​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 1 April 2022

சித்தன் அருள் - 1104 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் பொது வாக்கு!


22/01/2022 - அகத்திய மகரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த வாக்கில் உள்ள பொது வாக்கு.

ஆதி சிவன் பொற்க்கமலங்களை பணிந்து இசைகிறேன் அகத்தியன்.  

அப்பனே காலம் அப்பனே நம் தன் கையில் இல்லை என்பேன் அப்பனே.  அப்பனே என் பக்தனாக கடைக்காலம் தன் இருந்திடு. மற்றவையெல்லாம் யான் பார்த்துக்கொள்கிறேன்.  

அப்பனே கலியுகத்தில் அநியாயங்கள் தான் மிச்சம் என்பேன் அப்பனே ஆனாலும்  சித்தர்கள் யாங்கள் அப்பனே  யுக யுகங்களாக  தோன்றி தோன்றி இப்புவிதனில் மக்களுக்கெல்லாம் அப்பனே நல்வழிப்படுத்த அப்பனே பலமுறை சேதியையும் உரைத்துக்கொண்டிருக்கிறோம்.  ஆனாலும் அப்பனே அதை மனிதன் ஏற்பதாக தெரியவில்லை அப்பனே.  

அப்பனே எவை என்று கூற ஆனாலும் என்னுடைய அருள் பெற்றவர்களே அப்பனே எவை என்று கூற இன்னும் இறைவழி இணைந்து நின்று கூற மனதில் அப்பனே மாய உலகில் அப்பனே சிக்கிக்கொண்டு அப்பனே உண்மை பொருளை எதுவென்றே அப்பனே தெரியாமல்  மாண்டு மாண்டு அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்புக்கள் எடுத்து கட்டங்களை சந்திக்கின்றனர்.  

ஆனாலும் அப்பனே கவலையில்லை என்னுடைய அருளாசிகள் அப்பனே, அப்பனே உன் தந்தையாக நானிருக்கின்றேன் நல்முறையாக உன் தாயவளாக லோபாமுத்திரை தேவியும் இருக்கின்றாள்

அப்பனே போராட்டம் நிறைந்த வாழ்க்கையப்பா எவை என்று கூற அதனால் எவை என்று கூறும் அளவிற்க்கு அப்பனே என்னுடைய ஆசிகளும் இருக்க அப்பனே நிச்சயமாய் பரிசுத்தமாக அப்பனே  வரும் வரும் காலங்களில் கூட அப்பனே  எதனை என்று நிரூபிக்கும் அளவிற்கும் கூட என்னுடைய ஆசிகள் கிடைத்தாலும் கிடைத்து இவை என்று கூற அறிதல் பலம் பெற்று அப்பனே என்னையும் காண்பாய் என்பேன்

அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே என்னை நம்பினோருக்கு நான் நிச்சயம் கடைநாளில் காட்சியளிப்பேன் அப்பனே இது ஒரு சிலருக்கு புரியும் என்பேன்

அப்பனே என் மீது நம்பிக்கை அப்பனே உந்தனுக்கு அப்பனே உன் லோபாமுத்ரா தேவியும் எவ்வாறு என்பதை கூறும் அளவிற்கும் கூட உன் அன்னையவள் என்பேன்.  

அப்பனே கவலையில்லை அப்பனே முழுவதையும் தந்துவிட்டோம் அப்பனே வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்பேன் ஆக விதி என்பதை போல் யான் இருக்கின்றேன் எக் கவலையும்  கொள்ளவேண்டாம்

அப்பனே இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன் அப்பனே இதை பொதுவாகவே சொல்கிறேன்.  

அப்பனே மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் பிறக்கும் பொழுது இன்பமும் துன்பமும் வந்து விடுகின்றது. ஆனாலும் அப்பனே இன்பம் இருக்கும் பொழுது இறைவனை கான கானக்கான மனம் துதிப்பதில்லை( அதாவது வணங்குவதில்லை ). ஆனாலும் துனபத்தில் வரும்பொழுது கூட அப்பனே இறைவனைக் கான்கின்றான் ( அதாவது பயத்தில் வணங்குகின்றான்). ஆனாலும் அப்பனே விதி என்பது எதுவென்று தெரிவதில்லை.

இன்பத்திலும் “இறைவா! இறைவா!!” என்று சொல்லிக்கொண்டே இருந்தால் துன்பத்தில் “ ( தன் ) கையை உயரத்திக்கான்பிப்பான் எப்பேன் இறைவன்” . இதுதானப்பா உண்மை.  

அதனால் இன்பம் துன்பம் மாறி மாறி வருவது இயல்பே அதனால் அப்பனே கட்டங்கள் இல்லை என்பேன்.

அப்பனே துன்பத்திலும் உன் அருகிலே யான் இருக்கிறேன் அப்பனே கவலை இல்லை.

அப்பனே எவ்வாறு என்பதை கூட அநியாயங்கள் அக்கிரமங்கள் மிஞ்சி காணப்படுகின்றன என்பேன் ஆனாலும் நல்லோர்கள் சிலரே இருக்கின்றனர் ஆனாலும் நல்லோர்கள் பேச்சு அப்பனே நீரில்தான் போடுகிறார்கள் அப்பனே தீயவர்கள். அதனால் பலனில்லை இல்லை.

அப்பனே யான் தானே புவியில் இறங்கிவிட்டோம். அப்பனே ஒரு சில மாற்றத்தை அப்பனே நிச்சயம் கொண்டுவருவோம்.  நல்லோர்களை ஏற்படுத்துவோம் அப்பனே நல்விதமாக சரிசெய்வோம்

அப்பனே அப்பனே பகல் ஒன்று இருந்தால் இரவு நிச்சயம் உண்டு என்பேன் இது தானப்பா மனிதனின் வாழ்கை.  மனிதனின் வாழ்க்கை சில நொடிகளே அது எங்களுக்கு மட்டுமே புரியும் என்பேன் ஆனால்  மனிதனோ பல வருடங்களாக  வாழ்ந்துகொண்டு யான் இருக்கிறேன் என்பதற்கேற்ப தன்  வாழ்வில் என்னை வீழ்த்தமுடியாது பின் யான் தான் பல உருவாக்குவேன் என்பதை கூட மனிதன் மனதில் எண்ணி கொண்டிருக்கிறான் ஆனாலும் அப்பனே வேஷம் அப்பா.

அப்பனே ஒன்று சொல்கிறேன் அப்பனே ஒரு யோகம் என்பது கூட ஒரு பத்து ஆண்டுகள்தான் அப்பனே. அதன்பின்னே துவங்கிவிட்டால் அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

ஆனால் பத்து ஆண்டுகள் இறைவன் நல்லபடியாகவே கொடுப்பான். இவன்தன் என்னவென்று செய்வதறக்கு என்று. அவ் பத்து ஆண்டுகள் பல புண்ணியங்கள் செய்து வந்தால் அப்பனே அடுத்தடுத்து அப்பனே பல மடங்கு பல மடங்கு அவ் பத்து வருடம் என்பது இறைவன் முப்பது வருடங்களாக இவ் பத்து வருடங்களை விட பின் பன் மடங்கு உயர்வது கிடைக்கும் என்பேன்.  

ஆனாலும் அப்பனே பத்து வருடங்களில் ஆடி அலுத்துவிடுகின்றான் மனிதன் என்னென்னவோ செய்து. அதனால்தான் அப்பனே அடுத்தடுத்து  வரும் ஆண்டுகள் அப்பனே மனிதனுக்கு குறைகளாக உண்டு. அப்பனே இதுவும் பொதுவாகவே யான் உரைக்கின்றேன்.

அனால் அப்பனே கறை ( தீய வினைகள் ) , அப்பனே கறை யொன்றும்  எவ்வாறு என்பதையும் புரிந்துகொண்டுவிட்டால் அதை நீக்க தெரியாது மனிதனுக்கு ஆனால் அப்பனே எங்களால் முடியும் என்பேன்.

அப்பனே சொல்கின்றேன் அப்பனே கிராம்பு,  அப்பனே வெற்றிலை அப்பனே இவையென்று கூற சிறிதளவு வேப்பன் அப்பனே இவையென்று கூற சிறிதளவு பட்டை, லவங்கம், திப்பிலி முறையே என்று கூற மிக க்ஷேமம் இவற்றையெல்லாம் நல்முறையாக அரைத்து அப்பனே நீரில் பலமாக சூடேற்றி அப்பனே அடிக்கடி பின் உன்னுடன் உள்ள அனைவரையும் அருந்திவர சொல் அப்பனே நல்முறையாகவே நோய் தாக்காது என்பேன்.  இவற்றுடன் அடிக்கடி அப்பனே ஏலக்காய் நீரும் பருகி வா அப்பனே.  இத்துடன் சிறிதளவு கொத்தமல்லி போல் பின் வாசனை எவை என்று கூற அதனையும் உண்டு வர பின் அடிக்கடி சிறிதளவு கற்பூரவல்லியும் அப்பனே உண்டு வரவும் அப்பனே.  மற்றவர்களுக்கும் அப்பனே சொல்.  

அப்பனே  இனி வரும் காலங்களில் நோய் நொடிகள் அப்பனே அதிகமாக வரும் என்பேன் அப்பனே  அதனை எதிர்ப்பதற்கு இருக்கிறது எளிய வைத்திய முறை

ஆனாலும் அதனை பயன்படுத்துவதில்லை. மக்கள்  பயன்படுத்திக்கொண்டால் பிழைத்துக்கொள்வார்கள்.

இதுதானப்பா கர்மா நிறைந்த உலகம். இதுதானப்பா கலியுகம். ஆனாலும் நல்லோர்கள் யாங்கள் இன்னும் இருப்போம் அப்பனே நல்லோர்கள் இருக்க நல்விதமாக சில விந்தைகள் காண்பித்து அருள் கொடுத்து இன்னும் பலம் பெற பாடுபடுவோம் பாடுபடுவோம்.  

அல்லாமல் சில பேருக்கு கட்டங்கள் கொடுத்தால் தான் திருந்துவார்கள்  என்பது எங்களுக்கு தெரியும் என்பேன் அதனால் சில கட்டங்கள் கொடுத்து திருத்துவோம் அப்பனே.  

எனக்கு தெரியும் அப்பனே புதிய மலராக மலர செய்வோம் இவ்வுலகத்தில் அப்பனே.   

பக்தி தலைகீழாக மாறிவிட்டது அப்பனே புண்ணிய தேசத்தில் கலியாக மாறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது அப்பனே. நல்முறையாக  மக்களுக்கு சேவை செய்யவே அப்பனே பல வழிகள் உள்ளன அப்பனே.

அப்பனே நல்விதமாய் அப்பனே இவ்வுலகத்தில் அவரவர் எவ்வாறு விருப்பப்படியோ அவ்வாறே யான் செய்கிறேன் அதுமட்டுமல்லாமல் நீங்கள்  செய்யும் சேவைகள் இன்னும் பலமாக வேண்டும் என்பேன் அப்பனே குறைவில்லை அப்பனே தந்தையாக நானே இருக்கின்றேன் தைரியமாக இரு அப்பனே மற்ற வாக்கும் சொல்கிறேன் அடுத்த வாரத்திலும் கூட  அப்பனே இன்னும் ஒரு மண்டலம் கழித்து கேள் மகனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  2. லவங்கம் கிராம்பு ஓன்றுதானே சற்று விளக்குங்கள்.ஓம் அகஸ்த்தியாய நமஹ

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1-uQ-pASf-vYr38i68yADnApjk4lOQSKJ/view?usp=sharing

    ReplyDelete