​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 27 March 2026

சித்தன் அருள் - 2168 - அன்புடன் அகத்தியர் - பாலி, இந்தோனேஷியா வாக்கு 7 !








அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 15.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த  வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  பகுதி 7

வாக்குரைத்த  நாள் :- 15.03.2026 (ஞாயிற்றுக்கிழமை), (இரண்டாம் நாள் ,  மூன்றாம்  புனித தலம்)  -  ( DAY 2  , 3rd  PLACE )

வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :-  பிரஹ்ம விஹார ஆராம, பன்ஜார் தினஸ் தாங்கெப், பன்ஜார் தெகெஹா, கேக். பன்ஜார், கபுபாதேன் புலேலெங், பாலி 81152, இந்தோனேஷியா

கூகிள் மேப் லிங்க் (Google Map link)  :-
https://maps.app.goo.gl/MViLD7fffabZhyug6


Address:-  Brahma Vihara Arama, Banjar Dinas Tangeb, Banjar Tegeha, Kec. Banjar, Kabupaten Buleleng, Bali 81152, Indonesia


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் , அகத்தியன். 


அப்பனே, பல ஞானியர்கள் அப்பனே, நிச்சயம் இத்தேசத்திற்கு ஏன் வந்தார்கள் அப்பனே? 


அதாவது, பின் புவிதன்னில் ஏன் அனுப்பினான் அப்பனே? 


பின் இறைவன் என்றெல்லாம் அப்பனே, யோசித்துப் பார்த்தால் அப்பனே, பின் அதாவது, பல வழியிலும் கூட உங்களுக்கு தெரிவித்திருக்கின்றேன் அப்பனே. 


பல நன்மைகள் செய்யவே அப்பனே. 


ஏராளமான பலன்கள் அப்பனே, மனிதனிடத்தில் தங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே. 


ஆனாலும் அவையெல்லாம் வெளிக்கொண்டு வருவதற்கு அப்பனே, நிச்சயம் பின் மனிதனால் முடியவில்லை என்பேன் அப்பனே. 


இதனால்தான் அப்பனே, பின் இறையே அப்பனே, பின் பல அப்பனே, ஞானியர்களை அப்பனே, பின் அனுப்பி வைத்தான் அப்பனே. 


இதுதான் அப்பனே. 


அவை போலத்தான் அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, பின் அதாவது, இவ்ஞானியும் ஒருவன் அப்பா. 


அப்பனே, இவ்ஞானி அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மீண்டும் மக்களை காப்பாற்றவே பின் பிறக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் வாதாடி வாதாடி. 


ஆனாலும் அப்பனே, எதை என்று புரிய அப்பனே. 


ஆனாலும் வேண்டாம், மக்கள் பின் இழிவு எதை என்றறிய நிச்சயம் பின், அதாவது, உலகத்தில் அறிந்தும் கூட எதை என்று தெரியாமல் வாழ்வார்கள்… 


இன்னும் இழிவுபடுத்துவார்கள் என்றெல்லாம். 


உன் பிறவி, உன் பிறவி முற்றிற்று. 


எதனால் நீ சென்றாலும், நிச்சயம் உன் தனக்கு பல வழியிலும் தொந்தரவுகள் தான் என்றெல்லாம். 


ஆனாலும் இருப்பினும் மக்களுக்காக யான் சேவை செய்ய வேண்டும். 


எவ்வளவு பின் கஷ்டங்கள் வந்தாலும் யான் நிச்சயம் பின், அதாவது, பின் மக்களுக்கு சேவை செய்யவே நிச்சயம் தன்னில், ஒரு பிறவி கொடுக்கும். 


பின் நிச்சயம் பின் எவ்வாறு என்பதெல்லாம்.


சரி. என் பலத்தை, அதாவது, கலியுகத்தில் பின் வாழ முடியாது, நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று. 


ஆனாலும் என் பலத்தை உனக்கு கொடுத்து அனுப்புகின்றேன் என்று இறைவன் அனுப்பிவிட்டான் அப்பா. 


அப்பனே, இதனால் அப்பனே, சில அப்பனே, முதலில் அப்பனே, சில சந்தோஷங்கள் அப்பனே. 


சில அப்பனே, காரியங்கள் கூட அதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் அமர்ந்தான் அப்பனே, பின் மரத்தடியில் அப்பனே. 


