​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 19 March 2026

சித்தன் அருள் - 2158 - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 8 

நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 
நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

================================
# அன்புடன் இடைக்காடர் சித்தர்  வாக்கு
================================ 

ஆதி அருணாச்சலனை பணிகின்றேனே, செப்புகின்றேனே, மனிதனுக்கு இடையனே. 

=====================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 8 
=====================================

=====================================
# காசி , ராமேஸ்வரம் சென்று நீர் எடுத்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும் - அடுத்த கூட்டுப் பிரார்த்தனையில். அதன் பின் ரகசியங்கள் அனைவருக்கும் சொல்வார்கள்.
====================================

இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் முதலில் நிவர்த்தியாக்க. இதைத்தன் நிச்சயம் பின் நீங்கள் பின் அடுத்த அனைவருக்கும், அதாவது காசிக்கு சென்று, காசிக்கு சென்று அதிக பாவம் பின் உடையவன் பின் நிச்சயம், அதாவது செல்லவும் முடியாது. பின் ராமேஸ்வரத்திற்கும் சென்று, அங்கிருக்கும் நீர்நிலை பின் அறிந்து எடுத்து வந்து, அடுத்த பின் அனைவருக்கும் கொடுங்கள். அவ்  ரகசியத்தை சொல்வேன். 

அடியவர் :- சிவாய நம

அடியவர் :- காசி ராமேஸ்வரம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? உங்களால உங்களிடம் இருக்கும் கர்மத்தை வச்சுகிட்டு காசி,  ராமேஸ்வரம் இங்க எல்லாம் போக முடியாது. அதனால என்ன சொல்றாருன்னா, அடுத்து காசியில போயிட்டு தண்ணி எடுத்துட்டு வர சொல்றாரு. தண்ணி எடுத்து வந்து, அடுத்து 

அடியவர் :- அடியார்கள் ( மூலம் தண்ணி எடுத்துட்டு வந்து ….)

சுவடி ஓதும் மைந்தன் :-  ராமேஸ்வரத்தில் தண்ணி எடுத்துட்டு வர சொல்றாரு. அடுத்து என்ன செய்யணும் ? 

அடியவர் :- அதை வச்சு…

சுவடி ஓதும் மைந்தன் :-  அது வந்து உங்களுக்கு. கொடுத்து, அம்மா, இதெல்லாம் யூஸ் பண்ணிக்கோங்க. யாருக்கும் கிடைக்காது. நீங்க வந்து கடையில வாங்கலாம். அந்த கடையில தண்ணி எல்லாம் எப்படின்னு எனக்கு தெரியும் நல்லா ( போலியான தண்ணீர் )  

அடியவர் :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, அடுத்து ராமேஸ்வரம் தண்ணியும் எங்கிருந்து வரும்? 

அடியவர் :-  காசியும், 

சுவடி ஓதும் மைந்தன் :-  காசி தண்ணியும் வரும். அது வந்த உடனே என்ன செய்யணும்னு சொல்லுவார். 

அடியவர் :-  சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை சொன்ன பிறகு, நீங்க அது மாதிரி அடுத்த கூட்டு பிரார்த்தனையில் உங்களுக்காக வரும். 

அடியவர் :-  சிவாய நம.

===============================
# மனித குலம் நன்றாக இருக்கவே சித்தர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் 
===============================

இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் அனைத்தும் நீங்கள் நன்றாக இருக்கவே சித்தர்கள். யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால், நிச்சயம் ஏன், எதற்கு, எவை என்று இப்படியே பின் சந்ததிகள் விட்டுவிட்டால், அனைத்தும் அழிந்துவிடும். அதனால்தான், உங்கள் மூலமாக எத்தனை, ஏது என்று அறிய, எத்தனை பின் பக்தர்கள் அனைவருக்கும் சம உரிமை கொடுத்து மீட்போம். தெளிவு பெற வைப்போம். 

அடியவர் :-   (இப்படியே விட்டா, சந்ததி…. மனித  குலம் அழிஞ்சிரும் என்றாங்க. அதனால, உங்களுக்கு தேவையான இந்த மாதிரி சில வழிமுறைகள் எல்லாம் சொல்லிக் கொடுத்து, உங்களை காப்போம். உங்களை மீட்டெடுக்கிறோம்ன்றாங்க. )

சுவடி ஓதும் மைந்தன் :- மீட்டெடுக்கிறோம்ன்றார். 

==================================
# கங்கை அன்னை நதியில் நீர் எடுக்கும் பொது  நாணயங்களும் கங்கை நதியில் இட வேண்டும். அதை கூட்டுப்பிரார்த்தனை அடியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
==================================

இடைக்காடர் சித்தர் :-  இதை எதை என்று புரிய, நாணயங்களும் கங்கை நதியில் இட வேண்டும். அப்பொழுது, அதையும் இவர்களுக்கு கொடுக்க நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, என்ன செய்யணும்? நாணயங்கள்….கங்கை நதியில் போடணும். 

அடியவர் :-  போட்டு, அதை எடுத்து கொண்டு வந்து கொடுக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு, உங்களுக்கு வந்து கொடுக்கணும். 

===============================
# மிக முக்கியம் - முதலில் உங்களை வெல்லுங்கள் ..பிறகு இறைவனை பார்த்துக் கொள்வோம்.
===============================

இடைக்காடர் சித்தர் :-  இதை எவை, எதற்கு என்று நிச்சயம் சொல்வேன். அதைப்போல், நீங்கள் நிச்சயம் பின் செய்வீர்களாக. நல்விதமாகவே அனைத்தும் உணர்வீர்கள். தெளிவு பெற்று, உங்களை நீங்கள் முதலில் வெல்லுங்கள். பின்பு, இறைவனை பார்த்துக் கொள்வோம். பின் நல்லதோ, கெட்டதோ, அப்பொழுது பார்த்துவிடுவோம். 

அடியவர் :- சிவாயநம.

அடியவர் :- அதான்… இது எதுக்குன்னு பின்னாடி சொல்லுவாங்க. தெளிவு பெற்று, முதல் நீங்கள் உங்களை  வெல்லுங்க. அதுக்கப்புறம், இறைவனை வெல்வதற்கு , பார்க்கிறதுக்கு நாங்க வழி சொல்றோம்னு சொல்றாங்க. 

==============================
# பல நோய்கள் மனிதனை தாக்க உள்ளது…கவலை வேண்டாம். மீட்டு  எடுக்க சித்தர்கள் இருக்கின்றார்கள்.
==============================

இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் இவ்வாறாகவே இன்னும் பல நோய்கள் மனிதனுக்கு தாக்க வல்லவை வந்து கொண்டே. ஆனாலும், இதற்கும் இன்னும் பின் சித்தர்கள் இருக்கின்றார்கள். பின் வெல்ல கவலை இல்லை. 

அடியவர் :- இதே போல இன்னும்… பல கோயில்கள் இருக்கு.  எல்லாத்தையும் நாங்க சித்தர்கள் வந்து… எல்லாம் அருள் புரிய ரெடியா இருக்காங்க. ஒன்னு ஒன்னா சொல்றோம்னு சொல்லி இருக்காங்க. 

===============================
# இவ் உடம்பு என்ற இந்திரத்திற்கு …சித்தர்களே பழுது பார்க்கும் மெக்கானிக் / டாக்டர்.
===============================

இடைக்காடர் சித்தர் :-  பின் ஏன், எதற்கு பின் அதாவது உடம்பு ஒரு இயந்திரம். அவ் இயந்திரத்திற்கு பின் எங்கு, பின் எவை என்று பார்க்க எங்களுக்கு மட்டுமே தெரியும். பின் அதாவது யாங்கள் என்ன இப்பொழுது யார் என்பது தெரிந்து கொண்டீர்களா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  மெக்கானிக்…. சித்தர்கள் யாரு? 

அடியவர் :- மெக்கானிக்.

சுவடி ஓதும் மைந்தன் :-  மெக்கானிக். அப்ப இந்த உடம்புல 

அடியவர் :- எங்க? என்ன பிரச்சனை? இருக்குன்றது சித்தர்களுக்கு தான் தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களுக்கு தான் தெரியும். 

==================================
# சித்தர்கள் அருள் இருந்தால் மட்டுமே , புண்ணியம் இருந்தால் மட்டுமே மனிதர்கள் மூலம் நோய் நலமாகும்.
==================================

இடைக்காடர் சித்தர் :-  மனிதனுக்கு தெரியும். ஆனால் அறிந்தும் கூட, பின் எப்படி, ஏது என்றெல்லாம் நிச்சயம் ஆனாலும், அதுவும் பின் எங்கள் அருள் இருந்தால் மட்டுமே, புண்ணியம் இருந்தால் மட்டுமே நலமாகும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா, மனிதனுக்கும் சில விஷயங்கள் தெரியும். ஆனால் 

அடியவர் :- அவங்க எல்லாம் டெம்பரவரி கியூர் தானங்க. பெர்மனென்ட்டா யாரும் சரி பண்றது இல்லை. 

===============================
# இறை , சித்தர்கள்  அருள்கள் , புண்ணியங்கள் இல்லாமல் மனிதர்கள் நோய்களை சரி செய்தலும் , நரம்புகளை சித்தர்கள் பிடுங்கி விடுவார்கள்.
===============================

இடைக்காடர் சித்தர் :-  சரி செய்தாலும், யாங்கள் நிச்சயம் அதாவது பின் (நரம்பு) இங்கிருந்து அங்கு செல்கின்றது அல்லவா? நரம்பை பிடுங்கிவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

அடியவர் :-  ஆமா, அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   (wire) வயர்  கனெக்சனை கட் பண்ணிட்டாங்க. கனெக்சன் வயர் என்னது? நரம்பு. நீங்க அப்படியே நல்லானாலும், நாங்க திரும்பி என்ன பண்ணுவோம்? திருப்பி கனெக்சனை கட் பண்ணுவோம். என்ன பண்ணுவீங்க? 

அடியவர் :-   வேலை செய்யாது. திருப்பி வேலை செய்யாது. 

=================================
# உங்கள் மனது சரியாக இருந்தால், சித்தர்கள் அருளால் நோய்கள் எப்படி குணமாகும் என்ற ரகசியம்.
=================================

இடைக்காடர் சித்தர் :-  இதைத்தான் எங்கு எதை இணைக்க வேண்டுமோ, யாங்கள் மட்டுமே உணர்வோம். பின் உங்கள் மனது சரியாக இருந்தால், நிச்சயம் அவை எப்பொழுது, எப்பொழுதெல்லாம் ஒவ்வொன்றாக கழண்டி ( கழன்று ) விடும் என்பதும் எங்களுக்கு தெரியும். அதனால் இப்பொழுதே புண்ணியம் செய்து கொள்ளுங்கள். அக்கழண்டி  விடுவதை யாங்கள் இணைத்து விடுவோம். போதுமா? 

அடியவர்கள் :- ( மருத்துவ நம்பிக்கை ஒளி வந்ததால்.... கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   என்ன சொல்றது தெரியுங்களா? 

அடியவர் :-   உங்களுடைய எண்ணங்கள் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-     ஐயா, நீங்க மிஷின். இந்த மிஷின்ல என்னென்ன இருக்குதுன்னு யாருக்கு தெரியும்? 

அடியவர் :-   சித்தர்களுக்கு தான் தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கு என்னென்ன வந்து, எந்த வயர் கட் ஆகுதுன்னு எங்களுக்கு தெரியும் என்றார். எந்தெந்த வயசுல, எந்தெந்த கட் ஆகுதுன்னு சொல்றார். 

அடியவர் :-   நீ அப்படியே போய் சரி பண்ணிட்டாலும், திருப்பி நாங்க கட் பண்ணிருவோம் என்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷன் மீறி கட் பண்ணாலும்… என்ன பண்ணுவாரு? 

அடியவர் :-   நாங்க திருப்பி கட் பண்ணிருவோம் என்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- நாங்க கட் பண்ணிடுவோம்பா.  அப்ப நீங்க வந்து என்ன பாக்கணும்? 

அடியவர் :-   ஒழுங்கா திருந்துங்கன்றாரு. எண்ணங்களை சுத்தமா வச்சுக்கோங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- எண்ணங்களை சுத்தமா வச்சுக்கோங்க. நாலு பேருக்கு  நன்மை செய்யுங்க. இப்படியே நல்ல புண்ணியமான… நல்ல மனசை வச்சு, 

அடியவர் :- இப்படி செஞ்சாலே நோய் நொடி எல்லாமே தானா சரியாகும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த இடத்துல, அந்த வயசுல பிடுங்குற மாதிரி இருக்கும். அப்ப என்ன பண்ணுவாரு? இன்னும் டைட் பண்ணி விட்டுருவார். டேய், போடா , ( நல்லா இருடா என்று )  சொல்லிட்டு, இதுதான் அவருடைய வேலை. 

============================
# தாகம் தணிக்க நீர் தேவை.
============================
# இயந்திரம் இயக்க என்ன தேவை? 
============================

இடைக்காடர் சித்தர் :- இன்னும் அதாவது தாகத்திற்கு பின் நீர் தேவை. இதேபோல், இவ் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட. பின் எவை இயந்திரம் இயக்க என்ன தேவை? நீங்களே சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- தாகம் தீர்க்க? 

அடியவர் :-  நீர் தேவை. 

சுவடி ஓதும் மைந்தன் :- இவ் இயந்திரம் இயங்க?

அடியவர் :-  இயந்திரம் இயக்க… இறையருள் தேவை. 

இடைக்காடர் சித்தர் :- இவை எது என்று அறிய, நிச்சயம் சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது நிச்சயம் சொல்லி ஆகணும். இயந்திரத்தை இயக்க என்ன வேண்டும் ? 

ஒரு அடியவர் :- புண்ணியம். 

இடைக்காடர் சித்தர் :-  எவை எதை என்று அறிய உடனே சொல்லிவிட்டாய். ஆனாலும் இன்னும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- உடனே சொல்லிடீங்க. இன்னும் உண்டு என்று சொல்றாங்க. ஐயா, இயந்திரத்துக்கு என்ன தேவை? 

அடியவர் :-  இறைவன் அருள் சொல்லியாச்சு. புண்ணியம்  சொல்லியாச்சு.

சுவடி ஓதும் மைந்தன் :-  இயந்திரத்தை இயக்கணும். 

அடியவர் :-  ஆமா,

அடியவர் :-  புதுசா சொல்லுங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புதுசா சொல்லணும். 

அடியவர் :-   இந்த மனித இயந்திரம், இயந்திரம் இயங்குவது. 

மற்றொரு அடியவர் :- ஐயா, புண்ணியம் சொல்லிட்டாங்க. வேற என்ன? 

==============================
# அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பது…. 
==============================

இடைக்காடர் சித்தர் :-  எவை எது என்று அறிய யாருக்கும். ஆனால் சொல்வதுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 

==============================
# மனித உடம்பில் உள்ள மின்கலம். இதற்கு நீங்கள்  ஆற்றலை ஏற்ற வேண்டும். அவ்வளவுதான்.
==============================

இடைக்காடர் சித்தர் :- மின்கலம் யாங்களே, அதாவது புகுத்தி வைத்துள்ளோம். இதற்கு நீங்கள் பின், அதாவது ஆற்றலை ஏற்ற வேண்டும். அவ்வளவுதான். எங்கு செல்வீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பேட்டரி 

===============================
# உங்கள் முதுகு தண்டில் பேட்டரி உள்ளது.

சித்தன் அருள் - 1920 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2025/08/1920.html

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இறைவன் படைக்கும் பொழுதே நீ பாதுகாத்துக் கொள் என்று நிச்சயம் தன்னில் கூட ஒரு கருவியை வைத்திருக்கின்றானப்பா முதுகின் பின்னாலே!!!!!!.

அக்கருவி உன் முதுகின் பின்னே நிச்சயம் உள்ளதப்பா. அவைதன் இயக்க வேண்டும். எப்படி இயக்குவீர்கள்? என்பேன் அப்பனே. அதாவது சொன்னேனே முன்னே, “””””” நலன்களாக  இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் சொல்கின்ற பொழுது, அப்பனே அனைவரிடத்திலும் ஒவ்வொரு சக்தியும் வெளிப்படும் என்பேன் அப்பனே.  “”””””””
===============================

===============================
உங்கள் மின்கலம் உங்கள் முதுகு தண்டில் ….

சித்தன் அருள் - 2039- அன்புடன் அகத்தியர் - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7
https://siththanarul.blogspot.com/2025/12/2039-7.html

தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிய, இவை புரிய, இதை என்றும் இயக்குகின்ற பின், அறிந்தும் களம், மின்கலம் அறிந்தும், எதை என்று இறைவன் சாதாரணமாக பார்க்காத இடத்தில் வைத்துள்ளானடா முதுகுத்தண்டில்.
================================


அடியவர் :-  சொல்லி இருக்காங்கல. சித்தர்கள் முதுகுத்தண்டுல நமக்கு முதுகுக்கு பின்னாடி ஒரு பேட்டரி இருக்குது. அந்த மின்கலத்தை சார்ஜ் ஏத்தணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சார்ஜ் ஏறனும். எங்க போவீங்க? 

மற்றொரு அடியவர் :- கோவில் 

சுவடி ஓதும் மைந்தன் :-  கோயிலுக்கா? 

இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் இப்படித்தான் சொல்வீர்கள் என்று யாம் அறிவோம். ஏனென்றால் புத்தி அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படித்தான் நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். புத்தி? 

அடியவர் :- அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவுதான். 

=================================
# மின்கலம் உங்களிடத்தில், ஆற்றலும் பக்கத்தில் உங்களிடமே உள்ளது 
=================================
# உங்கள் மின்கலத்திற்கு சக்தி ஏற்றுவது ஞானிகள் பாடல்களே 
=================================

இடைக்காடர் சித்தர் :-   இதை எவை என்று அறிய. அதனால்தான் பல ஞானிகள் பற்றி போற்றிப் புகழ்ந்து, பல ஞானிகள் சொல்வதை கேட்டாலே போதுமானது. சுலபமாக ஆற்றல். அதுவும் மின்கலம் உங்களிடத்தில்… ஆற்றலும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, பின் அதாவது எதை புரிந்து கொண்டு. ஆனால் பின் வெண்ணையை வைத்துக்கொண்டு, பின் அதாவது இப்படித்தான் வாழ்க்கை போய்விட்டது மனிதனுக்கு. 

அடியவர் :- அதான்…. கையில வெண்ணையை வச்சிட்டு, நெய் கலைஞ்சானா எல்லாம் பாடல்கள், புத்தகங்கள் எல்லாம் பக்கத்திலேயே இருக்குது. இதையெல்லாம் விட்டுட்டு, எங்கெங்கயோ அலையுறப்பா. டக்குனு ஆற்றலை வாங்கிக்கோங்க. (ஞானிகள் ) அவங்கள பத்தி பேசுங்க. (ஞானிகள் )  அவங்கள பத்தி பாடுங்க. (ஞானிகள் )  அவங்கள பத்தி நினைங்க. டக்குனு நீங்க பின்னாடி சார்ஜ் ஏறிருன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன ஆகுது? பேட்டரி நம்ம கீழ இருக்குது. வந்து சார்ஜ் பண்றதுக்கும் 

அடியவர் :- பவரும் நம்மகிட்ட தான் இருக்கு. பக்கத்துல இருக்கு. 

================================
# மாமிசம் உணவு உண்டால் , மின்கலம் சக்தி ஏறாது…. 
================================
# மாமிசம் உண்பவர்கள் எவ்வளவு பாடல்கள் பாடினாலும்,  மின்கலம் சக்தி ஏறாது….
================================

இடைக்காடர் சித்தர் :- இதை எப்பொழுது ஏறாது, நிச்சயம் எவ்வளவு இட்டாலும் என்றால், பின் இதற்கு மாமிசமே காரணம். 

அடியவர் :- சிவாயநம. 

அடியவர் :-  மாமிசம் சாப்பிடுறவங்களுக்கு ஏறாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏறவே ஏறாது. 

அடியவர் :-  சார்ஜே ஏறாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   சார்ஜே ஏறாது. வேண்டும் என்றல் உயிரோடு இருந்து ஏதோ சாதிக்கலாம்.அதனால வந்து சார்ஜ் என்ன ஆகும்? ஐயா, 10% சார்ஜ் இருந்தா என்னங்க ஐயா, நினைக்க தோணும்?. 

அடியவர் :- எல்லாம் கெட்ட எண்ணங்கள் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் கெட்ட எண்ணம் தான் நினைக்க தோணும். ஒரு 100% ஏத்திட்டோம்னா பரவாயில்லைடா. 

அடியவர் :- எல்லாரும் நல்லா இருக்கணும்….. நல்லா இரு….. நல்லா இரு…. 

=================================
# இறைவன் இல்லை என்றே சொல்பவர்கள் யார் ? ஏன் அப்படி சொல்கின்றார்கள் ?
=================================

இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் 50க்கு பின் கீழே இருப்பவர்கள், பின் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். 

அடியவர் :- சிவாய நம. 50% சார்ஜ்  கீழே இருக்கிறவன், இறைவனே இல்லைன்னு சொல்லுவாங்க. 

=================================
# இறைவன் இல்லை என்று சொல்பவனுக்கு , பணம் இருக்கும். ஆனால் ????
=================================

இடைக்காடர் சித்தர் :- ஆனாலும் அவனுக்கு பணம் இருக்கும். ஆனால் உடம்பு முழுவதும் நிச்சயம் யாங்கள் வெட்டி விடுவோம். 

அடியவர் :-  அவ்வளவுதான். பணம் இருக்கும். ஆனா நோய் அதான் அங்கங்க டபுக் 

சுவடி ஓதும் மைந்தன் :- டபுக்…… டபுக்…. என்னது பண்ணிருவாரு. 

அடியவர் :-  டிஸ்கனெக்ட், 

சுவடி ஓதும் மைந்தன் :-  டிஸ்கனெக்ட் பண்ணிருவாரு. எல்லாம் ஹார்ட், லங்ஸ் ( சித்தர்கள் பிடுங்கி விடுவார்கள் )

இடைக்காடர் சித்தர் :-  இதனால் பணத்தை வைத்து என்னதான் செய்கின்றான் என்று பார்ப்போம் என்று. ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. 

அடியவர் :- சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :-   (சரி, பணத்தை கொடுப்பாங்களா? இன்னும் அள்ளி கொடுப்பாங்களாம். இதை வச்சு ஏதாவது பண்றோமேன்னு சொல்லிட்டு அவங்க நம்மள கவனிப்பாங்களாம் . )

==============================
# மருத்துவரிடம் சென்றாலும் பலன் இருக்காது 
==============================

இடைக்காடர் சித்தர் :- ஆனாலும் பின் அதாவது இன்னும் மருத்துவன் வருவான், எதை எதையோ சொல்லி. ஆனாலும் பணம் பிடுங்க வேண்டும் அல்லவா? ஆனாலும் யாங்கள் இணைத்தால் மட்டுமே உண்டு. 

அடியவர் :-  ஆமா, அவன் என்னதான் பணம் பிடுங்குறதுக்கு சரி பண்ண வந்தாலும், அவன் பிடுங்கிட்டு ஏதாவது சரி பண்ணாலும், நாங்க திருப்பி டிஸ்கனெக்ட் பண்ணி விட்டுருவோம்ன்றாங்க. 

============================
# ஏன் இவ் ரகசியங்களை இப்போது தெரிவிக்கின்றார்கள் ?
============================

இடைக்காடர் சித்தர் :-  இதனாலே அறிந்தும் ஆனாலும் ஏன் இவ்வளவு எதை தெரிவிக்கின்றேன் என்றால், மீண்டும் அதாவது மனிதன் எப்படியோ எவை என்று வாழட்டும், எதை எது என்று புரிய. 

இடைக்காடர் சித்தர் :- ஆனாலும் யாங்களே  அதி அதி வேகமாக திருத்துவோம். 

=============================
# லங்காவில் நடக்க உள்ள விபரீதங்கள் ….
=============================
# திருத்தலங்களை அழிக்க மாபெரும் சதி 
=============================
# விளையாட விட்டு, வேடிக்கை பார்க்கும் சித்தர்கள்
=============================
# ஆனால் சித்தர்கள் விடமாட்டார்கள்.
============================= 

இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் பின் லங்காவில் அறிந்தும், பின் ஒரு பெரிய படை உருவாக்கி, அங்கிருந்து திருத்தலங்களை அழிக்க முயற்சி செய்கின்றான். பின் இவை மூவருடமோ, நான்கு வருடமோ. ஆனாலும் யாங்கள் விட்டுவிடமாட்டோம். இதற்காகத்தான் மனிதன் என்ன வேண்டுமாகவும் செய்யட்டும் என்று. ஆனாலும் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட… 

சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் மூன்று வருடமோ, நான்கு வருடமோ என்ன செய்யப்போறாங்க ? 

அடியவர் :-  ஸ்ரீலங்கால ஒரு படையை நிறுத்தி…..

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா?

அடியவர் :-  ஸ்ரீலங்கால ஒரு படையை நிறுத்தி, 

சுவடி ஓதும் மைந்தன் :-   படையை நிறுத்தி…. என்ன பண்ண போறாரு? 

அடியவர் :- இங்க ( பாரதம் )  அடிக்க போறாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லா கோயிலும் அடிக்க போறாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப, நாங்க அதை தான் பார்ப்போம். இங்க சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம்.…

அடியவர் :- ஆமா, இதெல்லாம் சில்லறை பிரச்சனை. 

அடியவர் :- (பெரிய பிரச்சினை ) அதை தான் நாங்க பார்க்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் நீங்க கேட்காதீங்க. எப்படியாவது இது பண்ணிக்கோங்க.  ஆனா எங்களால திருத்த முடியும். எப்படிங்க சொல்றார்  அவர்? 

அடியவர் :- எல்லாத்தையும்… உங்களை எல்லாம் மாத்த முடியும். அது பெரிய விஷயம் கிடையாது. ஆனா ஒரு பெரிய பிரச்சனை முன்னாடி இருக்கு. அதை நாங்க போக்கஸ் பண்ணிட்டு இருக்கிறோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு அரசியல்வாதியோ, ஒரு போலீஸ்காரரோ, அப்புறம் யாருங்க ஐயா, ஒரு கலெக்டரோ என்ன பண்ணாலும் எங்களால அவரை மாத்திட முடியும். திருத்த முடியும். ஆனா அங்கிருந்து அடிச்சாங்கன்னா….. 

சுவடி ஓதும் மைந்தன் :-   யாரும்? 

அடியவர் :- உயிரோடு இருக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இவங்க தேவையா? 

அடியவர் :- இதான் பெரிய வேலை. திருத்தளங்களை காப்பாத்தணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்ன பண்ணுவாரு? டிசிஷன் என்ன செய்வாங்க? அதுதான்… இறைவன் வந்து.. பெரிய, பெரிய வேலையை பார்த்துட்டு இருக்கார். 

அடியவர் :-ஆமாம்.

சுவடி ஓதும் மைந்தன் :- சின்ன சின்ன வேலை யார் பார்க்கணும்? நம்ம தான் பார்க்கணுங்க ஐயா. சின்ன சின்ன வேலை, சின்ன சின்ன விஷயங்கள் வந்து, நல்லது சொல்லி, நாலு பேருக்கு என்ன செய்யணும்? நம்ம தாங்க ஐயா பார்க்கணும். இறைவன் அவர் என்ன பண்ணுவாரு? பெரிய பெரிய வேலை பார்த்துட்டு இருக்காருங்க ஐயா. 

================================
# இறைவனால் ஏன் இந்த போர் இப்போது வந்தது?
================================

இடைக்காடர் சித்தர் :-  இவை அறிவித்து, இதனாலே இவைத்தன் அறிந்தும் கூட ஆனாலும் இப்பொழுதே ஒரு பயம். இதைத்தன் பின் எடுத்து வந்தால்தான் அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட. 

இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் வருங்காலத்தில் பின் எதை என்று அறிய அனைத்தும்… அதாவது… பெரிய மனிதனும் யோசிப்பார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த போர் வரலைன்னா என்ன பண்ணிருவார்? வந்து.. யோசிக்க மாட்டாங்க. அப்ப இது வந்துச்சுன்னா எல்லாரும் யோசிப்பாங்க. டேய், உஷாராகணும்டா! இல்ல..

அடியவர் 5:-  எல்லா நாட்டு பெரிய மனிதர்களும் யோசிப்பாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  யோசிப்பாங்க. அப்ப எங்க வேணாலும்…. என்ன பண்ணாலும்…. தள்ளிவிடலாம்…. அப்ப யோசிப்பாங்க. 

===========================
# இவ் உலகத்தை இயக்க சரியான யாரும் ஆள் இல்லை. 
===========================

இடைக்காடர் சித்தர் :-  இன்னும் உலகத்தை இயக்க பின் சரியான ஆள் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்தை இயக்க இன்னும் 

அடியவர் :- சரியான ஆள் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- சரியான ஆள் இல்லை. 

அடியவர் :-  தலைவன் இல்லை. 

இடைக்காடர் சித்தர் :-  பக்குவம் இல்லாதவன்  இடத்தில் பின் ஆட்சியை கொடுத்து விட்டாலும்… உங்களுக்குத்தான் கவலை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, பக்குவம் இல்லாத இடத்தில் ஆட்சி கொடுத்துட்டாலும் 

அடியவர் :-  கவலை மக்களுக்கு தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- மக்களுக்கு தான் கவலை. 

அடியவர் :-  கவலை 

இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் யாங்கள் அறிவோம். கவலைகள் வேண்டாம். 

அடியவர் :- சிவாய நம 

இடைக்காடர் சித்தர் :-  திருத்துவோம் அனைவரையும். 

அடியவர் :- அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால கவலை வேண்டாம். நாங்க பெரிய வேலை பார்த்துட்டு இருக்கிறோம். இந்த உலகத்தை வந்து அடிக்கிறாங்க. வந்து இந்தியாவை வந்து ரீச் பண்ணி அடிக்குது. அதை நாங்க பார்த்துட்டு இருக்கிறோம். இங்க சின்ன சின்ன மனிதர்கள்.  ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் :- புரியுது. 

அடியவர் :- அதாவது நாங்க, அதாவது எங்களுக்கு தெரியும் எது முக்கியமோ, அதை நாங்க செஞ்சுட்டு இருக்கிறோம். இதெல்லாம் சின்ன சின்ன வேலைகள். இதை பத்தி எல்லாம் நாங்க எல்லாத்தையும் இதுவும் இருக்கு. எல்லாத்தையுமே நாங்க மாத்துவோம். பெரிய வேலை என்னவோ, அதை முதல் போக்கஸ் பண்ணிட்டு இருக்கிறோம்ன்றாங்க. 

==========================
# மனிதன் தகுதி - சிறிய வேலையை மட்டும் பார்ப்பது.
========================== 
# மனிதன்  பெரிய வேலை யோசிக்க மாட்டான். 
==========================

இடைக்காடர் சித்தர் :-  ஆனால் மனிதரே சிறிய வேலையை மட்டும் பார்ப்பான். அதுதான் அவனுடைய தகுதி. பெரிய வேலை யோசிக்க மாட்டான். 

அடியவர் :-  ( சிரிப்பு ) 

சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷன் என்ன பண்ணுவானாம்? 

அடியவர் :- சின்ன வேலையை தான் பார்ப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- சின்ன சின்ன வேலை தான் வந்து ஏன்னா, அதுதான் தகுதி. மனுஷனுக்கு பெரிய வேலையை? 

அடியவர் :- யோசிக்க மாட்டேங்குறான். 

==============================
# மனிதன் பெரிய வேலையாக யோசித்தால், சித்தர்கள் பெரிய அளவில் மனிதனுக்கு கொடுப்பார்கள்.
==============================

இடைக்காடர் சித்தர் :-  அப்படி பெரிய வேலையாக யோசித்தால், யாங்கள் பெரிய அளவில் கொடுப்போம். 

அடியவர் :- அப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க என்ன செய்யணும்? 

அடியவர் :- பெருசா யோசிக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- பெருசா யோசிக்கணும். அந்த பெருசா யோசிக்கணும்னா என்ன பண்ணுவாங்க வந்து? 

அடியவர் :-  ம்…. 

சுவடி ஓதும் மைந்தன் :- பெரிய லெவல்ல கொடுப்பார். 

அடியவர் :-  ஆமா. 

சுவடி ஓதும் மைந்தன் :- சின்னதை யோசிக்க கூடாது. 

==========================
# அடிப்படை தத்துவங்கள் தெரிந்து கொள்ளாவிடில், நிச்சயம் மனிதன்  ஒன்றுமே செய்ய முடியாது. 
==========================

இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து… எவை இன்னும் விளக்குவேன். பின் அடிப்படை தத்துவங்கள், பின் மனிதன் தெரிந்து கொள்ளாவிடில், நிச்சயம் ஒன்றுமே செய்ய முடியாது. 

அடியவர் :-  நிச்சயமா

சுவடி ஓதும் மைந்தன் :-  அடிப்படை தத்துவமே மனுஷனுக்கு தெரியல. 

அடியவர் :-  பேசிக் 

சுவடி ஓதும் மைந்தன் :-  பேசிக்கே தெரியல.  அப்ப என்ன ஆகும்? 

அடியவர் :-  பேசிக் வீக்னா….. பில்டிங் ஸ்ட்ராங் இல்ல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஸ்ட்ராங் இல்ல. 

=================================
# இவ் உடம்பு என்ற இயந்திரத்துக்கு என்ன தேவை என்பதை சித்தர்கள் அறிவார்கள்.
================================= 

இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து இன்னும் ஞானங்கள் பெற. இதனாலே பின் அவரவருக்கு பின் அவர் இயந்திரத்துக்கு என்ன தேவை என்பது யாங்களே அறிவோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த மிஷினுக்கு என்ன தேவை? எப்போ? என்ன கொடுக்கணும்?னு.. அவங்களுக்கு தான் தெரியும். 

================================
# நமது அன்பு அடியவர்கள்,  அனைவருக்கும் நன்றாக வாழ….
================================
================================
# வில்வம் , துளசி , வேம்பு , அருகம்புல் - இதை எப்பொழுதும் அனைத்து அடியவர்களும் தினமும் , எப்பொழுதும்  எடுத்துக்கொள்ள வேண்டும். 
================================

இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் முதல் மூலமாக இயந்திரத்துக்கு செயல்பட, நிச்சயம் தேவை வில்வம். அடுத்து துளசி, அடுத்து சிறிதளவு வேம்பு. பின் இதை எப்பொழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அடியவர் :-  சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :-  இது என்ன? என்ன சொல்றதுங்க? 

அடியவர் :-  இது வந்து… இந்த உடம்பு என்ற இயந்திரத்திற்கு மூணு பொருள் முக்கியமா தேவைன்றாங்க. வில்வம், துளசி, வேம்பு. 

இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் பின்பு அப்படி பார்த்தால், பின் அருகம்புல்.

அடியவர் :-  அருகம்புல்லும்… 

சுவடி ஓதும் மைந்தன் :-  உடம்பிற்கு எப்பவுமே …டெய்லி இது தேவை. 

அடியவர் :-   தினசரி காலையில் எடுக்கணும்ன்றாங்க. 

============================
# மனிதன் நன்கு வாழவே இறைவன் மூச்சுடன் -  வில்வம் , துளசி , வேம்பு, அருகம்புல் - இவற்றை இலவசமாக கொடுத்துள்ளார்.
============================

இடைக்காடர் சித்தர் :-  இதனால்தான் இறைவன் மூச்சையும் கொடுத்து இவற்றையும் இலவசமாக கொடுத்திருக்கின்றான். ஆனால் மறந்து விடுகிறான் மனித மூடன். 

அடியவர் :-  ஆமா, மூச்சையும் கொடுத்து இதையெல்லாம் இலவசமாக இறைவன் கொடுத்திருக்கிறார். எங்க? தெருவெங்கும் கிடைக்கும் இல்லயா ?  வில்வ மரமும், அரசமும், இது வேப்ப மரமும். 

===============================
# உங்கள் வாழ்க்கை உங்கள் கையிலே
===============================

இடைக்காடர் சித்தர் :-  இதனால்தான் இறைவன் மூச்சை கொடுத்து…. இவன் எப்படி வாழ்கின்றான் என்று பார்க்கின்றான். பின் வாழத் தெரியாமல் வாழ்ந்து விட்டால், மூச்சை பின் வராமல் தடுத்திடுவான். அதனால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையிலே. இதுவும் யான் சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று ஒரு பெரியவன் சொல்லி இருக்கின்றான். 

அடியவர் :-   ஆமா, ஒரு பெரிய  மனிதர் தான் , உன் வாழ்க்கை உன் கையில் என்று சொல்லியிருக்கிறார். இறைவன் கொடுத்த உடம்பை சரியான முறையில் பயன் படுத்தணும். அப்படின்னா உயிரை நீட்டி கொடுப்பார். இல்லைன்னா, அவ்வளவுதான். பியூஸ் பிடிங்கிருவாங்க. 

=============================
# திருமண ரகசியங்கள்….
=============================
=============================
# நாத தத்துவங்கள் - உங்கள் ஆற்றலை பெருக்கி , நீங்கள் வேகமாக இயங்கலாம். 
=============================

இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் இதனால் பின் அறிந்தும், பின் இன்னும் செப்புவேன். ஆனாலும் அனைவருமே அறிந்தும், இன்னும் ஆற்றலை பெருக்க. அதாவது ஏன், எதற்காக என்றெல்லாம். 

இடைக்காடர் சித்தர் :-  எவ் ஆற்றலை பெருக்கினால், பின் மனிதன் இன்னும் அதாவது வேகமாக இயங்குவான் என்பதை எல்லாம்….. நாத தத்துவங்களே இருக்கின்றது. இதனால்தான் திருமணத்தில், அதாவது திருமணம் வரை, பின் உடைந்திருக்கும் நாத  தத்துவங்கள். 

இடைக்காடர் சித்தர் :-  அதை இயக்கினால் நல்லெண்ணங்கள் வரும் என்பதற்காக திருமணங்கள் செய்து செய்து கொள்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது மறந்துவிட்டது. எதனால் எப்படித்தான் வாழப்போகின்றார்கள் என்றால், நிச்சயம் இல்லை. 

அடியவர் :-  சில தத்துவங்கள் இருக்கு. அதை இயக்கினா வந்து நமக்கு உண்மை நிலை புரியும். அப்படின்றாங்க. திருமணம், அது ஒரு காரணம். 

==============================
# உங்கள் பூர்வ கிரக ஜென்மம் எப்படி உங்களை கஷ்டப்படுத்துகிறது ?
==============================

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் இன்றைய காலகட்டத்தில் அறிந்தும், கலியுகத்தில் எவ்வாறெல்லாம், எதனை, எவை என்று கூற.  என்ன மேல் பாதையில் தவறு செய்துட்டு வந்து, பின் இங்கு மறைத்தாலும், அதுதான் நடக்கப்போகின்றது. 

இடைக்காடர் சித்தர் :- அதற்காகத்தான் இவ்வளவு போராட்டங்கள் வேண்டாம், வேண்டாம். 

==============================
# உங்கள் பூர்வ கிரக ஜென்மம் ஞாபகங்களில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி - தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி.
==============================

இடைக்காடர் சித்தர் :-  இத்தனை, அதாவது திருவாசகம், இன்னும் தேவாரம், இன்னும் எத்தனை, எத்தனை மனிதன் திருந்துவான் என்று. ஆனால் திருந்த பாடில்லை. ஏனென்றால் அவ் ஞாபகம். 

====================================
# வணக்கம் அன்பு அடியவர்களே - எப்போதும் , சதா இறைவன் நினைப்புடனே இருங்கள் !  இருங்கள் !! இருங்கள் !!! 
====================================

இடைக்காடர் சித்தர் :- அதாவது பல ஆண்டுகள் வாழ்ந்து ஒரே நாளில், பின் எவ்வாறு நீங்கள் நிச்சயம் பின் மறைத்து விடலாம். அதனால்தான் சதா இறைவன் நினைப்புடனே இருங்கள் !  இருங்கள் !! இருங்கள் !!! 

அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா. 30 வருஷம் தவறு செஞ்சுட்டு, 

அடியவர் :- ஆமா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரே நாள் இந்த பாடல்கள் எல்லாம் கேட்டேன்னா எப்படிப்பா? 30, 60 வருஷம் வந்து ஊறிட்டு, உடம்புல…. ஒரே நாள் எனக்கு சரி செய்யணும்னா எப்படி அப்பா அவர் சரி செய்வாரு?. அப்ப எப்பவுமே…. 

அடியவர் :-  இறை ஞாபகத்தோடு இருக்கணும். அங்க மேல ( நீங்கள் வந்த கிரகத்தில் )  அந்த தப்பு பண்ணி இருக்கோம். அதனாலதான் இங்க வந்து விழுந்திருக்கிறோம். அதே தப்பை திருப்பி திருப்பி செஞ்சுகிட்டே இருக்கிறோம். அதை தடுக்குறதுக்கு தான் இவ்வளவு புத்தகங்கள், ஞானிகள், பாடல்கள் எழுதி இருக்காங்க. அதனால அதை படிச்சிட்டு, இறை நினைப்போட  இருந்தாதான்… இதை நம்ம சரி செய்ய முடியும்ன்றாங்க. 

===============================
# சித்தர்கள்  இயந்திரனுக்கு சொந்தக்காரர்கள். 
===============================

இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து ஒரு வாகனத்தை பின் இயக்கலாம் மனிதன். ஆனால் அது தன் உட்கார்ந்து விட்டால், அதனை சரி செய்ய யார் வரவேண்டும்? என்று சிந்தித்து செயலாற்றுங்கள். அதேபோலத்தான் நீங்களும் உட்கார்ந்து விட்டால், அதை சீர் செய்ய எங்களால் மட்டுமே முடியும். அதனால்தான் யாங்கள் பின் இயந்திரனுக்கு சொந்தக்காரர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மெக்கானிக் அவர். ஒரு வண்டி  ரிப்பேர் ஆயிடுச்சுன்னா யார் வந்து பார்ப்பாங்க? 

அடியவர் :-  ஒரு கார் பிரேக் டவுன் ஆச்சுன்னா… நமக்கு தெரியுமா? தெரியாது. மெக்கானிக் வந்தாதான் சரியாகும். அதே மாதிரி… பிரேக் டவுன் ஆச்சுன்னா யாரும் சரி பண்ண முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க கஷ்டத்துல இருக்கும் பொழுது, ரிப்பேர் ஆயிடுச்சு வண்டி. கஷ்டம் தான் ரிப்பேர் என்று சொல்கின்றார். 

அடியவர் :- ஆமா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அது யாராலும் ?

அடியவர் :- சரி பண்ண முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  முடியாது. உண்மையான பக்தி, இறைவனுடைய உண்மையான ஞானங்கள் இருந்தால் மட்டும்தான் நான் மெக்கானிக்கா வருவேன்.  சரி செய்து விடுவேன். அவ்வளவுதான். இல்லையென்றால் 

அடியவர் :-  எண்ணங்கள் சரியா இருந்துச்சுன்னா சரி பண்ணி விட்டுருவாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- வாகனத்தை தாறுமாறாக ஓட்டி, எல்லாம் தேஞ்சு, கடைசில என்ன ஆகும்? 

அடியவர் :-  அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மூலையில் உட்கார வேண்டியதுதான். 

அடியவர் :-  காயலான் கடைக்கு (Scrap Shop) போக வேண்டியதுதான் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா ஞானம், கருணை, நல்ல உள்ளம் இருந்தா என்ன ஆகும்? 

அடியவர் :-  நல் எண்ணங்கள்….

சுவடி ஓதும் மைந்தன் :- சரி okay da. ஏதோ nut கழன்று இருக்குது. தெரியாம வந்து யார் மூலமாக வந்து, அந்த நெட் போல்ட்டை tight  பண்ணி விடு. அவ்வளவுதான். ஓடும் வண்டி. 

============================
# கலியுகத்தில் பல விஷயம் தெரிந்து கொள்ள ஆக வேண்டிய சூழ்நிலை கட்டாயம் உண்டு. 
============================

இடைக்காடர் சித்தர் :-  எதை என்று தெரிவிக்க. இதனால் கலியுகத்தில் பல விஷயம் தெரிந்து கொள்ள ஆக வேண்டிய சூழ்நிலை கட்டாயம் உண்டு. 

============================
# மந்திரம் சொன்னால் பணம் வருமா ?
============================
# மந்திரத்தின் மூலம் ,  எப்படி மனிதன் மூடன் ஆகின்றான் ?
============================

இடைக்காடர் சித்தர் :- அதனால்தான். ஆனால் மனிதர்கள் என்னவோ, பின் அதாவது மந்திரத்தை சொன்னால் பணம் வந்து விடுமாம். எவ்வளவு பெரிய முட்டாள்! ஏன், எதற்கு நீங்கள் என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்களா? என்ன?  ஏது என்று இறைவன் உங்களிடத்தில் கொடுக்க?

அடியவர் :- ( பலத்த சிரிப்பு ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப… 

அடியவர் :-  மந்திரம் சொன்னா… பணம் வந்துரும் என்று சொல்ராங்க…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பணம் வந்துரும். 

அடியவர் :-  நீங்க என்ன சேர்த்து வச்சிருக்கீங்களா?  இறைவன் கேட்டவுடனே கொடுக்குறதுக்கு.

==================================
# பணத்தின் மீது ஆசை எப்படி தோல்விகளை உண்டாக்குகின்றது ?
==================================

இடைக்காடர் சித்தர் :-  ஏனென்றால் மனிதனுக்கு ஆசை பணத்தின் மீது. அதை மற்றொருவன் புரிந்து கொள்கின்றான். இவன் பணத்தின் மீது ஆசை என்று. அதையே வைத்து இவனை பின் மடக்கி விடலாம் என்று நீயும் தோல்வி அடைந்து விடுகின்றாய். அவனும் தோல்வி அடைந்து விடுகின்றான். 

===================================
# பணத்தை இழந்தவன், பணத்தை பறித்தவன் - இருவரும் கடைசியில் தோல்வி அடைந்து , ஒருவரை ஒருவர் வேடிக்கை பார்க்க …இறைவனும் இவர்களை வேடிக்கை பார்ப்பார்…..
=================================== 

இடைக்காடர் சித்தர் :-  அழகாக, பின் கடைசியில் இருவரும் ஓரமாக உட்கார்ந்து, பின் இவ்வாறு ஆகிவிட்டதே என்று உன்னை அவன் பார்க்க, அவன் உன்னை பார்க்க, வேடிக்கை பார்க்க, இறைவன் பார்க்க, வேடிக்கை…..

அடியவர் :-  எல்லாம் நாடகம் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் :-  பணத்து ஆசையில சில பேர்ட்ட போய் ஏமாறுகிறோம். அவனும் இன்னொருத்தன் கிட்ட ஏமாறுவான். கடைசில ரெண்டு பேரும் மூஞ்ச பார்த்துட்டு ஓரமா உட்கார வேண்டியதுதான். இறைவன் இதை உட்கார்ந்து அமைதியாக பார்த்து சிரிச்சிட்டு இருக்கிறார். 

============================
# பணத்தை இழந்து இந்தவனும் , பணத்தை ஏமாற்றியவனும் இறைவனை வேண்டினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
============================
============================
# இறைவனே வேடிக்கை பார்க்கும் வினோதம் 
============================

இடைக்காடர் சித்தர் :-  உனை வேடிக்கை பார்க்கபின், அவன் உன்னை வேடிக்கை பார்க்க, இருவரும் இறைவனை வேண்ட. இறைவனும் வேடிக்கைத்தான் பார்ப்பேன். அட பாவி! அறிந்தும் அனைத்தும் கொடுத்தேனே. உனை நீ, நீ இவனை நம்ப, இவன் உன்னை நம்ப. போதும் என்று. இதனால் பின் அறிந்தும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால உன்னை நான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்கு என்ன வேணும்? பணம் வேணும். வாப்பா !! இந்த மந்திரத்தை சொல்லு, அந்த மந்திரத்தை சொல்லு.  உன்னை நான் வந்து ஏமாத்திடுறேன். ஓகேங்களா? அப்ப என்ன பண்ணிடனும்? கடைசில யாரு? நானும் ஏமாந்து, நீங்க ஏமாந்து, நான் உன்னை பார்க்க, நீ என்னை பார்க்க. டேய், உன்னை நம்பி நான் இது பண்ணிட்டேனேடா. நீ என்னை உன்னை நம்பி நான் இது பண்ணிட்டேனே. வேடிக்கை! ரெண்டு பேரும் பார்த்து…. இந்த வேடிக்கை யார் பார்ப்பாராம்? இறைவன்! அட முட்டாள்களே! ஏன்டா உங்களுக்கு கொடுத்த அறிவு உபயோகிக்கல?..... 

இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து அழகாக அனைவரும் அறிந்தும் கைதட்டி, நிச்சயம் ஒரு பாடலை பாடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :-   நல்லா கை தட்டணும்! எல்லாரும் கைதட்டி ஒரு பாடலை பாடல் பாட சொல்லுங்க. பாடும் பொழுது கை தட்டணும். 

பாடகர் :- ( என் அப்பனல்லவா பாடல் பாடினார்கள் )
Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=9h28m10s

இடைக்காடர் சித்தர் :- இதே போல் பல வழிகளில் கூட, உடம்பிற்கு தேவையான, அதாவது இயந்திரத்திற்கு தேவையானதெல்லாம் எடுத்துரைப்போம். 

================================
# கை தட்டி பாடினால் மூளை நன்கு இயங்கும்..
================================
# கைதட்டுதல் மிகுந்த யோசிக்கும் திறன், பின் அதிகப்படுத்தும்
================================

இடைக்காடர் சித்தர் :- ஏன் இதனை, பின் கை…. எவை என்று அறிந்தும் கூட சொன்னேனே, பின் மூளைக்கு போகும். சில சில, பின் வழிகளில் கூட எதை என்று அறிய இவ்வாறு கைதட்டுதல் மிகுந்த யோசிக்கும் திறன், பின் அதிகப்படுத்தும். மீண்டும் இப்பாடலை பாடி நன்றாக பின் கைதட்டு.

அடியவர் :-  அருமை, அருமை. திருப்பி இதே பாட்டை பாட சொல்லி இருக்காங்க. எல்லாரும் நல்லா கைதட்டுங்க. மூளைக்கிற யோசிக்கும் திறன் இந்த மாதிரி கைதட்டி பாடுனா நல்லா அதிகமாகும்.

பாடகர் :- ( மீண்டும் என் அப்பனல்லவா பாடல் பாடினார்கள்…அடியவர்கள் நன்கு கை தட்டினார்கள்…. )

=====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=====================================

குருநாதர் :- அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே, இன்னும் புதுமையான விஷயங்கள் எல்லாம் யான் தெரிவிப்பேன். அப்பனே. 

===================================
# உங்கள் குறைகள் இறைவனுக்கு தெரியும். எதையும் கேட்க தேவையில்லை.
===================================

குருநாதர் :- அது மட்டும் இல்லாமல், அப்பனே, உங்கள் தன் பிரச்சனைகளை அப்பனே, இறைவனிடத்தில் கேட்டுத்தான் அப்பனே தீர்க்க வேண்டுமா என்ன அப்பனே? நிச்சயம் இறைவனுக்கு தெரியும், அப்பா. அதுபோல், அம்மையே, நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம். யாங்களே அறிவோம், அனைத்தும் தீர்த்து வைப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாருன்னா, உங்கள் பிரச்சனையை நீங்க இறைவனிடத்தில் கேட்டு தான் ஆகணும்னா…. தேவையில்லை. எங்களுக்கு தெரியும்ன்றாரு. இறைவனுக்கு உங்களை படைச்சவர், உங்களை படைச்சது யாரு? இறைவன். இறைவனுக்கு தெரியும்.

குருநாதர் :- இவை தன் இவ்வாறாகவே, நிச்சயம் இன்னும் ஆசிகள். இன்னும் புதுமையான விஷயங்கள், நிச்சயம் இவ்வுலகத்திற்கு இவ்வாறாக, நிச்சயம் மனிதன் பிழைத்துக் கொள்வான். 

=================================
# பயத்தில்… மனிதன் பாதுகாப்பு வளையத்தில்… 
=================================

குருநாதர் :- அனைத்தும். ஏன், எதற்கு, நிச்சயம் மனிதன் மனிதனையே நம்பவில்லை. ஏனென்றால், பாதுகாப்பிற்காக மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனுஷன் மனுஷனையே நம்பல. பாதுகாப்பிற்காக. ஐயா, பாருங்க. பெரிய பெரிய ஆளுங்க என்ன பண்ணிருப்பாங்கயா? கூட ஆளு வச்சு வேண்டியதுதான். அப்ப எல்லாருமே இங்க வந்து செக்யூரிட்டி யோடு,  பயந்து தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. எல்லா பெரிய ஆளுங்களாலும் சரி, எல்லாரும் என்ன பண்ணிக்கிறாங்கயா? செக்யூரிட்டி பக்கத்துல வச்சுக்காக. அப்ப மனுஷன் மனுஷனை நம்பல. 

குருநாதர் :- ஏன், எதற்கு என்றால், மனிதனின் எண்ணங்கள் அதுபோல். ஏன், பின் எவை என்று கூட புவியில் தன்னில் கூட. இதனால், இதைத்தன் நிச்சயம் அனைவரும் சரியாக கடைபிடித்தால், அவரவர் பின் வாழ்ந்து விடலாம். பின் குற்றமும் கிடையாது. 

=====================================
# அடுத்து போகர் பெருமான் வாக்குகள் உரைக்க உள்ளார் 
=====================================

குருநாதர் :- இவைத்தன் இன்னும் உரைப்பேன். ஆனாலும், இன்னும் பின் போகன் சொல்லட்டும் சில ரகசியங்கள். எதை என்று புரிந்து கொள்ளுங்கள். எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அகத்தியர் பெருமான்  எல்லாருக்கும் ஆசி கொடுத்துட்டார். அடுத்து போகர் சித்தர் வருவாங்க . இந்த விபூதி இதை  என்ன பண்ணனும்னு சொல்லிட்டு…. வாக்குகள் சொல்லுவாங்க அய்யா.  இந்த விபூதி இதெந்த கோயிலில் இருந்து எடுத்து வந்தீங்க அய்யா ? )

அடியவர் :- [ ஆறுபடை வீடு (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை)  , பஞ்சபூத ஸ்தலங்கள் (காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் , திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் , திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்,  சிதம்பரம் நடராசர் கோயில், திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்) , ஓதிமலை , விராலிமலை, மீனாட்சி அம்மன் கோயில் - இந்த ஆலயங்களில் இருந்தது எடுத்து வந்தோம் அய்யா. மொத்தம் 14  ஸ்தலங்கள். அந்த வீபூதி பாக்கெட்ல ஒரு ருத்திராட்சமும் இருக்கும்.இது தவிர  மஞ்சள் , குங்குமம் இது எல்லாம் அந்த ஸ்தலங்கள் போய் அடியவர்கள் எடுத்து வந்தது….. ] 

அடியவர் :- இது தவிர விளக்கிற்கு இடுவதற்கு , அகத்திய பெருமான் உரைத்த அந்த பொடி அதாவது பச்சை கற்பூரம் , நவதானியங்கள் , கிராம்பு , ஏலக்காய்  கலந்த தீப பொடி.

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா படிக்கிறேன். கேட்டுக்கோங்க… 
 
( அடுத்த பதிவில் போகர் பெருமான் வாக்குகளை காண்போம் ….)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment