ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! சில விஷயங்கள் பின்னுரையாக.
அகத்தியப் பெருமான் அருளிய "பெருமாளும் அடியேனும்" என்கிற தொடர் திடீரென்று முடிந்து போனதில், உங்களுடன், எனக்கும் சற்றே அதிர்வை தந்தாலும், நாடியில் வந்து அகத்தியப் பெருமான் அதை அருளிய காலத்தில் என்ன நடந்தது என்பதை, ஏன் நின்று போனது என்பதை திரு.கார்த்திகேயன் அவர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். கூறப்படுகிற விஷயங்களை, அதனதன் நிலையில் நின்று புரிந்து கொள்ளுங்கள்.
"ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!"
"எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற இறைவனின் எண்ணம் வளர்ந்து இந்த பூமியில் "தர்மம்" இன்றளவும் நிலைத்து நிற்க காரணமாயிற்று. இதையே சித்தர்கள் அனைவரும் அடிப்படை எண்ணமாக கொண்டனர், நடை முறைப்படுத்தினர். அவர்களுக்குத்தான் எந்த எதிர்பார்ப்பும் கிடையாதே. தங்களுக்கு என்று எதையும் வேண்டாமல், கலியின் பாதிப்பினால் வழி தவறி செல்கிற மனிதனை, எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், மன்னித்தருள இறைவனிடம் வேண்டி, உத்தரவை பெற்றபின், "நாடி" என்கிற ஒரு முறையை உருவாக்கினர். ஆம்! இந்த உலகின் அத்தனை விஷயங்களையும் "ஓலைச்சுவடியில்" எழுதி வைத்தனர். ஒரு சில நாடிகளில் மட்டும் எழுதி வைக்காமல், வேண்டிக் கொள்கிறபோது எழுத்துக்களை தோற்றுவித்து, விஷயங்களை விளக்கினர். இந்த வகை நாடியை "ஜீவ நாடி" என்பர். எல்லா சித்தருக்கும் ஜீவ நாடி என்பது உண்டு. அதை கை வசம் வைத்திருக்கும் அந்தப் பெரியவரை நாடி சென்று கேட்கிற பொழுது, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கி, என்ன செய்தால் பரிகாரமாக ஆகும் என்பதையும் சொல்லி, அதை செய்ய வைத்து தனிப்பட்ட மனிதரை கரை ஏற்றி விட்ட நிகழ்ச்சிகள் இந்த பூமியில் ஏராளம்.
எத்தனையோ ஜென்மத்துக்கு முன்பு செய்த செயலால் சேர்த்து வைத்தக் கர்மவினை கூட மிக எளிதாக சித்தரால் கண்டிபிடிக்கப் பட்டுவிடும். ஆம் சித்தர்கள் முக்காலமும் உணர்ந்த ஞானிகள்.
அப்படிப்பட்ட ஜீவ நாடி ஒருவருக்கு கைவரப் பெறுவது என்பது மிக சாதாரணமான விஷயமல்ல. மகான்களை காண்பதே மிகப் பெரிய புண்ணியம். அதே மகானுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பது என்பது எத்தனை ஜென்ம புண்ணியம்! அப்படிப்பட்ட ஒரு புண்ணிய ஆத்மாவை நண்பனாக அடைவது என்பது, அதற்கு பின்னர் இந்த உலகில் நமக்கு எந்த பௌதீக வஸ்துவுமே தேவை இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். அப்படிப்பட்டவரை, நல்ல நண்பனாக மட்டும் பார்க்காமல், குரு ஸ்தானத்தில் வைத்து கொண்டாடினால்! ஆம் அதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும். இறை அருள் வேண்டும். சித்தர் வழிநடத்தல் வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு நண்பரின் தொடர்பினால் ஏற்பட்ட நட்பில், அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட நல்ல விஷயங்களை, இங்கே "சித்த மார்க" தேடலில் முனைந்து இருக்கும் சித்தர் அடியவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் தர நினைத்த போது உருவானது தான்
"சித்தன் அருள்"
என்கிற தொகுப்பு. இந்த தலைப்பை கூட அகத்தியப் பெருமானே எடுத்துக் கொடுத்தார், என்பதே உண்மை.
எங்கள் நட்பை ஒரு போதும், பிறர் புரிந்து கொள்கிறபடி நாங்கள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஒரு ஆழமான தெளிவு அதில் இருந்தது. என்னை முழு உரிமையுடன் "டேய்" போட்டு கூப்பிடுகிற அளவுக்கு அது இருந்தது. ஆனால் அப்படி கூப்பிடுவது கூட ஒருவரை மிக தாழ்வாக கருதுவது போல் ஆகிவிடும் என்று நினைத்து மிக மரியாதை கொடுத்துதான் பேசுவார் அவர். அதுவே அவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையை வளர்த்தது. மேலும் அவர் உருவில் தனியாக இருந்தாலும், அரூபமாக, அவர் வாக்கில் அகஸ்திய சித்தரே அவருடன் எப்போதும் உள்ளார் என்று பல முறை உணர்ந்திருக்கிறேன். அது தான் உண்மையும் கூட. தனக்கு பெயர் வர வேண்டும் என்றோ, புகழ் வேண்டும் என்றோ ஒரு நிமிடம் கூட நினைக்காதவர். எல்லோரும் சித்தரை கொண்டாடுங்கள் என்று தான் கூறுவார். என்னவோ தன் வாழ்க்கை கூட, அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்து கிடப்பதே என்று நினைத்து வாழ்ந்தவர். அடுத்த நிமிடத்தை பற்றி கவலைப் படமாட்டார். எல்லாம் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று திடமாக நம்பியவர். அவரைப் பார்த்து, அவர் சொன்னதை தெளிவாக கேட்டு, உணர்ந்து, வாழ்க்கையை செம்மையாக மாற்றிக்கொண்டேன், நான். என்னுள் அவர் கொண்டு வந்த மாற்றங்கள், அவரை ஒரு குருவாக ஏற்க வைத்தது. இன்றும் அவர் என் மானசீக குருதான்.
ஒரு முறை பேசும் போது "இந்த உடலை பற்றி நான் கவலைப்படவே இல்லை! அதனால் என்ன நடந்தாலும் யாரும் வருத்தப்படவே கூடாது. எல்லாம் அகத்தியர் பார்த்துப்பார்" என்றார்.
என்னவோ நடக்கிறது, என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த நான் "என்ன! இப்பொழுது இந்த வார்த்தை?" என்றேன்.
அப்பொழுது மடைதிறந்த வெள்ளமென பிறர் அறிந்திராத பல விஷயங்களை என்னிடம் கூறினார். நிறையவே புரிந்து கொள்ள முடிந்தது. எதுவும் நம் கையில் இல்லை என்று. அனைத்தையும் தீர்மானிப்பது இறைவன் செயல். முடிந்த அளவுக்கு வாசனைகளை களைவதே நல்லது என்று உணர முடிந்தது. கூடவே, அவரின் உறவினர் வழி ஒரு தொகுப்பை கொடுத்துவிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு "இது உன்னிடம் இருக்கட்டும். அகத்தியருக்கு சேவை செய்கிற பாக்கியம் என்றேனும் உனக்கும் கிடைக்கலாம். நானும் வேண்டிக் கொள்கிறேன். உன் கர்மாவை, அதில் இருக்கும் வாசனைகளை களைய அகத்தியப் பெருமானால் முடியும். பத்திரமாக வைத்து உபயோகப் படுத்திக்கொள்" என்றார்.
மிகுந்த யோசனையுடன் அவர் கொடுத்த விஷயங்களை வாங்கி வைத்துக் கொண்டேன். கிடைத்ததை பார்த்தால், அதில் ஒன்று தற்போது முடிந்து போன "பெருமாளும் அடியேனும்" தொடரின் நிகழ்ச்சிகள். ஆனால், அது நிறைவு பெறாமலேயே இருந்தது.
"இப்படி நிறைவு பெறாமலேயே இருக்கிற ஒரு விஷயத்தை என்னிடம் தந்தால், நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டேன்.
"ஹ்ம்ம். தவறான கேள்வி. ஏன் அது இத்துடன் நிறுத்தப் பட்டது? மீதியை எப்போது கொடுப்பார் அகத்தியர்? என்று கேட்டிருக்கவேண்டும்" என்றார் என் நண்பர்.
"உண்மைதான். நாடியில் அகத்தியர் வந்து சொன்ன இத்தனை விஷயங்கள் எதனால் திடீரென்று நின்று போனது?"
"ஆறு மாசமாச்சு! உத்தரவு வந்து. எங்கும் உபயோகிக்கப்பட்ட என் பெயரை, இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்று குருநாதரின் உத்தரவு? அதை மெதுவாக மறக்க தொடங்க வேண்டும். எல்லோரிடமிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் விலகி நில்! என்கிறார்."
அகத்திய பெருமானின் உத்தரவை கேட்டதும், சற்றே அதிர்ந்து போனாலும், அதை மறைத்துக் கொண்டு ஒரு கேள்வியை திருப்பிக் கேட்டேன்.
"விரிவாக என்னிடம் கூறலாம், என்றால் விளக்குங்களேன்!" என்றேன்.
"ஏழு மலைக்கு பெயர் வந்த சூழ்நிலையை அகத்தியர் நாடியில் வந்து விளக்கத் தொடங்கினார். ஐந்து மலை வரை வந்தாகி விட்டது. ஆறாவது மலை பற்றிய நிகழ்ச்சிகளை எதிர் பார்த்து காத்திருந்தேன். தினமும் நாடி வைத்து வேண்டிக் கொண்டபின், அதில் அகத்தியப் பெருமான் கூறியதை நகல் எடுப்பது என் வேலை. அன்றும் அகத்தியர் நாடியில் வந்து பேசக் காத்திருந்தேன். எப்போதும் வேண்டிக் கொண்டவுடன் பேசுகிற அவரை, காணவில்லை. ஆம்! நாடியில் வரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கிறது. அதனால் தான் அவர் வரவில்லை என்று நினைத்து நாடியை பூசை அறையில் ராமர் பாதத்தில் வைத்துவிட்டு, இயல்பாக வெளியே வந்துவிட்டேன்."
"மூன்று நாட்களாகியது. இப்படி சொல்லாமல், கொள்ளாமல் அகத்தியர் தவிக்க விட்டதே இல்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று கூட யோசித்துப் பார்த்தேன். எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், அகத்தியரை நினைத்து த்யானம் செய்யத் தொடங்கினேன்."
"பொதுவாக, அகத்தியர் வந்து வாக்கு உரைக்கவில்லை என்றால், ஏன்? என்று கூட கேட்க, உண்மையாகவே எனக்கு துணிவு கிடையாது. அவரே மௌனமாக இருந்துவிட்டதால், வராததால், மிச்சம் இருந்த கொஞ்சம் தைரியமும் கரைந்து போனது."
அது ஒரு வியாழக்கிழமை. குருவாரம் என்பதால், நிச்சயமாக அகத்தியர் அருளுவார் என்று நம்பிக்கையுடன் அவரை தியானித்து, பூசை செய்து காத்திருந்தேன். அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பேசலானார். எனக்குள் மிகுந்த சந்தோஷம்.
அகத்தியப் பெருமானே, மூன்று நாட்களாக தங்களை எதிர்பார்த்து, வேண்டிக்கொண்டு காத்திருக்கிறேன். தாங்கள் வரவில்லை. அடியேன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து, பொருத்தருள வேண்டும். இன்னும் இரு மலைகளின் நாமதேயத்தை சுற்றி நடந்த விஷயங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்!" என்றேன்.
வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.
"யாம் முன்னரே சொன்னபடி எல்லாவற்றிலிருந்தும், எல்லா மனிதர்களிடமிருந்தும் விலகி நில். உன் பெயரை மறக்க வேண்டும். முகம் மறக்க வேண்டும். இறைவன் தன் மலைகளின் நாம புராணத்தை விளக்குவதை இத்துடன் தடுத்து நிறுத்திவிட்டார். ஏன் என வினவியபோது, கைலாயப் பெருமானை சென்று வணங்கி கேட்டுக்கொள் என்று கூறிவிட்டார். உடனேயே கைலாயம் சென்றேன். அதனால் தான் வாக்குரைக்க வரவில்லை."
ஒரே குழப்பமாக இருந்தாலும், அகத்தியப் பெருமானுக்கு தெரியாததா? என்று அமைதியாக இருந்தேன்.
அவர் கூறலானார்.
"கைலாயத்தில் சிவபெருமானை கண்டு வணங்கி நின்றேன். ஆனந்தமாக இருந்தது. என்ன அகத்தியர்! இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் என்றார்.
"இறைவனை கைலாயத்தில் வந்து தரிசனம் செய்தாலே பெரும் புண்ணியமாயிற்றே! அதனால் தான் அடியேன் இங்கு வந்து சேர்ந்தேன், என்றேன்."
"கேட்க வந்த விஷயத்தை, அகத்தியர் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்கலாமே!" என்றார்.
"திருமலையின் சிறப்புக்களை பெருமாள் அனுமதியுடன் உலகறிய உரைத்து வந்தேன். திடீர் என பெருமாள் கொடுத்த அனுமதியை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். ஏன் இப்படி? என தாச விண்ணப்பத்துடன் கேட்ட பொழுது முக்கண்ணனை கண்டு விஷயத்தை அறிந்து கொள் என்றார். ஆதலால் இங்கு ஏகினேன். அடியேனுக்கு அருள் கூர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்றேன்.
"நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தனின் விதி முடிகிற காலம் வந்துவிட்டது. அவன் திரும்பி வரவேண்டிய காலம் நெருங்குகிறது. ஆதலால், ஏழுமலையான் தன் உத்தரவை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். அதனதன் விஷயங்கள், விதிப்படி தானே நடக்கும்." என்றார்.
"அடியேனின் ஒரு விண்ணப்பம். பூமியில் மனித குலம் தர்மத்தின் வழி சென்று, இறையை அடைய, நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக, இந்த மைந்தனை தெரிவு செய்துள்ளேன். இன்னும் ஒரு தசவருடம் மைந்தனின் ஆயுளை நீட்டி தரும்படி எம்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்றேன்.
அதற்கு எம்பெருமான் "இல்லை அகத்தியா! இவன் விதியை மாற்றுவதாக எமக்கு எண்ணமில்லை. அவன் வந்து சேர்ந்துதான் ஆகவேண்டும். நீ சென்று வா. காலம் உன் செயல்களுக்கு உதவி செய்யும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். எத்தனையோ முறை வேண்டிக்கொண்டும் அவர் மனம் மாறுவதாக தெரியவில்லை.
"நடப்பதெல்லாம் இறைவன் செயல், எனக்கு கூட புத்திரபாசம் இருக்கிறதோ?" என்ற கேள்வியுடன் கைலாசத்தை விட்டு வந்துவிட்டேன். ஒரு மனிதனாக இருக்கும் உனக்கு, இது நிச்சயமாக சலனத்தை ஏற்படுத்தலாம். தாக்கத்தை உருவாக்கலாம். எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றை விட்டுவிடு. சரியான தருணத்தில், யாம் வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று கூறி அமைதியாகிவிட்டார் அகத்தியர்.
சொன்னது எல்லாம் பேரிடியாகி உள்ளே இறங்கினாலும், மனதை கல்லாக்கிக்கொண்டு நண்பரிடம் வினவினேன்.
"சரி! என்று? எத்தனை நாட்களில்? எப்படி? எப்பொழுது? என்பதை அகத்தியப் பெருமான் கூறினாரா?" என்றேன், சிறு பதட்டத்துடன்.
சற்று புன்னகைத்தபடி, "என்ன? நீயும் சாதாரண மனிதனாக இருக்கிறாய்? அப்படிப்பட்ட முகூர்த்தத்தை அவர் தெரிவிப்பாரா? அது இறைவன் சித்தமாயிற்றே! போய் அமைதியாக இரு! உன்னிடம் தந்தவற்றை பத்திரமாக வைத்துக்கொள். அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியம் உனக்கும் கிடைக்கும். அதை கெட்டியாக பிடித்து கொண்டு, மேலேறி வந்துவிடு. பிறகு பார்க்கலாம். சென்று வா" எனக்கூறி விடை பெற்றார், அகத்தியர் மைந்தன்.
அவர் மெதுவாக திரும்பி நடந்து செல்வதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவே கடைசியாக சந்தித்ததும், பார்த்ததும்.
கிடு கிடுவென நாட்களும் ஓடியது. நிறைய மாற்றங்களும் அவர் உடல் நிலையில் வந்தது. ஒரு சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிர்ச்சை அளித்தும், பலனின்றி, அவர் ஆத்மா நல்ல முகூர்த்தத்தில், உடலை விட்டு பிரிந்தது..................
நான் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு மேல் யாரிடமும் பேசவில்லை. எதுவும் செய்யவில்லை. தினப்படி செய்கிற விஷயங்கள் கூட நின்று போனது. எதிலும் சிறு துளி கூட விருப்பமில்லாத நிலை. அமைதியாக அமர்ந்து அகத்தியர் படத்தை பார்த்தபடி இருந்தேன். மிகப்பெரிய இழப்பு என்ற உணர்வு வரவே, மொத்தமாக இடிந்து பெயர்ந்து போன நிலை.
என்னை சுற்றி யார் யாரோ வந்து போகிற மாதிரி உணர்வு வந்தது. யாரென உணரவில்லை. என்னென்னவோ பேசுவது கூட கேட்டது.
" மனித பிறவியெடுத்தவர்களுக்கு இது நிச்சயம். இதை விட்டு வெளியே வா! இன்னும் இது போல் நிறையவே நடக்கும். அனைத்தையும், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டு, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை பற்றின்றி செய்!" என யாரோ காதருகில் வந்து மிக சன்னமாக கூறினார்கள்.
தலை குனிந்து, கண் மூடி த்யானத்தில் அமர்ந்திருந்த என் தலைக்குள் இந்த செய்தி தெளிவாக கேட்டது. உடன் கண் திறந்து வலது பக்கம் பார்த்தேன். ஏதோ ஒரு அதீத சக்தி, காற்றாய் வந்து சொல்லிவிட்டு மெதுவாக விலகி சென்றது போல் உணர்வு ஏற்பட்டது. என் நண்பரா? சித்தனா? அகத்தியரா, கூறி சென்றது யார் என்று புரியவில்லை.
சற்று நேர அமைதிக்குப்பின், நடந்த விஷயங்களை மறுபடியும் யோசித்து பார்த்து "சரி! யாரோ துணை இருக்கிறார்கள்! சொன்ன படியே நடந்து கொள்வோம்" என தீர்மானித்து, இயல்பு நிலைக்கு வர தீர்மானித்தேன். இருப்பினும் உள் அமர்ந்த சோகம் விலக சிறிது நாட்களாகியது.
ஒருநாள், காலை த்யானத்தில் எதோ ஒரு உணர்வு உந்த, ஒரு விண்ணப்பத்தை தெரிவித்தேன், அகத்திய பெருமானை நினைத்து.
"என் நண்பர், நிறையவே என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவை அத்தனையையும் இந்த உலக மக்கள் தெரிந்து கொள்ள வெளியிட அனுமதி வேண்டும். என் நண்பரின், அகத்தியரின் புகழ் எங்கும் பரவ வேண்டி மட்டும் தான் இதை கேட்கிறேன். அடியேனுக்கும், உங்கள் இருவருக்கும் ஏதேனும் சேவை செய்ததுபோல் இருக்கும். அதனால் வருகிற பெருமைகள் அனைத்தையும் உங்களுக்கே தாரை வாரத்துக்கு கொடுத்துவிடுகிறேன். ஏதேனும் சிறுமைகள் இருந்தால் அது அடியேனின் தவறாக நினைத்து மன்னித்தருளுக! இதற்கான அனுமதியை எதிர் பார்க்கிறேன்!" என்று கூறிவிட்டு, சொந்த விஷயத்தை பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டேன்.
எங்கெங்கோ அலைந்து, வீட்டு விஷயங்களை பார்த்து, வீடு திரும்பிய பொழுது மாலை நேரமாகிவிட்டது. நடந்து வரும் வழியில், "வீடு சென்று குளித்து த்யானத்தில் அமரவேண்டும்" என்று தோன்றியது.
அதன் படியே அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் "எமது ஆசிகள் உமக்குண்டு" என்று ஒலிக்க, யாரது அருள்வது என்று கண்மூடி பார்த்தால், அகத்தியப் பெருமான் வலது கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபடி நின்றிருந்தார்.
ஆனந்த அதிர்ச்சியில், எழுந்து நின்று, அவர் நின்ற திசை நோக்கி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்தேன்.
"நலம் உண்டாகட்டும்" என்றார்.
"தாங்களே! அதற்கும் வழிகாட்டி, ஒரு தலைப்பு பெயரையும் சூட்டி விடுங்களேன்" என்றிட,
அவர் திருவாயால் அருளிய தலைப்பே
"சித்தன் அருள்"
சூட்ச்சுமமாக அனைவருக்கும் அதை உணர்த்தவே, அந்த தலைப்பை பின்னர் "அகத்தியப் பெருமானின் - சித்தன் அருள்" என்று தற்போதைய நடத்துனர் மாற்றினார்.
இதனால்தான், "பெருமாளும் அடியேனும்" திடீரென ஐந்து மலைகளின் நாமகரணத்துடன் நின்று போனது. பின்னர், வேறொரு சமயத்தில், பெங்களூரில் அகத்தியப் பெருமான் நடத்திய சத்சங்கத்தில் (திரு.கணேசன், தஞ்சாவூர் அவர்கள் வாசித்த நாடியில்) ஒரு அடியவர், "ஏழு மலையில், மீதமிருக்கும் இரண்டு மலைகளின் நாமகரண சரித்திரத்தை, எங்களுக்கு கூறக்கூடாதா?" என்று வினவியபோது, "காலம் கனியும் பொழுது, இறைவன் அனுமதி அளிக்கும் பொழுது, யாமே அதை பற்றி கூறுவோம். பொறுத்திருங்கள்" என்றார், அகத்தியர்.
அகத்தியர் அதை பற்றி கூறும் பொழுது, அதை கேட்கிற பாக்கியம் செய்தவர்கள், அதை கேட்டு அவர் அனுமதியுடன் அதை பதிவு செய்கிற அந்த புண்ணிய ஆத்மா யாரோ? தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என் அவா. இந்த உலக மக்களுக்கு அந்த மலைகளுக்கு பெயர் வந்த போது நடந்த நிகழ்ச்சிகள் கிடைக்கவேண்டும்.
இறைவன் கனியும் வரை, அகத்தியர் அருளும் வரை காத்திருப்போம்.
சித்தன் அருளை இத்தனை நாட்கள் வளர்ந்து வர அகத்தியப் பெருமான் அருளியிருந்தாலும், அதன் வளர்ச்சியில் நிறைய அகத்தியர் அடியவர்கள் பங்கு பெற்றனர். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஒவ்வொருவிதத்தில் அளித்தனர். அத்தனை பேருக்கும், எனது பணிவான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வலைப்பூவில் பங்கு பெற்று, தன் சித்திரங்களால் "சித்தன் அருளை" அழகுபடுத்தி இன்று வரை எனக்கு கூட உறுதுணையாக நின்றிருந்த திரு.சரவணனுக்கு, மனமார்ந்த நன்றியை, அகத்தியப் பெருமானின் ஆசிர்வாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய வலைப்பூ நடத்துனரும், திரு சரவணனும் செய்த ஒரு கூட்டு முயற்சியாக இன்றைய படம் மிக சிறப்பாக வந்துள்ளது. "ராமருக்கு" பட்டாபிஷேகம் இருக்க, ஏன் வேங்கடவருக்கு அது போல் ஒரு ராஜ்ய பரிபாலன தர்பார் இருக்கக் கூடாது என்று நினைத்து இன்றைய படத்தை தொகுத்து தந்துள்ளார். அருமையாக, மிகச்சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துக் கொண்டு, "சித்தன் அருளில்" நின்றும், உங்கள் அனைவரிடமிருந்தும், என்றைக்குமாக விடை பெறுகிறேன்.
அனைவரும் அகத்தியர், இறைவன் அருள் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன். வணக்கம்!
கார்த்திகேயன்
When I saw it, it was "1534786"th views. Thanks to Agasthiyar.
ReplyDeleteOm Agatheesaya Namah
DeleteDear Sir,
I am unable to understand what the exact above message is related with, but from below comments in English guess that something is going wrong, is it last episode of Sithanarul for all of us? The Arul vakya will not be there for us? Kindly guide further
We will accept this as Mahamuni's order
It is not so Sri.Bhavsar. Sri.Karthikeyan Sir was explaining the situation which lead to abrupt stoppage of the series "Perumaalum Adiyenum". The entire episode was explained by Sage Agasthiya through "Jeeva Naadi" upto 5th mountain. Two more mountains were there. Before explaining the same, Lord Narayana withdrew his permission and directed Sage to contact Lord Siva and ascertain the reason for withdrawal of permission. When Sage met Shiva, he explained that the fate of the Naadi Reader is over and he has to come back. Sage pleaded for extension of life for 10 years to the Naadi reader, which was refused by Lord Shiva and in due course, he (Naadi Reader) passed away. Thats why the remaining things could not be explained by Sage Agasthiyar and we did not get it. Sri Karthikeyan has retired from Siththan Arul blog and he may not be presenting articles in future. Now, as the present blogger, I feel left alone and an emptiness has crept in. Hope the daily blessing will continue.
DeleteOm Agatheesaya Namah
DeleteThis all information is breathtaking. Its confirm here that Naadi reader is also sithar soul due to which he blessed with All Divine powers. Also the 2 mountains have many Deva-Rahasya which will not be disclosed at this time by Shiva and Lord Narayana but Mahamuni want to do it for very most prime reason. We just need to follow the Sidha Path which was till date given by Mahamuni.
We really want to sincerely thanks to our beloved and Mahamuni's most lovely son Mr. Karthikeyan sir for publishing all this "Arul vakya of Mahamuni" for all of us. Each article in this blog is like Geeta sar which change our life definitely. We will pray that whenever possible you will send us divine messages.
Dear Agnilingam sir,
"siththanarul.blogspot." is the permanent place of Mahamuni with all Siddhas and divine energy always flow through this just as blessings......So all Divinity is here only.
சதத்திற்கு ஒரு பங்கைவிட சிறியது அடியேனின் சேவை!
ReplyDeleteவாழ்த்துக்களை அகத்தியர் மற்றும் அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகிறேன்!
அனைவரும் இன்புற்று வாழ்க!
Blessings to you and your family Mr.Saravanan
DeleteWalk the path of "Siddha Margam" without looking at the hindrances, acts, quickly.
DeleteThank you Aiyaa!
DeleteThank you for all your efforts to publish the series "Siththan Arul". This is a sad moment as we couldn't read any further. I hope this blog will exist for us to browse through the series.
ReplyDeleteYou can continue to read good things. Go with the flow!
DeleteArumai Karthikeyan Aiya. Vazhthukkal Saravanan.
ReplyDeleteNandri Sir!
DeleteOm agathisaya namaga
ReplyDeleteInstead of “nama-ga”, better pronounciation is: Namah नमः
Deletedear all
ReplyDeleteThe message from all the episodes is just one:
HE decides everything. Like solving a puzzle, all human beings (the Atmas)try as best as possible to get to the solution but most are never upto it. Those who make the grade are given a second round of revelation of the great constitution of Light & Dharma and until the recipient Atmas stop to ask questions ,the lessons go on from one birth to another till they seek the Absolute. After that the merger takes place and the Atma is dissolved
Thanks for all the great lessons
Abiash
Dedicate it to Agasthiyar Guru
DeleteTears are rolling down on reading this. Hands are shaking, completely disheveled and several thoughts are racing simultaneously.Unable to visualise the state of the poonathma's on receiving the message from agathya ma munni.
ReplyDeleteYes! It was just like putting a ton on your chest, that too when it the heart was beating fast. No options. We had to accept it and look ahead.
Deleteஐயா ஆவலுடன் மீண்டும் காத்து கொண்டிருப்பேன்.
ReplyDeleteEthavathu oru vagail engalukku Agathiyar peruman thiru katchiyo ...thiru vakko koduthukondirukka...Iyanai Vendi nirkinrom...Om agatheesaya namaha..Om agatheesaya namaha..Om agatheesaya namaha..Nandrigal.
ReplyDeleteYou are already having his blessings. His darshan will be according to his decision taking in to account our Karma. I pray that you get his darshan and blessing, direct. go for it.
DeleteHi Sir,
ReplyDeleteI feel very much blessed when i come to kodakanallur this year. Every day i will start my office duty after reading sithan arul. I am not understand that you are not continuing the sithan arul or perumal story. Please help me understand.
இளவழகன் அவர்களே! திரு ராஜாஜி என்று ஒரு பெரியவர் இருந்தார். ஒரு காலத்தில், இறைவன் அருளால், ராமாயணத்தை "சக்கரவர்த்தி திருமகன்" என்கிற பெயரில் தொடராக, எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்கிற விதத்தில் எழுதி வந்தார். அந்த தொடர் முடிந்து போனதும், அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
ReplyDelete"இத்தனை நாட்கள், நேரமின்றி, தொடரை மிகுந்த பக்தியுடன் எழுதி வந்தீர்களே. அது முடிந்து போனதும், உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?" என்று கேட்கப்பட்டது.
"அது முடிந்து போனதும், நிறைய நேரம் உள்ளது. ஆனால், ஒரு வெறுமை, மனதுள் பரவிவிட்டது. அந்த வெறுமை என்னை செயலிழக்க வைத்துவிட்டது" என்றார்.
அதே வெறுமை இப்பொழுது அடியேனுள்ளும் பரவிவிட்டது. அன்று, அவர் அப்படி சொன்னதும், இந்த வெறுமை உணர்வு எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டு. இன்று அதை உணர்கிறேன்.
அகத்தியர் அருளி, இன்னும் எழுதுவதற்கு விஷயங்கள் கிடைக்கவேண்டும் என்று அவா.
அருளுவார். காத்திருப்போம்.
Surely you will start very soon sir myself and my wife are waiting for Agasthiyar Arul. Definitely you will start very soon. You are one who distributed the 10 Ruppees note on Kodakanallur I thing.
ReplyDeleteYou please share those details in this blog every year so that every body will gather there and got blessing of Agasthiyar.
Dear Sirs, Thank you so much for your valuable contributions as on this day. My Pranams to Karthikeyan Sir and Agnilingam Arunachalam sir for the time taken to give all the details by Sage agasthiayr. A small request - It would be great if Sithan Arul 516 episodes are compiled in PDF format (Like last time link was given in google groups as 1-100, 101-200 like that). Kindly do the needful. Thanks.
ReplyDeleteYes. Surely I will look in to that.
Deleteஎல்லாம் அவர் செயல். Pls consider giving all episodes from 1 till 516 in pdf format. மிக்க நன்றி ஐயா..
DeleteNamaskaram
ReplyDeleteThiru Karthikeyan Ayya, Thiru Agnilingam Ayaa & Sri Saravanan Ayaa, this is been a great journey for people like us to know more into Thirumalai Perumal & Sage Agasthiyar peruman's greatness through "Agasthiya Perumanin Siddhan Arul - Perumaalum Adiyenum", also putting prayers with Sage Agasthiyar & Thirumalai Perumal that in future to know about the remaining two mountains through "Agasthiya Perumanin Siddhan Arul - Perumaalum Adiyenum".
On agathisaya namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக. நான் அறிந்தவரை அலை கடல் துரும்பாக செய்வதறியாது அலைந்துகொண்டிருந்த எமக்கு கடந்த ஐந்து , ஆறு வருடங்களாக எமக்கு ஞானஒளி யாக இருந்து எம்மை பெரும் சோதனைகள், இடர்பாடுகளுக்கு மத்தியில் நல்வழி படுத்தி சென்ற பெருமை அகதியப்பெருமானையே சாரும். இதைவிட சித்தன் அருள் மூலம் அகத்திய பெருமான் பல ஆயிரம் பேரின் வாழ்க்கையை செம்மை படுத்தி அவர்களை முழுமையாக கடவுள்பால் திருப்பி தர்ம வழியில் நடத்தினார் என்பதே உண்மை. அதிலும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற என்போன்றவரின் வாழ்வாதாரமாகவே சித்தன் அருள் இருந்து வருகிறது . எல்லாம் வல்ல அகத்திய பெருமான் துணை கொண்டு இறைவனடி சேர்ந்த அனுமந்ததாசன் அய்யா அவர்களுக்கும் , முன்னைய நடத்துனர் கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கும் தற்போதைய நடத்துனர் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும் இன்னும் பல வழிகளில் சித்தன் அருள் வெளிவர உதவியவர்களுக்கும் கோடானுகோடி நன்றியை உள்ளன்போடு தெரிவிப்போதோடு , மேலும் தொடர்ந்து வந்து எம் போன்றோரை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே என் தாழ்மையாயன வேண்டுகோள்
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஓம் நமசிவாய.
ReplyDeleteவணக்கம்.எனக்கு வயது 26.சித்தன் அருளை வாசித்து விட்டு தான் என் பணியை துவங்குவேன்.இதை கவனித்த எனது மேளாளர் அவர்களும் வாசிக்க ஆரம்பித்து கோடகநல்லூர் சென்றார். அவர் அனுமத்தாசன் ஐயா அவர்களின் உறவினர் ஆவார்.
அகத்திய சித்தரை நேரிலோ அல்லது கனவிலோ சந்திக்க மந்திரம் ஒன்று எனக்கு கிடைத்தது.45 நாட்கள் மாமிசம் உண்ணாமல் பிரம்ம முகூர்தத்தில் ஓர் அமாவாசை தினம் மந்திரம் உச்சரிக்க ஆரம்பித்தேன்.மந்திரத்தை வாய் விட்டு கூறாமல் மனதார சொல்ல வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது.
நானும் சில ஆசைகளை நிறைவேற்றி கொள்ள அதையே கோரிக்கையாக முன்வைத்து பூசை செய்தேன்.அதில் இரண்டு நியாயமான கோரிக்கைகள்.உடனே நிறைவேறியது.நான் முறையில்லாது செய்த பூசையும் ஐயன் ஏற்று பதினோறாவது நாள் என் கனவில் என்னை பொதிகை மலை வரவழைத்து நாயினும் கடையேனாகிய எனக்கும் காட்சி தந்து உறையாடினார்.என் வாழ்வில் நடந்த முதல் அதிசயம்.
அன்று முதல் என்னையும் ஆட்கொண்டு குருவாக மட்டுமல்லாமல் தந்தையாகவும் ஆண் தோழனாகவும் இருக்கிறார். யான் முதன் முதலில் கடைக்கு சென்று வாங்கிய சாமிபடம் அகத்தியரின் திருப்படம் தான்.யான் முதன் முதலில் அதிகாலையில் எழுந்து பூசை செய்ததும் அகத்தியரை தான்.நற்குணங்களையும் தர்ம சிந்தனையும் பெற்றது தந்தையின் அருளால் தான்.
அகத்திய பெருமான் அருள் வாக்கு என்ற தலைப்பில் தாங்கள் வெளியிடும் கருத்துக்களை படித்தும் உணர்ந்தும் வருகிறேன்.தங்களுக்கு மிக்க நன்றி.தாங்கள் இச்சேவையை தொடர்ந்து செய்து யாங்கள் நல்லவற்றை உணர உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.
Ayya antha agasthir manthiram solla vendum please
Deleteதிரு கார்த்திகேயன் அவர்கள் அகத்தியர் நாடியே தன் குருவிடமிருந்து பெற ஏன் முயர்சிக்கவில்லை இதற்கு பின்னால் எதாவது காரணம் உண்டா
ReplyDeleteநான் 4 அ 5 மாதங்களாக தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக படித்து தற்போது தினமும் படிக்கும் வாய்ப்பை பெற்றும் மேற்கொண்டு எழுமலையானை அறியும் வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து வருத்தம் ஏற்படுகிறது.
ReplyDeleteயாமினி தேவி
ReplyDeleteதயவு உங்களுக்கு ஏதேனும் ஆட்ச்சேபனை இல்லை என்றால் அந்த அகத்திய பெருமானின் மந்திரத்தை அல்லது உங்கள் மொபைல் நொம்பரை பதிவு செய்தால் நன்று.
Athy04@gmail.com
Please visit the below URL for knowing the mantra & Pooja details.
Deletehttp://www.livingextra.com/2010/12/blog-post_6123.html
Thanks a lots yamini.
DeleteVanakam
DeleteI need the maha
Manthiram.kindly to get
the same.my ld balasri36
@gmail.com
Anbudan s v.
ஐயா நான் சில மாதங்களாகத்தான் படித்து வருகிறேன் நல்ல ஒரு அருமையான பதிவுகள் தங்களுக்கு நன்றிகள் பல.ஓம் அகத்தீசாய நமக.
ReplyDeleteஐயா நான் சில மாதங்களாகத்தான் படித்து வருகிறேன் நல்ல ஒரு அருமையான பதிவுகள் தங்களுக்கு நன்றிகள் பல.ஓம் அகத்தீசாய நமக.
ReplyDeleteIyya vanakkam.naan sila mathangalaka sidhan arulai padikkiren nalla arumaiyana pathivukal nanri iyya om agathishaya namaha
ReplyDeleteThiru Karthikeyan Sir....We will really miss the continuity and your guidance but we feel all has been planned by Sage Agasthiyar. Thanks very much (We cannot just tell thanks but something more) for your great guidance and i feel really honored and blessed with your guidance. We will continue to follow SAge Agasthiyar's path. Thanks for all your efforts. Thanks a ton to Shri. Agnilingam ayya also for showing us the path of Perumal's Story. Really we are blessed. We will continue to follow the steps of Sage Agasthiyar.
ReplyDeleteOm agatheesaya lobha muthraya namah
ReplyDeleteOm agatheesaya lobha muthraya namah thankyou sir
ReplyDeleteOm agatheesaya lobha muthraya namah thankyou sir
ReplyDeletethank u yamini madam.great sharing
ReplyDeleteVANAKAM SAMY ODHIMALAI GURUVE SARANAM
ReplyDeleteSAMY GURUNATHRE OM AKADHEESWARAYA MURUGA ODHIYANGIRI MURUGA POTRI
ReplyDeleteLet's all pray to start again with blessings
ReplyDeleteஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!
ReplyDeleteநான் இதை முதலில் படிக்கும்போது ' மைந்தன் " என்ற வார்த்தையை கவனக்குறைவாக விட்டுவிடேன் ,அகத்தியர் விதி முடிந்துவிட்டது என்று படித்து ஒரு கணம் அதிர்ந்து பொய் விட்டேன் !! lol .பிறகு மறுமுறை சரியாய் பதித்தவுடன் தான் நிம்மதிமூச்சி விட்டேன் . ஆனால் அந்த ஒரு கணம் என் சப்தாநாடியும் ஒடுங்கிப்போனது .....
ReplyDeleteஎன்ன ஒரு ஆச்சிரியம் google தமிழ் input tool work பண்ணுதே , சரிசெய்து வீட்டிற்றோ ! ஆஹா இனி நான் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம் எல்லாம் அகத்தியரின் அருள் !!! .
Ayya jeevanadi padigum edam sollungal
ReplyDeleteom agatheesaya namaha,siddhargalukku ellam maha siddhar,en guruve un porpatha kamalangal potri,potri.
ReplyDeleteTears are rolling through eyes. Last few months have been, one of the best phases of my life were i got to understand God and his play at least 1%( through this blog.
ReplyDelete