​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 1 February 2023

சித்தன் அருள் - 1280 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!






18/1/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு  வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!

அப்பனே நலன்களாக நலன்களாக என்னுடைய ஆசிகள் பெருகி கொண்டே போகும் என்பேன் அப்பனே!!! 

குறைகள் இல்லை அப்பனே இவ் அண்ணாமலையில் எவ்வாறு என்பதையும் கூட பல கோடி சித்தர்கள் அப்பனே எதை எதை என்று நோக்கி நோக்கி அப்பனே பல யுகத்திலும் கூட வந்து வந்து அப்பனே எதை என்று நினைத்து நினைத்து முக்திக்கு!!!!!! அப்பனே!!!! 

இதனால் அப்பனே  இன்றளவும்  கூட ஞானிகளும் ரிஷிகளும் கூட இவ் அண்ணாமலையை வலம் வருவதால் அப்பனே எதை என்று எதிர்பாராமல் அப்பனே பின் மனிதர்களும் கூட வலம் வரும்பொழுது அப்பனே சில கர்மாக்கள் அவ் ரிஷிகளும் ஞானிகளும் எடுத்துச் செல்கின்றனர் என்பேன் அப்பனே !!!! அதனால்  பின் நமச்சிவாயா நமச்சிவாயா  என்று மந்திரத்தை சொன்னவாறே அப்பனே நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து  பின் எண்ணங்கள் தூய்மைப்படுத்தி  அப்பனே நல்விதமாகவே பின் நமச்சிவாயனை அழைத்துக் கொண்டே வந்தால் அப்பனே நிச்சயம் பின் ஞானிகளும் ரிஷிகளும் கூட அப்பனே உதவுவார்கள் என்பது மெய்!!!!!

அதை பின் மனதில் நிறுத்த வேண்டும்!!! அப்பனே கடைநாள் வரையிலும் கூட!!!

அப்படி இல்லை என்றாலும் அப்பனே எதை எதையோ நினைத்து வந்தாலும் எதை எதையோ நினைத்து வந்தாலும் கூட அப்பனே நிச்சயம் பின் ஆசிகள் கிடைக்க பின் பெறுவதில்லை என்பேன் அப்பனே !!!

அதனால் நலன்கள் அப்பனே யானும் தக்க சமயத்தில்  இங்கு வருவேன் என்பேன் அப்பனே... அவை தன் வரும் காலங்களில் நிச்சயம் யான் உரைப்பேன் என்பேன் அப்பனே!!!

பல பல யுகத்திலும் கூட இவ் மலையானது எப்படி எப்படி இருந்தது என்பதையும் கூட யான் எதையென்று சொல்ல!!!!!!! 

அப்பனே இப்பொழுது கூட அப்பனே காட்சியளிக்கின்றது என்பேன் அப்பனே அனைவரும் உணர்ந்ததே என்பேன் அப்பனே உணர்ந்தது மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே பின் எதை எதை என்று அறிய அறிய அப்பனே நீங்களும் அப்பனே மனம் குழம்பி போவீர்கள் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் சொல்லவில்லை என்பேன். அப்பனே!!!

இவ் மலையின் சூட்சுமம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து இங்கே பின்....... """""  உடுக்கை """"""" அப்பனே சரியாகவே அப்பனே பின் ஆடுவான் என்பேன் அப்பனே!!!!  """"ஈசன்!!!!!!! 

அதாவது ஒரு ரகசியத்தை கூறுகின்றேன் அப்பனே இம் மலையின் அதாவது தீபம்( கார்த்திகை தீபம்) சரியாக ஏற்றுவார்கள் என்பேன் அப்பனே..... அவ் சமயத்தில் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அனைவரும் அப்பனே எவை என்றும் உணராமல் ஆனாலும் நடுநிசியில் அதாவது பின் நடு ராத்திரியில் அப்பனே ஈசன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் சப்தம் அதாவது உடுக்கை சத்தம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஆடுவான் என்பேன் அப்பனே!!!! 