அனைவருக்கும் தெரிந்ததே என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அதாவது, சுலபமாகத்தான் சொல்வேன் என்பேன் அப்பனே. 


ஏனென்றால் பல விஷயங்கள் பல இடங்களில் உள்ளது என்பேன் அப்பனே. 


ஆனாலும் அப்பனே, அவையெல்லாம் தெரிவித்தால் அப்பனே, பின் ஒரே முறையில் தெரிவித்தால் அப்பனே, மனிதனுக்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


உண்மை எது , 


பொய் எது 


என்று தெரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 


அதனால்தான் அப்பனே, ஒவ்வொரு ரகசியத்தையும் அப்பனே, ஒவ்வொரு இடத்தில் குறிப்பிடுகின்றேன் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அதாவது, சொன்னேனே அப்பனே, பின் அதாவது, தீய சக்திகள் என்று அப்பனே, நிச்சயம் தன்னில் உள்ள மனதில் உள்ள, அதாவது, மனதுதான் அப்பனே, பின் மனிதரிடத்தில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை ஏதோ செய்தார் என்பேன் அப்பனே. 


அதாவது, பின் எவை என்று கேலி செய்தனர் என்பேன் அப்பனே. 


இவ் அப்பனே, ஞானியை அப்பனே, எதை என்று புரிய. 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எப்படியாவது, நிச்சயம் தன்னில் கூட இவனை, பின் அதாவது, நிச்சயம் இவன் தன் பின், அதாவது, போதிக்கும் போதனைகள் எல்லாம் பொய்யே என்றெல்லாம் அப்பனே, பின் மனிதன் அப்பனே. 


அவை மட்டுமில்லாமல் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் கற்களை வீசி அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எறிய சொன்னார்கள், மனிதன் மனிதனே. 


இவன் பின், அதாவது, இவன் இங்கே இருந்தால் மக்கள் திருந்து விடுவார்கள் என்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வழியிலும் கூட அப்பனே, பின் விரட்டி எடுத்தனர் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே, ஒன்றும் எதை என்று புரிய அப்பனே. அப்பொழுது கூட நிச்சயம் தன்னில் கூட பல வழியிலும் கூட அப்பனே, எதை என்று அறிய அப்பனே. 


அதாவது, பின் இவனுக்கு தேவைப்பட்டது ஒரு நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது, நல்லிடமாக…


பின் நல்லிடமாகவே, பின் நிச்சயம் இங்கே தேர்ந்தெடுத்தான். 


பின் மலையில் அப்பனே, நிச்சயம் ஆனாலும் அப்பனே, இப்பொழுது பாதி அளவு அழிந்துவிட்டது என்பேன் அப்பனே. 


சிறிதுதான் அப்பனே உள்ளது என்பேன் அப்பனே. 


இவ்வாறாக அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவன் எங்கிருந்தே வந்தவன் என்றெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில்… 


பல கேலிகள் பேசி இவனை துரத்தலாம் என்றெல்லாம் அப்பனே. 


பல வழியிலும் துரத்தி அப்பனே, எது என்று புரியாமலும் எவை என்று புரியாமலும் வீணான பழிகள் எல்லாம் போட்டு. 


ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அமைதியாக, நிச்சயம் ஆனாலும், பின் எதை என்று அறிய, பின் ஒரு ஒரு, பின் சீடன் மட்டும் இவனிடத்தில், நிச்சயம்…


அதாவது, பின், அதாவது, ஞானியே, குருவே, எத்தனை, பின், துன்பங்கள் சகித்துக் கொண்டிருக்கின்றாயே? 


ஏன், எதற்கு, எவை என்று புரிய, நிச்சயம்…


இவ்வளவு அசிங்கங்கள்???


இவ்வளவு அவமானங்கள்??? நிச்சயம், எதை என்று..


எவையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கின்றாயே? 


ஏன், எதற்காக என்றெல்லாம், நிச்சயம். 


அதாவது, இங்கே எழுந்து, பின் வேறு இடத்திற்கு சென்றுவிடு, 


வேண்டாம், வேண்டாம் என்றெல்லாம், நிச்சயம். 


பின் எதை என்று, ஏன், ஏன் செல்ல வேண்டும்? எதை, எவை என்று கூட 


மக்களுக்கு சேவை, அதாவது, செய்யவே வந்துவிட்டோம். 


இதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும்… 


எத்தனை, பின், இழிவு சொல் வந்தாலும், நிச்சயம், 


அதை பொறுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். 


அதேபோலத்தான் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இத்தேசத்தில் அப்பனே, மனிதர்களாயினும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சேவை செய்ய வந்தால், இப்படித்தான் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


இதனால் அப்பனே, பின், இவ்ஞானிக்கு இவ்வளவு சோதனைகள், அப்பனே.


எவ்வளவு சோதனைகள் சந்தித்தான் என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம், பின் யான் அறிவேன், அப்பனே நிச்சயம். 


வரும் வரும் காலத்தில், அப்பனே, அவனுடைய அப்பனே, பின், அதாவது, இல்லங்களில் சென்று, அப்பனே, யான், நிச்சயம், தன்னில் கூட வைப்பேன், வாக்குகளை, அப்பனே. 


இதனால் அப்பனே, பின், எவ்வளவு, ஏது என்று, இவ்ஞானி ஏன், இவ்ஞானியைப் பற்றி ஏன் யான் எடுத்துரைக்க வேண்டும் என்றால், 


அப்பனே, மக்களுக்காகவே, அப்பனே, வாழ்ந்தான் என்பேன், அப்பனே. 


மக்கள், அதாவது, இப்படி இருந்தால், மக்கள் திருந்திக்கொண்டு, அப்பனே, பல வகை வெற்றிக் கொள்வார்கள் என்றெல்லாம், அப்பனே, எழுதி வைத்தான் என்பேன், அப்பனே. 


மக்களுக்கு புரிய வைத்தான் என்பேன், அப்பனே. 


தேசங்கள், தேசங்களாக சென்று, அப்பனே. 


ஆனாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


இதனால், அப்பனே, அதாவது, எதை என்று அறிய, அப்பனே, பின், அதாவது, தீய, அப்பனே, சக்திகள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே, சில தீய சக்திகள் என்று சொன்னேனே, இவ் தேசத்தில் அதிகம் தானப்பா. 


அப்பொழுது எதை என்று கூற, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


இதனால், அப்பனே, பல வழியிலும் கூட தொந்தரவுகள், எது என்று புரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. ஆனாலும், எதிர்த்து நின்று, எவை என்று புரிய.


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. சில தீய சக்திகள் வந்து, இவனை எதை என்று, அப்பனே, கை கால்களையும், பின், அதாவது, கை கால்களையும் பிடித்துக்கொண்டு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


பின், அதாவது, அப்படியே, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று புரிய, நிச்சயம், பின், அதாவது, எங்கேயாவது இழுத்துச் செல்ல, நிச்சயம், தன்னில் கூட. 


இழுத்துச் சென்று, பின், அதாவது, எங்கேயாவது, பின், தூரத்தில் வீசிவிடுவோம் என்றெல்லாம், சில தீய சக்திகள், எதை என்று, அப்பனே, 


அப்பொழுது எதை என்று கூற, அப்பனே, அதாவது, சொல்லிவிட்டேன் அல்லவா? அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


தீய சக்திகள், அப்பனே, எப்படி உருவாகிறது என்பதெல்லாம், அப்பனே, பின், முன் வாக்கிலே யான் தெரிவித்து விட்டேன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


தீய சக்திகள் என்பது யாரும் இல்லை என்பேன், அப்பனே. 


மனதில் உள்ள அழுக்குகள் தான் என்பேன், அப்பனே. 


அதனால்தான், அப்பனே, பின், உயர்ந்த எண்ணத்தை வையுங்கள் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரிய.


அப்பனே, அதாவது, இவ்ஞானியே, எதை என்று கூற, ஆனாலும், சீடன் இருந்தான். 


பின், அதாவது, ஞானியே, குருவே, எவ்வாறு, இவ்வாறெல்லாம், நிச்சயம்.


பின், சித்திரவதை  செய்கின்றார்களே? இங்கிருந்து கிளம்பிடுவோம், 


நிச்சயம், வேறு இடத்திற்கு. 


எங்கேயோ, எத்தனை இடங்கள், பின், உள்ளது என்பவை எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கொண்டு சென்று விடுவோம் என்று, சீடன் கூட. 


இல்லை, பின். 


இல்லை, இல்லை…


இல்லை, எதை என்று அறிய இங்கு மக்கள் அழிவு தான், அழிவு தான் போகின்றார்கள். 


தீய சக்திகள் அதிகமாகிவிட்டதினால் நாம் நீக்க, நீக்கவே நிச்சயம் இங்கு ஏன், எதற்கு என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இறைவன் இதை நீக்கவே நிச்சயம் தன்னில் கூட என்னை அனுப்பினான். 


அதனால் இங்கு பின் நீக்கிடவே எதை என்று புரிய. 


அதனால் நீ இருந்தால் இரு…


இல்லை என்றால் சென்று விடு என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கொள்ள. 


அதனால் நிச்சயம் தன்னில் கூட பின், பின் அதாவது பின் குருவே நீங்களே இப்படி சொல்லலாமா? நிச்சயம் தன்னில் கூட. 


உன்னை நம்பி அதாவது இருக்கின்றோம், இதை இருக்கின்றோம் எதை என்று கூற. 


பின் அதாவது இங்கேயே யான் பின் எவை வந்தாலும் யானும் பார்த்துக் கொள்கின்றேன் என்றெல்லாம். 


இதனால் பல தீய சக்திகள் எது என்று ஆனாலும் எவை என்று தன் தவ வலிமையால் நிச்சயம் தீய சக்திகள் அழிக்க நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 


ஆனாலும் நிச்சயம் பின் பல தீய சக்திகள் ஒன்றிணைந்து நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் கட்டுக்குள் பின் எவை என்று புரிய. 


பின் எதையும் பேசாதவாறு பின் செய்துவிட்டது. 


ஆனாலும் பின் சீடனோ ஓடினான், ஓடினான். 


ஆனாலும் அவனையும் விட்டு வைக்கவில்லை. எதை என்று புரிய, எதை என்று நிச்சயம் தன்னில் கூட. 


பின் ஆனாலும் அவனை பின் சாகடித்தே விட்டது. 


நிச்சயம் தன்னில் எதை என்று புரியாமலும் எவை என்று மீண்டும். 


ஆனாலும் பின் அதாவது எதை என்று அறிய.. 


ஆனாலும் இவன் என்று உபதேசம் பெற்ற நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் எவை என்று அறிய. 


ஆனாலும் பின் மேலே பின் எதை என்று அறிய அதாவது இவ்ஞானியும் கூட பின் இவ்வாறாகவே இருக்கும் பின் நல்லோர்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தீய சக்தி அளித்துவிட்டால்.. 


எவ்வாறு நியாயம் என்பது இறைவா என்றெல்லாம் மேல்நோக்கி சொல்லி சொல்லி எதை என்று புரிய. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.. 


ஆனாலும் பின் என் சீடன் அழகாக என்னிடத்திலே இருந்தான் நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் எவை என்று புரிய பின் யான் இருக்கும் வரை நிச்சயம் அதாவது உலகம் இருக்கும் வரை அச் சீடன் பின் பிறந்து கொண்டே இருக்க வேண்டும். 


பின் மனித ரூபம் எடுத்து நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் பின் எவை என்று புரிய பின் புரியுமாறு தேசத்தை பின் எவை என்று கூட பல வழிகளில் நடத்த வேண்டும் என்றெல்லாம். 


அதுபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் இங்கு அப்பனே பின் ஒருவன் போனால் ஒருவன் வந்து கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே. 


சீடன் என்பேன் அப்பனே. 


நலன்களாகவே அப்பனே பின் கடைசியில் அப்பனே பின் சீடன் அப்பனே இருந்தாலே எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


அழகாகவே அப்பனே நிச்சயம் தன்னில் இதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே ஒவ்வொரு எதை என்று அறிய அப்பனே. 


ஆனாலும் இவனை அத்தீய சக்திகள் நிச்சயம் எப்படியாவது விரட்டிட வேண்டும் என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில். 


ஆன்மாக்கள் அப்பனே… 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எப்படி ஏது என்று அறிய.. 


ஆனாலும் அப்பனே அறிந்தும்  கூட பின் விடவில்லை இவனை பின் நல்லது செய்யவே எது என்று கூற. 


பின் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் தீய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து பேசியது நீ நல்லது செய்து வந்துவிட்டாயா? நிச்சயம் தன்னில் கூட. 


உன் வேலையை பார்த்துச் செல் என்றெல்லாம்.. 


நிச்சயம் பின் அதாவது பேசினான். 


