அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
வள்ளல் தன்மை என்றால் என்ன? எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது, ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும், நாளை நான் கடுமையாக பாதிக்கப்படுவேன் என்றாலும், தன்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டாலும், என்ன நிலைமை ஏற்பட்டாலும், பாதகமில்லை. இன்று, இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர, வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ? இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார்? அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே, சட்டென்று உடனடியாக தந்துவிட வேண்டும். யோசித்து தந்தால், அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பறிந்து எவன் கொடுக்கிறானோ, அவன்தான் உயர்ந்த தர்மவான், உயர்ந்த வள்ளல்!
What is Philonthrophy (charity)? Keeping aside first for yourself and thereafter doing charity is ordinary. Even if I don’t have, even if my family is going to be affected, come what may happen to me, now, this moment, this (charity) will benefit someone, giving away like this is real charity. Who knows whether one will be alive the next moment? Who knows what will happen tomorrow? One may change his mind next moment. Hence, charity should be performed quickly, promptly. If it is done after lot of deliberation, it is not (true) charity; it becomes defective. Giving to a person after he asks for it, is also a lower level of charity. Whoever gives without being asked, he is a better philonthropist, a nobler benevolent man.
ReplyDelete