​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 26 February 2023

சித்தன் அருள் - 1292 - அன்புடன் அகத்தியர் - காசியில் சிவராத்திரி வாக்கு!





18/2/2023 மகாசிவராத்திரி அன்று உலகை ஆளும் நமச்சிவாயன் பார்வதி தேவி குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு !!!

திருந்தினால் திருந்தட்டும்!!!

வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி. கங்கை கரை. 

பார்வதி தேவியார் :

அகிலத்தை தன் தலையில் வைத்திருக்கும் என் மணாளனை பணிந்து ஈகின்றேன் வாக்குகளாக பார்வதி!!!!!! 

ஈசனார் :

பார்வதியே !! யான் எதை என்று சொல்ல?? சொல்ல!!! 

மக்கள் இன்னும் திருந்தவே திருந்துவதாக அதாவது திருந்தியதாக இல்லை!! இல்லை எனலாம்!!! பின் இப்படி இருக்க எப்படி நலன்கள் ஏற்படும்??? தேவியே!!!! 

தேவியே !! இதனைப் பற்றியும் சித்தர்கள் பல வழிகளில் கூட உரைத்து வருகின்றனர் ஆனாலும் மக்கள் திருந்துவதாக தெரியவில்லையே!!!!!!

பார்வதி தேவியார் :

மணாளனே!!!!! நிச்சயம் திருந்துவார்கள் ஒருமுறை சந்தர்ப்பத்தை கொடுங்கள்!! கொடுங்கள்!!! இக்கலியுகத்தில் இப்படியெல்லாம் மக்களை பின் அதாவது நீங்களே பிறவியை இட்டிட்டு இப்படி நீங்களே சொல்லலாமா!!!  என்ன???

ஈசனார் :

பின் தேவியே!!!  எதையென்று யான் அறிந்து அறிந்து கூறுவது???? 

நிச்சயம் இதனைத் தான் பல சித்தர்கள் பின் செப்பியே வருகின்றார்கள்!!! செப்பியே வந்து வந்து ஆனாலும் யான் நன்றாகவே பிறக்க வைக்கின்றேன் மனிதனை!!! இதனையும் கூட சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்!!!

ஆனால் மனிதனோ!!! மாய வலைகளில் சிக்கித் தவித்து மீண்டும் என்னிடத்தில் வருகின்றான்!!! ஏன்? எதற்காக?? எதற்காக?? தேவியே!!!! 

பார்வதி தேவியார் :

மணாளனே!! இதை அறிந்து கொண்டு ஆனாலும் பிறக்கும் பொழுதே நன்றாக பிறக்க வைக்கின்றீர்கள் நீங்கள்!!!

ஆனாலும் யான் பூலோகத்தில் மனிதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் விதியின் பாதை விதியின் பாதை என்றெல்லாம் சென்று கொண்டிருக்கின்றார்கள்!!!

அப்படி நீங்கள் விதியின் பாதையைக் கூட சரியாக எழுதி அனுப்பினால் நிச்சயம் இங்கு ஏன் குளறுபடிகள் நடக்கின்றது????

ஈசனார் : 

தேவியே கேள்!!

நிச்சயமாய் அனைவருக்கும் முதலில் விதியின் பாதை சரியாகத்தான் இருக்கும்!!!

அதாவது இதனை அகத்தியன் அதாவது உலகறிந்தவன்!!! அகத்தியன்!!! அவந்தனே!!! சொல்லி விட்டான்!!"" நேர் கோடாக!! இட்டு இட்டு நேர்கோடாக இட்டு இட்டு அனுப்புகின்றேன்!!! 

ஆனாலும் மனிதன் பின் சில நேரங்களில் அதனைக் கூட திருத்த பின் திருத்த தவறான வழிகளில் ஏற்படுத்தினால் அவ்விதியும் கூட மாறிவிடும்!!! மாறிவிட்டு பின் குறுக்கங்கள் நெறுக்கங்களாக மாறிவிடும்!!
( கோடுகள் திசைமாற்றம்) அப்பொழுது பார்!!!! தேவியே!!!! இதனால் மனிதன் எப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து அனுபவித்து கடைசியில் ஆனாலும் என்னை நோக்கி வந்தவர்களுக்கு ஆனாலும் இதனை நேர்கோடாக ஆக்க முடியும் என்பதையெல்லாம் அகத்தியன் சொல்லிக்கொண்டே வருகின்றான் வாக்குகளாக!!!!

ஆனாலும் மக்கள் புரிந்திருக்கவில்லை!!!! புரிந்திருக்கவில்லை!!!!

அதனால் நிச்சயம் யான் கஷ்டத்தை தான் இன்னும் கொடுக்கப் போகின்றேன் மக்களுக்கு!!!!

திருந்தினால் திருந்தட்டும்!!! இல்லையென்றால் யான் என்ன கூறுவது??

பார்வதி தேவியார் :

மணாளனே!! நில்லுங்கள் !! நீங்கள் இப்படியே தான் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்!!

ஆனால் ஒருவரையாவது யான் காப்பாற்றுகின்றேனா என்று!!! 

நீ  எப்படி. இப்படி எல்லாம் சொல்லலாம்????? சொல்லலாம்!!!!

உலகையே தன் கையில் வைத்திருக்கும் நீயே!!! இப்படி எல்லாம் சொன்னால் மக்கள் எங்கே? செல்வார்கள்!?

ஈசனார் :

தேவியே நில்!!!!! நிச்சயம் யான் எதையுமே கேட்டதில்லை!!!!
(பூசை புனஸ்காரங்கள்) 

எதனால்? எந்தனுக்கு செய்கின்றார்கள்!! என்பதைக் கூட யான் அறிவேன்!!!!

ஆனால் மக்கள் இதை உணர்வதே இல்லை!!!!

பின் எந்தனுக்கு செய்தால் அனைத்தும் யான் கொடுத்து விடுவேன் என்று எண்ணுகின்றார்கள்!!!!

ஆனாலும் அது மிகத் தவறு!!!

முதலில் இயலாதவரைத் தான் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து பின் ஏதாவது ஒன்றை செய்திட்டு என்னிடத்தில் வந்தால் தான் நலன்களே உருவாகும்!!!!

பார்வதி தேவியார்:

பின் மணாளனே!! நில்லுங்கள்!! நில்லுங்கள்! இயலாதவர் என்று சொல்லி விட்டீர்களே!!!

பின் நீ தான் எதை எதை என்று அறிந்து அனைத்தையும் படைக்கின்றீர்கள்!!!

ஏன் இயலாதவர்களை நீங்கள் படைக்கின்றீர்கள்????

பின் இதனை நிச்சயம் நீ என்னிடத்தில் உரைக்க வேண்டும்!!!!

ஈசனார் :::

தேவியே!! கேள்!!!

இயலாதவன் எவர் எதனை என்று அறிய அறிய ஏன் எதற்கு என்று இவ் ஆன்மா நிச்சயம் அதனால்தான் சித்தர்கள் தவறு செய்யாதீர்கள் தவறு செய்யாதீர்கள் என்றெல்லாம்!!!!

ஆனாலும் இதனையும் அன்றி குறிப்பிட்ட சில பாவங்கள் அதாவது மனிதனை மேலே எழும்பி அதாவது விதியின் பாதையையும் கெடுத்து விடுகின்றது!! விதியின் பாதையையும் கெடுத்திட்டு பின் இதனையும் அறிய அறிய பின் நீங்கள் அதாவது அறிந்து அறிந்து மக்களாகிய!!!!! 

அதாவது யான் நின்ற கோலத்திலே சொல்கின்றேன் ஆனாலும் இதை அறிந்து அறிந்து தவறுதான் செய்கின்றார்கள் மனிதர்கள்!!!

மனிதர்கள் தவறுகள் செய்யும் பொழுது அவ்விதியானது அதாவது யான் நேராகவே எழுதி வைத்திருக்கின்றேன் அதை மாற்று வழியாக மனிதனே மாறுகின்ற பொழுது அவ்விதியும் மாறுகின்றது!!

இதனால் எப்படி பின் கஷ்டங்கள் வராமல் இருக்கும்?????

இயலாதவனை!!..... அதாவது தேவியே கேள்!!

 கேட்டு விட்டாய் ஒரு கேள்வி!! இயலாதவர்களை ஏன் படைத்து படைத்து என்று!!!!

ஆனாலும் நிச்சயம் ஆனால் இயலாதவர்கள் யாரும் இல்லை!!!!

அனைவருமே என் பிள்ளைகள் தான்!!!!

ஏதோ சில பாவங்களுக்காக சில காலம் கழித்து யான் அவர்களுக்கு இயலாதவர் இயலாதவர் என்கின்றீர்களே தேவியே!!! எதை அறிந்து நீ சொல்கின்றாய்???? எதையறிந்து நீ சொல்கின்றாய்??

"" இயலாதவன் பக்கத்திலே யான் இருக்கின்றேன்!!!!

அதனால்தான் இயலாதவர்களுக்கு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன்!!!!!!

பார்வதி தேவியார் ::

நிறுத்துங்கள் போதும்!! நிறுத்துங்கள் போதும்!! தேவனே!!!

இப்படி எல்லாம் கூறிக்கொண்டு என்னிடத்தில் தப்பிக்க முயற்சி தேவையில்லை!!!!

ஏன்?? மக்களை படைத்திட்டு!! கஷ்டத்தையும் கொடுத்திட்டு!! மீண்டும் பிறவி ,பிறவி, என்றெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்????
கூறுங்கள்!!!!

ஈசனார் :

தேவியே கேள்!!!....

நிச்சயம் பிறவிகள் வேண்டாம் வேண்டாம் என்பதையெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றார்கள்!!!

ஆனாலும் மனிதன் மாயவலையில் சிக்கி தவித்து கர்மத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து தானும் அழிந்து மற்றவர்களையும் அழித்து அழித்து......... அழித்து அழித்து மீண்டும் பிறவிகளை சுமந்து வந்து கஷ்டங்களை கூட சுமந்து கொண்டு பின் அனுபவித்து அனுபவித்து!!!!!!

இறைவன் அதாவது பக்கத்திலே இருக்கும் இறைவனை கூட நம்பாதவாறு அவந்தனே முடிவெடுத்துக் கொள்கின்றான்

பார்வதி தேவியார் :

நில்லுங்கள் நில்லுங்கள்!!! 

ஒரு கேள்விக்கு கூட நீங்கள் சரியாகவே பதில் உரைக்கவில்லை தேவனே!!!

நிச்சயம் உரையுங்கள்!!! உரையுங்கள்!!! எதனை என்று கலிகாலத்தில் எப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது!!!

ஈசனார்:

தேவியே கேள்!!! கலியுகத்தில் மணங்கள் அதாவது திருமணங்கள் தோல்வியில் முடியும்!!! அவை மட்டும் இல்லாமல் உணவுகள் கூட கிடைக்காது!!! அவை மட்டும் இல்லாமல் சச்சரவுகள் போராட்டங்கள் மனக்குழப்பங்கள் அவை மட்டும் இல்லாமல் மனக்குழப்பங்கள் வந்து மனிதனே அழிந்து விடுவான்!!!!

பார்வதி தேவியார்:

நில்லுங்கள்!!! இன்னும் நீங்கள் சொல்ல வேண்டாம்!!!

இவ்வாறெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்!!!.............

படைத்தது நீயே!!! ஆனாலும் இவ்வாறு  சொல்வது தவறு இல்லையா?????

ஈசனார்:

தேவியே கேள்!!! யான் தவறில்லை என்று தான் சொல்வேன்!!!! 

ஏதோ இவனை படைத்து விடுகின்றோம் என்று எண்ணி யானும் படைக்கின்றேன்!!!!

ஆனாலும் இதை அறிந்து பார்ப்போம் என்று விட்டு விடுகின்றேன்!!!!

ஆனாலும் சில நேரங்கள் இவன் உயர்ந்தும் விடுகின்றான்!!!! பின் உயரத்திற்குச் சென்று தகாத வேலைகளை எல்லாம் செய்து மீண்டும் அவனே தாழ்வான பகுதிக்கு வருகின்ற பொழுது!!.........

அப்பொழுது என்னை புரிகின்றதா? என்ன??

அதாவது யான் மேலே தூக்கி விட்டேனே அப்பொழுதே என்னை உணர்ந்து கொண்டிருந்தால் அவன் எப்பொழுதும் பள்ளத்திற்கு வரமாட்டான் தேவியே!!!!!

பார்வதி தேவியார் :

தேவனே!!!! இதையென்று அறிந்து அறிந்து இப்படியே நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள் இதனால் எப்படித்தான் உலகத்தில் வாழ்வது???? 

ஈசனார் :

தேவியே கேள்!!!! நிச்சயம் வாழ வழி இல்லை கலியுகத்தில்!!!!
ஏனென்றால் பல பலபல வழிகளில் வந்த பல யுகங்களாக நீயும் பார்த்துக் கொண்டே அதாவது என்னிடத்திலே இருந்து கொண்டே தான் இருக்கின்றாய்!!!!

ஆனாலும் பக்தி என்பதை எவ்வாறு கடைப்பிடித்தார்கள் என்பதை எல்லாம் நீயே பார்த்துக் கொண்டிருந்தாய்!!!

ஆனாலும் இப்பொழுது அவ் பக்தி எங்கு? சென்று விட்டது?????

பார்வதி தேவியார் :

தேவாதி!!தேவனே!!! நில்லுங்கள்!!!

ஏன்? இவ்வுலகத்தை ஆளத் தெரிந்த உந்தனுக்கு மனிதனின் லீலைகளைப் புரிந்து ஆள தெரியாதா?????
என்ன????? 

ஈசனார் ::

தேவியே!!!!!!! இப்படி எல்லாம் கேட்டு விடாதே!!!!!

நிச்சயம் ஆளத் தெரியும்!!!!

ஆனாலும் ஓர் தந்தையானவன் அதாவது குழந்தையை சிறு வயதில் தன் இஷ்டப்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகின்றான்!!!

ஆனாலும் அத் தந்தைக்கு மகிழ்ச்சியே!!!!! ஆனாலும் காலங்கள் செல்லச் செல்ல அதுவே வினையாகின்றது!!!!

அப்படித்தான் யானும் பிறக்க வைக்கின்றேன் மனிதர்களை!!!!

ஆனாலும் பின் நன்றாக இருக்கட்டும் என்றும் கூட பின் நிறுத்தி வைத்து விட்டு விடுகின்றேன்!!!

ஆனால் இவ்வாறு இருக்க மீண்டும் அவன் செய்கைகள் தவறான வழியில் சென்று விடுகின்றது!!!

அப்பொழுது பார்த்தாயா??

யார்? இதற்கு காரணம்??

யானா??!!!!!  காரணம்!!?? தேவியே பதில் கூறு!!!!! 

பார்வதி தேவியார்:

தேவனே!!!!  தேவாதிதேவனே!!!!! நிச்சயம் கூறுகின்றேன்!!!!

நீ செய்த தவறு தான் என்பேன் யான்!!!! 

நீ செய்த தவறுதான் என்பேன் மீண்டும்!! மீண்டும்!!!!

ஈசனார் ::

தேவியே!!!!!!!  நிறுத்தும்!!!!!!!!!!! 

ஏன்? இவ்வாறெல்லாம் வாதாடுகின்றாய்?? பிதற்றுகின்றாய்??

யான் எப்படி???  எப்படி?? காரணமாக இருக்க முடியும்???

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!! ஏன் பிறக்க வைக்கிறீர்கள்??? மனிதர்களை !!

மனிதர்களை ஏன் அறிந்து அறிந்து பாவத்தை அங்கேயே மேலோகத்திலேயே அழித்து அனைத்தையும் கழிக்க வைக்கலாமே!!!!!

ஆனாலும் அறிந்து கொண்டு இப்படியா என்பதை எல்லாம் ஆனாலும் அதனால் உன் தவறே!!!! மிகப் பெரியது!!!!

ஈசனார் :

தேவியே!! நில்லும்!!!!!! 

நிச்சயம் தவறில்லை இதனை ஆனால் முதலிலே ஒரு மனிதனை படைத்தேன் எப்படியென்று!!!!! 

ஆனாலும் அவ் மனிதனை படைக்கின்ற பொழுது ஆனாலும் மற்றொன்று மனிதன் மனிதன் இவ்வாறெல்லாம் சென்று இருக்ககூடும் பொழுது கூட கர்மங்கள் செய்து செய்து!!!

 அதாவது கர்மங்கள் என்பது பாவம் !!புண்ணியம்!!

பாவமும் புண்ணியமும் சரி பாதியாக இடும்பொழுது விடும் பொழுது இதற்காக அவ் ஆன்மா மீண்டும் மீண்டும் பிறவியை எடுத்து எடுத்து கஷ்டங்கள்!!!
இதனால் இவ்வுலகம் பெரிதானது!!!! மக்கள் பாதையும் பெரிதாகின்றது!!!

இதனால் யான் படைத்தேன் யான் படைத்தேன் என்கின்றாயே!!!!!!!

இவ்வாறு தான் மனிதன் மீண்டும் மீண்டும் சுழற்சி (வட்ட வடிவில் பிறப்பு, இறப்பு என) ரூபத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றான்!!!!

இதை பற்றி தகுதியானவற்றையெல்லாம் ....!!!!!!!

என் மகன் """""" அகத்தியனே!!!! வந்து உரைப்பான்!!!!! விஞ்ஞானத்தில் சிறந்தவன் அகத்தியன்!!!!

அவனைத் தவிர இங்கு சொல்வதற்கு ஆள் இல்லை!!!! 

இதனால் விஞ்ஞான முறையிலே விளக்குகின்ற பொழுது அப்பொழுது நீயும் புரிந்து கொள்வாய்!!!! மக்களும் தெளிவடைவார்கள்!!!!!

பார்வதி தேவியார்:

தேவனே!!!!  எதனால் அகத்தியனை பற்றியும் யான் அறிகின்றேன் (அறிவேன்).......  ஆனாலும் ஏன்? அகத்தியன் மேலே பழி போடுகின்றீர்கள்!!!! நீங்கள் சொல்லுங்கள்!!!!

ஈசனார் :

நிச்சயம் தேவியே!!! அறிந்து அறிந்து தான் யான் கூறுகின்றேன்!!! கூறுகின்ற பொழுது ஏன் மனிதனின் லீலைகள் புத்திகள் ஆனால் யான் படைத்தேன் உண்மையாகவே சில மனிதர்களை!!!

ஆனால் நிச்சயம் அவ் மனிதர்களால் இவ்வுலகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு!!!!

ஆனாலும் இதனை தவறாக பயன்படுத்திக் கொண்டுஎன்னை எதனையென்று அறியாத மூடர்களும் கூட.......

ஆனால் யான் இல்லையென்று நினைத்துக் கொண்டு தவறான வழிகளில் என்னை அழைத்து அழைத்து எப்படி எப்படியோ செய்கின்றார்கள்!!!

ஆனாலும் மீண்டும் அவன் என்னிடத்தில் வந்து உன்னை வணங்கினேனே!!!! நமச்சிவாயா!!! என்று அழைத்தேனே!!!!

சந்தன காப்பு இட்டேனே!!!!

பாலபிஷேகம் செய்தேனே!!!

பூக்கள் இட்டேனே!!!!

என்றெல்லாம் புலம்பும் பொழுது............ எந்தனுக்கும் கருணை உள்ளது தேவியே!!!!!

ஆனாலும் இவன் செய்த லீலைகளை பார்த்தால்!!!.......

ஆனாலும் வேடம் மட்டும் போட்டுக்கொண்டு சுற்றித் திரிகின்றான்!!!

ஆனால் பக்திகள் இல்லை!!!

மாயை கண்ணை மறைக்கின்றது!!!! 

மறைக்கின்ற பொழுது எப்படித்தான் என்னை பார்க்க முடியும்????

பார்க்கின்ற பொழுது நேரத்தையும் வீணாக்கி விடில்....... வீணாக்கி விடுகின்றான் பாதி வயது பாதி வயது  வீணாகி வீணாகி அழித்து விட்டு கடைசியில் வந்து என்னை சரணடைந்தால்!!......

அதாவது யான் எப்படி?? தேவியே கொடுப்பது???

எப்படி தேவியே கொடுப்பது??

பார்வதி தேவியார் :

தேவனே!!!!

"""" அதிகாரங்கள் உன் கையில்!!!!!

ஆனால் மக்களை எப்படி எல்லாம் திருத்துவது என்பதையெல்லாம் உன்னிடத்திலே!!!!!!........

ஆனாலும் திருத்த!!!  பின் திருத்த எண்ணம் இல்லையோ??!!!!!!!!!

எண்ணமில்லையோ!!!?????? 

உன்னால் முடியும்!!!!!! 

ஈசனார் :

கலைவாணியே!!!!!!!  அறிந்து அறிந்து சொல்கின்றேன்!!!! நிச்சயம் கருணை உள்ளவனாக யான் திருத்திக் கொண்டே தான் வருகின்றேன்!!!!!

ஆனால் மனிதன் என்னையே எதற்கென்று கேள்விகள் கேட்கின்றான்!!!!

என்னையே வைத்துக்கொண்டு பொய்கள் பேசுகின்றான் புறம் பேசுகின்றான்!!!

ஆனால் மனதில் பல பல  பல போலிகளை வைத்துக்கொண்டு....ஈசன் தான் உண்மையானவன் என்று வெட்கமில்லாமல் சொல்கின்றான்!!!!

எப்படி ? இது சாத்தியம்?????

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!!! இவ்வுலகத்தைக் காக்கும் நீங்கள் நிச்சயம் என் கேள்விகளுக்கு கூட ஒரு பதிலை கூட சரியாக அளிக்கவில்லை!!!!

ஈசனார் :

தேவியே!! நில்லும்!!!!! 

எத்தனை??!!!! அறிந்து அறிந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்!!!!

ஆனாலும் நீ யான் செப்பவில்லையே என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டாயே!!!!!

தேவியே!!!!  யான் எதைக் கூறவில்லை????????? உன்னிடத்தில்!!!!!!!.....

பார்வதி தேவியார் :

தேவாதிதேவனே!!!!!! நிச்சயம் நீங்கள் கூறிக் கொண்டே தான் இருக்கின்றீர்கள்!!!!

ஆனால் இன்று கூட உன் இரவு!!!! (சிவராத்திரி) 

ஆனாலும் எப்படி நீங்கள் ஆசிகள் அனைவருக்கும் வழங்குவீர்கள்???

ஈசனார் :

சரியான கேள்வி!!!!!

தேவியே கேள்!!! நிச்சயம் வருபவர்களுக்கெல்லாம் என் ஆசிகள் கிட்டி விடுமா?? என்று எண்ணினால்!!!!!!!

நிச்சயம் இயலாது!!!!

அனைத்தும் அதாவது அனைத்து உயிர்களையும் கொன்றுவிட்டு, உண்டு விட்டு!!!........... எதை எதையோ செய்து விட்டு போட்டிகள் பொறாமைகள் செய்துவிட்டு !!!!

ஒரு நாள் இரவு மட்டும்( சிவ ராத்திரி) என்னிடத்தில் வந்துவிட்டால் நிச்சயம் யான் அனைத்தையும் தந்து விடுவேனா என்ன?????????

யான் என்ன முட்டாளா??!!!!!  தேவியே!!!!! 

இதனைத் தான் பல மனிதர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்!!

பின்பு கடைசியில் வந்து யான் பல சிவ ராத்திரி அன்று கண் விழித்தேனே!!!!! 

ஈசனுக்காக அனைத்துமே செய்தேனே!!!!!

ஈசன் ஒன்றுமே கொடுக்கவில்லையே என்று என்னையே சாடுகின்றார்கள்!!!!

ஆனால் செய்வதெல்லாம் மனிதனின் தவறு!!!!!

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!!! நிறுத்துங்கள்!! நிறுத்துங்கள்!!

அனைத்தும் மனிதரிடத்தில் தவறிருக்கின்றது என்று சொல்லிவிடுகின்றீர்கள்!!!!

ஏன்???  எதற்காக???? ஆனாலும் ஏன் நீதான் அனைவரையும் படைக்கின்றாயே!!!!

உந்தனுக்கு திருத்தவே தெரியாதா???????

ஈசனார் :

தேவியே கேள்!!!!! 

யான் பல வழிகளிலும் கூட கஷ்டங்களை அள்ளி கொடுத்து திருத்தத்தான் பார்க்கின்றேன்!!!! 

அதாவது பின் காந்தம் ஆக செயல்பட்டு யாராவது உண்மையானவர்கள் நிச்சயம் என்னிடத்தில் வருவார்களா என்று ஈர்த்து கொண்டே இருக்கின்றேன்!!!

ஆனால் வருகின்றார்கள் வருகின்றார்கள் மாயையில் சிக்கிக் கொண்டு மாயையில் சிக்கிக் கொண்டு எதனை எதனையோ எண்ணி எண்ணி காசுகளுக்காக காசுகளையும் பெருக்கி அனைத்தையும் எதை எதையோ செய்து மீண்டும் அதே வழியில் உட்கார்ந்து விடுகின்றான் உட்கார்ந்து விடுகின்றான் தேவியே!!!!!

எதனையென்றும் அறிய அதனால் நிச்சயம் அதாவது அறிந்து அறிந்து சொல்கின்றேன் தேவியே!!!!!

நிச்சயம் ஏதும் தேவையில்லை!!!!!!

நமச்சிவாயனே!!! நீ மட்டும் போதும்!!!! என்று யார் ஒருவர் என்னிடத்தில் வருகின்றார்களோ!!!!!!

அவர்களுக்கு ஒரு நொடிப் பொழுதில் நிச்சயம் """ என் தரிசனம்""" கிடைக்கும்!!! இன்றைய நாளிலே!!!!!( சிவ ராத்திரி) 

அப்பொழுதுதான்!!!

ஆனாலும் இதனை யாரும் அதாவது.  """" நூற்றுக்கு ஒருவரே !!!!

அதாவது எப்படி இவ்வாறெல்லாம் ஏதாவது ஒரு சுயநலத்திற்காகவே வருகின்ற பொழுது!!!!......

யான் எப்படி கொடுப்பது????தேவியே!! கூறும்!!!!!  கூறும்!!! 

இன்னும் ஏராளம்!!!!

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!! சரி!!!!!! 

நீங்கள் ஏன்??? மக்களை பிறக்க வைக்கின்றீர்கள்????

ஏன் ?!! நிறுத்தி விடுங்கள்!!!! நிறுத்தி விடுங்கள்!!!!!!!!

ஈசனார் :

தேவியே!! நில்லும்!!!

ஏன்? யான் நிறுத்த போகின்றேன்????????? 

நிறுத்தப் போகின்றேன் என்று பார்க்கையில்  அவ் ஆன்மா பலபல வழிகளில் கூட........ ஏராளமான பாவங்களை செய்து விட்டு மீண்டும் பிறவி எடுத்து மனித உடம்பில் நுழைந்து தன் சொந்த பந்தங்களை பின்  அருகருகே வைத்துக்கொண்டு மீண்டும் பிறந்து விடுகின்றது!!!!!! 

பார்வதி தேவியார் :

ஈசனே !!! மணாளனே!!!!! 
இதை அறிந்து ஏன்? பாவத்தை நீ தடுக்கக் கூடாதா ??!.........என்ன???????

ஈசனார் :

தேவியே !!என்னாலும் நிச்சயம் தடுக்க முடியும்!!!

ஆனாலும் ஒரு முறை ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன் வேண்டாம் என்று!!!!!

மனதே சொல்லும்!!!( மனசாட்சி) வேண்டாம் என்று!!!!

இரண்டாவது முறையும் சொல்லும் மனது!!!

மூன்றாவது முறையும் இது தவறு என்று சொல்லும்!!!!

அதை மீறி செல்லும் பொழுது தான் பாவத்தில் விழுகின்றான்!!!!

இது யாருக்குமே புரிவதில்லை!!!!! 

தேவியே!!!!  யானும் கருணை உள்ளம் படைத்தவன்!!!!!

 இதை நீயே அறிவாய்!!!!!

நீயே அறிவாய்!!!! 

பார்வதி தேவியார் :

மணாளனே!!!!! யான் அறிவேன்!!!! உன்னைப் போன்று இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் கருணை கொண்டோர் யாருமில்லை!!!!

இதனால் எதை அறிந்தறிந்து இதனால் எதற்காக ? படைக்க வேண்டும் ? எதற்காக வாழ வேண்டும்? எதற்காக??
அறிந்தறிந்து........ ஆனாலும் இப்படி எல்லாம் மனிதர்கள்!!

ஆனாலும் உன்னிடத்திலே!!!!.......

வந்து கஷ்டங்கள் தான் பட்டு பட்டு வருகின்றனர்!!!! அதை நீங்கள் நிச்சயம் அகற்றபடவில்லை... அகற்றவில்லை.... அதை நீங்கள் அகற்று!!!!!!!  அகற்ற வேண்டும்!!!!! 

ஈசனார் :

தேவியே!!!!!  நில்லும்!!!! நிச்சயம் அகற்றத்தான் யான் பார்க்கின்றேன்!!!

ஆனால் மனிதன் அதற்கு சரியாக ஒத்துழைப்பதே இல்லை!!!!

நிச்சயம் ஒத்துழைத்தால்!!!..... நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன் அனைத்தும் அதாவது புவியில் உள்ள உயிர்கள் அனைத்தும் அதாவது என் பிள்ளைகள் அனைத்தும் கூட!!!!

ஆனாலும் அனைத்தும் யான் சரியாகவே அனைத்தையும் சரிசமமாகவே பார்க்கின்றேன்!!

ஆனாலும் ஒரு உயிரைக் கொன்று!!!!! அதாவது அதையும் தின்று பின் அதாவது தந்தையிடத்திலே வந்து.......எப்படி கேட்க முடியும்??????
 
( அனைத்து உயிர்களுக்கும் தந்தையான ஈசனிடம் மற்ற உயிர்களைக் கொன்று விட்டு அந்த உயிர்களுக்கும் தந்தையான  ஈசனிடத்தில் வந்து எப்படி கேட்க முடியும்?) 

யான் எதற்காக? கோபப்படுகின்றேன்!!!!!!

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!

அனைத்து உயிர்களையும் நீ தான் பிறக்க வைக்கின்றாய்!!!! என்பதை யான் அறிவேன்!!!

ஆனாலும் ஏன் எதை என்று அறிய அறிய இதனைத் தான் சொல்கின்றேன்!!!!!

பிறக்க வைக்க வேண்டாம் என்று!!!!!!

ஈசனார் :

தேவியே இது தவறு!!!!! 

அப்பொழுது பாவங்களை எப்படி கரைக்க முடியும்!!!???? புண்ணியங்களை எப்படி சேர்க்க முடியும்!!????

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!! 

நீங்கள் நிச்சயம் என் கேள்விகளுக்கு சரியாக பதில்கள் அளிக்கவே இல்லை!!!

ஏன் எதை எதை என்று அறிந்து அறிந்து!!!! 

ஈசனார் ::

தேவியே!!!! என் தவறில்லை இதில்!!!!

நிச்சயம் அவனவன் செய்த கர்மங்கள்!!!!

அதாவது நேர்மைகள் நீதி இன்னும் ஏராளம் அவை வைத்தே தான் பிறப்பும் இங்கு நடத்தப்படுகின்றது நடத்தப்படுகின்றது நிச்சயமாய்!!

குருநாதர் அகத்திய பெருமான்!!!!!! 

 ஈசனார் பார்வதி தேவியாரின் விவாதங்களுக்கிடையே!!!!! செப்பிய வாக்கு!!! 

நிச்சயமாய் !!!!! நிச்சயமாய் போதும்!!! போதும்!!!! நிறுத்துங்கள்!!!!!! 

நிறுத்துங்கள்!!!!!  தந்தையே!!!! தாயே!!!!!  

யானே!!!!! நீங்கள் எதற்கு இங்கெல்லாம் இப்படிப்பட்ட இப்படிப்பட்ட இடத்தில்!!!!!......  உங்கள் வேலையை பாருங்கள்!!!! 

அகத்தியன் யான் பார்த்துக் கொள்வேன் மனிதர்களை நிச்சயம்!!!!! 

அதனால் உங்கள் வாதங்கள் வாதங்களை இன்று இங்கே நிறுத்துங்கள்!!!!!!

ஏனென்றால் மக்கள் தெளிவாக இல்லை!!! தெளிவாக இல்லை!!

அதனால்தான் யான்  சென்று.... எங்கெங்கோ எதனை எதனையோ நினைத்து நினைத்தது மக்களுக்கு வாக்குகள் உரைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!

ஆனால் மக்களோ ஏதோ தானோ என்று தான் ஏனோ தானோ என்று தான் இருக்கின்றார்கள்!!!!

அதனால்தான் யானும் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து!!!............

 கொடுத்து !!!கொடுத்து மாற்றம் அடைந்த பிறகு!!!!!.....

அப்பனே!!!!!  அம்மையே!!!! நீங்கள் வாருங்கள்!!!!!

போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்!!! நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!

எதனையென்றும் அறிய அறிய அப்பனே  நிச்சயமாய் என்னுடைய ஆசிகள்!!!!! அனைவருக்கும் உண்டு!!!!!

உண்டு என்பேன் அப்பனே!!!

எதனையென்று அறியாத அளவிற்கு கூட..... அதனால் அப்பனே தவறுகள் செய்யாதீர்கள்!!!! நேர்மையாக வாழுங்கள்!!!

பிற உயிர்களை கொல்லாதீர்கள் என்பதையெல்லாம்......யாங்கள் சித்தர்கள் எடுத்துரைத்துக் கொண்டு சென்று கொண்டு வருகின்றோம்!!!!

ஆனாலும் மக்கள் ஆனாலும் திருந்துவதாக............

தன் வழியிலே சென்று நிச்சயம் தரித்திரத்தை சம்பாதித்து அப்பனே தானும் கீழே விழுந்து விடுகின்றான்!!!

மீண்டும் எங்களை நோக்கி படையெடுக்கின்றான்!!!!

அப்பனே!!!!  தேவையா???  வெளி வேஷம்?????? 

அப்பனே!!!!! சொல்லுங்கள் வெளிவேஷம்!!! வேண்டாமப்பா!!! வேண்டாமப்பா!!!

அப்பனே எதனையும் கூறி கூறி!!!..................

அப்பனே நிச்சயம் உண்மையாக இருங்கள்!!!

நிச்சயம் யாங்களே உங்களை தேடி தேடி வருவோம்!!!! அனைத்தையும் மாற்றுவோம்!!!!

விதியையும் கூட மாற்றுவோம் அப்பனே!!!! 

யான் எதற்கென்றால் அப்பனே இவையெல்லாம் வரும் காலங்களில் ஆனால் அனைத்தும் ஒன்றே என்று யான்.... நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றேன்!!!

அப்பனே நலன்கள்!!!!

அப்பனே அவரவர் விருப்பப்படி அப்பனே பொறுமை காத்திருங்கள்!!!

அப்பனே பொறாமை கொள்ளாதீர்கள்!!!! அப்பனே அமைதியாக இருங்கள்!!!

அப்பனே குழப்பங்கள் வேண்டாம்!!!! சந்தேகங்கள் வேண்டாம் அப்பனே!!!!

இன்றெல்லாம் அப்பனே யான் ஒவ்வொரு வீட்டிலும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!! சந்தேகங்கள் அப்பனே மனிதனை பின் கொல்லுகின்றது!!!!

அப்பனே கலியுகம் அப்பனே முற்றிக்கொண்டே வருகின்றது அப்பனே!!! 

தெளிவு பெறுங்கள் அப்பனே!!!!! 

இயற்கையும் கூட!!!....... ஆனாலும் இயற்கை என்பதை கூட யான் எதைச் சொல்வது???

இதை வருங்காலத்தில் உரைக்கின்றேன்!!!!

நீங்கள் மனிதன் மனிதர்கள் நீங்கள் திருந்தவில்லை என்றால் நிச்சயம் இயற்கை அழிவுகள் ஏற்படும் என்பது......

 இது""" ஈசன் இட்ட கட்டளை!!!!

இதை சொல்லவில்லை ஈசன்!!!!!!

ஆனால் பின் ஈசன் அதாவது  """ என் தந்தையானவர்!!!!!! வந்து இப்பொழுது செப்பிவிட்டாலும் அது உடனடியாக நடந்து விடும்!!!

அதனால்தான் நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!!

தாயே!!!!!  தந்தையே!!!!! என்று யான் நிறுத்திவிட்டேன்....வாக்குகளை!!!!! 

அதனால் மனிதர்களே திருந்திக் கொள்ளுங்கள்!!

என் வழியில் வருபவர்கள் நிச்சயம் போட்டி பொறாமை கோபங்கள் இவையெல்லாம் நீக்குங்கள்!!!!! அமைதியாக இருங்கள்!!!!

தியானங்கள் செய்யுங்கள்!!! அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று இருங்கள்!!!!

யானே உங்கள் இல்லத்திற்கு வந்து ஆசிகள் தந்து விடுகின்றேன்!!!!!

அதை விட்டுவிட்டு எந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றதே!!!! இன்னும் மனக்குழப்பங்கள் அடைகின்றதே!!! இன்றும் ஒன்றும் ஆகவில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை!!!!

அப்படியே தான்!!!................ 

அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூட சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!

அப்பனே காத்திருங்கள் அப்பனே இன்னும் பல விஷயங்கள் சொல்லப் போகின்றேன் அப்பனே!!!

நலன்கள்!!!!  ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

5 comments:

  1. ஓம் நமசிவாய,
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம்அகத்திசாய நம 
    குருவே சரணம்..
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஓம் நமசிவாய நல்லோருக்கு கஷ்டங்கள் தீர கடைசி வரை வழி முறைகள் கூறவே இல்லையே இது என்ன நியாயம்

    ReplyDelete
  3. சித்தரையாவின் திருவடியை சரணம்

    ReplyDelete
  4. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ஓம் நமசிவாய வாழ்க

    ReplyDelete
  5. Om Parvathi Devi Sametha Sri SivaPerumane Namaha 🙏🙏🙏

    ReplyDelete