அதாவது உங்களுக்கே அதாவது தீய எண்ணங்களுக்கே இவ்வளவு சக்தி என்றால் நல்ல எண்ணங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்? நிச்சயம் பாருங்கள் என்று. 


உன் நல் சக்தியை வைத்துக்கொண்டு, நீ என்னத்தான் செய்யப் போகின்றாய்? 


நிச்சயம் வேண்டுமானால் காட்டு என்று நிச்சயம் தன்னில் கூட. 


ஆனால் தீய சக்தியில் தான் வெற்றி பெற்றது எதை என்று அறிய . 


ஆனாலும் நகைத்தார்கள் அனைவரும். 


தீய சக்தியே … தீய சக்தியே ( வெல்லும் ) என்றெல்லாம்… 


ஆனாலும் நல்லோர்கள் ஒரு பக்கம். 


தீயோர்கள் ஒரு பக்கம். 


அதாவது நல் சக்திகள் ஒரு பக்கம். 


தீய சக்திகள் ஒரு பக்கம். 


ஆனாலும் எதிர்த்து நின்று எது என்று கூட தீய சக்தியை அதிகமாக வென்றிட்டு… 


இதனால் அனைவரும் பின் இங்கு எவை என்று கூற … இறைவன் இல்லை…


தீய சக்திகள் தான் என்று முடிவு செய்துவிட்டனர். 


ஆனாலும் பின் எதை ஞானி பின் சென்று விடாதீர்கள்.. சென்று விடாதீர்கள். 


அங்கு சென்றிட்டால் நிச்சயம் அழிந்து விடுவீர்கள். 


பின் அதாவது கெட்ட எவை என்று கூட சில சில உபதேசங்கள் செய்து அனைத்தும் பின் அழிந்து விடக்கூடும் என்று. 


ஆனாலும் எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பொறுத்திருங்கள் பொறுத்திருங்கள் எனறு… 


அதனால் பின் அனைவரும், மக்கள்  பேசினார்கள். 


அதாவது நிச்சயம் உன்னிடத்தில் இருந்தால் பின் நல்லவன் போல் எதை என்று கூற  என்ன எதை என்று அறிய ஒன்றும் செய்ய முடியாது. 


அதனால் அதாவது எதை என்று கூற பின் நல் எண்ணங்களில் இருந்து ஒன்றுமே செய்ய முடியவில்லை உன்னால். 


ஆனாலும் இவை எவை என்று கூற  எவ்வாறு அதாவது நீ நல்லெண்ணம் அதாவது நல் செயல்கள் பின் எதை என்று கூற பின் நல்லதே பின் செய்து கொண்டிருந்தாய். 


ஆனால் என்ன லாபம்? எதற்காக எதை என்று கூற? 


ஆனால் தீய சக்தி தான் வெல்லக்கூடியது என்று. 


ஆனாலும் தீய சக்திகள் அனைத்தும் கொடுத்தது. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற.. 


பின் அனைவரையும் காவு எவை என்று கூற வாங்க துடித்தது எதை என்று கூற, பின் எதை என்று. 


ஆனாலும் நிச்சயம் இதை இவ்ஞானி புரிந்து கொண்டான். 


பின் மீண்டும் சென்றான். 


அனைவரும் வாருங்கள் நிச்சயம் தன்னில் கூட.. 


இறக்கப் போகின்றீர்கள் பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. 


உங்களைப் பின் எவை என்று அறிய.. 


பின் அதாவது இவ் அனைத்தும்.. 


பின் அதாவது எதை என்று புரியாமல்.. 


எவை என்று இல்லாமல்… 


எவை என்று இல்லாமல் இருத்தல்.. 


எதை என்று தெரியாமல் பின் உண்மை நிலைக்கு வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க நிச்சயம்… 


மீண்டும் தீய சக்திகள் வந்து இவனைப் பின் எங்கேயோ எதை என்று கூற  கொண்டு போய்…. பின் நடு கடல் தன்னில் கீழ் இட்டுவிட்டது 


ஆனாலும் அங்கே அழகாக தாமரை என்பேன் எதை என்று புரிய.. 


பின் அழகாக நிச்சயம் ஒரு சக்தி எழுப்பியது. 


இறைவனின் பலம்.. 


பின் நிச்சயம் தன்னில் மீண்டும் வந்தான். 


அதாவது நிச்சயம் அதாவது என்னை அதாவது தீய சக்திகள் நிச்சயம் தன்னில் மக்களிடையே பின் பரப்பினான். 


தீய சக்திகளை நடுக்கடலில் பின் எவை இட்டுவிட்டது. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நல் எவை என்று கூற இறைவன் என்னை அழகாக இங்கு பின் இட்டுவிட்டான் என்று. 


ஆனாலும் அனைவருமே இவன் பொய் சொல்கின்றான்.


பொய் சொல்றான் என விரட்டடித்தார்கள். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று மீண்டும் வந்து அமர்ந்தான் நிச்சயம். 


இவ்வளவு வேதனைகள் எதை என்று அறிய இறைவா என்றெல்லாம் யோசித்து… 


எப்படி ஏது என்றெல்லாம்… 


பின் நல்லவர்கள் இவ்வுலகத்தில் தோற்கக்கூடாது. 


வாழ வேண்டும் என்பதற்கு இணங்க நிச்சயம் இன்னும் எவை என்று ஒரு பக்குவங்களாக அமைதியாக பொறுத்தான். 


அமைதியாக சாதிப்போம் என்று நிச்சயம் தன்னில் கூட. 


அமைதியாக பின் சக்திகளை எதிர்த்து எவை என்று அறிய அறிய  மீண்டும் பின் அதாவது தீய சக்திகள் இவனை பின் வந்தடைந்து விட்டது நிச்சயம் தன்னில் 


அடுத்து இதோடு கொன்று விடுவோம் என்றெல்லாம் தீய சக்திகள் எது என்று புரிய. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் உலகத்தில் உள்ள பின் எவை என்று  அறிய ….


ஆனாலும் நிச்சயம் நல்ல எண்ணங்களோடு பின் இத்தோடு எதை என்று புரிய பின் உலகத்தை காக்க முடியாதா என்று 


பின் ஐயோ !!! எதை என்று அறிய எவை என்று புரிய.. 


ஆனாலும் பின் அடுத்து ஏது என்று கூட அமைதியாக காத்திருந்தான். 


இதனால் பலமாக நிச்சயம் தன்னில் கூட பின் தீய சக்திகளே ஒழுங்காக போய்விடுங்கள் என்றெல்லாம். 


ஆனாலும் போக முடியாது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நீ நல் சக்தியாக நிற்கின்றாய். 


நல்ல நிலையோடு தான் நிற்கின்றாய். 


நீ ஏன் வெல்ல முடியவில்லை????. 


நாங்கள் தானே நிச்சயம் வெல்வோம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் தீய சக்திகள் நிச்சயம் தன்னில் கூட… 


மீண்டும் மீண்டும் அதாவது மக்களிடத்தில் பரப்பி பார்ப்போம் என்றெல்லாம். 


மீண்டும் ஒருமுறை நிச்சயம் பரப்புவோம் என்று எண்ணி… 


நிச்சயம் அனைவரிடத்திலும் சொன்னான். 


இவ்வாறாக இவ்வாறாக என்றான். 


ஆனால் யாரும் நம்ப முடியவில்லை. 


நம்ப எவை என்று கூற…. 


ஆனாலும் தீய சக்திகள் ஆனாலும் நிச்சயம் பின் மக்களை வைத்தே இவனை கொன்று விடலாம் என்றெல்லாம் நிச்சயம்.. 


பின் அனைத்தும் எவை என்று கூற பின் அதாவது மனதிலிருந்து மாற்றியது அனைவரும் எண்ணத்தையும் கூட.. 


அதனால் நிச்சயம் மீண்டும் பின் தவங்கள் செய்தான். 


அனைவரும் ஒன்று வந்தனர். 


நிச்சயம் நல்லெண்ணங்கள் படைத்தவரே எதை என்று கூற ஒன்றும் லாபம் இல்லை. 


நீ இப்படித்தான் அமர்ந்து கொள்ள வேண்டும். 


நல்லெண்ணங்களோடு எவை என்று கூற என்ன லாபம்? எதை என்று கூற… 


என்ன ஏது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட 


உன்னை அழிக்கின்றோம் என்று.. 


ஆயுதங்களும் அனைத்தும் வேண்டி வந்தனர் நிச்சயம் தன்னில் கூட. 


இறைவா!!!!!!! என்று….. 


எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.. 


பின் அதாவது நல்லோர்கள் தோற்று விடுவார்களா கலியுகத்தில் எதை என்று புரிய?????. 


பின் நல்லோர்கள் இப்படி வேதனையா நிச்சயம் தன்னில் கூட??? 


பின் உலகத்தை காக்க வந்தேன் இப்படியா???? 


என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. 


பின் ஒரு சத்தம் பலமுடன் நிச்சயம்.. 


எங்கெங்கு ஏது என்று உள்ள அனைத்து சக்திகளும் ஒன்றாக இணைந்தது இவனிடத்தில் நிச்சயம் தன்னில் கூட… 


அனைவரையும் எதை என்று கூற அனைத்து மனதில் உள்ள தீய சக்திகளும்…… தீய சக்திகளும் அழித்து விட்டான். 


இனிமேல் நிச்சயம் தன்னில் கூட பின் வரவேண்டும் என்றால் எதை என்று கூற என்னை நோக்கி இதனால் யான் பாதுகாப்பாக இருப்பேன். 


எப்பொழுது தீயவை  எவை என்று கூற வந்தாலும் யான் இங்கு அடிப்பேன் என்று அமைதியாக பின் உன் உட்கார்ந்து தியானத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பா. 


இன்னொரு ரகசியங்கள் பின் ஒரு பின் அதாவது இது ஒரு சிறு பகுதியே ஆசிகள் ! 


ஆசிகள் !! 


ஆசிகள் !!!


===========================
# பிரம்ம விகாரா ஆராம  (Brahma Vihara Arama) -  விபரங்கள் 
===========================


இந்த இடம் பாஞ்சர் ஹாட் ஸ்ப்ரிங் விற்கு அருகிலே உள்ளது


வரலாற்றுப் பின்னணி:- 
 * தோற்றம் (1969): பாலி தீவில் பிறந்த முன்னணி பௌத்தத் துறவியான 'பிக்கு கிரி ரக்கிதோ மகாத்தேரா' (Bhikkhu Giri Rakhito Mahathera) என்பவரால் 1969 ஆம் ஆண்டு இந்த விஹாரம் தோற்றுவிக்கப்பட்டது.


 * ஆரம்பக்கால அமைவிடம்: தொடக்கத்தில் இது 'பஞ்சார் தெகெஹா' (Banjar Tegeha) என்ற கிராமத்தில் ஒரு சிறிய தியான மையமாகவே செயல்பட்டு வந்தது. தியானம் பயில வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், துறவிகளுக்குக் கூடுதல் இடவசதி தேவைப்பட்டதாலும், பின்னர் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.


 * அங்கீகாரம் (1973): 1970-களின் தொடக்கத்தில் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. பின்னர், 1973 ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசால் பாலி தீவின் அதிகாரப்பூர்வ மற்றும் மிகப்பெரிய பௌத்த மடாலயமாக இது அங்கீகரிக்கப்பட்டது.


 * உருவாக்கத்தின் நோக்கம்: பாலி இந்து மக்களிடையே வாழும் சிறுபான்மை பௌத்தர்களுக்கான ஒரு முக்கிய மையமாக இது நிறுவப்பட்டது. குறிப்பாக, புத்தர் அருளிய 'விபாசனா' (Vipassana) தியான முறையை மக்களுக்கு முறையாகக் கற்றுக்கொடுப்பதே இந்த மடாலயம் உருவாக்கப்பட்டதன் முதன்மை நோக்கமாகும். இன்றும் தியானப் பயிற்சிக்கான முக்கிய மையமாக இது செயல்பட்டு வருகிறது.


 * வரலாற்றுப் பிரதிபலிப்பு: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழமையான 'போரோபுதூர்' (Borobudur) பௌத்த ஆலயத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையிலேயே, அதன் ஒரு சிறிய வடிவம் (Mini Borobudur) இங்குப் பின்னாளில் வடிவமைக்கப்பட்டது.


குருநாதரின் வாக்குப்படி என்ற அளவும் புத்தர் இங்கு அமர்ந்து இந்த தேசத்திற்கு வரும் தீய சக்திகளை விரட்டி கொண்டிருக்கிறார்..
ஒரு காலத்தில் புத்தருக்கு உதவிய சிஷ்யரே.. இன்றளவும் இந்த பிரம்ம விகாரத்திற்கு தலைவர்களாக மீண்டும் மீண்டும் பிறந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment