​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 16 May 2023

சித்தன் அருள் - 1341 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 7


அகத்தியப்பெருமானை நாடியில், நேரடியாக வந்து சந்தித்து கேள்வி கேட்ட அடியவர்களின் வாக்கிலிருந்து எடுக்கப்பட்ட, பொதுவான அறிவுரைகள்.

கண் பார்வை பாதிப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

அப்பனே, இதை பற்றி பல சித்தர்களும் எடுத்துரைத்து விட்டார்கள். பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை எடுத்துக் கொண்டு, அவை மட்டுமல்லாமல், வாரத்துக்கு இருமுறை முருங்கை சாற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், சிரசாசனம் தினமும் செய்ய வேண்டும்.

மேல் நிலை/உயர் நிலை படிப்பிற்கு (கல்விக்கு)!

முதலில் அதற்கான தகுதியை/பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சேர்ந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. காலை மூன்று மணிக்கே எழுந்து, தியானம், பிராணாயாமம், போன்றவை செய்து, உடல் மனா சுத்தியுடன், கற்று வந்தால், ஏன், நாங்களே வந்து உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்வோம். அபிராமி அந்தாதியை தினமும் ஓதிக்கொண்டே வந்தால், வெற்றியாளர் ஆவது உறுதி. சிறு பிராயத்திலிருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை யார் ஓதிக்கொண்டே வருகிறார்களோ, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவார் என்பது உறுதி. மற்றவை எல்லாம் தானாக வந்துவிடும். கேட்பது எளிது, சொல்வதும் எளிது, ஆயினும் சிரமங்களை அனுபவித்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

நன்றி ஏன் சொல்லுகிறோம்? அதன் தாத்பர்யம் என்ன?

நாவை அடக்கி (மடக்கி), ரீங்காரத்தை, உள்மேல் கபாலத்தை நோக்கி செலுத்தினால், அது இறைவனை சென்று சேரும். அதுவே நன்றியின் உண்மையான அர்த்தம். ("நன்றி" என கூறி அந்த வார்த்தை கூறும் பொழுது, நாக்கு ரீங்காரத்தை அண்ணாக்குக்கு மேல் எப்படி ஒட்டிக்கொண்டு ரீங்காரத்தை செலுத்துகிறது என பாருங்கள்! வியந்து போவீர்கள். 99% பேருக்கும் இங்கு நன்றி சொல்லத் தெரியாதே. எவ்வளவு உணர்த்தி என்ன பிரயோசனம்).

கேட்டால், தெரியாததை, தெரியாது என்று கூறக் கூடாது. தெரிந்து கொண்டு பிறகு கூறுகிறேன் என்றுதான் கூற வேண்டும். அந்த முறையே சரி!

முதலில் ஓதவேண்டியது இறைவன் நாமத்தையே! இறைவன் நாமத்தை ஓதிவிட்டு, கல்விகள் கற்றால், செயல்கள் செய்தால், இறைவன் உன்னை கை விடமாட்டான்.

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பதின் தாத்பர்யம் என்னவென்றால், அங்கிருக்கும் ஏழு மலைகளிலும் ஏழு கிரகங்களின் பார்வை விழுகிறது. ராகு, கேதுவின் பார்வை பெருமாளின் சன்னதியில், பெருமாள் தலையில் விழுகிறது. ஆகவே பெருமாள் தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு, ராகு, கேது அருளால் அனைத்திலும், கோடீஸ்வரனாகும் தன்மை அமைகிறது. இதை பற்றி, விஞ்சான பூர்வமாக, பிறகு உரைக்கின்றேன்!

புதன் கிரகம், 12 ராசியிலும். இருந்தாலும் எந்த வித பலனையும் கொடுக்காது. அதை கொடுக்க வைக்க வேண்டும் என்றால் பெருமாளை, குறிப்பாக ஏழு மலையானை நன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

குரு சந்திர யோகம் (கஜகேசரி யோகம்) பலருக்கும் பலிக்காமல் போவதன் காரணம், அவர்கள் சுயநல காரர்களாக இருப்பதால் தான். என்று அவர்கள், தன வாழ்க்கையை பிறருக்காக சமர்ப்பித்து கடமையை செய்து வாழ்கிறார்களோ, அன்று முதல் அவர்களுக்கு இந்த யோகம் செயல்பட தொடங்கும்.

ஓதிமலையில் நாள், கோள் வேலை செய்யாது. ஏன் என்றால், முருகன் கோள்களுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர அங்கு (மலை மேல்) ஓர் இரவு படுத்து இருந்து பார். ஆனாலும், தவறு செய்தால், நிச்சயம் தண்டனை உண்டு. ஓதியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? (சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து "பிரணவத்தின்" பொருளை உரைத்ததால்). அப்படி இருக்க அங்கே கிரகங்கள் செயல் படுமா?

இனி வரும் நாட்களில் உண்மைகளை உரைப்போம், பொய்களை அழிப்போம்!

முதலில் ஒரு மனிதன், மனிதனாக வாழ்ந்துவிட்டாலே, அவன் குல தெய்வம் அவனை தேடி வந்து விடும்.

இந்த ஜீவநாடி யார் இல்லத்துக்கு வரவேண்டும் என்பதை யாமே தீர்மானிப்போம். அவரவர் மனசாட்சிக்கே தெரியும் அவன் அவன் நல்லவனா, கெட்டவனா என்று! (அடியவர்களே! அகத்தியப்பெருமானிடம் வேண்டிக் கொள்ளுங்கள்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

13 comments:

  1. ஓம்சிவசிவஓம் ஓம் ஶ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  2. அகத்தியம்பெருமானை பணிந்து கோடான கோடி நன்றிகளை அவர் திருபாதங்களில் பணிகிறேன்

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  4. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  5. அய்யா, தினமும் காலை 5மணிக்கு எழுந்தாலே அனுதினமும் தலைவலியால் அவதிப்படுகிறேன். என்ன செய்வதேன்றே தெரியவில்லை. தீர்வு இருந்தால் யாரேனும் சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      காலை ஐந்து மணிக்கு எழுந்து என்ன செய்கிறீர்கள்? த்யானம் செய்தால், இயல்பாக த்யானம் செய்யுங்கள். எந்தவித அழுத்தமும் கொடுக்காதீர்கள். மூச்சை கவனியுங்கள்.

      உடற் பயிற்சி செய்வதானால், சிறிது நாள் நடந்து பின் உடலை வழங்க வைத்து, உடற் பயிற்சியை செய்யுங்கள்.

      Delete
  6. வணக்கம் ஐயா.சிவபெருமானுக்கு அனைத்தும் தெரியும் போது முருகப்பெருமான் ஈசனுக்கு பிரணவத்தின் பொருளை உரைத்ததாக கூறுவது ஏன்?

    ReplyDelete
  7. வணக்கம்!

    சிவபெருமானுக்கு அனைத்தும் தெரியும். உண்மைதான். மனிதனுக்கு தெரியாது, பல விஷயங்கள். பிறப்பும் வயதும் ஞானத்தை உரைப்பதற்கு ஒரு தடையில்லை என்பதை மனிதனுக்கு தெரிவிக்க தானே, சீடனாக அமர்ந்தார்.

    ReplyDelete
  8. ஈசனே அனைத்தும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தந்தையும் அவரே. ஈசனுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், ஈசனுக்கு ஒருவர் பொருளுரைத்தால் அது அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சென்று சேரும். நம் பொருட்டே ஈசனும் முருக பெருமானும் நடத்திய திருவிளையாடல்

    ReplyDelete
  9. ஓம் அகத்தீஸ்வராய நமோ நம

    ReplyDelete
  10. Om Agatheesaya Namaha,awaiting next episode ,it ia more than a week now.

    ReplyDelete
  11. Om Sri Lopamudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete