10/2/2023 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு- வாக்குரைத்த ஸ்தலம் : சென்னகேசவர் திருக்கோயில், பேளூர். கர்நாடகா
ஆதி நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் நிச்சயமாய் வாழ்வில் எதையெதையோ பின்பற்றி பின்பற்றி மனிதர்கள் எதை எதையோ நினைத்து நினைத்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்
ஆனாலும் அதன் பயன் பின் ஒன்றுமில்லை!!!! கடைசியில் ஒன்றும் தெரியாமலே மடிந்து விடுகின்றான் இவ் சூட்சமத்தை பல சித்தர்களும் கூட பல பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டார்கள்.
ஆனாலும் மனிதன் திருந்திய பாடு இல்லை அப்பனே எதை என்றும் அறியாத அளவிற்கு கூட வருத்தங்கள் வருத்தங்கள் என்றெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில்!!......
அதனால் நிச்சயம் எவை என்று அறிய அறிய இதனால் மனிதன் நிலைமைக்கு மனிதனே காரணங்கள் என்பது எல்லாம் சித்தர்கள் யாங்கள் உரைத்துக்கொண்டே தான் இருக்கின்றோம்!!!
ஆனாலும் எதனை நம்பி போவதற்கு வழிகள் இல்லை ஆனாலும் எப்படியாவது மனிதன் வாழ்ந்திட வேண்டும் என்பதையெல்லாம் நிச்சயம் பின் சித்தர்களுக்கு எதை என்றும் அறிந்து அறிந்து நிச்சயம் பல வழிகளில் கூட நிச்சயம் சித்தர்கள் யாங்கள் வழிகள் வகுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.
ஆனாலும் மனிதனோ எதை என்று எதிர்பார்க்காமல் அவ்வழிகள் எல்லாம் பின்பற்றாமல் தன் நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்தும் நடக்க வேண்டும் என்பதையெல்லாம் உறுதியாக கொண்டுள்ளான்!!
இதனால் நிச்சயம் பின் அறியாது மூடனாகவே திரிகின்றான் மனிதன்!!!!
மூடனாகவே இருந்து இருந்து பின் மடிந்து மடிந்து வாழ்ந்து பின் மீண்டும் மடிந்து வருகின்றான்!!! இதனை பல வாக்குகளின் கூட பல சித்தர்கள் கூட மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!
இதனால் எப்படி இறைவனை என்று கூற ஆனாலும் பலர் வாக்குகளின் படி நிச்சயம் இறைவனை நிச்சயம் வரவழைக்க முடியும் தன்னால்!!!........
ஆனாலும் ஒரு பக்தன் அதாவது பின் வரதன் எதை அறிந்து அதாவது வரதசாமி என்கின்ற நிலை!!!!!!!..... (பக்தனின் பெயர்)
ஆனாலும் இவன் தன் பின் நாமத்தை ஆனாலும் இவனோ பல வழிகளில் கூட நாராயணா!!! நாராயணா!!!! என்ற சொல் தவிர வேறொன்றும் இல்லை!!! இவந்தனுக்கு!!!!!
இவன் எதையென்று எதிர்பார்த்தபடி நிச்சயமாய் ஆனாலும் நிச்சயம் பின் நாராயணனை தரிசிக்க வேண்டும் நாராயணனை உயிர் மூச்சாக கொண்டு பின்பு எதையும் வேண்டாம் என்று வெறுத்து பல வகையில் கூட பல திருத்தலங்களை கூட அலைந்து திரிந்து ஆனாலும் நாராயணா!!! நாராயணா!!! என மந்திரத்தை மட்டும் விட்ட பாடு இல்லை!!!
ஆனாலும் இதையன்றி அறிய அறிய ஆனாலும் இவ் ஊரில் பின் ஆனாலும் இவந்தன் சிறுகுடிசையாகவே இங்குதான் இருந்தது!!!
ஆனாலும் இதனை அறிந்த பல மக்கள் இவந்தன் பின் நாராயணனே நாராயணனே என்றெல்லாம் சொல்லி சொல்லி சொல்லி இவந்தன் பைத்தியக்காரனாக போய்விட்டான்!!....
ஆனாலும் நிலைமையோ என்ன??? என்ன கதி என்றெல்லாம் ஆனாலும் இதன் தன்மைகளை பொறுத்து பொறுத்து மாறுவதற்கு இணங்க ஆனாலும் கண்டுகொள்ளவில்லை!!!
பல மனிதர்கள் கூட நாராயணா நாராயணா என்றெல்லாம் இவனை கேலி செய்தார்கள் நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றானே இவந்தன் பின் ஆனால் பைத்தியம் பின் மடையன் ஆனாலும் வேறு எதை என்று தீர்மானிக்காமல் கூட பல வழிகளில் கூட இவனை கூட பின் அடித்தார்கள்....அடித்தும் கூட ஆனாலும் அப்பொழுதும் கூட நாராயணா நாராயணா என்ற சொல் மட்டும்!!!!
ஆனாலும் இதனை அறிந்த ஆனாலும் இவந்தன் இவன் உறுதியாக நாராயணன் மீது நாராயணன் மீது பற்று கொண்டு!!!!
ஆனாலும் இவ்வாறு நடந்ததை நிச்சயமாக இதுதான் அரசனுக்கு போய் சேர !!!ஆனாலும் ஒரு பைத்தியக்காரன் நம் தேசத்தில் கூட அறிந்து அறிந்து நாராயணன் மீது பற்றுக் கொண்டிருக்கின்றான் பற்றுக்கொண்டு பற்று கொண்டு ஆனாலும் எதிர்பாராமல் அவந்தன் பைத்தியமாக ஆகிவிட்டான்!!!!
ஆனால் மக்கள் அவனை திட்டியும் கூட பின் அடித்து கூட அவந்தன் திருந்துவதாக இல்லை இதனால் எப்படி என்பதையெல்லாம்
ஆனாலும் பின் அவ் அரசனும் சில எதை என்று அனுபவிக்க சில சில புலவர்களையும் கூட அனுப்பினான்!!!
ஆனாலும் அனுப்பி விட்டு ஆனாலும் அவ் புலவர்கள் இறைவன் மீது பக்தி ஆனாலும் இறைவன் மீது பக்தி கொண்டவர் போல் நடித்தார்கள் என்பது தான் உண்மை!!!!
ஆனாலும் வந்தார்கள் ஆனாலும் முதலிலே அவர்கள் இறைவன் பக்தி தான் என்று அனைவரும் நினைத்தார்கள்
ஆனாலும் அப்படி இருக்கையில் மற்றவர்களை எவ்வாறு அழைக்க வேண்டும்??? என்பதையெல்லாம் தெரியாமல் போய்விட்டது!!!
ஓர் இறைவனடி (அடியார்) அதாவது இறைவன் சம்பந்தப்பட்ட நிச்சயம் அடியார்களை நிச்சயம் பின் எவ்வளவு பெரிய பின் மனிதனாக இருந்தாலும் தலைவணங்கி....பின் இறைவா!!!!!! இறைவன் மகனே!!!!!! என்றெல்லாம் கூறுவது தான் அன்றைய இயல்பு இங்கு!!!!
ஆனாலும் புலவர்கள் வந்தவுடன் பைத்தியக்காரனே!!!! என்று அழைத்து !!.....
ஆனாலும் இதை அறிந்து கோபமுற்றான்!!!!! கோவமுற்று யார்???? கோபமுற்று என்பதை கூட நாராயணனே!!!!!
ஆனால் யார் போலியானவர்கள் என்பது எல்லாம் காண்பிக்க!!!!!
ஆனாலும் இப்புலவர்கள் பின் பைத்தியக்காரனே என்பதையெல்லாம் அறிந்து நிச்சயம் ஏன் நாராயணனை அழைத்துக் கொண்டே இருக்கின்றீர்கள் ஆனால் என் அரசன் அறிந்தறிந்து இவ் தேசத்தை காத்துக் கொண்டிருக்கின்றான்!!!!!
அதனால் நாராயணன் நிச்சயம் நிச்சயம் பின் காக்கவில்லை அதனால் அரசன் பெயரை அதாவது அரசன் பெயரை உச்சரித்து வா!!!!! அரசன் உந்தனுக்கு அனைத்தும் செய்வான்!!!! என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றெல்லாம்!!!!
ஆனாலும் பின் அதன் தன்மையை உணர்ந்த பின் இவ் வயதாகி எதை என்று அறிந்து அறிந்து உணர்வதற்குள் அதாவது இவந்தன் நிச்சயம் நாராயணனை தவிர பின். எவ் வார்த்தையும் இல்லை!!!!
நிச்சயமாய் ஆனால் புலவர்களும் இப்படியே நீ சொல்லிக் கொண்டிருந்தால் நீ சாகத்தான் போகின்றாய்!!!!
நாராயணா நாராயணா என்றெல்லாம் வரப்போவதும் இல்லை அதனால் இவ் பைத்தியம் அதாவது நீ பைத்தியக்காரனாகவே இருக்கின்றாய்!!!
உடுக்க ஆடை சரியாக இல்லை உடுத்த!!! பின் அதாவது இல்லமும் சரியாக இல்லை!!! அதாவது உண்ண வழியும் இல்லை!!!!
அதனால் அரசன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு!!! அதாவது தேசத்திற்கு பரப்பு!!!! இவ்வரசன் நாமத்தை பரப்பிக் கொண்டே வா!!!அனைவரின் இல்லத்தில் சென்று அரசன் மிகச்சிறந்தவன் அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றான் அனைத்தும் செய்வான் என்று பரப்பிக் கொண்டு வா!!!!! உந்தனுக்கு நிச்சயம் இவ்வரசன் பன்மடங்கு அதாவது நிச்சயம் பின் புலவர் என்ற பதவி நிச்சயம் ஏதாவது ஒன்றில் அமர்த்தி உன்னை அருகிலே வைத்துக் கொள்வான் பின் என்று அவர் பைத்தியக்காரனா பைத்தியக்காரனா என்றெல்லாம்!!!!!
ஆனாலும் இவந்தனும் சிரித்தபடியே நாராயணா!!! நாராயணா!!! என்றெல்லாம் !!!!
ஆனாலும் பின் இவ் எதை என்று அறிய பக்தனோ நிச்சயமாய் மனம் ஊர்ந்து இவ்வரசன் திருடனப்பா!!!! என்று சொல்லிவிட்டான் ஒரு வார்த்தை!!!
ஆனாலும் வந்தது அனைவருக்கும் இது தெரிந்தது !!!! புலவர்கள் உடனே சென்று பின் அரசன் சபையில் இவன் திருந்துவதாக இல்லை!!!!
ஆனாலும் அரசனே உன்னையே திருடன் என்று சொல்லிவிட்டான் இவன்!!!
ஆனால் எப்படி அதனால் நிச்சயம் அறிந்து அறிந்து இதனால் அனைவரும் சென்று அவனை இழுத்து வாருங்கள் என்றெல்லாம்!!!
ஆனாலும் இழுத்து வந்தார்கள்!!... அறிந்து எதை என்று ஆனாலும் அப்பொழுது கூட நாராயணா நாராயணா என்றெல்லாம் ஆனால் அரச சபைக்கு வந்து விட்டான் இவ் பக்தன் உணர்ந்து உணர்ந்து!!!!
ஆனால் அரசன் சொன்னான் நிச்சயமாய் என் பெயர் அதாவது என் பெயரை பின் நீ எங்கு இருந்தாலும் ஜெபித்துக் கொண்டே இரு!!!! அனைவரும் இவ்வாறு தான் ஜெபித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பின் ஊரெல்லாம் சென்று சென்று ஒவ்வொரு இல்லத்திலும் கூட இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று சொல்!!!
உந்தனை விட்டு விடுகின்றேன்!!!! விட்டு விடுகின்றேன்!!!! அவை மட்டும் இல்லாமல் இவ்சபையில் உந்தனுக்கு ஒரு பெரிய வாய்ப்பையும் தருகின்றேன் !!! என்று
ஆனாலும் அவ் பக்தன் நாராயணா நாராயணா என்றெல்லாம் ஆனாலும் பின் இவ் புலவர்கள் எழுந்து அரசனே!!!!! இவன் திருந்துவதாக இல்லை!!!!! இவந்தன் நாராயணா நாராயணா என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!
ஆனாலும் நிச்சயம் நாராயணன் வரப்போவதும் இல்லை ஆனாலும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை!!!!! பின் அரசனே நீ சொல்லியும் கேட்கவில்லை இதனால் இவந்தனுக்கு ஒரு பெரும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணி!!!!!
ஆனால் இதை அறிந்த அரசன் கடைசியாக ஒரு வாய்ப்பு தருகின்றேன் கடைசியாக ஒரு வாய்ப்பை தருகின்றேன் பைத்தியக்காரனே!!............
ஆனால் பைத்தியம் யார் என்று யாரும் உணர்வதில்லை!!!!!!!
ஆனாலும் கூடியது அரசபை!!!! கூடிட்டு இவ்வாறே நாராயணா நாராயணா என்றெல்லாம் ஆனாலும் இதன் தன்மையை உணர்ந்து இதன் பின்பற்றுதலின் உணராமல் ஆனாலும் அரசனோ!!!!!.......... பைத்தியக்காரன் பைத்தியக்காரனாகவே இப்படி சாகப் போகின்றாய் என்று ஆனாலும் பின் அவ்பக்தனுக்கு தெரிந்துவிட்டது!!!!
ஆனாலும் பின் பேசினான் யார் பைத்தியக்காரன் நானா சாக போகின்றேன்???????
ஆனால் யோசித்துக் கொள்!!! அரசனே!!!!!......
இவ்வாறெல்லாம் பின் அதாவது ஓர் எதுமே இல்லாதவனை இவ்வாறு அடிமைப்படுத்தி உன் பெயரை உச்சரித்து இப்படி செய்கின்றாயே நீயெல்லாம் ஒரு அரசனா?????????? என்று!!!!!
ஆனால் அரசனுக்கு வந்தது கோபம்!!!! எதை என்று அங்கிருந்தே அதாவது பின் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு வில்லை (அம்பு) வீசினான் வீசி எறிந்து அப்பொழுது அதை அறிந்து அவன் மீது அது படவில்லை!!!!...... பின் அது ஓர் புலவன் மீது மாறி மாறிப்போய் விழுந்தது அவனும் மாய்ந்து விட்டான்!!!
ஆனாலும் இதன் தன்மை ஆனாலும் அனைவரும் ஓடோடி வந்து ஆனாலும் இதை அறிந்து இவன் தான் தடுத்தான் என்று!!!!
இவன் தான் தடுத்தான் இவன் அருகில் வந்தது இவன் தடுத்து அப்புலவன் மீது எய்தான்!!!! என்றெல்லாம் யாங்கள் பார்த்தோம்!!! பார்த்தோம்!!! என்றெல்லாம் அனைவரும் கூட!!!........
ஆனால் இதை அறிந்து அவ் பக்தன் அமைதியாக இருந்தான்.
ஆனாலும் செய்தது நாராயணன் என்று யாருக்கும் தெரியவில்லை!!!!!
ஆனால் அனைவருக்கும் கண்ணுக்கு அனைவரும் பின் பார்த்து அதாவது கண்ணுக்கு தென்பட்டது ஆனாலும் இதை அறிந்து அவ் பக்தன் தான் என்று!!!!
இதனால் மரணதண்டனைக்கு போய்விட்டது பக்தனுக்கு!!!
அரசனும் இவ்வாறு பின் நீ பைத்தியனாகவே இருக்கின்றாய்!!!! உன்னால் ஒன்றும் லாபம் இராது !!!!! அதாவது சிறையில் அடையத்தான் போகின்றாய் அதாவது ஒரு பத்து நாட்களுக்குள் பார்ப்போம் பின் இவ்வாறே நாராயணா !!!நாராயணா!!! என்று சொல்லிக் கொண்டிருந்தால் பின் தூக்கில் இட்டு விடுவோம் ஆனால் அதனை மாற்றி என் பெயரை உச்சரித்தால் நிச்சயம் இவந்தன் மாறி பல வகைகளில் கூட நிச்சயம் என் பக்கத்திலே அமர்த்திக்கொள்வேன் என்று !!!!
ஆனாலும் இதை அறிந்து பத்து நாட்களிலும் கழிந்தது!!!!! கழிந்தது மீண்டும் அரச சபையில் ஆனாலும் இதையும் அறியாத வகையில் ஆனாலும் சரி பின் ஆனாலும் அவ் அரசன் எதை என்று அறிந்து அறிந்து இவ்வாறு நாராயணா, நாராயணா என்று கூறிக் கொண்டிருக்கின்றாயே நிச்சயம் உன் உயிர் பிரியப்போகின்றது!!!!
பின் பார்ப்போம் அவந்தன் காப்பாற்றுவானா???!!!! என்று!!!
ஆனாலும் நிச்சயம் சிறிது நேரத்திற்குள் தூக்கு( தண்டனை)!!!!.....
ஆனாலும் அப்பொழுது பின் இதோ யான் கடைசி ஒரு வாய்ப்பை தருகின்றேன்!!!!!!
நீ நாராயணா நாராயணா என்று எல்லாம் சொல்கின்றாயே!!!!!!!! அவந்தன் வரட்டும்!!!!!
பின் அதாவது பத்து நிமிடங்கள் தான் என்று பின் எச்சரித்தான் 10 நிமிடங்கள் முடிந்தவுடன் இங்கேயே நீ கொல்லப்படுவாய் என்று!!!!!
இதனால் ஒரு பாடம் அனைவருக்கும் கூட!!!!!
நீ பைத்தியமாக இருந்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று !!!!!
அழிந்தது அழிந்து அறிந்து நிச்சயம் அவை அறிந்து அறிந்து பின் பத்து நிமிடங்களுக்குள்ளே நிச்சயம் நாராயணன் வந்தான் !!!!!
ஆனால் யாரும் அதை உணரவில்லை பின் ஏன் எதற்காக என்றால் ஓர் பிச்சைக்காரன் வடிவத்திலே நாராயணன் வந்துவிட்டான்!!!!
ஆனாலும் அறியாத அரசன் பின் பைத்தியக்காரனுக்கு ஒரு பிச்சைக்காரனா என்றெல்லாம் !!!!!.................
ஆனால் அவ் பிச்சைக்காரன் நாராயணன் என்று தான் எவை என்று அறியாத முட்டாள் இதை என்று அறியாது இதனால் தான் மனிதர்களை புத்தி இல்லாதவனே!!!!!....... பின் மனித ஜென்மங்களே இன்னும் திருந்தாத ஜென்மங்களே என்றெல்லாம் யாங்கள் உரைத்துக் கொண்டிருக்கின்றோம்!!!!!
யார் தீயோர்?? யார் நல்லோர்?? என்பது எல்லாம் தெரியாமல் போய்விட்டது மனிதர்களுக்கு!!!!!
ஆனாலும் இதனை அறிந்து பின் ஆனாலும் நகைத்தான்!!!!!!!!! பல வகைகளில் கூட அரசன்!!!! அனைவரும் நகைத்தனர்!!!!
இவ் பைத்தியக்காரனுக்கு இவ் பிச்சைக்காரனா துணை!!!!! என்று!!!!
ஆனாலும்
இவ் பிச்சைக்காரனையும் சேர்த்து தூக்கிலிடுங்கள் யாரெல்லாம் இவந்தனுக்கு பின் இவனுடைய அதாவது சம்பந்தம் படுத்துகின்றார்களோ அவரையெல்லாம் தூக்கிலிடுங்கள் என்று அரசன் ஆணையிட்டு விட்டான்!!!!
பின் ஆனாலும் இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் அரசன் பின் யாராவது இவந்தனுக்கு பின் சம்மந்தம் தெரிவிக்கின்றார்களா என்று எண்ணி!!!!!
ஆனாலும் யாரும் தெரிவித்ததாக இல்லை ஆனாலும் இதையன்றி அறிந்து அறிந்து நிச்சயம் அவ் பிச்சைக்காரன் அதாவது நாராயணன் தான் பின் பேச ஆரம்பித்தான்!!!!!
அரசனே!!!!!! நிச்சயமாய் இவ்வளவு நீ வெற்றிகள் கண்டாய் ஆனால் இனி மேலும் உனது வெற்றிகள் பின் செல்லாது!!!! செல்லாது!!!!!
இதனை அறிந்து அனைத்தும் தோல்விகளே இதனால் என்று அறிய ஆனால் அரசனுக்கு வந்தது கோபம் யார் ? என்று கூட!!!........
ஆனால் ஓடி வந்து அவ் பிச்சைக்காரனை ஓங்கி அடித்தான் ஆனால் எதை என்று அறிய அறிய பின் அப்படியே பின் பெருமாள் தரிசனம் காண்பித்தான்!!!!!!!!
அனைவரும் வியந்துவிட்டனர்!!!!!
அரசனே இவை என்று அறிய எதை என்று புரியாத நீ எல்லாம் ஒரு அரசனும் இல்லை இனிமேல் இவ் அதாவது இங்கு எதை என்று அறிய அறிய இனிமேல் உன்னுடைய மாளிகையிலும் இங்கு இல்லை அனைத்தும் அழியச் செய்கின்றேன். இப்பொழுது என்ற எண்ணி அனைத்தையும் அழித்துவிட்டான்!!!!
ஆனாலும் பின் புலவர்களும் கூட பிறர் அரசன் கூட இருந்தனர் பின் பார்த்தார்கள்!!! எங்கே?? என் மாளிகை எங்கே?? என் மாளிகை என்றெல்லாம்!!!!
அரசன் துடிதுடித்து தன் எதை என்று அறியாத அளவிற்கு கூட பெருமானின் பின் காலை பிடித்துக்கொண்டு!!!!!!!!!
பெருமானே எதை என்று அறிய அறிய அனைத்தும் தவறு செய்து விட்டேன் அறியாதபடி தான் யான் எவை யானே!!!! பின் இவ் உலகத்தில் உயர்ந்தவன் என்று ஆட்சியும் நடத்திவிட்டேன்!!!
ஆனால் கடைசியில் பார்த்தால் அனைத்தும் உன் செயல் என்று எந்தனுக்கு தெரியாமலே போய்விட்டது அவை மட்டும் இல்லாமல் இவந்தனை கூட அதாவது பின் இவ் பக்தனை கூட பின் பலர் ஏசினார்கள் யானும் ஏசிவிட்டேன்!!!
அதாவது எதை என்று அறிந்து அறிந்து ஏதாவது நிச்சயம் யான் என்னதான் எதை உணர்ந்து உணர்ந்து பின் எப்படி தான் எந்தனுக்கு சாப விமோசனம் என்றெல்லாம்!!!!
ஆனால் நாராயணனோ!!!! நிச்சயம் ஆனாலும் அவ் பக்தனுக்கு மிக்க சந்தோசங்கள்!!!!!
நாராயணன் வந்து விட்டான் என்று!!!!!
ஆனால் நாராயணன் நிச்சயமாய் எதை என்று உறுதிப்படுத்தி உறுதிப்படுத்தி பின் பக்தனே!!!!!! இவ்வாறு யார் என்ன சொன்னாலும் என்னையே!!!!! நாராயணா நாராயணா என்று அழைத்துக் கொண்டு இருந்தாய்!!!! கடைசி வரைக்கும்!!!!!!
யார் மீதும் எவை என்று நம்பிக்கை கொள்ளவில்லை யார் எதை சொன்னாலும் பின் ஏற்கவில்லை உன் காது!!!!
இதனால் உந்தனுக்கு என்ன தான் தேவை என்று அறிய அறிந்து கேள்!!!!! என்று !!!
அப்பொழுதுதான் அவ் பக்தன்""
நாராயணரே நீர்!!!!! இங்கு அப்படியே அமை!!!! அமைந்து அதாவது எதை என்று இவ் அரசன் புத்தி இல்லாமல் செய்துவிட்டான் அனைத்தும் கூட அழித்து விட்டான்!!!! மக்களுக்கு நல் வழியும் காண்பிக்கவில்லை!!!!!
பின் இவந்தனே ஓர் பிறப்பு எடுக்க வேண்டும் அதாவது உடனடியாக பிறப்பை கொடு!!!!!
இவந்தனே உந்தனுக்கு அதாவது திருத்தலத்தை அமைக்கட்டும் என்று!!!!!
உடனே எதை என்று பெருமானே நாராயணனே நீ எங்கும் எங்கும் செல்லக்கூடாது இங்கே இருந்து பல பக்தர்களுக்கு அருள் பாலிக்க !!!!!அருள் பாலிக்க!!!!!! நினைத்ததை நடந்தேறவும் நிச்சயம் வரம் கொடுக்க நன்று!!!!!!
அவை மட்டும் இல்லாமல் உன்னுடைய லீலைகள் பல பல பல!!!!!
அதனால் நீ இங்கு கிருஷ்ணன் ஆகவும் நிச்சயம் எதை என்று அறிய அறிய ராமனாகவும் நாராயணா!!!!! அனைத்தும் அதாவது அவதாரங்கள் பல பல அனைத்தும் ஒன்றாக இணைத்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று!!!!
நிச்சயம் யான் உன் மீது கொண்ட அன்பு உண்மையானால் இதை எந்தனுக்கு செய்வாயாக என்று எண்ணி!!!!!
இதனால் அனைத்தும் பின் அறிந்து இங்கே பெருமான் எதை என்று அறிந்து அப்படியே நின்று விட்டான்!!!!!!!
இதனால் நின்று விட்டு உடனடியாகவே அவந்தனுக்கும்(அரசன்) பிறப்பு கொடுக்கப்பட்டது பின் அதாவது அரச மாளிகையில் அனைத்தும் எதை என்று அறிந்து பின் அழிவுற்று மீண்டும் பின் அரசன் மனித ரூபம் எடுத்து அனைத்தும் செய்தான் எதை என்று அறிந்து அறிந்து!!!!
இதனால் மக்கள் பல வகையில் கூட பின் நினைத்ததை சாதிக்க வேண்டும் நல்வழி அதாவது நல்லெண்ணங்களை கொண்டவர்கள் உயர்ந்திட வேண்டும் என்றெல்லாம்!!!!!
நிச்சயமாய் வழி வகுத்து இதை பின் அதாவது இதை( ஆலயத்தை) அமைப்பதற்காகவே அரசன் மறுபிறவி எடுத்து அனைத்தும் தன் திறமையால் பல முனிவர்களையும் அழைத்து பல வழிகளிலும் கூட இதை செய்ய வைத்து நிச்சயம் மடங்கு சக்திகளாக ஆக்கினான் !!!!
இதனால் நிச்சயம் இது ஒரு சக்தி மிகுந்த திருத்தலம் ஆகவே நிச்சயம் எதை என்று அறிந்து!!!! பல வழிகளிலும் கூட பின் தேவாதி தேவர்களும் கூட இந்திரன் கூட இங்கு வந்து நலமாகவே பின் பெருமான் அனைத்து ஒன்றாக இணைத்து ஒரு அவதாரம்!!!!!! எதை என்று அறிந்து!!!!!
இதனால் அனைவரும் இங்கு வாழ்த்து பாடி நிச்சயம் இங்கு வந்து பெருமானை வணங்குகின்றவர்கள் எதை என்று அறிந்து அனைத்தும் கொடுப்பான் என்பது, ஆணித்தரமான உண்மை!!!!
ஆனாலும் நம்பிக்கை எப்பொழுதும் விட்டுவைக்க அதாவது விடுதல் கூடாது!!!!
இதனை அறிந்து அறிந்து பக்தன் எப்படி இருந்தான் என்பதையும் கூட சிறந்த எடுத்துக்காட்டாகவே அறிந்தேன்!!!!!
அறிந்தும் சொல்லி பல மனிதர்களுக்கு கூட விளக்கங்கள் கூட யாங்களும் எதை என்று அறிந்து அறிந்து பல சித்தர்களும் இங்கு வந்து பல வகையிலும் கூட பல மனிதர்களுக்கு சேவைகள் செய்து அதாவது உதவிகள் செய்து மாற்றியுள்ளோம்!!!!
நிச்சயமாய் இனிமேலும் பின் மனித மூடனுக்கு பல வகையிலும் கூட ஏதோ சொல்லி கொடுத்து நிச்சயம் மாற்றுவோம் !!!!
ஒருவன் எதை என்று அறிந்து அறிந்து மாறினால் போதும்!!!!!!! அவனை வைத்து நிச்சயம் பல வழிகளிலும் கூட பல மனிதர்களை மாற்றுவோம்!!!! எதை என்று அறிந்து அறிந்து!!!!
அகத்தியனின் ஆசிர்வாதங்களும் மிக்க இங்கே கூடுதல்!!!!
அறிந்து பின் வழிவழியாக வந்த பின் அரசர்களும் இங்கே வழிபட்டு பல வெற்றிகளையும் கொண்டனர்!!!!! வெற்றி எதை குறித்து குறித்து நோக்க!!!! நோக்க!!!!
அதனால் பக்தி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்!!!!
ஆனால் மனித ஜென்மங்களே எதை என்று அறிந்து யான் பக்தி பக்தி என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி அனைத்தும் பின்பற்றி எதனால் கடைசியில் இறைவனே எந்தனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே நினைக்கின்றாயே!!!!!
அப்பொழுது நீ பக்தனா????????????????
இல்லை யான் சொன்னேனே அவன் பக்தனா???? (வரத சாமி)
நன்றியோடு இருங்கள்!!!!!
உண்மையான பக்தியை கடைப்பிடியுங்கள்!!!!!
மீண்டும் ஒரு வாக்கில் அதாவது ஒரு திருத்தலத்தில் வந்து செப்புகின்றேன்!!!!
ஆசிகள் !!! கோடி!!!!
ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள்
விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னகேசவர் என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, ஹாசன் நகருக்கு 40 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேளூர், போசளர் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த பல சிறப்புவாய்ந்த கோயில்களுக்குப் புகழ் பெற்ற இடமாகவும், வைணவர்களின் யாத்திரைக்குரிய இடமாகவும் விளங்குகிறது.அதிசயத்தூண்
தொகு
ஆலயத்தின் கட்டட நுணுக்கத்தை வெளிப்படுத்தும் தூணாக இது உள்ளது. நாற்பது அடி உயர கற்கம்பம், பீடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. கற்கம்பத்திற்கும் பீடத்திற்கும் இடையே இடைவெளியுள்ளது. ஒரு பக்கமிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும். ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அம்மூலையிலும் எடுக்க முடியும். ஆனால் கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத விதமாக உள்ளது.
சென்னகேசவர் திருக்கோயில், பேளூர்
சென்னகேசவர் திருக்கோயில், பேளூர்
அமைவிடம்
ஊர்:
பேளூர்
மாவட்டம்:
ஹசன்
மாநிலம்:
கர்நாடகா
கோயில் தகவல்கள்
மூலவர்:
கேசவநாராயணன் (விஜயநாராயணா)
தாயார்:
சௌம்ய நாயகி, ரங்கநாயகி சந்நதிகள்
திறக்கும் நேரம்:
காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
'முகவரி:
அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில் பேளூர், சிக்மகளூர் கர்நாடகா.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் நமசிவாய வாழ்க
ஓம் ஓதியப்பர் துணை 🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteநன்றி ஐயா🙏🙏
இது எத்தனை வருடங்களுக்கு முன் நடந்தது.
ReplyDelete