​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 7 February 2023

சித்தன் அருள் - 1287 - ஜீவநாடி பொதுவாக்கு 4 (06/02/2023


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கேள்வி/பதில் தொடர்கிறது!

11. சித்தர்கள் பல ஆலயங்கள் கட்டி இருப்பதாக சொல்லி இருக்காங்க. எங்கு எல்லாம் அந்த கோவில் இருக்கிறது, அகத்தியர் அடியவர்கள் பல ஊர்ல இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் சென்று வர வாய்ப்பு கிடைக்கும் அல்லவா

எதை என்று அறிய! அறிய! அனைத்தும் சொல்லுகின்றேன் அப்பனே! ஒவ்வொரு வாக்கிலும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றேன் அப்பா! பொய் மனிதனப்பா! ஒரு நாளைக்கு கூட சென்றடைவதில்லை அப்பனே! ஆனாலும் உண்மையான பக்தர்கள் சென்றடைந்து கொண்டேதான் இருக்கின்றார்கள் அப்பனே! அதற்கும் தகுதி, தரம் இருந்தால் தான் யாங்களே அழைத்து செல்வோம் அப்பனே! வரும் காலங்களில், இன்னும் வாக்குகள் நீண்டு போய்க்கொண்டே இருந்திருக்கும் அப்பனே! சித்த  ரகசியங்களை நன்கு புரிந்து கொண்டு இப்பூமியில் பிறக்க வேண்டாம், இப்பூமியில் பிறந்துவிட்டாலே, கட்டங்கள், கட்டங்கள், கட்டங்கள் அப்பனே. அதனால்தான் மேல் லோகத்து தேவர்களின் ரகசியங்களும் கூட பொதிந்துள்ளது என்பேன். அதனால், யாங்கள் மக்களை காக்கவே, புவிதன்னில் வந்துவிட்டோம் அப்பனே! அதனால், கர்மத்தைக்கூட நீக்கி, புவிதன்னிலிருந்து வெளியேற்றி, மேல் லோகத்திற்கு அழைத்து சென்று, அவ் ஆத்மாவும் சரணடைந்து, சொல்கின்றேன் அப்பனே, இத்தனை ஆண்டுகள் இவ் ஆத்மாவுக்கு என்று கூட. யான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன் அப்பனே! பூமி கர்ம உலகமப்பா, அழியும் உலகமப்பா!

12. ஒரு மனிதன் குலதெய்வத்திடம் பேச முடியுமா? குல தெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி?

அப்பனே! எது என்று அறிய! அறிய! முதலில், உன்னை யார் என்று தெரிந்திருக்கவில்லை. அப்படி, உன்னை யார் என்று தெரிந்திருக்கவில்லை என்றால் அப்பனே! எப்படி மற்றொரு தெய்வத்தை நீ அடைய முடியும். அதனால், முதலில், நாம்தான் எதற்காக பிறந்துள்ளோம், எதற்க்காக வாழ்கிறோம் என்று தெரிந்தால்தான் அப்பனே! அடுத்த படிக்கு செல்ல முடியும். அப்பனே! முதல் படியிலேயே நிற்கின்றான் மனிதன் அப்பனே! அப்படியிருக்க, எவ்வாறு குலதெய்வத்தை வணங்கினாலும், அறிவுகள் கிட்டுமாப்பா! அப்படியிருக்க, யார் சென்று வணங்கினாலும், கிட்டாதப்பா, கிட்டாதப்பா!

13. சித்தர்கள் ஆட்சி அமைய ஏதேனும் வழிபாடு / பரிகாரம் அடியவர்கள் சேர்ந்து செய்ய வழி காட்ட வேண்டும்?

மனித முட்டாள்களே, ஜென்மங்களே இன்னும் திருந்த மாட்டார்கள் அப்பனே! எது என்று அறிய! அறிய! யாங்கள் சிறிது, சிறிதாக உரைத்துக் கொண்டேதான் இருக்கின்றோம். எளிதில் மாற்றம் அடையச் செய்துவிடுவோம் அப்பனே! பலமாக கட்டங்கள் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றோம் அப்பனே! மனிதன் திருந்த!

14. குல தெய்வதிற்கு உயிர் பலி பூஜை செய்கிறார்கள். இது பாவ கர்மா அல்லவா?

அப்பனே! எது என்று அறிய! அறிய! தன் இல்லத்திலுள்ள யாரையாவது உயிர் பலி கொடுக்கச்சொல், பார்ப்போம் அப்பனே! பின்பு உயிர்களை கொன்று அவனே தின்பது. தரித்திரன் அப்பா! தரித்திரன்!

15. மருதமலை முருகர் கோவில் வரலாறு தெரிவிக்க வேண்டுகிறேன்!

அப்பனே! எது என்று கூற, அது விளையாடும் தலமப்பா. இன்று கூட அவன், மயில் வாகனத்தில் அமர்ந்து வந்து விளையாடிக் கொண்டே இருக்கின்றான் அப்பா! தன் பக்தர்களுக்கு, இன்னும் வரங்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பா! அங்கு சென்று வந்தால், நிச்சயம் நல்மாற்றங்கள், ஏராளம், ஏராளம். அங்குள்ள குகையில், எது என்று அறிய அறிய, சித்தர்களும் வந்து செல்வார்கள் அப்பா! மாலைப்பொழுதில், அவன்தன் மயில் வாகனத்தில் விளையாடுவானப்பா, அனுதினமும். ஆனால், நேரத்தை யான் சொல்லிவிடமாட்டேன் அப்பா! அதற்கும் தகுதிகள் இருக்க வேண்டும் மனிதர்களிடத்தில். ஒரு உயிரை கொன்று சாப்பிட்டு, அங்கு சென்றாலும், அடி பலமாக இருக்கும் அப்பனே! எதை என்று அறிய, அறிய! வாய் பேசமுடியாத அளவுக்கு, நன்றாக தின்றுவிட்டு சென்றால், நிச்சயம், அங்கிருக்கின்றானே, கணபதி, அவந்தனே கட்டத்தை கொடுத்து அனுப்பிவிடுவான் அப்பனே! மருதமலைக்கு சென்றோம், கட்டங்கள்தான் வந்தது என புலம்பியவர்களை, யான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். மற்றவை, அவ் மலையிலே வந்து சொல்கின்றேன் அப்பனே!

16. ஆண்கள் இல்லாத குடும்பத்தில்,பெண்கள் பெற்றோருக்காக திதி கொடுக்கலாமா?

அப்பனே! எது என்று அறிய! அறிய! பெண்கள் கூட, ஒரு வகையில், யான் என்னதான் சொல்வது, தவழ்ந்த வீடு, புகுந்த வீடு, பின் புகுந்த வீடு சென்றடைந்து விட்டால், அனைத்தும் மறந்து விடுகிறார்கள் அப்பனே! அப்பனே, இறைவன் அனைவருக்கும் சமமானவன், இதை தெரிந்து கொண்டால் நன்று. மற்றவனெல்லாம், முட்டாள், முட்டாள்!

17. அதே போல் பெண்கள் இறுதி சடங்கை செய்யலாமா?

அப்பனே! இவை எல்லாம் கூட செய்யலாம் என்பேன் அப்பனே! மனிதர்கள், ஆண்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டார்கள் அப்பனே! மூடத்தனம், முட்டாள்தனம் என்று ஆக்கிவிட்டார்கள் என்பேன் அப்பனே! இவை எல்லாம் மனிதன் வகுத்துக் கொண்டவையே என்பேன் அப்பனே! அப்பனே, ஒன்றை தெரிந்து கொள், ஈசன் பார்வதிக்கு ஏன் இடம் கொடுத்தான் என்று தெரியுமா? அப்பனே, இதை புரிந்து கொண்டால், நன்று! நன்று! நன்று!

18. பெண்கள், பெண் குழந்தைகள், தற்போதுள்ள சூழ்நிலையில் பத்திரமாக வெளியே சென்று வர எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்? எந்த கடவுளை வணங்க வேண்டும்?

அப்பனே! எது என்று அறிய! அறிய! பாலாம்பிகை தேவியை வணங்கச்சொல்! போதுமானது! அப்பனே, எதை என்று அறிய, அறிய, எதை என்று கூற, கூற "ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக, வருக" என்று ஜெபிக்க, குழந்தை ரூபத்தில் வந்து கொண்டே இருப்பாள் அவள். நிச்சயம் தெரிவித்துவிடு அப்பனே!

19. இக்காலத்தில் குழந்தைகளை ஞான வழியில் கொண்டு செல்வது எப்படி?

அப்பனே, சிறுவயதிலேயே பிற உயிர்களை கொல்லச் சொல்வது, செயற்கயான உணவுகளை உட்கொள்வது, இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, இதிகாசங்களை, அதாவது, ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் இவையெல்லாம் படிக்கச்சொல் அப்பனே! நாளடைவில், 20 வயதுக்கு மேலே அவர்கள் பெரிய ஞானிகள் ஆகிவிடுவார்கள் அப்பனே! அதுதான் உண்மை.

20. இந்த கால குழந்தைகள், நன்றாக உணவு உட்கொள்வதே இல்லை. சத்தான உணவு, என்னவென்று கூற முடியுமா?

அப்பனே எது என்று அறிய அறிய! அப்பனே! உலகத்தில் சால சிறந்தது, முருங்கைதான் அப்பா. அதாவது கீரை தானப்பா! இதை உட்கொள்ள உட்கொள்ள எந்நோய்களும் வராதப்பா! அது மட்டுமல்லாமல், நெல்லிக்கனி சாற்றையும் உட்கொள்ள நன்று! அது மட்டுமல்லாமல், தேவகனியான எலுமிச்சை கனியும், நிச்சயம் உட்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நல்முறையாக, திரிபலா, திரிகடுகம் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே! வயதாக, வயதாக, ஒரு நோயும் வராது என்பேன் அப்பனே! அனைத்தும் யாங்கள் வகுத்துக் கொண்டிருந்தோம் அப்பனே! ஆனால், மனிதன் அனைத்தும் கெடுத்துவிட்டு, செயற்கையை நாடிவிட்டான் அப்பனே! எப்படி இவை எல்லாம் தெரிவிப்பது அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நம,
    நன்றி ஐயா🙏🌹🙏🌷💐💐

    ReplyDelete
  2. அகத்தீசாய நம 🙏🙇‍♂️ நன்றி ஐயா

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete