​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 23 March 2026

சித்தன் அருள் - 2163 - அன்புடன் அகத்தியர் - பாலி, இந்தோனேஷியா வாக்கு 2 !






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த  வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  பகுதி 2

முதல் நாள் : 14.03.2026  (சனிக்கிழமை)
வாக்குரைத்த  தலம்:-  இரண்டம் புனித தலம்  ( DAY 1 , 2ND PLACE )
வாக்குரைத்த  தலத்தின் பெயர் :- புரா மென்கனிங் (Pura Menganing)

வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி:- புரா மென்கனிங். ஜலான் தீர்த்த எண்.25எம், சரேசெடா, தம்பக்சிரிங், கேக். தம்பக்சிரிங், கபுபடென் கியான்யார், பாலி 80552, இந்தோனேசியா.

Address :- Pura Menganing , Jalan Tirta No.25M, Sareseda, Tampaksiring, Kec. Tampaksiring, Kabupaten Gianyar, Bali 80552, Indonesia

கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/nnCEeoVujbNVBgbK9

====================================
( இவ் வாக்கை படிக்கும் முன் இதன் முதல் பகுதி வாக்கை படித்து பின் இவ் வாக்கை படிக்கவும். இந்திர தேவன் போல் வாழ, அனைவருக்கும் வழிகள் கிட்டும், ரகசிய வாக்கு இவை அனைத்தும்.

சித்தன் அருள் - 2161 - அன்புடன் அகத்தியர் - பாலி, இந்தோனேஷியா வாக்கு ! பகுதி 1

https://siththanarul.blogspot.com/2026/03/2161.html

====================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, ஆசிகள்.

================================
# பகுதி 1 - வாக்கில் எப்படி இந்திர தேவன் தனது பாவங்களை என்று குருநாதர் அருளியுள்ளார்கள்…
================================

அப்பனே, இவ்வாறாக... அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இந்திரனும், அப்பனே, அனைத்து பாவங்களையும் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட விலக்கிக் கொண்டான் என்பேன்  அப்பனே.

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வழியாக, அப்பனே, பின் முப்பெரும் தேவர்களும் கூட, அப்பனே, பின்... அதாவது பிரம்மாவும், விஷ்ணுவும், அப்பனே ஈசனும். அப்பனே, பின் சரியாகவே, அப்பனே, மலர் தூவி, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சரியாகவே, பின் மறைந்து.

===============================
# இந்திர தேவன் கதை - பகுதி 2 ஆரம்பம் 
===============================

===============================
# இந்திர தேவனின் அனைத்து சாபங்களும்  நீங்கியதால் , பிரமதேவன் இந்திர தேவனை தேவலோகத்திற்கு அழைக்க வந்தார்கள்.
===============================

இதனால், அப்பனே, மீண்டும்... அதாவது அறிந்து கூட, பிரம்மதேவனும், இந்திரனே,!!!!!! அனைத்து சாப, பாவங்களும் நீக்கிக் கொண்டாய்.

இதனால் எதை என்று புரிய. மேலும், அதாவது யான் உன்னை இங்கு அழைக்க வந்தேன், மரியாதையுடன்.

அதனால் நிச்சயம்... அதாவது இங்கிருந்து (தேவலோகத்திற்கு) வருகின்றாயா? என்பதற்கு இணங்க…

=======================
# இந்திர தேவன் ஆசை வேண்டுகோள்.
======================

இந்திரனும்  பிரம்மதேவனே, நிச்சயம் ஏது ஒரு பிறவியை கூட சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.

அதனால் இன்னொரு பிறவியை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று.

========================
# விளையாட்டாகவே இருவரும் வாக்குவாதங்கள்.
 ========================

பின் அட!!! ..., அறிந்தும் எதை என்று கூற, பின் அட பாவியே!!!!......, எதை என்று புரிய. என்றெல்லாம் பிரம்மனும் கூட.

விளையாட்டாகவே இருவரும் வாக்குவாதங்கள்.

இந்திரனும் எதை என்று கூற, நிச்சயம்... அதாவது பிரம்மதேவனே, நீ தந்தை போல் அல்லவா, 

நிச்சயம் உனக்கே தெரியும், நீ என்னென்ன??? எழுதினாய் என்று. 

ஒரு சந்தோஷம் கூட யான் அனுபவிக்கவில்லை.

பின் ஆனாலும் பிரம்மதேவனும், பின் அப்படியா???, எதை என்று கூற, பல சந்தோஷங்களை அனுபவித்தாய். ஏன் இவ்வாறு பேசுகின்றாய்?? என்று.

ஆனாலும் அதாவது வந்தது எவ்வளவு நோய் தெரியுமா????

எவ்வளவு கஷ்டங்கள் பட்டேன் (என்பதை பற்றி பற்றி உந்தனக்கு) தெரியுமா????

============================
# மக்களுக்கு சேவை செய்ய மற்றொரு பிறவி வேண்டும் 
============================

இதனால் பின் இன்னொரு பிறவியும் கொடு. 

மக்களுக்கு ஏதாவது சேவை செய்து கொண்டு வருகின்றேன் என்று.
அறிந்தும். 

ஆனாலும் இதனை ஈசன் எதை என்று பார்த்துக் கொண்டே, பார்த்துக் கொண்டே.

ஆனாலும் பின் பிரம்மதேவனும் அறிந்தும் எதை என்று கூற...

யான் அதாவது பின் இனிமேல் நீ தான். 

ஏனென்றால் அனைத்து சாபங்களும் பாவங்களும் இங்கு நீங்கிவிட்டது.

இனிமேல் பின் பிறவி வேண்டுமென்றால் ஈசனிடம் நாடு என்று.

இதனால் அழகாக பின் தவம் புரிந்து கொண்டு ஈசனுக்கும்.

அதாவது யார் ஒருவர் சாபங்களிலும் பாவங்களிலும் விடுபடுகின்றார்களோ,எதை என்று அறிய.

=====================================
(மனிதர்களுடைய சாபத்தையும் பாவத்தையும் நானே நீக்குவேன் என்று இது போன்ற ஒரு பிறவி இது போன்ற சக்தியுடன் வேண்டும் என்று இந்திரன் தவம்)
=====================================

ஆனாலும் ஈசனாரும் நிச்சயம் பின் இவனை திருத்த ஆள் இல்லை என்று.

பின் ஆனாலும் இதை பிரம்மனுக்கு தெரிந்தது. 

ஆனால் நிச்சயம் பிறவிகள் என்றெல்லாம்.

=================================
# ஈசன் தான் புண்ணியத்தை தர வேண்டும் என்று மறந்துவிட்ட இந்திர தேவன் 
=================================

இதனால் பின் யான்தான், பின் மன்னன். 

யான்தான் மன்னன் இனிமேல் அனைத்து சாபங்களும் பாவங்களும் போய்விட்டது.

ஆனாலும் பின் எதை என்று அறிய. 

ஆனாலும் ஈசன் தான் புண்ணியத்தை தர வேண்டும் என்று... தர வேண்டும் என்று மறந்துவிட்டான் இவன்.

================================
# இந்திர தேவன் மீண்டும் பிறப்பு 
================================

பின் அதாவது நிச்சயம் பிறந்தான், அங்கேயே எதை என்று அறிய. 

இதனால் பின் அங்கும் இங்குமாக. ஆனாலும் அழகாக இவனுக்கு தேவையானதெல்லாம் கிடைத்தது.

ஆனாலும் பின் எதை என்று அறிய. ஆனாலும் சில புண்ணியம் ஈசனும் நிச்சயம் அறிந்தும் இவை தன் உணர.

===========================
# ஈசனாரும் பல மடங்கு கொடுத்த புண்ணியங்களும் , புத்திகளும் 
===========================

அதாவது பின் ஈசனாரும் இவந்தனக்கு புண்ணியங்கள் கொடுப்போம்.

இன்னும் எதை எதை எண்ணுகின்றானோ!?? இன்னும் செய்யட்டும். இன்னும் பின் எதை என்று அறிய.

இதனால் இவனுக்கு புத்திகளும் அதாவது பல்மடங்கு கொடுப்போம் என்று அனைத்தும். 

அதாவது பின் எதையோ ஒன்றினை பின் கொடுத்துவிட்டு.

===============================
# இந்திர தேவன் பல வழிகளில் இவ் இந்தோனேசியா - பாலி தேசத்தில்  பல பல ஆலயங்களை எழுப்பினார் .
===============================

இதனால் பின் இந்திரன் அனைத்தும் மகிழ்ந்தான். பல வழியில் கூட பின் ஈசனை நினைத்து. பின் பல வழியில் கூட இவ்தேசத்தில் எதை என்று பல பல ஆலயங்களை எழுப்பினான்.

இதனாலே நிச்சயம் தன்னிற்கு ஒரு பிறவி கொடு என்று.

ஆனாலும் பின் இதுதான் இவனுடைய சந்தோஷமே, ஆசையும் கூட.

இதனால் பல வழியில் கூட பின் பல பல எவை என்று அறிய. 

===========================
# இந்திர தேவன் எழுப்பிய பல சிவாலயங்களில் ஒவ்வொரு சக்தியும் அங்கு புதைத்து உள்ளார். அவ் சக்திகள் இவ் இந்தோனேசியா - பாலி தேசத்தில் இன்னும் கூட  ஒளிந்து கொண்டே இருக்கின்றது. 
===========================
#  அன்பு அடியவர்கள் பயன்படுத்தி கொள்க… அனைவருக்கும் எடுத்து சொல்லவும்.
===========================
# இயன்ற பொழுது அடியவர்கள் இவ் இடங்களுக்கு சென்று வருக. நலம் பெறுக.
==========================


இன்னும் கூட பின் அதாவது சிவாலயங்களை எழுப்பி நிச்சயம் ஒவ்வொரு சக்தியும் அங்கு புதைத்து உள்ளான்.

பின் அப்பெரிய சக்தி இன்னும் கூட பின் இங்கேயும் பின் ஒளிந்து கொண்டே இருக்கின்றது.

==========================
# குருநாதர் வாக்குகளில் ஒளிந்துள்ள அபரிமிதமான சக்திகள் 
==========================

இதனால்தான் எங்கெங்கு?? ஏது?? என்று அறிய. 

பல வகைகளோடு (இவ் ரகசியங்களை) சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். 

எதை எதையோ தேடுகிறார்கள் மனிதர்கள். 

ஆனாலும் பின் பல சக்தியுள்ள இடங்களை தேட மறந்து விடுகிறார்கள்.

================================
# உங்கள் சக்திகளை பெருகும் ரகசிய சூட்சுமங்கள்.
================================
# இறைவன் கால் வைத்த சக்தியுள்ள இடங்களுக்கு சென்று வந்தாலே.. இறைவன்  தானாக கேட்டதெல்லாம் கொடுத்து விடுவார்.
================================


சக்தியுள்ள இடங்களுக்கு… அதாவது இறைவன் கால் பின் வைத்த இடங்களுக்கு சென்று வந்தாலே.. தானாக பின் கேட்டதெல்லாம் கொடுத்து விடுவான். பின் அதாவது இறைவனே.

ஆனாலும் அவையெல்லாம் மறந்து, நிச்சயம் தான் போன போக்கிலே போயிட்டு......... 

பின் அனைத்தும் அழிந்து மீண்டும் இறைவனிடத்தில் வந்து எதை என்றெல்லாம்.

==============================
# பல ஞானிகள், பூலோகத்தில்   பல சக்திகளை உணர்ந்து கொண்டு, பூலோகத்திற்கு பல வகையில் கூட நன்மைகள் செய்ய வந்தார்கள்.
==============================

இதனால் முதலிலே பல சக்திகளை உணர்ந்து கொண்டு.

இதனால்தான் பல வகையில் கூட நன்மைகள் செய்ய, பூலோகத்திற்கு ஞானிகள் வந்தனர் என்பதை எல்லாம் உரைத்துக் கொண்டே வருகின்றேன்.

இதனால் இந்திரனும் கூட எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 

அனைத்தும் பல வழியில் கூட பின் அதாவது பல இங்கு எதை என்று அறிய. பல பல வழியில் கூட பின் மனிதர்கள் எப்படியாவது தவறு செய்து விடுவார்கள்.

நிச்சயம் எதை என்று அறிய. 

தெரிந்தும் தெரியாமல் கூட.

இதனால் நிச்சயம் அப் பாவ வினைகள் எல்லாம் நிச்சயம் அங்கங்கு எதை என்று அறிய. நிச்சயம் பின் தேடித்தான் வரவேண்டும்.

ஏனென்றால் பாவத்தை பின் மனசாட்சி இல்லாமல் செய்கின்றான்.

===========================
# புரா மென்கனிங் (Pura Menganing) - நீர் ஊற்று ரகசியங்கள்
===========================
# இந்திர தேவன் பல வகையில் கூட இவ் இந்தோனேசியா - பாலி தேசத்தில் நீர்நிலைகள் எல்லாம் உருவாக்கினார்
===========================

அதேபோல் நிச்சயம் இதற்கு அலைந்து, திரிந்து, பல வகையில் கூட ஞான ஊற்றுகள் அங்கங்கே நிச்சயம். 

பின் அறிந்தும் எதையே என்று எதிர்த்து நின்று இறைவனை எதிர்த்து நின்று, பிறவிகள் அதாவது இறைவனை பின் அதாவது பிறவிகள் போதும் என்ற போதும், நிச்சயம் எனக்கு வேண்டும் என்று (இந்திர தேவன் இறைவனிடம்) சண்டைகள் இட்டு, பின் (பூலோகத்தில்) பிறவி பிறந்து பின் எதை எவற்றை ஏற்ற, பல வகையில் கூட இங்கு நீர் நிலைகள் எல்லாம் உருவாக்கினான்.

================================
# இந்திர தேவன் உருவாக்கிய நீர் நிலைகள் எல்லாம்  பல சாபங்களும் நீக்கும் வல்லமை பெற்றவை. 
================================

இப்பொழுதும் கூட அவற்றுக்கெல்லாம் வந்து, பல பாவங்களும் எதை என்று அறிய அறிய பல சாபங்களும், பின் நீங்கிட்டு பல வகைகளில் கூட பின் அதாவது மனிதர்கள்.

================================
# ஈசன்  ஆசி இருக்க வேண்டும் - அப்போதுதான் இங்கு , இவ் நீர்நிலை ஊற்றுகளுக்கு வர இயலும்..
================================
# இவ் இடங்களில் எல்லாம் குருநாதர் இவ் பாலி பயணத்தில் வாக்குகளை அருளியுள்ளார்கள்…… 
================================ 
# அதில் ஒன்றுதான் “புரா மென்கனிங் (Pura Menganing)” - நீர் ஊற்று 
================================

ஆனாலும் இதற்கும் ஈசன்  ஆசி இருக்க வேண்டும். 

பின் அதனால் தான் சொல்கின்றேன். 

===============================
# இறை ரகசியங்கள் தெரிந்து கொண்டால் , ( பணம் , பதவி , பொருளாதாரம் , இல்லறம், குழந்தை பாக்கியம் , திருமணம்  என்ற  ) மாயை அனைத்தும் , தானாக இறைவன் அருளால் வந்துவிடும். 
===============================

முதலிலே பின் இறை பற்றி பின் தெரிந்து கொண்டால் பின் அனைத்தும் பின் சாதாரணமாகவே மனிதன் என்னென்ன??? மாயையை பின் விரும்புகின்றானோ அதை பின் ஈசனே கொடுத்து விடுவான்.

ஆனாலும் முதலில் மாயை விரும்புகின்றீர்கள். 

அதனால் தான் அழிந்து மீண்டும் ஈசனிடத்தில் வருகின்றார்கள்.

இதுதான் விதி என்பதைப் போலே அறிந்தும்.

இதனால் பல வகைகளில் கூட இன்னும் இன்னும் ஞான ரகசியத்தை இன்னும் பல ஆலயங்கள் இருக்கின்றது.

அங்கெல்லாம் நிச்சயம் பின் ஏன்? எதற்காக? பின் எதை என்று புரிய. 

========================
# இந்திர தேவனின் பெற்றிருந்த சக்தி, ஆற்றல்கள். 
========================

ஏன் இதற்காக இவ் சக்திகள் எல்லாம் அதாவது இந்திரன் சக்தி எவ்வளவு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட. 

இதனால் பல ஆற்றல்களை படைத்திருந்தான் அவன்.

நிச்சயம் தன்னில் பல குதிரைகளும் யானைகளும் கூட, தன் அதாவது கண்களில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது, யானை வேண்டுமென்றாலே யானை வந்து நிற்கும். அவ்வளவு சக்திகளை பெற்றிருந்தான்.

அவை மட்டுமில்லாமல் குதிரைகள் வேண்டுமென்றாலே… ஏனென்றால் கண்களாலே அதாவது மனதினாலே என்ன? ஏது? என்று பின் அதாவது எண்ணினாலே அனைத்தும் வந்து கிட்டிவிடும்.

இதுபோல் அவ் சக்தியை உணர்ந்திருந்தான் பின் இந்திரன்.

============================
# ஒரு பிறவியில் கஷ்டம் . மறு பிறவியில் இந்திர வாழ்வு …
============================

அவை மட்டுமில்லாமல் ஏன்? எதற்கு? என்றால் ஒரு பிறவில் எதை என்று கூற மனதில் நினைத்தாலே பாவம் என்று யான் சொல்லியிருந்தேன் அல்லவா!!!!!!

அதற்கெல்லாம் பின் தகுந்தார் போல் அனுபவித்தான்.

==============================
# இந்திர தேவன் நினைத்தாலே போதும்.
# அனைத்தும் இந்திர தேவன் எதிரிலே வந்து நிற்கும்.
# இதுதான் இந்திர தேவன் சக்தி. 
==============================

அதேபோலத்தான் மனதில் அதாவது நினைத்தாலே அனைத்தும் அவன் எதிரிலே வந்து நிற்கும்.

இதுதான் இந்திரன் சக்தி. 

அதனால்தான் நிச்சயம் மனிதர்கள் பல வகைகளாலும் கூட என்னென்னவோ நினைக்கின்றார்கள். 

பின் நல் அதாவது அதற்கு, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் நல் மதிப்பாக இருந்தால் அதை தன் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனே தருவான்.

===============================
# ஏன் பல சக்திகள், பல உண்மைகளை, பல சக்தி படைத்தவர்களை-அதாவது  அரசர்கள், ஞானிகள் ரிஷிகள் இவர்களை அடியவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்?
===============================
# உங்களுக்கு, எளிதாக, இவ் வாக்குகளை படிப்பதால் , கேட்பதால் , மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதால், உண்டாகும் மகத்தான புண்ணியங்கள். 
===============================

அதனால்தான் பல சக்திகள் பல உண்மைகளை அதாவது பல சக்தி படைத்தவர்கள் பின் அரசர்கள் இன்னும் கூட இறை பக்தர்கள் இன்னும் கூட ஞானிகள் ரிஷிகள் இருக்கின்றனர்.

அவர்களை எல்லாம் அறிந்து கொண்டால் பின் அவர்களை நினைத்தாலே… இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நினைத்தாலே…. புண்ணியம் சேரும்  மனிதனுக்கும்!!

===============================
# தரித்திரர்களை நினைக்காதீர்கள் - தரித்திரம் வரும். 
===============================

அவை மட்டுமில்லாமல் இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கின்றார்களே என்று தரித்திரக்காரர்கள் நினைத்தாலும் அவர்களுக்கு தரித்திரம் தான் சேரும். 

=============================
# குருநாதர் உரைக்கும் பல புண்ணிய ஆத்மாக்கள் வாக்குகளை… 
=============================
# புண்ணிய ஆத்மாக்கள் வாக்குகளை படித்துக்கொண்டே இருங்கள்…. 
=============================
# புண்ணிய ஆத்மாக்கள் வாக்குகளை கேட்டுக்கொண்டே இருங்கள்…
=============================
#  அனைவருக்கும், கடல் அலை போல, எடுத்து , மீண்டும் மீண்டும்  ஓயாமல் சொல்லிக் கொண்டே இருங்கள்…
=============================
# பல பாவங்கள் மறையும்.  பல புண்ணியங்கள் சேரும்.
=============================


அதனால்தான் புண்ணிய ஆன்மாக்களை எதை என்று அறிய பின் ஞானிகளையும் ரிஷிகளையும் கூட பல சித்தர்களையும் கூட எடுத்து வந்து கொண்டே இருக்கின்றேன்.

இவை கேட்டாலே போதுமானது.

அதனால்தான் பல பல இதிகாசங்கள் இன்னும் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

அவை படித்தாலே பல பாவங்கள் மறையும். 

பல புண்ணியங்கள் சேரும்.

ஆனால் மனிதன் அதை உணர்ந்து கொள்வதே இல்லை எதை என்று புரிய.

=================================
# உங்கள் எண்ணம், உங்கள்  போல் வாழ்வு 
=================================

அதனால்!!...... நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகுவாய்!!!!! என்பவை எல்லாம் நிச்சயம் பின் அதாவது பின் பழமொழி உண்டு.

அதையெல்லாம் பின் யான் சொல்லவில்லை. 

புதிதாகவே சொல்கின்றேன். அதை நீங்களே அறிந்தது.

இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட. அதனால் பின் எதற்கு? ஏது? எங்கு? சக்திகள் உள்ளது என்பதை எல்லாம் இன்னும் நிச்சயம் தன்னில் கூட. 

=========================
# இவ்விடம் இந்திரா தேவன் அரசாட்சி புரிந்த இடம். 
=========================

அதாவது நிச்சயம் அழகாக இங்கு பின் எவை என்று அறிய. 

நிச்சயம் தன்னில் இங்கு அரசாட்சி புரிந்தான் பின் இந்திரனே.

இதனால் பல வழிகளிலும் கூட மக்களுக்கு பல தொண்டுகளை செய்தான்.

===========================
# சைவத்தை கடை பிடித்தால் அனைத்தும் கிட்டும்.
===========================

இதனால் எதை என்று புரிய. பல வகையில் கூட நிச்சயம் தன்னில் கூட அனைவரும் பின் அதாவது சைவத்தை பின் பிடிக்க வேண்டும் என்றெல்லாம்.

சைவத்தை பிடித்தால் அனைத்தும் நல்கும் என்றெல்லாம்.

=============================
# உயிரை கொன்ற பாவங்கள் நீங்க ……
=============================
# உமை அன்னை பார்வதி தேவியிடம் , இந்திர தேவன் வாங்கிய சூலத்தின் மூலம், இவ் தேசத்தில் உருவாக்கிய நீர் ஊற்றுகள் - அதில் நீராடுதலே அனைத்தும் பாவமும் மறையும். புண்ணியம் பெருகும்.
=============================

அப்படி தெரியாமலும் பின் ஒரு உயிரை கொண்டு விட்டாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் யான் அதாவது உருவாக்கினேனே!!!!. 

அதாவது நிச்சயம் தன்னில் எதை என்று கூட பின் சூலத்தை இட்டு அதாவது பின் தாயே!!! கொடுத்தவை. 

இவை தன் பின் நீராடடுதல் தன்னிலே அனைத்தும் மறையும். பின் புண்ணியம் பெருகும்.

சிறு சிறு தவறுகள் தெரியாமலே மனிதன் செய்து விடுகின்றான். அவையெல்லாம் இங்கு மறையும் என்பவைக்காக நிச்சயம் இங்கு எதை என்று புரிய.

பின் அதாவது பின் இந்திரன் பல வகையில் கூட மக்களுக்காக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் செய்து வைத்தான்.

இப்பொழுதும் கூட பின் எண்ணிக்கொண்டே அவை பேசிக்கொண்டே தான் இருக்கின்றது. இன்னும் கூட எவை என்று அறிய.

===========================
# இந்திரா தேவன் செய்த புண்ணியங்கள் , உலகம் அழியும் வரை நீடித்து நிற்கும்.
===========================

ஏனென்றால் அவன் செய்த புண்ணியங்கள் இன்னும் கூட எவை என்று அறிய உலகம் அழியும் வரை நீடித்து நிற்கும்.

கவலைகள் வேண்டாம். 

நிச்சயம் அதாவது பின் அதாவது அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட. 

============================
# சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு எல்லாம் யாங்கள்  பலமுறை உண்மைகள்  புரிய வைப்போம்
============================

பின் அதாவது பின் என் வழியில் வருவோருக்கெல்லாம் யாங்கள் நிச்சயம் அதாவது சித்தர் வழியில் வருவோருக்கெல்லாம் யாங்கள் பலமுறை நிச்சயம் தன்னில் உண்மைகள். (உண்மைகளை புரிய வைப்போம்)

ஏனென்றால் வருங்காலத்தில் பல கஷ்டங்கள் பல அழிவுகள் வரக்கூடும் என்பது நிச்சயம் தெரியும். 

இதனால் எவை என்று கூட எப்படியாவது நினைத்தாலே நிச்சயம் தன்னில் கூட. அதாவது நினைத்தாலே ஏதாவது ஒரு  சிறு வழியில் யாங்கள் உதவிகள் செய்வோம்  எப்படி ஏது என்றெல்லாம்.

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் கூட பின் அனைத்திற்கும் மனிதனின் பின் உடம்பிற்கு பல வகையில் கூட இவ்வுலகத்தில் பல வழிகளில் கூட ஞானம் பெற பின் வழிகள் இருக்கின்றது.

==========================
# அதி விரைவாக பொய்யை நோக்கி சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன். இதுதான் கலியுகம்.
==========================

ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்து விடுகின்றான். நிச்சயம் தன்னில் கூட !!

பின் பொய்யை நோக்கி சென்று கொண்டே இருக்கின்றான். இதுதான் கலியுகம்.

============================
# பல மக்களை ஞானிகள்  திருத்துவார்கள். 
============================

கவலைகள் இல்லை. நிச்சயம் பல ஞானிகளை எழுப்புவேன். 

பின் பல மக்களை பின் எதை என்று கூட அவ் ஞானிகள்  திருத்துவார்கள். ஆசியும் தருவார்கள். 

================================
# அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆசிகள் 
================================

ஆசிகள் !

ஆசிகள் !!

ஆசிகள் !!!

=================================
( வாக்கு முடிந்த பின்னர்,  அடியவரின் கேட்ட ஒரு கேள்விக்கு பதில்)

சுவடி ஓதும் மைந்தன் :- அவருடைய இடம் இது. (இந்திர தேவன்)  இது அவர் வாழ்ந்த இடம்.
=================================

==========================================
ஆலயம் புனித ஊற்று குளம் பற்றிய விபரங்கள் 
==========================================

===================================
# சுவடி ஓதும் இடத்தில், ஒரு அடியவர் மூலம்  வந்த நேரடி குறிப்புகள் 
===================================

அமைதியான சூழலில், பசுமை போர்த்திய பள்ளத்தாக்கிற்கு நடுவே அமைந்துள்ள இந்த ஆலயம், ஆத்மார்த்தமான அமைதியைத் தரக்கூடியது.
இந்திரனின் அரசாட்சித் தலம்:  இந்திரன் இப்பகுதியைத் தனது ஆட்சி பீடமாகக் கொண்டிருந்தார். 

ஏழு புனித ஊற்றுகள்:
இந்த ஆலயத்தில் இந்திர பகவானால் தோற்றுவிக்கப்பட்ட ஏழு புனித நீரூற்றுகள் உள்ளன. இவை வெறும் நீர்நிலைகள் அல்ல; இவை ஆன்மீக ஆற்றல் கொண்டவை. மனிதர்களின் தீராத கர்ம வினைகளைத் தீர்க்கும் பொருட்டு, இந்திரன் ஈசனை (சிவபெருமான்) வேண்டி நின்றதாகவும், அதன் பயனாகத் தோன்றியதே இந்த ஊற்றுகள் என்பதும் வரலாறு.
சிறப்பம்சங்கள்:
 * கர்ம வினை நிவர்த்தி: மக்களின் பாவ மூட்டைகளைக் கரைக்க ஈசனிடம் வரம் கேட்டு உருவாக்கப்பட்ட தலம் இது.
 * புனித மரம்: இங்குள்ள புனித மரங்களும், பாறைச் சிற்பங்களும் இந்த இடத்தின் பழமையைப் பறைசாற்றுகின்றன..

==========================================
# புரா மெங்கனிங்  கோயில் பற்றிய விபரங்கள் 
==========================================

Address :- Pura Menganing , Jalan Tirta No.25M, Sareseda, Tampaksiring, Kec. Tampaksiring, Kabupaten Gianyar, Bali 80552, Indonesia

கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/nnCEeoVujbNVBgbK9
பக்கேரிசன் பள்ளத்தாக்கின் மறைந்த ரத்தினம் — புரா மெங்கனிங் (சுருக்கம்)
புரா தீர்த்த எம்பூலுக்கும் குனுங் காவிக்கும் அருகில், இயற்கையின் மடியில் மறைந்து கிடக்கும் ஒரு அமைதியான, குறைவாகப் பார்வையிடப்படும் பழமையான கோயில் தான் புரா மெங்கனிங்.
தீர்த்த எம்பூலிலிருந்து தெற்கே பத்து நிமிட நடைப்பயணத்தில், ஒரு பிரமாண்ட ஆலமரத்தின் நிழலில் அமைந்துள்ள இந்த கோயில், புனித நீரூற்றுகளும் இயற்கை குளங்களும் சூழ்ந்த ஒரு ஆன்மீகத் தலமாகும்.
🛕 கோயிலின் அமைப்பு
1. மேல் கோயில் (ஜெரோவான்)
உள் கருவறை, கல் சன்னதிகள், பாசி படர்ந்த சிலைகள்
இந்து–பாலினீஸ் புராணங்களைச் சித்தரிக்கும் செதுக்கல்கள்
பிரார்த்தனை மற்றும் காணிக்கைகள் நடைபெறும் பகுதி
7–11ஆம் நூற்றாண்டு மத்திய ஜாவா பாணியில் இருந்த ஒரு கல் கோயிலின் எச்சங்கள் 1980களில் கண்டுபிடிக்கப்பட்டன
மலையின் உச்சியில் காணப்படும் பெரிய கல் கட்டிடம் — புனரமைக்கப்பட்ட பிரசாதம்
2. கீழ் கோயில் (பான்கோரன்)
இயற்கை நீரூற்று நீரால் நிரம்பிய கல் குளங்கள்
சடங்கு சுத்திகரிப்புக்கான நீரூற்றுகள்
தீர்த்த எம்பூலைப் போல கூட்டம் இல்லாமல், உள்ளூர் பாலினீஸ் மக்கள் அமைதியாக ஆன்மீகப் பயிற்சி செய்யும் இடம்
வருகை குறிப்புகள்
நாளின் எந்த நேரமும் வரலாம்
சரோங் மற்றும் புடவை அணிந்து மரியாதை காட்ட வேண்டும்
கோயிலுக்குச் செல்ல சுமார் 150 படிக்கட்டுகள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment