​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 5 February 2023

சித்தன் அருள் - 1285 - ஜீவநாடி பொது வாக்கு - 2 (31/01/2023)


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கேள்வி பதில் பகுதி தொடர்கிறது!

21. சளி குற்றம் மலக் குற்றம் போக்குவது எப்படி?

அப்பனே எதை என்று அறிய! அறிய! ஏற்கனவே சொன்னேன் அப்பனே! நன்றாக தின்பது, அதாவது, இயற்கை அல்லாமல், மற்றவை எல்லாம் தின்னுவது, இப்படி இருந்தால், உடலில், அழுக்குகள் தங்கிவிடும் சொல்வேன் அப்பனே! யான் சொல்லியிருக்கிறேன், பல மூலிகைகளை உட்கொள் என்று. எவனாவது, அதை அறிந்து, அறிந்து, பின்பற்றினானா என்ன? புசுண்ட முனிதான் பேசுகின்றேன். அதனால்தான், மனிதனை திருடன், திருடன் என்கிறோம். பின் அறிவுள்ளவனாக இருந்தும், பின் அறிவற்றவனாக இருக்கின்றான்! மூடன்! முட்டாள். யான் திட்டுவது மனிதனை. மீறி கேள்வி கேட்டால் காரியும் துப்புவேன் மனிதனை!

22.கருங்காலி வளையல்கள் பெண்கள் கையில் அணியலாமா.

அப்பனே நிச்சயம் அணியச்சொல், பார்ப்போம். நல் மாற்றங்கள் நிகழும் என்பேன், எதை என்று அறிய! அறிய. ஆனால், நிகழ் காலத்தில் யான் எதுவும் சொல்ல தேவை இல்லை அப்பா! யார் இதை கேட்டார்களோ, அவன் பெண்களுக்கு நிச்சயம் கைகளில் வளை போட கொடுக்க வேண்டும். அவன் நிச்சயம் இதை கடை பிடிக்க வேண்டும், சொல்லிவிடு.

23. குருவே முழுவதும் தங்கத்தால் ஆன வளையல்கள் செய்து போட்டு கொள்ள வசதியில்லாதோர் தாமிரத்தால் வளையல் செய்து தங்க முலாம் பூசிய வளையல்கள் செய்து போட்டுக் கொள்ளலாமா?

அப்பனே! எதற்கு தங்கத்தை அணிகின்றாய் அப்பனே! எளிமையாக இருந்தால் போதுமே!

24.நான் தினமும் மாலையில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு வருகிறேன். மாதவிலக்கு நாட்களில் போடுவதில்லை. மாதவிலக்கு நாட்களிலும் தொடர்ந்து சாம்பிராணி புகை போடலாமா?

இதன் விளக்கம் இப்பொழுது அவசியமில்லை அப்பனே! வரும் காலத்தில் இதை பற்றி, விவரமாக விவரிக்கிறேன், அப்பனே!

25.குழந்தைக்கு பல் தெத்து பல்லாக இருக்கிறது. பல் வரிசை எடுப்பாக வெளியே நீண்டு இருக்கிறது. இதை சரிசெய்ய வழி சொல்லுங்கள் அய்யனே.

அப்பனே! ஒன்றை சொல்கின்றேன். தந்தை, தாய் அவள் ஒழுங்காக இருந்தால், இதெல்லாம் எதற்கு வருகின்றது அப்பனே! அதனால் தான் நன்றாக இறைவனை வணங்கி, நல் மூலிகைகளை உட்கொண்டு, அவர்கள் நன்றாக வந்தால், பிள்ளைகளுக்கு இவை எல்லாம் வராது அப்பனே. பின் இளவயதில் ஆடுவது, பின் ஆட்டம் முடிந்தால், அப்பனே, மணங்கள் செய்து கொள்வது, பின் திருந்துவதா. இதற்கு, முதலிலேயே திருந்தி விட்டால், இறைவன் ஒருவன் இருக்கின்றான், என்று வாழ்ந்து வந்தால், அனைத்தும் சரியாகும், போதுமானது.  

26. ஆதிகுரு அகத்தியரிடம் கேள்வியோ சந்தேகமோ ஆன்மீகம் பற்றியோ கேட்க என்னை தயார்படுத்திக் கொள்வது எப்படி என்பதே என் கேள்வி ஐயா.

அப்பனே, எதை என்று அறிய, அறிய. அவன்தனை மூன்று மலைகளை ஏறச்சொல் அப்பனே! பின்பு உரைக்கின்றேன். சோம்பேறி!

27. தற்போது உள்ள வாழ்வியல் மாற்றத்தால் 10 வயது சிறுவர்களுக்கு கூட இளநரை ஏற்படுகிறது, இதற்கு நிரந்த தீர்வு அகத்தியரிடம் கேட்க வேண்டுகிறேன்.

இப்பொழுதான் கூறினேன் அப்பா! இன்றைய காலகட்டத்தில், நல்ல உணவை உண்டு வந்தாலே போதுமானது. உணவே மருந்தப்பா! கண்ணுக்கு எதிரே இருக்கின்றது இயற்கை வளங்கள். ஆனாலும் அதை ஒருவன் கூட கடைபிடிப்பதில்லை அப்பனே. பிறகு கெடுதலை நோக்கித்தான் மனிதன் செல்லுகின்றான். நன்மையை புரிய யாங்கள் வழி வகுத்துக்கொண்டே இருக்கின்றோம். கர்மாவின் பாதையில்தான் மனிதன் செல்லுகின்றான். இதை பின்பற்ற ஆளில்லையப்பா.

28. ஜீவநாடி எப்பொழுது தொடங்கப்பட்டது? முன் யுகங்களில் இருந்ததா? இது கலியுகம் என்பதால் மக்களுக்காக சித்தர்களால் தருவிக்கப்பட்டதா? அகத்தியப்பெருமான் தான் முதலில் நாடி வழி வாக்கு உரைத்தாரா?

அப்பனே! எதை என்று அறிய! அறிய! பல அரசர்களிடம் இது இருந்தது என்பேன். ஆனால் ஒரு அரசனை பற்றி சொல்லுகின்றேன். ராஜராஜ சோழன் அப்பனே! அவனிடத்தில் ஜீவ நாடி இருந்தது. அதில் அனைத்து சித்தர்களும் வந்து செப்புவார்கள். அதனால்தான் அவன் புகழ், இன்னும் மாறவில்லை. இன்னும் வரும் காலங்களில், அப்பனே, சுவடியை வைத்துள்ளோர்கள் பெரிய அரசனாவார்கள் என்று அர்த்தம்.

29. எதிர் காலத்திலும், இவ்வாக்குகள் தடையின்றி கிடைக்குமா?

அப்பனே! யாங்கள் வந்து கொண்டுதான் இருப்போம். அத்தனை சித்தர்களும் வந்து மனிதனை திருத்தப் பார்ப்பார்கள். அப்படியும் திருந்தவில்லை என்றால் அப்பனே! பின் தலையில் குட்டி திருத்துவோம்.

30. மனிதர்கள் தவறு செய்தாலும், மன்னித்தருளி, நிலையாக வாக்குகள் கிடைக்க அருள் புரிய வேண்டும்!

அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! பின் திருடனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் அப்பனே! நல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் அப்பனே! அதில் திருந்தவில்லை என்றால் யாங்கள் என்ன சொல்ல. நிச்சயம் சந்தர்ப்பங்கள் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றோம் அப்பனே! 

31.குருநாதர் மற்றும் அம்பாளின் நிஜ ஸ்வரூபத்தை அருள வேண்டும். குரு நாதரை, சிவ ரூபமாக, லோபா அன்னையை சக்தி ஸ்வரூபமாக வணங்கி வருகிறேன்.  குருநாதர் கருணை கூர்ந்து விளக்க வேண்டும்!

எதை என்று அறிய! அறிய! அப்பனே! நீ எதை கற்பனையாக்குகின்றாயோ, அதன் வடிவிலே யாங்கள் வருவோம். இதனை பற்றி மீண்டும் சொல்லுகின்றேன் அப்பனே!

32.ஆழ் மனதின் அடியில் இருக்கும் இச்சைகளை, எவ்வளவு முயன்றும் நீக்க முடியவில்லையே? அனைத்தும் விலகி போய் விட்டது போல் சில காலம் இருந்தாலும், பின் ஒரு முறை திடீர் என்று வெளியே கிளம்புகிறது. இதை எப்படி கை ஆள்வது?

அப்பனே! எதை என்று அறிய! அறிய! ஒரு ஞானி சொல்லியிருக்கின்றான், பசித்திரு, விழித்திரு, தனித்திரு என்று. அப்பனே! புரிகின்றதா அப்பனே! இதுபோல் இருந்து, மலைகள், காடுகள், இவையெல்லாம் ஏறு! அப்பொழுது தெரியும் அப்பனே!

33. ஆன்மா என்பது ஒளி மற்றும் ஒலி வடிவில் இருக்கிறதா? அது மனித ஸ்தூல சரீரத்தில் எங்கு இருக்கிறது?

அப்பனே! இதற்கு பதில், என் பின்னே வாருங்கள், யான் காட்டுகின்றேன். ஆனால், இதுவும் கூட முதல் வகுப்பிலே தேர்ச்சி பெறவில்லை அப்பனே! பின் எப்படி யான் உரைப்பது அப்பனே!

34. ஆன்மா தன்னை தானே, காட்டி கொண்டால் தவிர, ஒரு மனித முயற்சியால் அதை அடைய முடியாதா?

அப்பனே! இதனைப்பற்றி எல்லாம் நேரடியாக உரைப்பதுதான் சாலச்சிறந்தது அப்பனே!

35. பக்தி மார்கம் என்பது ஆன்மீகத்தில் ஒரு முதல் நிலை மட்டும் தானா? பக்தி நிலை மட்டும் ஆன்ம தரிசனம் எடுத்து செல்லுமா?

அப்பனே! முதலில் கேள்வி கேட்டவனுக்குச் சொல். மூன்று மணிக்கு எழுந்து, இருமணி நேரங்கள், தியானம் செய்து, அப்பனே! பின் 10 நபர்களுக்காவது உணவளிக்கச்சொல். பின்பு, கோமாதாவிற்கும் அகத்திக்கீரை கொடுக்கச்சொல் அப்பனே! அப்பொழுது இதை மூன்று வாரங்கள்,  இதை செய்து வந்தால் அப்பனே! நிச்சயம், இவந்தனுக்கு யானே வந்து வழிகள் காட்டுவேன் அப்பனே! அப்படி இல்லையென்றால் அவன் தலை மீது குட்டுவேன், சொல்லிவிட்டேன்.

36. ஆக்கினை அல்லது நெற்றி போட்டு என்பது என்ன? இரு புருவமத்தியா? இல்லை கண்களின் மையமா?

அப்பனே, இதனை பற்றியும் சொல்லுகின்றேன் அப்பனே! இதற்கு சிரசாசனம், அதாவது, கால்களை மேல் நோக்கி தூக்கி வைத்து அனுதினமும் ஒரு ஐந்து நிமிடம் வரை நிற்கச்சொல், ஒரு மண்டலம் வரை. இவனுக்கு புரியவில்லை என்றால் யான் சொல்லுகின்றேன் விளக்கங்களை.

37.எளிய வழி தியானம் செய்வது எப்படி?

அப்பனே! எளிய வழியில் உண்பது எப்படி?

38. தியானம் வேறு, ஜெபம் வேறா?

இதற்கெல்லாம் என்ன பதில் கூறுவது? சிவன் வேறு முருகன் வேறா? இவன் குழப்பிக் கொண்டிருக்கட்டும். சரியான பதிலை இவனுக்கு பிறகு உரைக்கின்றேன்.

39. தன்னை மறந்து, காலம் கடந்து , தியானத்தில் கரைவது எப்படி?

அப்பனே! அதனால்தான் சொன்னேன், காடுகளும், மலைகளும் ஏறச்சொல் அவனை என்று! 

40.மனம் பல நேரம், கட்டு பாடு இல்லாமல் செல்கிறது. எப்போதும் சாத்வீக வழியில் மனம் நிற்க என்ன செய்ய வேண்டும்?

அப்பனே! பழங்களை மட்டும் உண்டு வரச்சொல். வேறு எதுவும் வேண்டாம். பின்பு பார்ப்போம் அப்பனே! இவற்றால், மனம் எப்படி அடங்குகிறது என்று பார்ப்போம்.

41. மனதாலும், சொல்லாலும், செயலாலும், இது வரை செய்த பாவ நிந்தனை விலக என்ன செய்வது?

நிச்சயம் சொல்லுகின்றேன் அப்பனே! அனைவருக்கும் சொல்லுகின்றேன் அப்பனே! ஆனால் பொறுத்திருக்கத்தான் வேண்டும்!

42. இறை வெளியில் இல்லை, ஒவ்வொரு மனிதனின் மன ஆழத்தில் தான் இருக்கிறதா? ஆனாலும் முதலில் வெளியில் தேடி அலைந்த பின் தானே, மனம் அடங்கி பின்பு, உள்ளே தேட முடியும். எடுத்த ஆரம்பதியிலேயே மனதின் ஆழத்தில் தேடுவது முடியுமா?

எங்கும் இருக்கின்றான் இறைவன், ஆனால், இதனை சமநிலைப்படுத்த யாங்கள் போராடிக் கொண்டு இருக்கின்றோம். மனிதனின் ஆசைகள், பேராசைகளப்பா! ஆசைகளை விட்டுவிட்டால்,எங்கும் இருக்கும் இறைவனை, நேரடியாக காணலாம். அவ் ஆசைகள் மனதில் இருப்பதால்தான் தெளிவில்லை அப்பனே! இது மனிதனுக்கு புரிவதே இல்லை. ஆசைகளை விடுங்கள். யான் இறைவனை காட்டுகின்றேன். என்னையும் காணலாம்.

43. தானம், தர்மம், பிறருக்கு வழி காட்டுதல் போன்ற நல் செயல்களாலும் , சிறிது கர்மா வருமா?

எதை என்று அறிய! அறிய! அப்பனே! நிச்சயம்! பரவாமல் இருப்பதற்கு ரகசியத்தை யான் சொல்லுகின்றேன், அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. அகத்தீசாய நம 🙏🙇‍♂️ நன்றி ஐயா

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. Thanks a lot for enlighting us

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம,
    நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  5. ஆத்ம பிதா சிவானந்த பரமஹம்சரை பற்றியும். அவர் வழங்கிய வாசி பற்றியும் நம் குருநாதர் வாக்கு

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete