21. தங்களை தரிசிக்க ஒரு வழி கூறுங்கள் குருநாதா? அதற்கு, என்ன புண்ணியம் செய்யவேண்டும்?
அப்பனே! என்னை தரிசிக்க வழிகூறுகிறேன், நிச்சயம். ஆனால், எனக்கு வேலை இல்லை, திருமணமாகவில்லை, குழந்தை இல்லை. இவ்வாறே கேட்டுக்கொண்டு இருந்தால், அதையும் இறைவன் கொடுத்துவிடுகிறான். பின்பு குழந்தைகளால் கட்டம். எந்தனுக்கு கட்டம் வந்துவிட்டதே என்று புலம்புவது. இவை போலே, வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. பின்பு எப்படித்தான் என்னை பார்க்க முடியும்? எதை என்று அறிய! அறிய! இறைவா, எந்தனுக்கு ஒன்றும் தேவை இல்லை என்று விட்டுவிடு! பார்ப்போம். ஆனால், இன்று கூட யான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! இது வேண்டும், அது வேண்டும் என பேய் மாதிரி அலைந்து கொண்டிருக்கின்றான். அப்படி இருக்க, யான் எப்படி தரிசனம் கொடுக்க முடியும் சொல், மகனே!
22. நெருங்கிய காரியம் கைவல்யம் ஆகவில்லை. சிறுவயதில் இருந்தே நம்பகத்தன்மை பெற்றது எல்லாமே ஏமாற்றம் அளிக்கிறது. சிறு சிறு வெற்றிகள் தனக்கு கிடைக்கவில்லை. காரணம் கர்மாவா அல்லது தெய்வ குற்றமா அல்லது இதுவே பேராசை என்பதாலா. இதை மற்றவர்களுடன் சரிபார்க்க கூடாதா. என் எண்ணத்தை அழிப்பதிலும் தோல்விதன் இந்த கேள்விக்கு பதில் தாங்கள் கதையாக தயவு செய்து சொல்லாதீர்கள்
ஒருவன் கேட்டான், ஒரு நாள், கதை சொல்லிவிடாதே என்று. அவன் என்ன செய்தான் என்று தெரியுமா அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! அவனைப்பற்றி விளக்குகின்றேன் அப்பனே!
ஒரு முறை, ஒரு பிறவியில், பிறவி எடுத்து அப்பனே! திருத்தலத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் அப்பனே! தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை திருத்தலத்தில் அனுமதிக்கக்கூடாது என்று அவந்தனுக்குத் தெரியும், அனைவரும் தெய்வ பிள்ளைகள் என்று. சொந்த பந்தங்கள் எல்லாம், கீழானவர்கள் என்று கூட, கர்ப்பிணி பெண்கள் கூட உதைத்து, கர்பிணி பெண்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டான். பல சாபங்கள். அவந்தனுக்கு குழந்தைகள் பாக்கியம் இருந்தாலும்/இல்லாவிடினும் இதனால் என்ன லாபம். அவந்தனுக்கு இந்த வாக்கை உரைக்கசொல். பிள்ளைகள் இருந்தாலும், சொந்த பந்தங்கள் இருந்தாலும் நிச்சயம் அவந்தனுக்கு எங்கும் இருக்க முடியாது என்பேன் அப்பனே! சாதாரணமானவர்கள் இல்லை நாங்கள் சித்தர்கள். இவன்தன் எண்ணத்திற்கு தகுந்தவாறு சொல்ல வேண்டுமா என்ன? அவன் யார் என்பதைக்கூட யான் தெரிந்து கொண்டேன் அப்பனே! என்னிடத்தில் கூட அவன் வந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே. என்ன லாபம், கர்மத்தை முதலில் ஒழித்துவிட்டு என்று கூட. அப்பனே! ஒன்றை சொல்லுகின்றேன். இறைவனிடத்தில் வந்தாலும் கூட, கர்மங்கள் செல்லாமல் ஒன்று நடக்கப்போவதில்லை. என்பேன். யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நீ செய்த கர்மத்துக்கு, யாங்கள் வந்து பதில் கூற முடியுமா என்ன? அதனால் அப்பனே! ஒழுங்காக இருங்கள். சொல்லிவிட்டேன். நீங்கள் செய்த தவறுக்கு, நீங்கள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், யான் கூடவே இருந்து, பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே! அவந்தனுக்கு ஒரு முறை கடைசி வாய்ப்பும் கொடுக்கின்றேன்!