இவைதன் இங்கு எதை என்று அறிந்து அறிந்து பின் பின் ஏழுமலையான்( திருப்பதி திருமலை மலைத்தொடர்களில்) இடத்தில் எதிரொலிக்கும் என்பேன் அப்பனே!!! இதனை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் இவ் ரகசியங்கள் இன்னும் ஏராளமானவையே தான் யான் உரைக்கின்றேன் அப்பனே முன்பெல்லாம் அப்பனே எதனையும் என்று அறிந்து அறிந்து அண்ணாமலையிலே!!! தங்குவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் இங்கிருந்து அப்பனே எதை என்று அறிய அறிய சில காலங்கள் அப்பனே இங்கே இருந்து அப்பனே நேரடியாக அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஏழுமலையான்( திருப்பதிக்கு) இடத்தில் செல்வார்கள் என்பேன் அப்பனே!!!! 

எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அங்கிருந்து அப்படியே எதை என்று அறிய அறிய அப்பனே திருகாளாத்ரி (காளஹஸ்தி வாயு ஸ்தலம்) வருவார்கள் என்பேன் அப்பனே!!!!

பின் அங்கிருந்து எதை என்று அறிய அறிய ஏகாம்பரம்(  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மண் ஸ்தலம்) எனும்   இடத்திற்கு வருவார்கள்!!! என்பேன் அப்பனே!!!! 

பின் எதை என்று அறிந்து அறிந்து அங்கிருந்து பின் நடராசன் அதாவது சிதம்பரம் (ஆகாய ஸ்தலம்) அப்பனே எதை என்று அறிந்து அறிந்து !!!!

அங்கிருந்து எவை என்று உணர்ந்து உணர்ந்து தற்பொழுது அப்பனே பின் எதை என்று கூட அப்பனே பின் நீர் எதையென்று பின் நீர் நிலையிலே இருக்கின்றானே ஈசன் அங்கு ( திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நீர் ஸ்தலம்) கடைசியாக வந்து முடிப்பார்கள் என்பேன் அப்பனே!!!!

இதுதான் பின் தத்துவம் என்பேன் அப்பனே!!!!

ஐந்து தத்துவங்கள் அப்பனே!!!!

ஆறாவது தத்துவம் தான் அப்பனே வேறுபட்டது என்பேன் அப்பனே!!! 

அதை இப்பொழுது யான் சொல்லிவிட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே புரியாது என்பேன் அப்பனே!!!

 ஐந்து தத்துவங்களைப் பற்றி எதை என்று அறிய அறிய அதாவது ஐம்பூதங்கள் என்று( பஞ்சபூதங்கள்) எதை என்று அறிந்து அறிந்து சொல்வார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் எதற்கெதற்கு தலம் எவை என்று அறிய அறிய அப்பனே இத்தலத்தில் வணங்கிட்டு அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் ஆறாவது அறிவு அப்பனே ஏழுமலையான் இடத்திலே என்பேன் அப்பனே!!!!!

இதுதான் நிரந்தரம் என்பேன் அப்பனே!!!!!

அப்பொழுது இங்கு அருள்கள் கிட்டிவிட்டால் அப்பனே பின் மலையேறும் பொழுது அனைத்தும்  வாரி வழங்குவான் என்பேன் அப்பனே!!!! 

இதுதான் ரகசியம்!!!

இவ் ரகசியத்தை இன்னும் இன்னும் அப்பனே ஏராளமான வாக்குகளிலும் கூட யான் உரைத்துக் கொண்டே வருவேன் அப்பனே!!!! நிச்சயம் இதை நிச்சயம் அப்பனே கடைபிடிப்பார்கள் என்பேன்  வரும் காலத்தில் நிச்சயம் எதை என்று அறிய அறிய உலகம் எதை என்று அறிய அறிய பின் உருண்டை என்பார்கள் அப்பனே!!! நிச்சயம்  பின் ஆனாலும் முதலில் எங்கு என்ன பின் செய்கின்றார்களோ அதுவே கடைசியில் முடியும் என்பேன் அப்பனே!!!! நடுவில்  தான் ஆட்டம்!!! நடுவில் தான் மாற்றம் என்பதைப்போல அப்பனே நிச்சயம் மீண்டும் எதை என்று உணர்ந்து உணர்ந்து யாங்கள் மக்களை அழைத்துச் செல்வோம் நல்வழி பாதையில்!!!

அப்பனே இது கலியுகம் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே தரித்திரங்கள் தான் நிகழும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொன்றும் கூட அப்பனே எப்படி? எப்படி? உயர்ந்தார்கள் என்பதையும் கூட எங்களை பின் தொடர்பு எதை என்று ஏற்படுத்தி பின் எங்கள் பேச்சை கேட்டு எப்படி நடந்தார்கள்? எப்படி உயர்வான இடத்திற்கு சென்றார்கள்? என்பதையெல்லாம் வரும் காலத்தில் நிச்சயமாய் யாங்கள் தெரிவிப்போம்!!!! என்பேன் அப்பனே!!! 

அவ்வாறே நடந்து சென்றால் அப்பனே நிச்சயம் முக்தி என்பேன் அப்பனே !!!

ஆனாலும் இதனை என்றும் அறிந்தறிந்து அப்பனே நிச்சயம் எது என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பாவங்கள் செய்யும் எவை என்று  அறிய அறிய மனிதனிடத்திலே......."""""" அதை நாசம் செய்யும் இடம்""""   

அப்பனே!!!!!! """"" பாபநாசம் """

( திருநெல்வேலி பாபநாசம் கல்யாண தீர்த்தம்)

எதை எதை என்று அறிய அறிய யானும் அங்கே இருந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

ஆனாலும் எத்தலங்கள் எங்கு அமைத்தாலும்!!!!!

அப்பனே எந்தனுக்கு ஒரு இடம் இருக்கின்றது!!!!! அப்பனே அங்கே தான் யான் இருக்கின்றேன்!!! """"""""ஒரு குகையில் """""""

ஆனாலும் இப்பொழுது அதை தெரிவிக்க மாட்டேன் யான் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே முதலில் நல்லொழுக்கத்தை பொறாமையை எதை என்று அறிய அறிய நல் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!!!!! பொறாமையை நீக்க வேண்டும்!!!!! நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்!!!!
இவையெல்லாம் தெரிவித்து விட்டு யான் எங்கு இருக்கின்றேன்? என்று கூட தெரிவிப்பேன் அப்பனே!!!!!

நலமாகவே அங்கு வந்தால் எதை என்று அறிய அறிய என்னுடைய காட்சிகள் நிச்சயம் பின் நல் மனிதர்களுக்கு அதாவது என் பக்தர்களுக்கு யானே இக்கலியுகத்தில் நிச்சயம் காட்ட தான் போகின்றேன் என்பேன் அப்பனே!!!!

ஏற்கனவே பல பல முதியவர் வேடத்திலும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது பின்  வேடமணிந்தும் யான் வந்து ஆசிர்வதித்திருக்கின்றேன் பல!!! பல மனிதர்களுக்கு கூட!!!!!!

அதனால் அப்பனே புத்தி கெட்ட மனிதன் அப்பனே எதை எதனையோ நம்பி திரிந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!! 

ஆனால் ஒன்றும் லாபம் இல்லை அப்பனே!!! 

இறைவனை எப்படி வணங்குவது என்பதை கூட தெரியாமல் தவித்து தவித்து கொண்டு இருக்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே!!!! 

பின் நலமாகவே அப்பனே இறைவனை எப்படி வணங்குவது என்பதை கூட நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து நீங்கள் செயல்பட்டாலே அப்பனே உயர்வான நிலைக்கு செல்வார்கள் என்பேன் அப்பனே!!!!

யாங்கள் சித்தர்கள் எதை என்று அறிந்து அறிந்து அதனால் மனிதனுக்கு எந்நேரத்தில் உதவ வேண்டுமா அப்பொழுதுதான் உதவுவோமே!!! தவிர.... அப்பனே எதை என்று அறிய அறிய பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிந்து அறிந்து இதை செய்தால் அவை நடக்கும் அதை செய்தால் இவை நடக்கும் என்பதெல்லாம் அப்பனே பொய் பித்தலாட்டங்கள் என்பதுதான் மெய் !!!!!

