​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 28 November 2016

சித்தன் அருள் - 521 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின், மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும்தான், துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு, ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான், யாம் காட்டுகின்ற வழிமுறைகள். நெறி முறைகள், பக்தி வழிகாட்டுதல், ஆகமங்கள், தர்ம காரியங்கள். ஆனால் துன்பமில்லாத நிலையென்றால், இங்கு அவன் மனநிலை அகுதோப்ப மாறிவிடும் தவிர, வாழ்வு நிலை மாறாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு நோக்கமானது மாறிக்கொண்டே இருக்கும். இவன் நிம்மதியை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பதுதானே விதியின் வேலை, மாயையின் வேலை. எனவே, இவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான், மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அகுதொப்ப ஒரே தினத்திலோ, ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பதுதான், எமது பணியாக உள்ளது. ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால்தான், இகுதொப்ப விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் அசைபோட, துன்பங்களிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், கிட்டும்! ஆசிகள்! சுபம்!

4 comments:

 1. வணக்கம்
  அகத்தீசாய நமஹ
  தொடர்பு கொண்டு வெகு நாடகளாயிற்று
  காரணம், மனைவிக்கு stroke னால்
  நடமாடடம் இல்லை .குடும்பத்தில் வேறு
  நிகழ்வுகள் . என்னால் எங்கும் செல்ல
  இயலவில்லை.
  இந்தத்தடவை உங்களை பெருமாள் கோவிலில் சந்திக்க நினைத்ததோடு சரி
  அவ்வளவுதான் .எல்லாவற்றிக்கும் அவன் அருள் வேண்டும் .காத்திருக்கிறேன் .
  இறை அருள்புரிய வேண்டுகிறேன் .
  என் மனைவி உடல் நலம் பெற பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்
  எல்லாரும் நலம் அடைய எம்பெருமானை வேண்டுகிறேன்.
  அகத்தீசாய நமஹ
  என்றும் உங்கள் அடியார்களின் ஒருவன்
  சிவ

  ReplyDelete
  Replies
  1. Sir, I have read that a 3-4 drops of PURE GHEE can be put onto the 2 nostrils of the patient, a few times every day. I have no direct knowledge about this. Best wishes,

   Delete
 2. [ROUGH TRANSLATION] To realise that each and every life-form in this cosmos are varied forms of Divine, and to make efforts to realise the cosmic powers, mobile and immobile, within oneself, is the way to live free from sufferings. The ways shown by us, like rules of living, bhakti worship, agamas, charity, are to take up your atma by step by step. But understand that suffering-less life means that the mental attitude changes, and not actual life-events itself. Man keeps postponing peace. To delay santosh is the work of destiny, job of maya. Hence, man’s primary task is not be entangled by these. We know this cannot be achieved in a day or a few years. Our task is to put you on the right path to jnana. It must be understood that only after a man’s previous birth karmas subside, this kind of thought process can start. Without doing charity, sins cannot be reduced. Divine is the owner of the entire creation. You instrospect on this perspective again, again, again and again, the opportunity to be relieved from sufferings will come to every one! Blessings! Subham!

  ReplyDelete