​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 11 November 2016

சித்தன் அருள் - 500 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே. இன்றுடன் சித்தன் அருளில் 500வது தொகுப்பை வழங்குகிற பாக்கியத்தை நமக்கு அருளிய அகத்தியப் பெருமானுக்கும், இறைவனுக்கும், திரு.கார்த்திகேயனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, நாளை கோடகநல்லூரில் இறைவன், சித்தர்களை புண்ணிய தின முகூர்த்தத்தில் தரிசிக்க செல்வதால், "அகத்தியப் பெருமான் அருள் வாக்கு" தொகுப்பை வெளியிட முடியும் என்று தோன்றவில்லை. பொறுத்தருள்க. இருப்பினும், உங்கள் அனைவரையும் கோடகநல்லூருக்கு வந்து இறைவன், சித்தர்கள் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.]

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவன் அருளைக்கொண்டு உரைக்கின்றோம் அப்பா! இகுதொப்ப எந்த மாந்தனாக இருந்தாலும், இயம்புங்கால், இறை வணங்கி, அறம் தொடர்வதோடு சத்தியமும் கடுமையாக கடைபிடிக்கத்தான், நல்வாழ்வும், அதனைத் தொடர்ந்து முன் ஜென்ம பாவங்கள் குறைவதும், புண்ணியங்கள் சேர்வதுமாக, வாழ்வு இருக்கும் அப்பா. அப்பனே! இவையோடு மட்டுமல்லாமல், வெறும் தர்மமும், பூஜையும், சத்தியமும் மட்டும் அல்லாமல், ஒரு மனிதன் இவ்வாறெல்லாம் வாழத்தொடங்கும் பொழுது, அகுதொப்ப வழியிலே, தடையின்றி செல்லும்போது, அந்த மாந்தனுக்கு பல்வேறு ஏளனங்களும், அவமானங்களும் நேரிடும், அப்பா! அகுதொப்ப காலத்திலேயே, அன்னவன் சினம் கொள்ளாமலும், பிறர் இவன் மனதை வருத்தும் வண்ணம் நடக்கும் பொழுது, மிக, மிகப் பொறுமையோடும், புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் இது (வெறும்) வார்த்தைதான் என்று எண்ணி அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். "ஒரு வார்த்தைக்கு இதுதான் பொருள்" என்று மனித சமுதாயமே ஒரு பொருளை எடுத்துக் கொள்ளும் பொழுது, அதே பொருளைப் பிடித்துக் கொண்டு (இவனும்) மன வேதனைப்படுவது என்பது தேவையற்ற ஒன்றாகும். ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் உயர்வாக எண்ணினாலும், தாழ்வாக எண்ணினாலும், அது அவனுக்கு மன சங்கடத்தை தந்தாலும், அவன் உண்மையிலேயே நல்லவனாக நடந்திருக்கும் பொழுது, அவனை வேண்டுமென்றே, இடர்படுத்தி அவன் மனம் புண்படும் வண்ணம் பேசும்பொழுதும், அவனோடு வேறு மனிதனையும் பழக விடாமல் தடுக்கும் பொழுதும் அறிய வேண்டும், இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் வாழ்விலே சர்வ சாதாரணம் என்று எண்ணி அமைதியாக இருக்கப் பழக வேண்டும். கர்மா வசப்பட்டு சிக்கித் தவிக்கும் மனிதனானவன், சுய சிந்தனை அறிவு எல்லாம் இழந்து, சதா சர்வ காலமும் தன்னுடைய சுகத்தை மட்டும் பிடிவாதமாக வைத்துக் கொள்ளும் பொழுது, அது கட்டாயம் ஒருதலைப் பட்சமாகத்தான் இருக்கும்.

1 comment:

  1. [ROUGH TRANSLATION] We say the following with the Grace of the Divine. Whoever the human being may be, only when he salutes the Divine, does charity and follows Truth strictly, he will get a good life, then reduction in sins of previous births, and then accumulation of punyas. When a man leads a life of charity, pujas and Truth, when he is living along in this manner, he will be mocked and shamed many times. On those occasions, when other’s behaviour is hurting him, without becoming angry, with great patience, whether I am scolded or praised it is only words-- thinking this way, he should maintain calm. It is un-necessary for him to mentally suffer. When others think of you highly or poorly, and this gives you mental stress, though you are a good person; when others deliberately speak so as to hurt your feelings, and your relation with others gets strained, you must think that such experiences are quite common in life, and maintain calm. As most men are afflicted with karma, and having lost independent wisdom and thinking, and always pre-occupied adamantly with one’s pleasures, it [their behaviour] will definitely be partial [one-sided].

    ReplyDelete