23. குருநாதா, இந்த உலகத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி என்று கூறப்படுகிறது. தமிழ் மொழி தோற்றம் குறித்து கூறவும், குருநாதா
அப்பனே! இப்பொழுது யான் கூறிவிட்டாலும், அவரவருக்குள் குழப்பம் ஏற்பட்டு சண்டைகள் வந்துவிடும். ஆகவே முருகனே வந்து உரைக்கட்டும். அப்பொழுது பார்த்துக் கொள்வோம்!
24.குருநாதா, முக்தி அடைந்த ஆன்மாக்கள் வசிக்கின்ற உலகங்கள் எங்கு உள்ளன அவை பற்றி கூறுங்கள் ஐயா
இதற்கான பதிலை, ஏற்கனவே உரைத்துவிட்டேன். திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்காதீர்கள்.
25.குருநாதா, இந்த பிரபஞ்சத்தில் நாங்கள் வாழும் பூமியை போன்று வேற்று கிரகங்களில் உயிரினங்கள், மனிதர்கள் வாழ்கிறார்களா?
இதற்கு ஏற்கனவே பதில் உரைத்துவிட்டேன். நிச்சயம் வாழ்கின்றார்கள் அப்பா. அவர்கள் காசிக்கு வந்து செல்கின்றார்கள் அப்பா! காசியில் நீராடி செல்கின்றார்கள் அப்பா! ஆனாலும் அவர்களை மனிதனால் பார்க்க முடியவில்லை. மனிதன் பார்த்துவிட்டால், அனைத்து புண்ணியங்களும் கிடைத்துவிடுமப்பா! இப்பொழுது கூட மனதில் எதுவும் நினைக்காமல், இறைவா! நமச்சிவாய என்று மனதுள் சொல்லிக் கொண்டிருந்தால், போதும். கைலாயத்தில் கூட அவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே! கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களிலும் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள் அப்பா! அவர்களை பார்த்தாலோ, அவர்கள் ஒருவனை பார்த்தாலோ புண்ணியங்கள் அப்பா! இவன்தனை ஒரு நாள் கைலாயத்திற்கு அழைத்து செல்வேன் அப்பா!
26. வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது. இழுத்து பிடித்து கண்ணனை உரலில் கட்டுவது போல் செய்தாலும் கண்ணனை போல் தவழ ஆரம்பிக்கிறது. வசீஷ்டர் மாமுனிவர் போல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அப்பனே! எதுவும் செய்யத் தேவை இல்லை. யார் ஒருவன் இக்கேள்வியை கேட்டானோ, அவனை மலையில் தங்கி, ஒரு மாதம் அங்கேயே சமைத்து உண்ணச்சொல். பிறகு பார்ப்போம், பிறகு பதிலளிக்கின்றேன் அப்பனே!
27.ஶ்ரீ விநாயகர் பெருமைகள் ஶ்ரீ அகத்திய குரு சொல்ல அடியேன் கேட்க விருப்பம். ஶ்ரீ விநாயக பெருமான் அருளையும் அன்பும் பெற குரு வழி காட்ட வேண்டுகிறேன்.
அப்பனே! இப்பொழுது மட்டும் யான் ஒன்றை சொல்கின்றேன்! யான் வேறு, விநாயகன் வேறா? இதற்கு பதில் பின்னர் உரைக்கின்றேன், பொறுத்திருக்க!
28. சிஷ்யனின் தவறுகள் குரு ஏற்றுக்கொள்வார். சிஷ்யன் ஒரு போதும் குருவாக முடியாது. தெய்வ சக்தி கடனாக மாறும். இது போன்று செய்திகளை தவிர்த்தாலும், நாராயண நாரயண என மனதில் சொல்லி கொண்டே இருக்கிறேன். அப்படியும் மனம் சில சமயம் கொதிப்படைகிறது ஏன்?
அப்பனே! பேயப்பா மனிதன்! பேயின் குணங்களப்பா! அப்பனே! அதனால்தான் யான் சொன்னேன்! தியானங்கள் செய்யச் சொன்னேன். பின் ஆசைகள் இருந்தால், இவை எல்லாம் வரும் என்பேன் அப்பனே! ஆசைகள் இல்லாமல் இருக்கச்சொல் அப்பனே! நிச்சயம் யான் அவனுக்கு அருகிலே உட்கார்ந்து அனைத்தையும் சொல்வேன் அப்பனே!
29. யோகியர்கள் சிவனேனு இருந்து செயல்பட்டார்கள் செயல்படுகிறார்கள! விளக்குங்களேன் குருநாதா!
அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! இதைப்பற்றி விளக்குவதற்கு, மனிதன் இன்னும் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இவை எல்லாம், யான் ஈசனிடம் கேட்டுத்தான் உரைக்க வேண்டும் அப்பனே! இன்னும் யான் சொல்லுகின்றேன், மூலாதாரத்தை எப்படி எல்லாம் இயக்க வேண்டும். வாசி யோகம் எது என்று கூட உரைக்கின்றேன். ஒரு குரு மூலமே இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான ஒருவன் இல்லையப்பா! இல்லையப்பா! என் பெயரை அழைப்பது, பல சித்தர்கள் பெயரை இழுப்பது, இங்கே கற்றுக்கொடுப்பான் என்று உரைப்பது. யானே சிரிக்கின்றேன் அவனை பார்த்து. ஏன் என்றால், வாசி யோகம் யார் ஒருவன் சொல்லிக் கொடுக்கின்றானோ, அவன் காமத்தை மேலே ஏற்றி இன்னும் கர்மாவை சேர்த்துக் கொண்டு இருக்கின்றான் அவன். வாசி யோகத்தை கற்றவன் ஒருவன் அருகில் இருந்து பார், அவன் எப்படி மாயையில் சிக்கி கொண்டு இருக்கின்றான் என்பதை கூட. இன்னும் ஏராளமான பொய்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே. இதுவும் கூட பதிலளிக்க, புசுண்ட முனி வரவில்லை. வந்திருந்தால், யான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை அப்பா!
30. இப்போது உள்ள நிலையில், மனிதனே பாவி, என்று சிவன், முருகர், ஞானிகள் எல்லாம் சொல்கின்றனர். மனிதனோ எல்லா உறுப்புகளிலும் நோய், வைத்துக்கொண்டு, விரல் நுனியில் விஞ்சானத்தை வைத்துக்கொண்டு இன்பம் என்று துன்பத்தை விரும்புகிறான். மனிதனை குழந்தையாய் பாவித்து அவனிடம் இருக்கும் ஆயுதத்தை ஏதேனும் ஒரு வழியில் திருப்பிவிட உத்தேசம் ஊள்ளதா?
அப்பனே! நிச்சயம் உண்டு! உண்டு! என்பேன் அப்பனே! இதை ஒருநாள் அனைவருக்கும் தெரிவிக்கப் போகின்றேன். இதற்காக நிச்சயம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்! நலமாகவே! நிச்சயம்! அப்பனே! ஏற்கெனவே உயர் பெரியோர்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் அப்பனே, துன்பத்திற்கு காரணம் என்னவென்று. திரும்பாத திரும்ப யான் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது அப்பனே! இறைவன் அனைவரையும் சமமாகவே படைக்கின்றான், ஆனால் பேராசையில் நுழைந்து மனிதன்... எதை என்று அறிய! அறிய! மனிதன்தான் பேயப்பா!
31. எனக்கு ராமயணம் தெரியும்,எனக்கு பாகவதம் தெரியும் என்று சொன்ன பக்திமானுக்கு ஒரு மகான் வந்து அவை எல்லாம் வெறும் விளையாட்டுக்களே மனமே கருமத்தை விரும்புகிறது என்றார். மகான் மனதுனாலேயே கர்மத்தை கழித்திக்கொள் என்றார் எதை மனதில் உள்வாங்கியும் கடல் அலைப்போல் பிரச்சனை ஆக உள்ளதே!
இக்கேள்வியை கேட்டவனை ஒரு மாதம்/இரு மாதம், மலைகளில் சென்று, பழங்களை பறித்து உண்டிடச்சொல். இவை எல்லாம் அப்பொழுது சொன்னாலும், விளங்காது என்பேன் அப்பனே! அதனால்தான் எது எப்பொழுது சொல்ல வேண்டுமோ, அத்தனையும் கூட நிச்சயம் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே! எது என்று ஒரு புண்ணியத்தலத்திலே!
32. இறைவன் சித்துக்கள் அருள்கிறார், முறைப்படி சித்தர்கள் சித்துக்கள் செய்கிறார்கள். மனிதனோ அறிவினால் பலவற்றை செய்கிறான் மனிதனுக்கே துன்பம் வருகிறது. இதில் கர்மா செய்யும் மனிதனை தடுத்து நிறுத்தாமல் அனைவருக்கும் அந்த கர்மா கலந்து விடுகிறதே.
சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம், இறைவனும் இருக்கின்றான். மனிதனை இறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக நன்றாக படைக்கின்றான். ஆனால் அறிவின் மூலம் வளர்ச்சி அடைந்து அனைத்தையும் கெடுத்து விடுகின்றான். அதனால்தான் இறைவனுக்கும் கோபம் வந்து பல துன்பங்களை அனுபவிக்குமாறு கட்டளை இடுகின்றான். படைத்தவன் விதியை எழுதிவிட்டும், இவன் தவறாக நடந்தால், பிரம்மாவுக்கு விதியை மாற்ற உரிமை உண்டு.
33. குருநாதா, அடியேன் வளைகுடா நாட்டில் இருக்கிறேன். இங்கு இருக்கும் தமிழ் மக்கள் முருகன் பெருமானை ஒரு பொதுவான இடம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் வைத்து வழிபாடு செய்கிறார்கள். அய்யன் முருகனுக்கு கோவில் கட்ட வேண்டும் இந்த நாட்டில் கோவில் கட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைக்க, அய்யா அவர்கள் வாக்குகள் உரைக்க வேண்டும்.
உலகம் முருகனதப்பா! அதனால், முருகன் அங்கே இருக்கின்றான். அப்பனே! நிச்சயம் ஒருநாள் முருகன் இதற்கெல்லாம் பதிலளிப்பான், அப்பனே!
34. அடுத்து என்ன பிறப்போ, நமக்கு சந்ததி இல்லை அதனால் வாட்டுமோ என்ற எண்ணத்தில் முழ்கி இருப்போருக்கு, முக்தியை தவிர வேறு எதுவும்
தர முடியாத சூழ்நிலையில் என்ன அருள்வீர்கள்?
அப்பனே! ஏதும் நினைக்காமல், இறைவனை சரணாகதி அடைவதே சிறப்பு என்பேன் அப்பனே. இதனைப்பற்றியும், இன்னும் தெளிவுகள் உண்டு.
35. அகத்திய மாமுனி பாலகனாக சிறுவயதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை! சிறுவயதில் செய்த திருவிளையாடல் பற்றி கூறுங்கள்.
அப்பனே! நிச்சயம் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே! பின் நன்மையாக, பல ஞானியர்கள் இருக்கின்றார்கள். தெரியாமல் போய்விட்டது, வாழ்க்கையின் தத்துவத்தை. அதனால் ஒவ்வொரு திருத்தலத்தில், ஒவ்வொரு சித்தர்களும் வந்து செப்புவார்கள் அப்பா! யானும் நிச்சயமாக வந்து உரைக்கத்தான் போகின்றேன் அப்பனே!
36. அகத்திய மாமுனிவர் பல நேரம் ஜீவநாடியில் மிருக வதம் கூடாது என்று கூறுகிறார் ஆனால் பல காவல் தெய்வங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் மிருகவாதம் செய்து சுவாமிக்கு படைக்கின்றார்கள் அப்படி படைக்கின்ற இடத்தில் இறைவன் அருள் அல்லது இறைவன் சக்தி இருக்குமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி இருக்கும் கோவிலுக்கு நாம் போகலாமா அதனால் கர்மம் வந்து சேருமா?
இதற்கும் பதில் உரைத்துவிட்டேன், ஏற்கனவே! மிருகவதை என்பதே தவறு! ஆனால் அந்த இறைச்சியையும் கூட விட்டு விடுகின்றார்களா என்ன? எடுத்து வந்து அப்படியே பின் உண்ணுகின்றார்கள்! இதிலிருந்து தெரிகின்றதா, மனிதன் சுயநலக்காரன் என்று. இறைவன் எதையும் விரும்புவதில்லை. அவர்களுக்கும் கூட கட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. சிறிதாவது யோசித்தார்களா என்ன? அக்காவல் தெய்வமே அவர்களுக்கும், தகுந்த பாடத்தை கற்பிக்கும் என்பேன். குழவி வந்து கொட்டினால் தெரியும், இதன் அர்த்தம் என்னவென்று. மற்றவை பிறகு உரைக்கின்றேன்!
37. மிருக வதம் கூடாது என்றால் அங்கு ஒரு உயிரை எடுக்கிறோம் என்று தானே அர்த்தம் அப்படி மிருகவாதம் தவறு என்றால் இறைவனுக்கு அற்பணிக்கும் பூக்கள் மாலைகள் வில்வ இலைகள் , துளசி இலைகள், இளநீர் இவையும் ஒரு விதத்தில் ஓர் உயிர் கொண்ட தாவரங்களை அழிக்கின்றோம் அல்லவா அதையும் இறைவனுக்கே படைக்கின்றோம் அல்லவா இதுவும் தவறா!!?
இறைவன் என்ன! அனைத்தும் உந்தனிடம் கேட்டானா, என்ன? உன் மனம் போலே செய்வது, பின் கேள்விகளை கேட்பது! (திட்டியது மறைக்கப்பட்டது!)
38. பெரும் ஞானங்களை பெற்றார்கள் இயற்கையாக அவர்களுக்கு அமைந்தது. ஆனால் வெகுஜன மனிதர்களாகிய நாங்கள் இம்மாதிரியான கோவில்களுக்கு கடவுளை வேண்டினாலும் அது செயற்கையாக இருக்கிறது (இறையருள்) இதுவும் இயற்கையாக வர வேண்டும் அல்லவா?! அப்படி செயற்கையாக இறைவனை தரிசித்தால் ஞானங்கள் அல்லது எங்களது கர்மாக்கள் எப்படி கழியும்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
முட்டாள் மனிதனே, அதனால்தான் யாங்கள் வந்து கொண்டிருந்தோம் இவ்வுலகத்தில். ஏதாவது ஏழைகளுக்கு செய்து நன்மையாகட்டும் என்று. அதிலும் கூட ஒருவன் இருந்தான், அதாவது ஒன்றும் இல்லாமல். "அப்பனே! நீ இத்திருத்தலத்திற்கு செல் என்று". ஆனால், அவந்தனுக்கு மனதில் சந்தோஷமில்லை. மீண்டும், வேறு ஒருவனிடம் சென்றான். அங்கும் சொன்னான் "நீ ஒரு திருத்தலத்திற்கு போ!" என்று. அங்கும் சென்றுவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. இவை போன்றே பல ஆட்களையும் தேடி, தேடி. ஆனால் இறைவனை வணங்க மறந்து விட்டான். உண்மையாக மனிதனைத்தான் நம்பினான். அவந்தனும் இன்றும் ஒரு தரித்திரனாகவே இருந்து கொண்டு இருக்கின்றான். கடைசியில் மாந்த்ரீகமும் சென்று அலைந்து கொண்டிருக்கின்றான். இதற்கு என்னதான் சொல்வது.
39. காஞ்சி மகா பெரியவா வாழ்ந்தவரை வேதம் வேதம் என்று இருந்தார் அவரோட ஆத்ம நிலையைப் பற்றி, கூறுங்கள்.
அப்பனே! உயர் ஆத்மாக்கள் பற்றி, அங்கங்கு எடுத்துரைக்கின்றேன். இதற்கும் பொறுத்திருக்க வேண்டும் என்பேன்.
40. சித்தர்களின் தொகுப்பை புத்தகம் ஆக பதிவிட்டுள்ளார்கள் இவை அனைத்தும் சித்தர்களின் வாக்கின்படி உள்ளதா அல்லது இவர்கள் வேறு மாதிரி புரிந்து எழுதியுள்ளார்களா? அப்படிப்பட்ட புத்தகங்களை கடைபிடிக்கலாமா உதாரணத்திற்கு அகத்தியர் பூஜா விதி, காகபுஜண்டர் பெருங்காவியம், போக மகரிஷி வைத்தியம். சித்தர்களின் வைத்தியத்தில் கூறி இருக்கும் பல செடிகள் தற்போது கிடைப்பது இல்லை?
அதனை, யானே எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே! ஏன் என்றால், மனிதன் அனைத்தும் மாற்றி எழுதிவிட்டான் அப்பனே! அதாவது, இவ்வாறு இருந்தால், மனிதன் உயர்ந்த நிலைகளை அடைந்து விடுவான் என்று, அனைத்தையும் மாற்றி எழுதிவிட்டான். ஆனால் யாங்கள் விடப்போவதில்லை அப்பனே!
41. தற்போது உள்ள சூழ்நிலையில் இயற்கையாக விவசாயம் செய்வது இல்லை பலதும் ரசாயனம் கலந்தே வருகிறது அதை உட்கொள்ளுவதால் அதிலுள்ள ஆற்றல்கள் கிடைப்பது இல்லை நச்சுகளும் சேர்ந்து உட்கொள்கிறோம் இதற்கு மாற்று வழி கூறுங்கள் ஐயா உதாரணத்திற்கு சித்தர்கள் மூலிகை ஆன கரிசலாங்கண்ணி முதல் கொண்டு hybrid ஆக கிடைக்கிறது.. அகத்தியர் ஐயா கீரைகளை உணவில் எடுத்துக் கொள் என்று ஜீவநாடி யில் கூறுகிறார் ஆனால் ரசாயனம் கலந்தே கீரைகள் வருகிறது அதற்காக தான் இந்த கேள்வியை கேட்டேன் ஐயா..
அப்பனே! எதை என்று அறிய! அறிய! நிச்சயம் கிடைக்க கூடும். கிடைத்தும் கூட, அனைத்தும் யாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம். ஆனால், விரைவிலே வரவேண்டும், அதி விரைவிலே உண்ண வேண்டும் என மனிதன் நினைத்துக் கொண்டு இருக்கின்றான். எப்படி அப்பனே. இயற்கையை, இயற்கையாகவே வளர்த்து உண்டு கொண்டுதான் இருக்கிறார்கள் அப்பனே! கட்டங்கள் பட்டு பட்டு, அவை வளர்த்தால்தான் அதன் பெருமைகள், புண்ணியங்கள். பின் நோய்கள் தீருமப்பா. யாரும் அதனை பாதுகாப்பதில்லை அப்பனே. அதனால், மனிதனைத்தான் யான் குற்றம் சாட்டுவேன், அப்பனே!
42. பொதிகை மலைக்கு பெண்கள் மலை ஏறக்கூடாது என்று படித்துள்ளேன் இது உண்மைதானா இப்படி கூடாது என்றால் பெண்கள் அகத்தியரை தரிசிப்பது எப்படி அதையும் மீறி சிலர் சென்றார்கள் என்றால் (இறை பக்தியினால்) தீங்கு ஏற்படுமா அப்படி சென்றவர்களை இறைவன் மன்னித்து அருள்வாரோ!?
அப்பனே! என்னை தரிசிக்க, அன்பை மட்டும் செலுத்தினால் போதும், யானே வருவேனப்பா! தன் தன் இல்லத்திற்கு. யான் எதை கூறுகிறேனோ அதை அப்படியே செய்தால், யான் வருவேனப்பா! அப்பனே! ஆண் பெண், என்கிற பேதமில்லை, எங்களுக்கு. இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், ஈசன் ஏன் பார்வதிதேவிக்கு இடம் கொடுத்தான் என்று கூட. அப்பனே! ஆணுக்கு ஆசைகள் என்றால், பின் பெண்ணுக்கும் இறைவனை பார்க்க வேண்டும் என்று ஆசைகள் இருக்காதா அப்பனே! அனைவர்களும், எங்களிடத்தில், சமமானவர்களே! அப்பனே!
43. வீட்டில் அல்லது கோயிலில் எத்தனை எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும் (ஒற்றபடை அல்லது இரட்டைபடை). எலுமிச்சம் பழம் மாலை எத்தனை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் (ஒற்றபடை அல்லது இரட்டைபடை)
இதனைப்பற்றி நிச்சயம் உரைக்கின்றேன். இதனை பற்றி கேட்கின்றானே!, அவனை உண்ணும் உணவை எண்ணிவிட்டு உண்ணச்சொல், முதலில். நிச்சயம், இக் கேள்வியை கேட்கின்றான் அவனை இப்படி செய்து விட்டு வரச்சொல். யான் உரைக்கின்றேன் அப்பனே!
44. சில குடும்பங்களில், தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறக்கும் போது, பெற்றோர் மிகுந்த மனக் கவலை அடைகின்றனர். மேலும் இறுதிச் சடங்குகளில் பெண் பிள்ளைகள் அனுமதிக்கப் படுவதில்லை. இறைவன் அருளால் ஆண் வாரிசு பாக்கியம் அப்படிப்பட்டவர்களுக்கு கிட்ட அகத்தியர் ஐயா கருணையுடன் வழி காட்ட வேண்டும்.
பெண்களை இறைவியாக பாவிக்க வேண்டும். இப்படி நினைத்தால் யான் என்ன சொல்வது? இந்நாடு எப்பொழுது பெண்களை தெய்வமாக நினைக்கிறதோ, அப்பொழுது நிச்சயம் மாறிவிடும் என்பேன் அப்பனே! பெண் குழந்தைகள் தெய்வங்களப்பா!
45. திருச்செந்தூர் ராஜ கோபுரம் ஏன் திறக்க படாமல் இருக்கிறது.
அப்பனே! இச்செய்தியை அங்கே உரைக்கின்றேன் அப்பனே!
46. புண்ணிய தீர்த்த குளம், கருவறை கோபுரம் போன்றவற்றில் பணம் சில்லறை நாணயங்கள் பக்தர்களால் தூக்கி வீசபடுகிறது. இதன் தாத்பரியம்?
இப்பொழுது கேட்டானே என்ன! ஏன், உன் குழந்தையை தூக்கி வீசக்கூடாதா என்ன? அப்பனே! சுயநலக்காரன் அப்பனே! அப்படி வீசிவிட்டால் பணங்கள் தனக்கு வந்துவிடும் என்று கூட. அப்பனே! அனைத்தும் மனிதன் செய்து கொண்டது. அதனால்தான், அப்பனே! உலகை அழித்துக் கொண்டே வருகின்றான். இதுவும் அறிவின் பயன்களே என்று! ஆனால் தரித்திரம் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இறைவன் காசுகளை ஆசைப்படமாட்டான் என்பேன் அப்பனே! அன்புக்குத்தான் அடிமை.
47. ஒரு மனிதன் உடலாலும், உள்ளத்தாலும், எண்ணங்களாலும் எப்படி தன்னை சுத்தம் செய்து கொள்வது? கெட்ட எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?
அப்பனே! இதைப்பற்றி, பல உரைகளிலும் உரைத்திருக்கின்றேன் அப்பனே! மனக்குழப்பங்கள் வரும்! இவற்றை எல்லாம் தாண்டி ஒருவன் வந்துவிட்டால், எல்லாம் தெளிவாகிவிடும்! அப்பனே!
48. நற்பவி என்ற வாக்கின் மகத்துவம் என்ன. இதை உச்சரிக்கும் பொது மனநிலை எப்படி இருக்க வேண்டும்? இதை உச்சரித்தால் என்ன நன்மை?
அப்பனே! இவ் மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது, எவ் ஆசைகளும் இருக்கக்கூடாது என்பேன் அப்பனே! மீண்டும், மீண்டும் சொல்லுகின்றேன்! எவ் ஆசைகளும் இருக்கக்கூடாது! அப்படி உச்சரித்தால் அப்பனே! இதன் சக்தி அதிகமாகிவிடும் அப்பனே! ஆனால், அனைத்தும் ஆசைகள் வைத்துக்கொண்டு, இவ்வாறு உச்சரித்தால், படுகுழியில்தான் விழவேண்டும்! யான் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே!
49. கயிலாய மலையின் மேல் ஏன் யாராலும் செல்ல இயலவில்லை சிவ பக்தராக இருந்தாலும் மலையேற முடிவதில்லையே இதன் தாத்பரியர்தை அறியலாமா குருவே?
அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! சூரியனை தொட்டுவிடுவதென்பது அத்தனை சுலபமா என்ன? ஈசன்! எதை என்று அறிய! இதனைப்பற்றியும், அங்கே உரைக்கின்றேன்.
50. தர்ம வழியில் வரும் நபருக்கு இறைவன் வேதனையைதான் கொடுப்பாரா? இதன் தாத்பர்யத்தை அறிய விரும்புகிறேன்!
அப்பனே! தர்மமே கடைசியில் வெல்லும் என்பேன் அப்பனே. ஒரு நல்காரியங்கள் செய்கின்ற பொழுது, பல துன்பங்களும், வருத்தங்களும் வரும்! அவை எல்லாம் ஏன் வருகின்றது என்றால், இறைவனே சோதிப்பான். அப்பனே! ஒருவனை ஏற்படுத்தி அவனால், இவ்வுலகம் நன்மை அடையுமா என்று கூட இறைவன் சோதிப்பது உண்டு. ஆனாலும் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன். அப்பொழுது இறைவன், விட்டு சென்று விடுகின்றான், அப்பனே! இவ்வாறு இருக்க, எப்படி தர்மத்தை காக்க வேண்டும் என்று அறிய! அறிய!
51. வெற்றிலை போடும் போது எந்த எந்த பகுதி நீக்கி சாப்பிட வேண்டும்?
இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிரு அப்பனே! இவை எல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே!
52. வீட்டில் அலமாரி எந்த மூலையில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்
இவன் மூளையை உடலில் எந்த இடத்தில் வைக்கவேண்டும் என இறைவன் யோசிக்க மறந்துவிட்டான், அப்பனே!
53. வீட்டில் முன்னோர்களின் படங்களை எந்த திசை நோக்கி மாட்ட வேண்டும்.
இவந்தனும்............. அறிவில்லாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது...............!
54. முடி/நகம் திருத்துவதற்கு நாள் பார்த்து செய்ய வேண்டுமா?
அப்பனே! இவனை காலை வெட்டச்சொல், கைகளை வெட்டச்சொல். அதற்கு நாள் பார்க்கச்சொல், முதலில்.
55. கோவில்பட்டி பூவன நாதர் உடனுறை செண்பகவல்லி அம்மன் கோவில் வரலாறு பற்றியும் அங்கு உள்ள அகத்தியர் அய்யா தீர்த்தம் பற்றியும் கூறுங்களேன்!
அப்பனே! ஒருநாள், பல புண்ணிய தலங்களை பற்றி அங்கேதான் உரைப்பேன் என்று பலமுறை சொல்லிவிட்டேன். மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தால், அப்பனே! எந்தனுக்கும் கூட கோபம் வரும்! ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கின்றேன் அப்பனே!
56. குருவே! வேல்விருத்தம், மயில் விருத்தம் பற்றி......
அப்பனே! பின் இவை எது என்று அறிய! அறிய, எவை என்று புரிய புரிய! அறுபடை வீடுகளுக்கும் சென்று, பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வரச்சொல், இக்கேள்விக்கான பதில் நிச்சயம் உரைப்பேன்!
57. குருவே! குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்யவேண்டிய கோவில்களை பற்றி உரைக்கிறேன் என்று கூறியிருந்தீர்கள். அது பற்றி...
அப்பனே! நிச்சயம் உரைக்கின்றேன் இதனைப்பற்றி ஒரு திருத்தலத்தில்! பொறுத்திருக்கச் சொல்.
[அகத்தியர் அடியவர்களே!
1. இதுவரை பதில் கிடைத்த கேள்விகளை அனைத்தையும் தந்து விட்டேன். இனி ஒரு 30 கேள்விகள் கைவசம் உள்ளது. அதை கேட்கப் போகும் முன், திரு.ஜானகிராமனுக்கு உத்தரவிட்டு, அகத்தியப்பெருமான், பல புண்ணிய க்ஷேத்ரங்களுக்கும் அழைத்து சென்றுவிட்டார். இனி அவர் திரும்பி ஊர் வந்த பின்னரோ, அல்லது ஏதேனும் ஒரு புண்ணியதலத்தில் அவருக்கு அனுமதி கிடைத்தாலோ தான் கேள்விகளை சமர்ப்பிக்க முடியும்.
2. பலருடைய கேள்விகளால் குருநாதர் கடுப்பாகிவிட்டபடியால், இனி உள்ள கேள்விகளில் எதை கேட்கவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என அடியேன் தீர்மானிக்கப் போகிறேன். உங்கள் கேள்வி இடம் பெறவில்லை என்றால், அதற்கு காரணம் நீங்கள்தான்.
3. தயவு செய்து தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளை அனுப்ப வேண்டாம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteநன்றிகள் ஐயா 🙏🙏🙏
அகத்தீசாய நம 🙇♂️🙏 நன்றி ஐயா
ReplyDeleteஐயா கேள்விகளை எப்படி தங்களுக்கு அனுப்ப வேண்டும்
ReplyDeleteவலது பக்கம் scroll செய்து பாருங்க...
Deleteமூன்று வெள்ளை நிற பாக்ஸ் இருக்கும் ..
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteநன்றி ஐயா🙏🌹🙏
வணக்கம் ஐயா அன்பர்கள் சிலர் தேவையில்லாத கேள்விகளை கேட்டு குருநாதரை கோபப்படுத்தி உள்ளார்கள் ஆகையால் அது போன்ற கேள்விகளை புறக்கணிப்பது நல்லதுவே அதே சமயம் சிலர் கர்ம வினையால் பாதிக்கப்பட்டு இக்கட்டனான சூழ்நிலையில் குருநாதரை வேண்டி வினா எழுப்பும்போது அதை லோகாய விசயமாக கருதாது அவர்களது வேண்டுகோளை குருநாதரிடம் திரு ஜானகிராமன் அவர்கள் சமர்பித்து உதவி புரிய வேண்டுகிறேன் 🙏
ReplyDeleteசித்த புருஷரிடம் வாஸ்து பற்றி யெல்லாம் கேட்பது நான்கு யுகம் கண்ட முனிவர் அந்த ராமருக்கே வழிகாட்டி யவர்
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha 🙏🙏🙏
ReplyDelete