​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 2 May 2023

சித்தன் அருள் - 1331 - அன்புடன் அகத்தியர் - சப்தசிருங்கி தேவி ஆலயம்!






12/3/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு -  வாக்குரைத்த ஸ்தலம் : சப்தசிருங்கி தேவி ஆலயம்.சக்தி பீடம் மகாராஷ்டிரா.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே என்னுடைய ஆசிகள்!!

 நலன்கள்!! நலன்கள்!!

அப்பனே இன்னும் பல மனிதர்களுக்கு இக்கலியுகத்தில் மட்டுமல்லாமல் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய காலங்களில் பின் அப்பனே பல பல அருள்களும் கூட யான் கொடுத்தேன் அப்பனே!!!!

ஆனாலும் நன்றாகத்தான் வாழ்ந்திட்டு வாழ்ந்திட்டு மீண்டும் மீண்டும் கர்மா பகுதியை சேர்த்து சேர்த்து அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்புத்தான் எடுத்து வருகின்றார்கள் மனிதர்கள்!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் இக் கலி யுகத்தில் அப்பனே நிச்சயம் பின் தண்டனைகள் கொடுக்கப்படாமல் அப்பனே அதாவது துன்பங்கள் கொடுக்கப்படாமல் அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் ஞானத்தையும் அடைய முடியாது வாழ்க்கை பற்றியும் கூட தெரியாது அப்பனே இதைத்தான் நிச்சயம் சித்தர்கள் ஒவ்வொருவரும் கூட அப்பனே நிச்சயம் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்களை கொடுத்து நிச்சயமாய் மனமாற்றம் செய்து தான் அப்பனே மாற்ற முடியும்!!!

இது நிச்சயம் அப்பனே!!!

அப்படியே விட்டுக் கொண்டிருந்தாலும் அப்பனே என்ன லாபம்?????

ஆனாலும் அப்பனே யான் இங்கே தான் ஆசிரமத்தையும் கூட அமைத்தேன் அப்பனே அமைத்து பல மனிதர்களுக்கு கூட அப்பனே பல உதவிகள் அவை மட்டும் இல்லாமல் எதை என்று பல இலக்கணங்கள் கூட கற்றுக்கொடுத்தேன் அப்பனே!!!!!! 

இன்னும் அறிந்தறிந்து அப்பனே ஆனாலும் இவ்வாறு யான் கற்றுக் கொடுப்பதை நன்றாக உணர்ந்து இவர்கள்( மாணவ சிஷ்யர்கள்) பின் எவ்வாறு என்பதையும் கூட இன்னும் பல பல பல பல வழிகளிலும் கூட ஆங்காங்கு சென்று நிச்சயம் தர்மத்தை நிலை நாட்டினார்கள் என்பேன் அப்பனே!!!

ஆனால் இப்போதைய நிலைமைக்கு அவ்வாறெல்லாம் யாரும் இல்லை அப்பனே!!!

எதை என்று இன்னும் எதை எதை என்று அனுபவிக்க அதனால் அப்பனே இத் தேவி... எதை என்று கூட சிறந்த!!!!! சிறந்த அப்பனே எவை என்று அறிந்தறிந்து பல    உடன் எதை என்று பின்பற்றாமலே... அருள்கள்!!!!!!!!

அப்பனே மனக்குழப்பங்கள்!! அப்பனே எதை என்று கூட பேய்!! எவை என்று கூட ஆனாலும் பேய் என்பது மனமே ஆனாலும் அவ் மனம் எதை என்று அறிய  பைத்தியக்காரனாக திரிபவர் கூட மனதாலே.... இதனால் இவ் தேவி நிச்சயமாய் சரி செய்யும்!!!

சில சில வினைகள் ஆயினும் அதாவது தீய சக்திகளை விரட்டும் சக்தி உடையவள் இவள்!!!!

அதனால் நிச்சயம் அமாவாசை திதிகளிலும் கூட இவள்தன் மலையை சுற்றி அதாவது ஏழு மலைகளிலும் சுற்றி சுற்றி வந்து வந்து எண்ணற்ற தவங்கள் இன்னும் கூட செய்து கொண்டிருக்கின்றார்கள் ஞானியர்கள்!!!! இவ் ஏழுமலைகளிலும் கூட!!!

இதனால் நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் காப்பார்கள்!!!

ஆனாலும் பல பல உயர் செல்வந்தர்கள் நிச்சயம் இதன் அடியிலும் கூட பல வழிகளிலும் பலப்பல சக்திகள் அதாவது நிச்சயம் பல பொருள்கள் அடங்கியுள்ளது !!

அதனை எடுக்கக்கூட ஆனாலும் நிச்சயம் எடுக்க வந்தோரை எல்லாம் இத்தேவி தடுத்து நிறுத்தி உடனடியாக தண்டனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றாள் இப்பொழுதும் கூட!!!

அதை உணர்ந்தவர்கள் பலர்!!!

இதனால் இதன் மேலே அதை இதை என்று கையைக் கூட எதை என்று கூட..........( அப்பொக்கிஷங்கள் மேல் கையை கூட வைக்க முடியாது) 

பின் இதனால் தான் அப்பனே எவை எவை என்று அறிந்து அறிந்து இத் தேவியை அதாவது நிச்சயம் அவ்வாறு இறைவன்களே ஆட்சி செய்கின்ற திருத்தலங்களும் கூட இருக்கின்றதப்பா!!!!

அத் திருத்தலங்களை நிச்சயம் யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே!!

அப்படி ஏதாவது செய்தாலும் கை கால்கள் கூட அப்படியே நின்று விடும் என்பேன் அப்பனே!!!

சக்திகள் மிகுந்து கூடிய உள்ளவை அப்பனே!!!

ஆனால் இன்றளவு மனிதர்கள் அப்பனே ஏதோ ஒரு எதை என்று அறிய நிலத்தை தன் தம்தனக்கு கூட சொந்தமில்லாதவைகளை கூட அமைத்துவிட்டு பின் போராடிக் கொண்டு மீண்டும் எதை எதை என்று அறியறிய !!! ( மண்ணாசை) 

அதனால் அப்பனே வேண்டாமப்பா!!!!!

அறிந்தறிந்து அப்பனே நிச்சயம் இன்னும் ஞானங்கள் அப்பனே அதனால்தான் சொல்கிறேன் அப்பனே """ஈசன் !!! இன்னும் அப்பனே அதாவது பல உருவமான எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே இன்னும் கூட அப்பனே புதைந்துள்ளது பல லிங்கங்கள் அப்பனே!!!!

இதை எவை எவை என்று அறிய அறிய மேல்நோக்கி நிச்சயம் ஈசனே வருவான் என்பது மெய்யப்பா!!!!!!

(இன்னும் புதைந்துள்ள பல ஈசனுடைய லிங்கங்கள் வெளிப்படும் ஈசனே வெளியே வருவார்)

ஏனென்றால் அப்பனே அன்றைய காலத்தில் அப்பனே இன்னும் மனிதர்கள் வாழ பின் வாழ்ந்தும் விடுகின்றார்கள் என்பதற்கிணங்க நிச்சயம் அரசர்களே எதை என்று அறியாமலே மக்கள் மூடநம்பிக்கைகளின் நுழையட்டும் என்று அப்பனே பல வழிகளிலும் கூட கெடுத்து விட்டனர்.

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் உடனுக்குடன் தண்டனை இறைவன் கொடுத்தே தீருவான்!!!!!! கொடுத்தே ஆவான்!!!!!

அவை மட்டும் இல்லாமல் இன்னும் பல மனிதர்களை கூட உண்மையான பக்திகளை யாங்கள் கடைப்பிடிக்க செய்திடுவோம் அப்பனே நலன்களாகவே!!!

இதனால் அப்பனே நிச்சயம் தேடி அலைய வேண்டும் இறைவனை அப்பனே!! அதாவது அப்பனே தேடி தேடி அலைந்தால்தான் உன்னருகில் வந்து விடுவான் இறைவன்.

பின்பு உணர்ந்து கொள்வாய் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வளவு தேடியும் இறைவன் கிடைக்கவில்லையே கடைசியில் நம்தனே அதாவது அருகிலேயே இருக்கின்றான் என்று.

ஆனாலும் அப்பனே தேடி அலையா விட்டால் அப்பனே ஒன்றும் கிட்டாதப்பா!!!!

அருளும் கிட்டாது!!!! பொருளும் கிட்டாது!!!!

அப்பனே எவையும் கிட்டாது அப்பனே!!!!

நீ துரும்பு என்பேன் அப்பனே!!!!

துரும்பு எதை எதை என்று அறிந்து அறிந்து அதனால் ஒரு இடத்தில் இருந்து கொண்டால் அப்பனே எந்த ஒரு பயன்களும் இல்லையப்பா!!!!! 

அப்பனே எதெதற்கோ ஓடுகின்றாய் அப்பனே.... அருள்கள் பெறுவதற்கு நன்றாக வாழ்வதற்கு ஓடவில்லையே அப்பனே!!!

தெரிந்து கொண்டால் நன்று அப்பனே!!!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயம் சென்று கொண்டே இருந்தால் அப்பனே எங்கெங்கு திருத்தலங்கள் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே ஆனால் மிக்க மகிழ்ச்சி அப்பா!!!!

யான் சொல்லியதை கேட்டாலே விதியை நிச்சயம் நாங்கள் மாற்றி அமைப்போம் அப்பனே

ஆனாலும் எதை என்று கூட மனிதனுக்கு உடனடியாக அனைத்தும் கிடைக்க பின் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமா?????????
 யாங்கள்!!!!!!?????

அப்பனே இவைகள் எல்லாம் பொய்கள் அப்பா!!!
நிச்சயமாய் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!!

 ஏமாறாதீர்கள்!!! ஏமாற்றாதீர்கள்!!!!

அப்பனே எதை என்று எவை என்று உணராமல் எதற்கும் ஆசைப்படாமல் அப்பனே நன்றாகவே வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் என்னால் முடியவில்லையை அகத்தியனே.... என்று நீங்கள் சொன்னாலும் நிச்சயம் அறிந்தறிந்து ஏதாவது ஒரு ஏதாவது ஒரு ரூபமாகவோ ஏதாவது ஒரு மூலமாகவோ யான் நிச்சயம் ஏற்படுத்தி எங்கெல்லாம் நீங்கள் செல்ல வேண்டும் என்று ஆசைகள் வைத்துள்ளீர்களோ நிச்சயம் யானே அழைத்துச் செல்வேன்!!!!

உண்மையை கடைப்பிடியுங்கள் பொய்களை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துங்கள்!!!

அப்பனே மனிதர்களிடத்திலே அனைத்து சக்திகளும் இறைவன் கொடுத்துள்ளான். ஆனாலும் அப்பனே அதை சரியாக பயன்படுத்துவதே இல்லை!!!!

அப்பனே சரியாக ஒன்றுக்கு மட்டும் பயன்படுத்துகின்றான் என்றால்???? அது கர்மத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றான் அதாவது பாவத்திற்கு மட்டுமே பாவத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றான்!!!!

அதனால் என்ன பிரயோஜனம்???? அப்பனே!!

அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே எப்படி எல்லாம் வாழ்க்கை இன்னும் வாழ தெரியாமலே வாழ்ந்து வருகின்றனர்!!!

இறைவன் காத்திடுவான் இறைவன் காத்திடுவான் என்றெல்லாம் அப்பனே!!!

 ஆனாலும் அனைத்தையும் செய்து விட்டு நீங்கள் வந்தால்?!!!.....

 இறைவன் எப்படி காத்தருள்வான்????? அப்பனே சொல்லுங்கள் நீங்கள்!!!!

எதை எதை என்று அறிந்தறிந்து அதனால் மனதை முதலில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே  எதை என்று அறிய !!!!

அதனால் """ எண்ணம் எப்படியோ? அப்படித்தான் வாழ்க்கை அமையும்!! அப்பனே!!!!

பொறாமை குணம் உன்னிடத்தில் இருந்தால் பின் பொறாமை உள்ளவர்களே உன்னை சுற்றி இருப்பார்கள் அப்பனே!!!!! 

திருடனாக நீ இருந்தால் அப்பனே திருடர்களே உன்னை சுற்றி இருப்பார்கள் அப்பனே

பொய் கூறுபவனாக நீ இருந்தால் அப்பனே அனைவரும் உன்னிடத்தில் இருப்பவர்கள் எல்லாம் பொய் கூறுபவர்கள் தான் இருப்பார்கள் என்பேன் அப்பனே

இதனால் தெளிந்து உண்மை நிலையை பெறுங்கள் அப்பனே!!!

இவ் தேவி சக்தி வாய்ந்தவள் என்பேன் அப்பனே !!!

இதனால் மனக்குழப்பங்கள் இல்லத்திலும் கூட பல தொந்தரவுகள் மனிதர்களுக்கு அப்பனே இப்படி திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்தால்தான் அப்பனே கர்மமும் போகும் துன்பமும் விலகும் அப்பனே இன்பமும் வரும் அப்பனே

கஷ்டங்கள் இல்லாமல் ஏதும் யாங்கள் கொடுக்க மாட்டோம்!!!!

அப்பனே எதை என்று கூட கஷ்டங்கள் பின் வந்து விட்டால் எதை எதை என்று அறிந்திருந்து அப்பொழுதுதான் இறைவனை நாடுகின்றான் அப்பனே!!!

மீண்டும் இறைவனை தேடி தேடி அலைந்து அப்பனே எவை எவை என்று அறிய அறிய அதனால் இன்பத்தில் எவை என்று அறிய சிறு துரும்பு அப்பனே இறைவன் கொடுப்பான் அப்பொழுதே நிச்சயம் பிடித்துக் கொள்ள வேண்டும் இன்ப நிலையில் இருக்கும் பொழுதே இறைவனை நாடி நாடி சென்று வழிபட்டால் அப்பனே துன்ப நிலைகள் வரும் பொழுது அப்பனே நிச்சயமாய் இறைவன் காத்துக் கொள்வான் அப்பனே!!! 

துன்பம் நெருங்கும் பொழுது தான் இறைவனை அப்பனே தொடுகின்றான் மனிதன்!!!

அப்படி இருக்க பின் எப்படி அப்பா உடனடியாக அனைத்தும் கிடைக்கக்கூடும்???? என்பதை கூட.......

இதனால் சிறிது காலம் இன்பம் அப்பனே சிறிது காலம் துன்பம் அப்பனே துன்ப நேரத்தில் தான் இறைவனை வணங்க வணங்க அப்பனே நிச்சயம் அனைத்தும் தெரிய வரும்.

ஆனால் ஒன்றும் கொடுக்கவில்லையே இறைவன் இல்லையே என்று சொல்லிவிடுகிறான் மனிதன் அப்பனே அதனால்தான் அப்பனே எப்பொழுதும் என் பக்தர்கள் அப்பனே ஒன்றை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் அப்பனே!!!

அப்பனே இதையே யான் சொல்வேன் அப்பனே மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் அப்பனே!!!!!

இவை என்று கூட இவைதன் அப்பனே ஒரு பழமொழியாகவே உள்ளது!!!

இதனை நீங்கள் எப்பொழுதும் கூட அதிகாலையிலே அப்பனே எதை எதை என்று அறிய அறிய எழுந்து நின்று அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து இதை நீங்கள் எப்பொழுதும் செப்ப வேண்டும் அப்பனே

அதனால் அப்பனே யாங்கள் எதை என்று கூட இங்கு அரசன் என்பவன் கூட இக்காலத்தில் கலியுகத்தில் உடனடியாக மனிதனுக்கு பாவங்கள் செய்ததாகினும் கூட உடனடியாகவே யாங்கள் தண்டனைகள் கொடுப்போம் அப்பனே நிச்சயம் சத்தியம் அப்பனே கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் ஒவ்வொருவருக்கும் கூட!!!

அப்பனே சரியாக உணர்வதில்லை!!!

அப்பனே இத் தேவியின் சிறப்பு இன்னும் இன்னும் ஏராளமான வாக்குகளிலும் கூட சில சித்தர்கள் வந்து செப்புவார்கள் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே!!!!

அதனால் என் ஆசிரமம் இங்கேதான் அமைத்து வைத்தேன் அப்பனே பல ஞானியர்களை யான் உருவாக்கியுள்ளேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் கூட அப்பனே என் சீடர்கள் எவை என்று அறிய அறிய இங்கு தங்கி அப்பனே மறைமுகமாகவே பல உருவங்களில் கூட எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் வருகின்றார்கள் அப்பனே!!!

இதனால் குறைகள் இல்லை அப்பனே நலன்கள் அப்பனே இதனால் தேடி தேடி அலைந்தால் தான் அப்பனே உண்மை நிலைகள் தெரியும்!!!!

தேடாமல் இருந்தால் அப்பனே ஒன்றும் தெரியாதப்பா!!!! மாய்ந்து விடுவான்!!!

இப்படிதான் அப்பனே மனிதன் பிறந்து பிறந்து ஒன்றும் தெரியாமல் மீண்டும் இறந்து இறந்து மீண்டும் பிறந்து பிறந்து அற்ப சுக வாழ்க்கைக்காக அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால் வேண்டாமப்பா!! பிறவிகள்!!!

பிறவிகள் நீக்கவே எதை எதை என்று அறிந்து அறிந்து என் பக்தர்களுக்கு அப்பனே யான் எதை என்று கூட சில கஷ்டங்கள் கொடுத்தாலும் நிச்சயமாய் அப்பனே பொறுத்திருங்கள் அப்பனே!!!!

அனைத்தும் நல்லதற்காகவே அப்பனே!!!

அதனால்தான் அப்பனே வாக்கினை( ஜீவ நாடியில் வாக்கு) கேட்டாலும் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை எவை என்று உணர்ந்து உணர்ந்து................. உடனடியாக எந்தனுக்கு தா!!!! தா!!!!.......... என்றால் அப்பனே எப்படியப்பா????????? தர முடியும் அப்பனே!!!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் பொறுத்திருங்கள் அப்பனே அனைவருக்கும் ஆசிகள் உண்டு அப்பனே!!!!.......... ஆனால் ஒரொருவரின் எண்ணத்தைப் பொறுத்தே யான் வாக்குகளும் சொல்வேன் அப்பனே!!!! 

நல் நிலைகள்( நல்ல இடத்தில்) அப்பனே எதுவும் கேட்டு விடாதே!!!! அப்பனே!!!

எந்தனுக்கு தெரியும் உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ எதை என்று கூட எத்தகுதிகள் உங்களிடத்தில் உள்ளதோ!!!! எதை எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் கொடுப்போம்!!!!

நீங்கள் கேட்க தேவையே இல்லை!!!!!....... அப்பனே!!!

நீங்கள் கேட்டு தான் இங்கு வந்து உள்ளீர்களா???? அப்பனே நீங்கள் கேட்டுத்தான் அனைத்தும் பெற்றுள்ளீர்களா???? என்பதுதான் இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் இறைவன் நிச்சயம் எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஏற்கனவே எழுதி இருந்ததைக் கூட இங்கு நடக்கும் என்பது சத்தியம் அப்பனே!!!!

அதனால் அப்பனே சில துன்பங்கள் இருந்தாயினும் யான் பல வழிகளிலும் கூட காத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

அப்பனே விதியின் தன்மையும் கூட.... உயிர் அற்றவை எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே உயிர் போயிருந்தாலும் என்னால் பிழைக்க வைக்க முடியும் என்பேன் அப்பனே!!! அனைத்தையும் என்னால் கொடுக்க முடியும் !!!

அதனால் பொறுத்தார் பூமி ஆள்வார்!!!

இதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்  அப்பனே அறிந்தறிந்து!!!! 

ஆனாலும் எதை என்று அறிய அறிய பொறுத்தால்தான் அப்பனே நிச்சயம் அனைத்தும் தெரிய வரும் உடனடியாக கிடைத்துவிட்டால்!!.....................

அப்பனே எதற்கும்..... மயங்காதீர்கள் அப்பனே மயங்காதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன்!!!

முதலில் உசுப்பேத்துவானப்பா ஆசையை இன்னும் கூட மனிதன் திருடன் அப்பா அதனால் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!

நிச்சயம் இத் தேவியை எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து மனதிலே நிறுத்தினாலே போதுமானது அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து உண்மை நிலைகள் கூட அப்பனே அப்படியே வந்து நிச்சயம் தட்டறிவாள் அப்பனே!!!!! இத் தேவிக்கு அவ்வளவு சக்திகள் உள்ளதப்பா!!!

எதை எதை என்று அறிந்தறிந்து அப்பனே இன்னும் ஏராளமான சித்தர்களும் கூட இங்கே தங்கியுள்ளார்கள்!!! அப்பனே ஏற்கனவே எதை என்று அறிய அறிய போகனும்( போகர் சித்தர்) இங்கு வந்து சென்று விட்டு அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து பல நூல்களையும் எழுதி உள்ளான் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!

இப்பொழுதும் கூட அதனால்தான் அப்பனே எவை என்று கூட எத்தீங்கு எவை எவை என்று உணர்ந்து உணர்ந்து தீய சக்திகளாயினும் இங்கு வந்து விட்டு சென்றால் கூட நிச்சயம் ஒன்றும் செய்ய இயலாது யாராலும் கூட அப்பனே!!!

அதனால் எவை எவை என்று அறிந்து அறிந்து இன்னும் கூட ஞான மொழிகளை யான் கற்பிக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால்!!!!!

நலன்கள்!!!! ஆசிகள்!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக விளங்கும் ஸகயாத்ரி மலைத்தொடர்களில் ஏழு சிகரங்களுக்கு நடுவில் சப்த சிருங்கி என்றால் வடமொழியில் ஏழு சிகரங்கள் என்று பொருள் விளக்கம்... ஏழு சிகரங்களுக்கு நடுவே தேவி சப்த சிருங்கி அம்பாள் வீற்றிருக்கின்றார். இவருடைய கோலம் மிகவும் வித்தியாசமானது தனது சிரசை ஒரு களித்து சாய்த்து மார்க்கண்டேயர் ரிஷி தேவி பாகவதம் கூறுவதை தேவி கேட்டுக் கொண்டிருக்கின்றார். அந்தக் கோலத்தில் தேவி ரூபம் உள்ளது!!!!

குருநாதர்  அகத்திய பெருமானுடைய வாக்கினை தொடர்ந்து அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் பதில் வாக்கு தந்தார் அதன் தொகுப்பு

குருவே சரணம் சரணம் நீங்கள் வாக்கில் உரைத்திருந்தீர்கள்!!! இங்கே தங்களது ஆசிரமம் அமைந்திருந்தது என்று இந்த பகுதியில் அது எங்கு இருந்தது????

அப்பனே எதை எதை என்று அறிய அறிய பின் எவை என்று உணர உணர அப்பனே இவ் மலையே எவை என்று கூற என் ஆசிரமம் தானாப்பா!!!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம் குருவே இந்த தேவியை வணங்குவதற்கு விசேஷ நாட்கள் உள்ளதா?? எந்த நாட்களில் வந்து வணங்கலாம் ??

அப்பனே அமாவாசை தினங்களில் வந்து வணங்கலாம்!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய.... சிவாஜி ஆனவன் அப்பனே அமாவாசை திதிகளில் அப்பனே எவை என்று கூட அம்பாளை வணங்கி வணங்கி வெற்றி கொண்டுள்ளான் என்பேன் அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய பெண் தெய்வங்களுக்கு அப்பனே அமாவாசை தினங்களில் சக்திகள் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே!!!

ஆண் தெய்வங்களுக்கு அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை எவை என்று புரிய புரிய பௌர்ணமி தன்னில் பின் சக்திகள் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இதையும் கூட அப்பனே நிச்சயம் அறிவியல் ரீதியாகவே யான் எடுத்துரைக்கப் போகின்றேன்!!!! பொறுத்திருந்தால் அப்பனே!!!!

ஆனாலும் அனைத்தும் ஒன்றே அனைத்து தெய்வங்களும் ஒன்றே அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே ஏற்றுக் கொள்ளுங்கள்!!!!!

அப்பனே எதை  எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று கூட எப்பொழுது எதைச் சொல்ல வேண்டுமோ அதை யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அதைப் பின்பற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் அப்பனே அதனால் குறைகள் ஏது?????

குருவே இங்கே இந்த மலையே உங்கள் ஆசிரமம் என்று கூறி விட்டீர்கள் இங்கு தாங்கள் எங்கு அமர்ந்து தவம் செய்தீர்கள்??? அந்த புனிதமான இடத்தை நாங்கள் வணங்க விரும்புகின்றோம்!!!!!

எதை என்று அறிந்து அறிந்து எவை என்று புரிந்து புரிந்து இவள் நிற்கின்றாளே!!!!!!! ( சப்த சிருங்கி அம்பாள்) இங்கேதானப்பா!!!!

குருவே இந்த தேவியின் மகாத்மியம் பற்றி தங்களுடைய திருவாய் மொழியிலே கேட்க விரும்புகின்றோம்

அப்பனே இப்பொழுது இல்லை என்பேன் அப்பனே பொறுத்திருக!!!!!!! பொறுத்திருந்தால் தான் அனைத்தும் கிடைக்கும் என்பேன் அப்பனே இப்பொழுது தான் யான் சொன்னேன்( பொது வாக்கில்) அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து நீங்கள் கேட்க தேவையில்லை என்பேன் அப்பனே!!!! அனைத்தும் யானே சொல்கின்றேன் என்று.... உணர்ந்து கொள்ளுங்கள்!!!

குருவே தேவி புராணம் மார்க்கண்டேய ரிஷி இங்கிருந்து தான் எழுதினாரா????

அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று புரிந்து புரிந்து இன்னும் அப்பனே வந்து கொண்டே இருங்கள்.... நிச்சயம் புராணங்கள் எல்லாம் யான் குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!!

குருவே கோயில் குளத்தின் அருகே இருக்கும் சித்தேஸ்வரர் ஆலயம் பற்றி குறிப்பிடுங்கள்

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் இதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயமாய் அந்த ஆலயத்தில் கூட பல சிறப்புக்கள் அப்பனே யானும் எதை என்று அறிந்து அங்கேயும் கூட அப்பனே எவை என்றும் கூட தெரியாமல் அப்பனே உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒரு சித்தன் உருவாக்கியதும் கூட எதை என்று கூட ஆனாலும் அங்கே தான் அவ் சித்தன் இருக்கின்றான் அப்பனே அதைப்பற்றி விவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!!!

எதை என்று கூட என் சீடன் அப்பனே எவை என்று கூட புலத்தியனே!!!!!!! 

அப்பனே எந்தனுக்கும் கூட பல பல தவங்களும் கூட எதை எதை என்று அறிய அறிய அதனால் நிறுத்திக் கொள்கின்றேன் இப்போது நிலைமைக்கு அப்பனே மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன்!!!

நலம் ஆசிகள்!!!!!!

பாரத நாடு முழுவதும் பல்வேறு நாமங்களில் தேவி எண்ணற்ற ஆலயங்களில் கோயில் கொண்டுள்ளாள். ஒரு சில மலைமீது அமைந்திருக்கின்றன. இவற்றில் ஒன்று, மஹாராஷ்டிர மாநிலத்தில் வனி என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான திரயம்பகேஷ்வரர்  நாசிக் நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வனி.

 ஸஹ்யாத்ரி மலைத் தொடரில் ஏழு சிகரங்களுக்கு நடுவே “ஸப்த சிருங்கி“ (சிருங்கம் என்றால் மலைச்சிகரம்) என்ற பெயரில் பார்வதி தேவி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சக்தித் தலங்களில் ஒன்றான இங்கு தாட்சாயணி தேவியின் வலக்கரம் விழுந்ததாக ஐதீகம். மேலும் சப்த மாதர்களின் அம்சமாக இங்கு சப்த சிருங்கியாக எழுந்தருளியிருக்கின்றாள் தேவி, மார்க்கண்டேய முனிவர் இங்குதான் தேவி பாகவதத்தை இயற்றினார்

ப்ரம்மாரி / சப்தஷ்ருங்கி (ஜனஸ்தனா பீடம்) – முகவாய் அல்லது தாடை. வலது கை மற்றும் கால்கள் விழுந்த இடம். 

இந்த ஆலயம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், நாசிக்  கோதாவரி ஆற்றுப்பள்ளத்தாக்கில் (Gothavari valley) ல் உள்ளது.

ஸ்ரீ சப்தஷ்ருங்கி நிவாசினி தேவி அறக்கட்டளை
தத்தா மந்திர் அருகில், சப்தசுர்ங்கி, மகாராஷ்டிரா 423501

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கிலிருந்து 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் இந்த யாத்திரை அமைந்துள்ளது.

இது நாசிக்கிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான கல்வான் தாலுகாவின் நந்தூரியில் அமைந்துள்ளது

சுமார் 510 படிக்கட்டுக்கள் ஏறி செல்ல வேண்டும் தேவியை காண.

படிக்கட்டுகள் மட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் இயக்கப்படும் ரோப் ரயில் வசதியும் உள்ளது நேரடியாக தேவியின் சன்னதி அருகிலேயே ரோப் ரயிலில் இறங்கி தரிசனம் செய்யலாம்.. அமாவாசை பௌர்ணமி மற்றும் நவராத்திரி தினங்களில் மிக விசேஷமாக பூஜைகள் நடைபெறுகின்றது மக்கள் கூட்டமும் மிகுதியாக காணப்படும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. வணக்கம் என்னைப் போன்று சில உண்மையான சீடர்கள் உள்ளனர் ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ள குருதேவருக்குத்தான் மனமில்லை மேலும் அடியேன் காணும் இடங்களில் அனைத்தும் அதர்மமே கொடி கட்டி பறக்கிறது அதை எந்த கடவுளும் கேட்பதில்லை ஆனால் தர்ம வழியில் வழியில் நடக்கும் என்னைப் போன்றோரைதான் கொடுமைகள் செய்கிறார் மேலும் மேலும் இன்னல் தருகிறார் இதற்கு முடிந்தால் குருதேவர் பதில் கூறட்டும்

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha

    ReplyDelete