​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 29 November 2016

சித்தன் அருள் - 522 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால், லலிதா சஹஸ்ரநாமத்தை, 1,3,5 மண்டலம் பிரார்த்தனையாகவோ, யாகமாகவோ, ஆலயத்திலோ, இல்லத்திலோ, அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது, பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் அப்பா! இது பக்தி வழி. யோகா மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால், குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, நித்தமும் உச்சரித்து வந்தால், மூலாதாரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது எழுவதை உணரலாம். எனவே, எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி, நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும், அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா!

8 comments:

 1. Hi,

  Please can any one tell me what is 1,3,5 mandalam means.

  Om agatheesaya namaha!!

  Thanks Sasi

  ReplyDelete
  Replies
  1. 1 madalam means 48 days. 2 mandalaum means 96 days, 3 mandalam means 3 x 48= 144 days.

   Delete
  2. 1 mandalam means 58 days, 2 mandalam =2x48=96 days 3 mandalam means 3x48=144 days

   Delete
 2. Hope the below information is correct..

  1 Mandalam = 48 Days,
  3 Mandalam = 3*48 (144 Days),
  5 Mandalam = 5*48 (240 Days)

  ReplyDelete
 3. மேலே அடியவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உண்மை. மேலும் தெரிவிப்பதற்காக, 48 நாட்கள் என்பது எப்படி வந்தது? 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள். 12+9+27= 48 நாட்கள். இப்படி 48 நாட்கள் தொடரவேண்டும் என்பதை, நாம் ஒரு மண்டலத்தில் செய்கிற ஒரு விஷயம் எங்கு செல்கிறது? எது ஏற்றுக்கொண்டு நம் கணக்கில் வரவு வைக்கிறது என்பது இப்போது புரிந்திருக்கும்.

  ReplyDelete
 4. [ROUGH TRANSATION] Under Divine grace we state that Lalita Sahasranama, when done for 1,3,5 mandalas, as prayer, yagna, at temple or at home, started and completed early morning, can remove the brahma-hatya dosas of many births. This is the path of bhakti. In the path of yog, to arouse up kundalini shakti, with proper pronounciation, with concentrated mind, in early mornings, sitting facing north-east direction, recite every day, the kundalini sarpa in the muladhar chakra will rise up. Hence, all mantras will improve the blood circulation in 72000 nadis, nerves of the human body, and arouse his hidden energy!

  ReplyDelete
 5. 1 mandala is counted as 48 days for siddha/ayurved medicine purposes. However, for spiritual and puja/homam purposes, some people count 45 days as 1 mandala, some temples count 41 days as 1 mandala.

  ReplyDelete