​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 11 May 2023

சித்தன் அருள் - 1335 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

10/05/2023, புதன் கிழமை அன்று அகத்தியப்பெருமானை, திரு.ஜானகிராமனிடம் இருக்கின்ற ஜீவநாடியில் சந்தித்து அளவளாவும் பாக்கியம் அமைந்தது.

"குருநாதா, அகத்தீசப்பெருமானே" என மனதுள் எப்போதும் அழைத்து அவர் திருப்பாதத்தை மார்பில், சிரசில் தியானித்து பிரார்த்திக்க, திரு.ஜானகிராமன் அடியேனை தொடர்பு கொண்டு "நாடியுடன் உங்கள் இல்லம் வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்" என தெரிவித்தார்.

மதுரையில் மீனாட்சியின் சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் விழா, அறுபடை வீட்டின் ஒரு சில கோவில்கள், மதுரை லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் கோவில் என புண்ணிய தலங்களை தரிசித்து வருகையில், இச்செய்தி வந்தது.

அதனால்தான் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவில், இந்த சந்திப்பை நன்மை பெறச்செய்ய எண்ணி, உங்களிடம் "பொது கேள்வியை" அனுப்பித்தர வேண்டிக் கொண்டேன். இம்முறை கேள்விகள் மிக குறைவாகவே இருந்தது. அகத்தியப்பெருமான் நான்கு மணி நேரம் உரையாடினார். நிறைய நல்ல விஷயங்களை தெரிவித்தார். முதலில் ஒரு பொது அறிவுரையுடன் பொது வாக்கு விவாதம் தொடங்கியது.

"ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே! எவை என்று அறிய! அறிய. நலன்கள் இன்னும் பெருகி கொண்டே போகும். ஆனாலும் எவை என்று அறியாமல், இக்கலியுகத்தில் திரிவார்கள் அப்பா! கோடி கோடி! இறைவன் தன் பக்கத்தில் அமர்ந்தாலும், தேடி, தேடி அலைவாரப்பா! அதனால் ஒன்றும் பிரயோசனமில்லை. அப்பனே! இறைவனை எங்கிருந்து காணலாம்? அப்பனே! எங்கெல்லாம் சென்றால், பின் இறைவனை அடையலாம்? பின் இறைவனை பக்கத்திலேயே அமர்த்திவிடலாம் என்றெல்லாம், யாங்கள், சித்தர்கள் வந்து உரைத்துக்கொண்டே இருப்போம். அதற்கும், பின் கேட்பதற்கும் பின் நிச்சயம் புண்ணியங்கள் வேண்டும். அதனால்தான், முதலில் மனிதர்களுக்கு புண்ணியங்கள் ஏற்படுத்தி  பின் உரைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம், அப்பனே! அதனால், எவை என்று அறிய! அறிய! அறியாத பலர் இன்னும் இருக்கின்றார்கள் அப்பனே!

எதை எதையோ செய்து, பின் அறியாமலே, பின் அகத்தியன் சொன்னான், ஏராளமான சித்தர்கள் எல்லாம் சொன்னார்கள் என்று. ஆனாலும் வரும் காலங்களில் நிச்சயம் தண்டனைகள் உண்டு, உண்டு என்பேன் அப்பனே! ஏன் என்றால், இல்லாத ஒன்றை பின் அப்பெயரை வைத்துவிட்டால் அனைவரும் நம்புவார்கள் என்று செய்து கொண்டிருக்கிறார்கள், அப்பனே! இதனால், தண்டனைகள் உண்டு, உண்டு, சொல்லிவிட்டேன். என் பக்தர்கள் ஆயினும்!

அப்பனே! எதை என்று கூற! சத்தியத்தை, தர்மத்தை கடை பிடிக்காவிடில், நிச்சயம் யானே, பின் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்து, பலத்த அடிகள் கொடுத்து, அங்கேயே மட்டம் தட்டி, அவந்தனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக எதை என்று அறிய அறிய செய்வேன். அதனால், நிச்சயம் மறை முகமாக இருக்கும் பொருளை நிச்சயமாக வைத்து வியாபாரம் செய்யாதீர்கள். இவை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றேன், அப்பனே! ஏன் பல சித்தர்களும் கூட அழகாக எடுத்துரைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!

முதலில், இவ்வுலகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் அப்பனே! நாங்கள் தான் அதற்க்கு வழி. ஆனாலும் ஏமாற்றாதீர்கள் அப்பனே! ஏமாறாதீர்கள் அப்பனே! இன்னொரு முறையும் சொல்கின்றேன் அப்பனே! ஏமாறுபவனுக்கு, இன்னும் அதிக தண்டனை கொடுப்பேன் அப்பனே! அனைத்தும் கொடுத்திருக்கிறேன் அப்பனே! மீண்டும் ஏமாற்றுபவனிடம் சென்றிட்டு, அப்பனே! ஏமாறுகின்றான் என்றால், இவன் எவ்வளவு பெரிய அறிவாளி. எதை என்றும் அறிய! அறிய! யூகித்துக்கொள்ளுங்கள்! இறைவன், அப்பனே, பலமாக அறிவுகள்; கொடுத்துள்ளான், ஆறாவது அறிவு. அப்பனே! அவ் ஆறாவது அறிவை பயன் படுத்திக் கொண்டால், அப்பனே! இறைவனை காணலாம்.

ஆனால், ஆறாவது அறிவை நிச்சயம் பயன்படுத்த முடியாது அப்பனே! ஏன் என்றால், அப்பனே! "மாயை". பந்த பாசங்களில் சிக்கி கொள்கின்றான் அப்பனே. அதனால் தான் ஆறாவது அறிவை பயன்படுத்த முடியாமல் பொய் விடுகின்றது அப்பனே! அவ் ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்தினால் கிரகங்களும் ஒன்றும் செய்யாது, ராகு காலம் இல்லை, எமகண்டம் இல்லை, நல் நேரம் இல்லை, கெட்ட நேரம் இல்லை, அப்பனே! எவை என்று அறிய! அறிய! என்னிடத்தில் வந்து விடலாம் அப்பனே! சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்னும் உயர்ந்துவிடலாம் அப்பனே. வாக்குகள் உண்டு அனைவரும்! கேட்கலாம்.........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete