவாரு? நம்மளையே புடிச்சு நிக்கிறா? பாசத்தோடு அவருக்கு வந்து அன்புதான் தேவை. நம்மளையே புடிச்சு நிக்கிறாங்களா? இல்லைன்னா பார்ப்போம். அவன் டெஸ்ட் பண்ணுவாரு.)

குருநாதர் :-  நிச்சயம் சோதனை தான். தாங்கிக்கொள், தாயே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சில விஷயங்கள்ல…. 

அடியவர் :-  கஷ்டம், 

சுவடி ஓதும் மைந்தன் :- சோதனை தான். அதை நீங்க வந்து தாங்கிக்கணும். தாங்கிக்கணும், 

குருநாதர் :-  தாயே. எதை என்று அறிய பின் உன் அப்பன் நிச்சயம் கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் அப்பன் நிச்சயம் கொடுப்பான். 

குருநாதர் :-  நிச்சயம் கேள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்கலாம். 

அடியவர் 2 :- ( என்னை ஏமாத்துறவங்க, என் கூட இருக்கக்கூடாது). 

குருநாதர் :-  தாயே, எதை, எதை என்று புரிய நிச்சயம் கலியுகத்தில் அப்படித்தான் இருப்பார்கள். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

அடியவர் 2 :- (வாழ்வின் பெருத்த வலியுடன் உரைத்த தனி பதில்கள்……..) எல்லாருமேன்னா.. வலி எப்படி தங்குவது ? 

============================================
# உங்கள் சொந்த பந்தமாக உள்ள துகளின் ரகசியங்கள் …..
============================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட ……………………………………………………………. எவர்? நிச்சயம் பின் அருகில் இருப்பவர்கள் எவர்?  எதை என்று கூற துகள். நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. இவை பற்றி எல்லாம் சொல்வேன். 

குருநாதர் :- அதனால் இவ்வுலகத்தில் பின் அதாவது இவ்வுடம்பிற்கு சொந்தக்காரன் இறைவன் மட்டுமே. மற்றவை எல்லாம் நிச்சயம் ஏதோ பின் ஒரு பின் நன்மைக்காகத்தான், சுயநலத்திற்காகத்தான் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  பின் வருவார்கள். ஐயோ என்று கொஞ்சுவார்கள். நிச்சயம் போவார்கள். தூக்கி பின் எறிந்து விடுவார்கள். அவ்வளவுதான். இதற்கு சொந்த பந்தமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( எங்க சொந்த பந்தம்னு கேக்குறாரு ஐயா?  புரியுதுங்களா? கொஞ்சுவார்கள். )

அடியவர் 2 :- வருவாங்க, போவாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா வரும் போது என்ன பண்ணுவாங்க? கொஞ்சுவார்கள். அப்பா, குழந்தா, இதுன்னு சொல்லிட்டு போகும்போது என்ன பண்ணுவாரு? தூக்கி எறிஞ்சிடுவாங்க. எங்க சொந்தம்? யார் சொந்தம்? 

அடியவர் 2 :-  எத்தனை வாட்டி தூக்கி எறிஞ்சாலும், அந்த மனசு வந்து, என்ன சொல்றது? எதையும் தாங்கி,  எவ்வளவு நாள் தான் அழுவாமல் நடிக்கிறது? 

===========================================
# எப்போது எதையும் தாங்கும் இதயம் வரும் ?
===========================================

குருநாதர் :-  எதை என்று புரிய அதற்கு நிச்சயம் ஈசன் பல சோதனைகள் பின் கொடுப்பான். அப்பொழுதுதான் எதையும் தாங்கும் இதயம் வரும். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் அப்ப என்ன பண்ணுவாரு? எதையும் தாங்கும் இதயம் வேணும்னா என்ன பண்ணுவாரு? 

அடியவர் :- ஈசன் சோதனைகள் கொடுப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :- சோதனை. அடி அடின்னு அடிப்பாரு. அப்பதான் என்ன ஆகும்? 

அடியவர் :-  அடிச்சு துவைச்சு 

சுவடி ஓதும் மைந்தன் :- எதையும் தாங்கும் (இதயம் வரும்). 

அடியவர் 2 :- அப்ப பிரார்த்தனையே மாறிடும்ங்க அய்யா . எனக்கு சோதனை கொடுக்காதேன்னு சொல்றதை விட்டுவிட்டு , ஓரமா எங்கயாவது போய் உட்கார்ந்துரலாமா? 

=================================================
# உங்கள் பாசத்தின் அளவிற்கு ஏற்றாற்போல , இறைவன் அடி விழும் 
================================================

குருநாதர் :-  அந்நிலைக்கு, அதாவது பாசம் வைத்தால் இறைவன், அந்நிலைக்கு ஏற்றார் போல் செய்வான். நிச்சயம் போதுமடா சாமி என்று. அப்பொழுதுதான் பின் பக்தி என்னவென்று நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடி அடின்னு  அடிப்பாரு.  உண்மையான பக்தி இருந்தா அடி அடின்னு அடிப்பாரு. கடைசியா என்ன, போதுமடா சாமின்னு எப்ப சொல்றாங்களோ? அப்ப என்ன பண்ணுவாரு… இறைவன்? 

அடியவர் :-  உட்காருவார். 

சுவடி ஓதும் மைந்தன் :- உட்காருவார்.

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனை பின் ( ****பிறவி ரகசியங்கள் வாக்கு **** ……………………………… ……………… ………………… ……………… …………………… ……………… ………………….. ) உன்னை படைத்தான் ஈசன். ஆனாலும் உனக்கு அது தெரியவே இல்லை. 

அடியவர்கள் :- ( ….) 

அடியவர் 2 :-  ( …. …. …. ….) 
 
சுவடி ஓதும் மைந்தன் :- ( *** பிறவி, விதி  ரகசியங்கள் எடுத்து உரைத்து, நல் விளக்கம் அளித்தார்கள் **** )  

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் நீங்க கேட்டுக்கொண்ட வரம். அதை விட்டு நீங்க என்ன செஞ்சாலும் என்ன ஆகும்? 

மற்றொரு அடியவர் :-  நடக்காது. 

===================================================
# வந்த வேலை என்ன என்று தெரியாத மனிதர்கள் , துன்பம் அடைகின்றார்கள்
===================================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. அவ்வேலை நிச்சயம் பின் யாருக்கும் தெரிவதில்லை. இதனால்தான் பின் துன்பம்தான். 

====================================================
# வந்த வேலை தெரியாததால் , தானும் கெட்டு , கூட இருப்பவர்களும்  கெட்டு விடுகின்றனர்.
====================================================

குருநாதர் :- பின் வருபவர்கள் எல்லாம். அனைவரும் அதாவது பின் தன்னிடத்தில் இருப்பவர்கள் நிச்சயம் தன்னிடத்தில் தானும் கெட்டு , பெற்று பின் இருப்பவர்களும்  கெட்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- வந்த வேலை என்ன வேலை?   ( *** பிறவி விதி  ரகசியங்கள் எடுத்து உரைத்து, நல் விளக்கம் அளித்தார்கள் **** )  இதுதான் வேலை. மத்த வேலைபண்ணா என்ன ஆகும்? வந்து 

அடியவர் :- கஷ்டம் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கஷ்டம் தான். கஷ்டம்தான். 

==============================================
# இவ்வுடம்பிற்கும், உயிருக்கும் சொந்தக்காரன் இறைவன் மட்டும்தான்.
==============================================

குருநாதர் :-  நிச்சயம் இதனால் ஈசன் பின் அனைத்தும் புரிய வைப்பான். அதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் இவ்வுடம்பிற்கும் பின் உயிருக்கும் சொந்தக்காரன் இறைவன் மட்டும்தான். மனிதர்கள் வருவார்கள், போவார்கள். அவர் ஒரு வேலையை பார்த்துவிட்டு அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த உடம்புக்கு யாருக்கு சொந்தம்? 

அடியவர் :- இறைவன். ஈசன் தான் சொந்தம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் தான் சொந்தம். அப்ப மனிதர்கள் வருவார்கள், 

அடியவர் :-  போவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  போவார்கள். அவ்வளவுதான். 

==========================================
# ரகசியம் - யாருக்கு நம் குருநாதர் அனைத்தும் தருவார்கள் ?
==========================================

குருநாதர் :-  ஏதோ ஒரு வேலைக்கு வருகின்றான். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட குறிப்பிட்ட மனிதர்களே  இறை பலத்தை பெற்று, உண்மைப் பொருளை பின் நிச்சயம் ஏற்று நடக்கின்றனர். இதனால்தான் அவர்களை மட்டும் நிச்சயம் தன்னில் கூட, உண்மைப் பொருளை தெரிய வைத்து, இன்னும் கூட அனைத்தும் தருவேன் யான்.

குருநாதர் :-  தாயே, என்ன வேண்டும் கேள். அதனால் நிச்சயம் அனைத்தையும் சொல்லிவிடுவேன். ஆனாலும் பின் அதாவது பின் மனவருத்தம் ஆகிக்கொண்டால், அதனால் நிச்சயம் பரிபூரணமாக நீயே கேள். 

===================================
# பல அடியவர்களுக்கு இருக்கும் ஒரு கேள்வி - இவ் அடியவர்மூலம் இப்போது ஒரு புரிதல் உண்டாகும்…..
===================================

அடியவர் 2 :-  அப்படி என்ன நான் கடன் சுமை பட்டேன்?. ஊரார், மத்தவங்க வட்டி, ஏன் எனக்கு? இன்னும் கிட்டத்தட்ட, ஒரு 18 வருஷமா அடுத்தவங்களோட வட்டி, ஏன் நான் கட்டிக்கிட்டு இருக்கேன்? 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய இவையெல்லாம் ஒரு பாவக்கணக்கு என்று வைத்துக்கொள். நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஒரு 

அடியவர் :- பாவக்கணக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :- பாவக்கணக்கு என்று வைத்துக்கொள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment