​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 15 May 2023

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6


41. எமது அப்பனுக்கு பணிவான வணக்கங்கள்!!! எனது ஐயத்திற்கு விடையளிக்க சிரம் தாழ்ந்து வேண்டுகிறேன். ஆட்டோ இம்யூன்(நோய்  எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக செயல்படும் தன்மை) நோய் எதனால் ஏற்படுகிறது ஐயனே. அதற்கு நிரந்தர தீர்வு(மருந்து) அருள வேண்டுகிறேன்.

நிச்சயம், எது என்று அறிய! அறிய! பல துகள்கள், உடம்பில் பதிந்துள்ளது. அதன் செயல்பாட்டை உடலிலிருந்து எப்படி நிறுத்துவது? முதலில் பொறாமையை நீக்குவது. நல் குணத்தை, அதாவது நாவடக்கத்தை, அதாவது வள்ளுவன் சொல்லியிருக்கிறான் எதை அறிந்து, அறிந்து. இதனைப்பற்றி இப்பொழுது தேவை இல்லை. அனைத்தும் நானே, இவ்வுலகத்துக்கு, எதை கொடு வருவது, எதை கொண்டு செல்வது ஒன்றும் தெரியாமல் வாழ்வதா? இதனால் நிச்சயம், வளி மண்டலத்தில் கூட பல துகள்கள். இதனால், இது தேகத்தில் தேய்மானம் ஆகும்பொழுது நிச்சயம் அவ் வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் தாக்கும் பொழுது நோய்கள் உருவாகின்றது. உடல் வலுப்பெற வேண்டும் என்றால், இளம் வயதிலேயே நல் எண்ணங்கள் வலுப்பெற வேண்டும். ஆனால், இளவயதில் யாருக்கும், நல் எண்ணங்கள் உயர்வதே இல்லை. கேட்ட புத்திகளால், கேட்டு விழுந்தான். இதனால் அவ் துகளும் கெட்டழிந்து, சீரழிந்து, மனிதனின் தேகத்தை தாக்குகின்றது. இதனால், மனிதனை, ஒழுக்கமாக இருங்கள் என்றெல்லாம் யாங்கள் எடுத்து உரைத்துக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் இதனை விளக்க ரகசியங்களை, திருதலங்களில் கூட யான் சொல்வேன்.

42. அகத்தியர் அய்யா தங்கள் திருவடிகள் போற்றி போற்றி..... காவிரி அன்னை ஓடும் மேட்டூர் அணை ஊரில் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது 32 ஆண்டுகளாகிறது...... பல முயற்சிகளுக்கு பின்பு தற்போது திரும்பவும் அதற்கான செயல் பாடு ஆரம்பித்து உள்ளது...... அய்யா இப்பணி சிறப்புடன் ஆரம்பித்து நடந்தேறிட தங்களுடைய வழிகாட்டும் வாக்கு வேண்டும் அப்பா... தயவு செய்து அருள் புரியுங்கள்.....

எதை என்று அறிய! அறிய! இதற்க்கு தொடக்கமே யானே வகுத்து வடிவமைத்தேன்.  எனவே,யானே முன்னின்று இதனை நடத்திவைப்பேன். கவலையை விடுக.

43. "ஐயனே, கல்யாண தீர்த்தத்தில் வாழ்ந்து மோக்ஷம் அடைந்த சாது ஶ்ரீ கிருஷ்ணவேணி அம்மாவின் ஜன்ம மாதம் மற்றும் நக்ஷத்திரம் அடியேனுக்கு தெரிவித்து அருள வே1ண்டும்"

தேவை இல்லை, நிச்சயமாக ஞானிகளுக்கு இவைகள் எல்லாம் தேவை இல்லை. அறிந்து! அறிந்து! என் மகளாகவே, என்னிடக்த்தில் இருந்து கொண்டு இருக்கும் பொழுது நாள் ஏது? கோள் ஏது? என்னசெய்யும்? அதனால் தேவை இல்லை.

44. குருநாதா! அசைவம் சாப்பிடுகிறவர்கள் அதை நிறுத்தி சித்தர்கள் காட்டும் வழியில் வந்திட என்ன செய்வது?

ஒன்றும் செய்யத்தேவை இல்லை. முதலில் அதனை (சாப்பிடுவதை) நிறுத்துங்கள், பின்பு நாங்கள் வந்துவிடுவோம், பிறகு (நாங்களே உங்களை) பார்த்துக்கொள்வோம்.

45. அய்யனே! ஒருவன் மனைவி கருவுற்றிருந்தால், அவன் கடல், மலை போன்ற இடத்தருகில் அமைந்துள்ள கோவில்களுக்கு செல்லக்கூடாது என்பதன் தாத்பர்யத்தை விளக்குங்கள் அய்யா!

இவ்வுலகத்தில், ஒரு மனிதன் ஒரு பெண்ணின் கர்ப காலத்தில் ஓடி சென்று விடுகின்றான். அப்படி ஓடி சென்றுவிட்டால், தன பிள்ளைகளும் கூட தாய் தந்தையரை மதிக்காமல் போய்விடும். அதனால், நிச்சயம் அருகிலே இருந்து, மனைவிக்கு என்னென்ன தேவையோ, அன்பாக பார்த்துக்கொண்டால், நிச்சயம் அக்குழந்தைக்கு தெரியும். இதனால் அன்பும், அருளும், தாய் மீதும் தந்தை மீதும் வைத்து வளரும். இதெல்லாம் தெரிந்து தான், மனிதன் திருடன் ஆனதினால், இதை தெரிவித்து இருக்கின்றார்கள், எங்கும் செல்லாதீர்கள், மனைவியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று.  

46. அகத்தீச அப்பா, ஸ்கந்த ஷஷ்டி கவசத்தில் வரும் இந்த வரிகளுக்கு, விளக்கம் கூற, உங்கள் திருவடியில் வணங்கி, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு.

நிச்சயம் சொல்லுகின்றேன். நிச்சயம் இரு மண்டலம், கந்த சஷ்டி கவசத்தை ஓதி என்னிடத்தில் ஒப்படைக்கச் சொல்! உடனே சொல்லிவிடுகிறேன்!

47. குருநாதப்பா, இந்த பாவப்பட்ட மனிதப்பிறவிகளுக்கு, குருநாதரின் கருணையினால் சுப்ரமணிய ஞானம் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்க கருணை காட்டுங்கள் அப்பா.

நிச்சயம் காட்டுவேன். செந்தூருக்கு சென்று கொண்டு இருக்கச் சொல்.

இந்தக் போராட்ட வாழ்கையில்,  பெண்களுக்கே உரிய அறிவுரைகளை, அன்னை உமையாள் , லோபமுத்ரா அம்மாவின் வாக்கில் கேட்டு நடக்க, அம்மை அப்பரின் திருவடியில் வணங்கி கேட்டுக் கொள்கிறோம்.

நிச்சயம் என் இல்லத்தவளும் வாக்கை செப்புவாள், பொறுத்திருந்தால்.

48. அகத்தியப்பெருமானின் பாதங்களில் சரணம் அய்யா! எத்தனையோ குடும்பங்களில், பெரியவர்கள் பார்த்தும், அல்லது இருவருக்கும் பிடித்தும் திருமணம் செய்கின்ற வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே, கணவன் மனைவியிடையே பிரிவு வருகிற நிலைக்கு வாழ்க்கை சென்று விடுகிறதே. அனைத்தும் சரியாகி, இருவரும் அமைதியாய் வாழ ஏதேனும் ஒரு உபாயம் கூறுங்களேன்.

எதை என்று அறிய அறிய! இக்கலியுகத்தில் அவர்கள் புரிந்து கொண்டு நடந்தாலே போதுமானது. தான் தான் பெரியவன்/பெரியவள், அதை மட்டும் அல்லாமல், கல்விகள். அது மட்டுமன்றி 12 கட்டத்தில் சனியவன் இரண்டரை ஆண்டுகள் இருப்பான். அதேபோல் கும்பத்திலும் இரண்டரை ஆண்டுகள். ஆக மொத்தம் அவனது வீட்டில் ஐந்து ஆண்டுகள். இப்பொழுது இருவருக்கும் வயது வித்யாசம் அதாவது ஆணுக்கும், பெண்ணுக்கும் மூன்று வருடங்கள் என்று வைத்துக் கொள்வோம், பின் இருவருக்கும் சண்டைகள்தான். ஏன் என்றால், இருவருக்கும் சனியவன், பலமாக இருக்கின்றான். இதை புரிந்து கொண்டுதான் வயதில், 5, 7, பின் 9 போன்ற வயது வித்தியாசத்தில் முன் காலங்களில் செய்தார்கள். ஆனால், இன்று இன்று அப்படியா இருக்கின்றது? பின் ஒருவருடம், பின் இஷ்டத்திற்கு, பின் பிடித்தால் திருமணம் செய்து கொள்வது. ஏன் இந்த நிலைமை. ஆனால், பிடித்துப் போனாலும், இதை மனதிலிறுத்தி, இருவர் இல்லத்திலும் சமாதானப்படுத்தி, பின் செய்து கொண்டால் நன்று. அதை விட்டுவிட்டு எதை எதையோ செய்தால், இவருதான் வரும். வரும் காலங்களில் நிச்சயம், யாங்கள், இதை திருத்துவோம். எவை என்று அறிந்து அறிந்து, அதனால், இவ்வுலகத்தில் திருமணம் என்பது கூட முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அறிந்தறிந்து, வரும் காலங்களில் நிச்சயம், அதை முதலில் மாற்றுவோம். 

49.  ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி... அய்யனே சிலருக்கு ஜாதகம் பலிக்காது என்று ஆசான் வாக்குரைத்து உள்ளார்... அவர்களுக்கு எதன் அடிப்படையில் வாழ்க்கை இயங்கும்? அவர்கள் நவகிரங்களை வணங்க வேண்டுமா????

எதை என்று அறிய! அறிய! நிச்சயம், எங்கள் அருளாலே இயங்கும். சாதகம், பாதகமாக ஆகாவிடில் சித்தர்கள் வந்து கைக்கொண்டு வழி நடத்துவர்.

50. அய்யனே! குருவிடமோ கடவுளிடமோ சரண்  அடைந்த பிறகு நவகிரங்களை வணங்க வேண்டுமா??? அனைத்தும் அவர்கள் பாதத்தில் தானே .....

எதை என்று அறிய! அறிய! எங்களை வணங்கி விட்டால் நிச்சயம் நவகிரகங்களை கூட அவனிடம் கருணை காட்ட, தேற்றிவிடுவோம். இதனை நிச்சயம் வரும் காலங்களில் தெரிவிப்போம். 

51. குருவே, பூஜை அறையில் பூசிக்கும் தங்களின் திரு உருவ சிலை கீழே விழுந்து ஒரு பக்க கால் சற்று உடைந்துவிட்டது. அதை சரி பண்ணி பூசையில் தொடரலாமா! ஏதேனும் தோஷங்கள் உண்டா?

எதை என்றும் அறிய அறிய. எவை என்று புரிய! புரிய! நல்விதமாகவே தொழுது கொண்டு வந்தாலே போதுமானது. தவறு செய்தால், இப்படித்தான். எந்தனுக்கு கோபம் வந்தால், யானே உடைத்து விடுவேன்.

52. குருவே  பழனி தண்டபாணி தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்க ஆசான் வழி சொல்ல வேண்டுகிறேன்...

ஒன்றும் செய்யத் தேவை இல்லை. நல்முறையாகவே வாழச்சொல்.

53.  அய்யனே! திருவண்ணாமலை திருத்தலத்தில் நடக்கும் மகேஷவர பூஜையின் ரகசியத்தையும், அதன் மேனலான பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகின்றோம்.

எதை என்று அறிய! அறிய! நிச்சயம் அண்ணாமலையில் செய்யும் உதவிகள், நிச்சயம், பல ரிஷிகளும், சித்தர்களும், தேவர்களும் வந்து உட்கொள்வார்கள். அண்ணாமலையில் செய்த புண்ணியம் பின் இமயமலையில் எதிரொலிக்குமாம். இதனை பற்றி தீவிரமாக நிச்சயம் எடுத்துரைப்பேன், பொறுத்திருந்தால்.

54.குருநாதா! பல கரங்கள் உடைய சக்தியின் (தேவியின்) உருவங்களை நாம் தொழுகின்றோம். சில உருவங்கள் 4, 8, 12,16,18 என்று கரங்கள் கொண்டுள்ளன. இதன் தாத்பர்யம் என்ன ஐயா?

எதை என்று அறிய, அறிய! என்றாலும் கூட, நூறு கைகளை யான் கொண்டுள்ளேன்! இதை பற்றி ஒரு திருத்தலத்தில் வந்து சொல்லுகின்றேன்.

55. குருவே சரணம்! ஒரு செயலை ஒருவன் சுய எண்ணத்துடன் செய்கிற பொழுது, அதன் பலன் பிற/கூட இருப்பவர்களை நிறைய அளவில் பாதிக்கிற பொழுது, அந்த செயலை செய்தவன் தான் நினைத்தபடி வாழ்ந்துவிட்டு செல்கிறான். இங்கு இறைவன் அவனுக்கு அவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் என்று தானே அர்த்தம். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இளிச்சவாயர்கள் என்று தானே அர்த்தம்!

நிச்சயம்! எது என்று அறிய! அறிய! முதலில் இவ்வாறு கேட்கின்றானே! ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஏமாற்றுபவன் அதை விட ஏமாறுபவன்தான் முதல் முட்டாள்.

56. நம்மை சுற்றி நல்லது , கெட்டது எது நடந்தாலும், அதில் ஒட்டாமல், குரு நாதர் திருவடிகளை  இருக்க பிடித்து கொள்ளும் வரம் வேண்டும்🙏

எதை என்று அறிய! அறிய! அதனால், யான் தான் பிடித்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டாலே போதும். யாங்களே, உங்கள் இல்லத்துக்கு வந்து செய்து விடுவோம். 

57. குருநாதரை தவிர வேறு ஒன்று உண்டு என்கிற நிலை எப்போதும் வேண்டாம் 🙏

எதை என்றும் அறிய! அறிய! பின் அருளுகின்றேன்!

58. மனதில் இருக்கும் அனைத்து கல் மிஷங்களும் நீங்கி, மனம் பளிங்கு போல சுத்தமாக வழி சொல்ல வேண்டும்

இவன்தனை கேட்டால் திருடன் போல் முழிப்பான். இவன்தனை, மூன்று மாதங்கள் சிவராத்திரி அன்று திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்து வரச்சொல், பிறகு அதுகண்டு உரைப்போம்.

59. இன்னும் ஒரு பிறவி இல்லாத நிலையை, குரு அருள வேண்டும் 🙏

நிச்சயம் அருளுகின்றேன், யான் வழிகாட்டிய பாதையில் வந்தால்.

60. குரு அருள் மற்றும் அனுபூதி அனைவருக்கும் பாகு பாடு இன்றி, கிடைக்க வேண்டும்🙏

நிச்சயம் அருளுகின்றேன், என் வழியில் வந்தால்.

61.அய்யனே! தாமிரபரணி புராணத்தை தங்கள் அனுமதியுடன், வழிநடத்துடலுடன் சித்தன் அருள் வலைப்பூ தளம் வழி தெரிவிக்கலாமா?

நிச்சயம் எது என்று அறிய! அறிய! நிச்சயம், என் நதியை பற்றி, யானே எடுத்துரைப்பேன்! எவ்வாறெல்லாம் வந்தேன் என்று!

62. குருநாதா, அறுபடை வீட்டை இந்த குரு பெயர்ச்சிக்குப்பின் அடிக்கடி சென்று தரிசித்தால் குருவின் அருள் நிறையவே கிடைக்கும் என்றீர் அய்யா. உடல் நிலையால் மலையேற முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒரு வழி காட்டுங்கள் அய்யா! 

எப்பொழுதெல்லாம் நம்மால் ஆகாது என்று நினைப்பு வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் என்னால் முடியும் என்ற நம்பிக்கை வருகின்றதோ, அவன் மனிதன். ஆகவே, இப்படியே என்னால் முடியாது, முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால், கடைசிவரை முடியாதுதான். பின் என்னால் முடியும், என் முருகனை காண முடியும் என்றால் அனைத்தும் முடியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

[கேள்வி/பதில் பகுதி, நிறைவு பெற்றது!]

சித்தன் அருள்..... தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. Anbu aiyaa , mikka nandri. Aiyaa arulal anaivarum nalam pera vendukiren. Janakiraman aiyaa and arunachalam aiyaa iruvarum mikka nandri.

    ReplyDelete
  3. அகத்தியம்பெருமானை பணிந்து கோடான கோடி நன்றிகளை அவர் திருபாதங்களில் பணிகிறேன்

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete