அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
சித்தர்கள் ஆகிய நாங்கள் "உடலுக்காக மட்டும் வாழாதே" என்றுதான் கூறிக் கொண்டே இருக்கிறோம். உடல் சார்ந்த வாழ்வு ஒரு முழுமையான வாழ்வாக இராது. உடல் வாழ்வுக்காகத்தான் மனிதன் எல்லா பாவங்களையும் சேர்த்துக் கொள்கிறான். மனைவி, பிள்ளைக்காக செய்தேன் என்று காரணம் கூறி, ஒரு தனி நியாய விவாதத்தை இவன் கூறலாம். ஆனால் யாருக்காக செய்தாலும் பாவம், பாவம்தான். தாய்க்காக, தந்தைக்காக செய்தேன் என்று கூறினாலும், யாருக்கும் பாவ மன்னிப்பு கிட்டிவிடாது. மறந்தும் ஒரு மனிதன் பாவத்தை நினையாமல், செய்யாமலும், விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக்கொண்டாலே, மனிதனுக்கு பல பிரச்சினைகள் தீர்ந்துவிடுமப்பா.
[ROUGH TRANSLATION] We Siddhas constantly have been advising that “Don’t live for the sake of your body alone”. A life for the sake of body cannot be a complete life. For sake of body, man is accumulating all sins. He may peculiarly argue that he did it for sake of his wife, kids. But, whoever a sin is committed for, it is still a sin. Even arguing that I did it for my parents, will not yield forgiveness of sins. Living attentively, by not performing sin or even thinking about committing a sin, will solve many problems of confronting a man.
ReplyDelete