அதனால் அப்பனே இதை இப்படியே விட்டு விட்டால் அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சித்தர்களே பொய் என்ற நிலைமைக்கு எதை என்று அறிய ஆனாலும் இனிமேலும் அடிகள் எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே புசுண்ட முனியே எதை என்று அறிய அறிய அப்பனே ஒரு முறை சொல்வான்!!!!! அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் பின் நன்று!!!! 

அப்படி பயன்படுத்திக் கொள்ளாவிடில் நிச்சயம் தண்டனைகள் உண்டு!! உண்டு !!என்பேன் அப்பனே!!

பின் யானும் பார்திருக்கின்றேன் அப்பனே புசுண்ட முனியை கூட!!!!! 

பல வழிகளில் கூட நல் ஆட்களை உயர்த்தி உள்ளான்  என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்று அறிய அப்பனே ஏமாற்றுபவர்களையும் கூட அப்பனே மூடநம்பிக்கை உள்ளவர்களையும் கூட நிச்சயம் பின் அடிகள் கொடுத்து அப்பனே திருத்தியும் உள்ளான் என்பேன் அப்பனே!!!!

சித்தர்கள் யாங்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! 

ஆனால் எதையெதை என்று அறிந்து அறிந்து கூட அப்பனே இன்றளவும் கூட பல ஞானியர்கள் இடத்திலும் கூட பல சக்திகள் அப்பனே தவழ்ந்து தவழ்ந்து அப்பனே எங்கெல்லாம் செல்ல வேண்டும்??  என்பதையெல்லாம் யாங்கள் எடுத்துரைத்து கொண்டே வருகின்றோம் அப்பனே!!!  நல்முறைகளாகவே!!! அப்பனே பல ஞானியர்களும் கூட பழனி தன்னில் அப்பனே பல ஞானியர்கள் அருளும் கூட இப்பொழுது கூட எதை என்று அறிய அறிய பல பல ஞானியர்கள் இறந்தாலும் ஆனாலும் அப்பனே மனிதர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் வந்து மனிதனை எப்படியாவது பின் எவை என்று கூட நல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூட நிச்சயம் ஞானியர்கள் அருள் கூர்ந்து வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே சரியாகவே ஒழுங்காகவே எதை என்று அறிய அறிய ஒரு உயிரையும் கொல்லாது!!!!! அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயம் ஜீவகாருண்யத்தை கடைபிடித்து கடைபிடித்து ஜீவசமாதிகளுக்கு சென்றால் அப்பனே நல் முறையாக மாற்றங்கள் ஏற்படுவது உறுதி!! உறுதி!! என்பேன் !!! அப்பனே!!

இன்னும் எதை எதை என்று அறிய அறிய அப்பனே எங்களால் அனைத்தும் செய்ய முடியும் அதாவது எதையென்று அறிய அறிய அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் எதையென்றும் அறியாத அளவிற்கும் கூட இன்னும் பல வித்தைகளையும் கூட யாங்கள் காட்ட போகின்றோம் என்பேன் அப்பனே!!!! 

அதனால் நல்லொழுக்கம் எதை என்று அறிய அறிய அப்பனே முதலில் எதை என்று அறிய அறிய மனதை ஒரு நிலைப்படுத்தி பின் தியானங்கள் செய்து செய்து பின் எண்ணங்களை நல் எண்ணங்களாக மாற்றுங்கள் அப்பனே!!!! 

அப்பொழுது தான் இறைவன் வருவானே!!!!  தவிர நீ எதை என்று அறிய அறிய இறைவனுக்கு என்ன செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்ளபோவதில்லை!!!! 

அவ்வெண்ணங்களை எப்படியெல்லாம் வளர்த்து கொள்ள வேண்டுமென்பதையும் கூட பின் ஒரு திருத்தலத்தில் மறுவாக்கும் மறுவாக்குமாக நிச்சயம் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள்!!!  நன்று!!!! நலம்!!! ஆசிகள் அனைவருக்கும்!!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

சமீபத்தில் ஒரு அகத்தியர் அடியவருக்கு திருவெண்காடு உள்பட சில ஆலயங்களுக்கு சென்று வா என்று குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவிட்டிருந்தார் அதன்படியே அந்த அடியவர் சிதம்பரம் காளகஸ்தி திருச்செந்தூர் திருநாரையூர் திருக்கடையூர் திருவெண்காடு சென்று நல்முறையாக தரிசனம் செய்து விட்டு வந்து குருநாதர் அகத்தியர் பெருமானிடம் திருவெண்காடு ( நவகிரக ஸ்தலங்களில் புதன் பகவானுக்குரிய ஸ்தலம்) ஸ்தலத்தை பற்றி விசேஷங்களை கேட்ட பொழுது திருவண்ணாமலை இந்த வாக்கிற்கு பிறகு திருவெண்காடு ஸ்தலத்தின் பற்றியும் சில வாக்குகள் கூறினார்!!! அவ் வாக்குகள்!!!

அப்பனே நலமாக நலமாக எதை என்று அறிய அறிய நீ சென்ற அனைத்து இடத்திற்கும் யான் வந்தேனப்பா!!! நீ சென்ற இடத்திற்கெல்லாம் என்னுடைய ஆசிகள் அப்பனே!!! யானும் உடன் வந்தேன் அப்பனே ஆசிர்வாதங்கள் தந்துவிட்டேன் அப்பனே நலமாகவே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய திருவெண்காடு அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு கர்மத்தை அழிப்பதற்கான ஸ்தலம் அவை மட்டும் இல்லாமல் பின் வித்தைகள் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் எதை  என்று கூட புதன் பகவான் பின் வித்தைகளுக்கு பின் எதை என்று அறிந்து அறிந்து அவன் அருள் இருந்தாலே பல வித்தைகள் கற்பித்துக் கொள்ளலாம் பின் கற்றும் கொள்ளலாம் எதை என்று உணர்ந்து உணர்ந்து!!

அதனால் அப்பனே அவந்தனை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் பார்த்தாலே அதாவது பின் சென்று அதாவது பின் சென்று சென்று அடிக்கடி சென்று கொண்டு வந்தாலே பல சூட்சமங்கள் ஒளிந்துள்ளது அங்கு என்பேன் அப்பனே!!!

அத்தலம் சாதாரணமானதில்லை என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய அப்பனே பல வித்தைகள் அங்கேதான் புதைந்துள்ளது என்பேன் அப்பனே!!! அவ் ரகசியத்தை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன். அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  2. ஐயா பஞ்சேஷ்டி ஸ்தலத்தில் ன் மகிமையை பற்றி அருள் வாக்கு தரவும்

    ReplyDelete
  3. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Amma Appa rompa nandri papanasathukum thiruchenthurukum allithu chendru Dharsan koduthatharku .Kodinamaskaram Appa.kalyana thirthail Amma Appa ungali sevitha poltu Miga miga santhosam.Asirvathangalku Mika Nandri.om lopamuthra Samantha Agasthiar thiruvadi pottri.

    ReplyDelete
  5. ஐந்து தத்துவங்களைப் பற்றி எதை என்று அறிய அறிய அதாவது ஐம்பூதங்கள் என்று( பஞ்சபூதங்கள்) எதை என்று அறிந்து அறிந்து சொல்வார்கள் என்பேன் அப்பனே!!!!

    ஆனாலும் எதற்கெதற்கு தலம் எவை என்று அறிய அறிய அப்பனே இத்தலத்தில் வணங்கிட்டு அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் ஆறாவது அறிவு அப்பனே ஏழுமலையான் இடத்திலே என்பேன் அப்பனே!!!!!

    இதுதான் நிரந்தரம் என்பேன் அப்பனே!!!!!

    அப்பொழுது இங்கு அருள்கள் கிட்டிவிட்டால் அப்பனே பின் மலையேறும் பொழுது அனைத்தும் வாரி வழங்குவான் என்பேன் அப்பனே!!!!

    ஐயா, பஞ்சபூத ஸ்தலங்கள் தரிசனம் முடித்து மறுபடியும் திருமலைக்கு செல்ல வேண்டுமா..
    கொஞ்சம் தெளிவுபடுத்தவும்.. நன்றீங்க..
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி

    ReplyDelete
    Replies
    1. திருவண்ணாமலை > திருகாளஹஸ்தி > காஞ்சிபுரம் > சிதம்பரம் > திருவானைக்கா > திருப்பதி

      Delete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete