​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 7 November 2016

சித்தன் அருள் - 495 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

தர்மத்தை செய்கின்ற மனநிலைக்கு, சிந்தனைக்கு ஒருவன் வந்துவிடவேண்டும். அப்படி வந்த பிறகு அடுத்த நிலையாக, கட்டாயம் அள்ளி அள்ளி ஒருவன் தருகிறான் என்றாலே, ஏமாற்றுகின்ற கூட்டம், வஞ்சகமான எண்ணம் கொண்ட கூட்டமும் அவனை சுற்றி வரத்தான் செய்யும். அது போன்ற நிலையிலே சற்றே, நிதானித்து உண்மையில் உதவி தேவைப்பட்டு கேட்கிறானா? அல்லது நாம் தருகிறோம் என்பதற்காக கேட்கிறானா? என்று ஆய்ந்து பார்த்து ஒருவன் தரலாம். ஒருவேளை, தந்துகொண்டே வரும் சமயம் ஏதாவது ஒரு அமைப்பை குறித்து பிற்காலத்திலே "அந்த அமைப்புக்கு, அள்ளி அள்ளி தந்தோம்? அங்கு எதுவும் முறையாக பயன்பட்ட மாதிரி தெரியவில்லையே? ஏமாற்றிவிட்டார்களே? என்று வருந்தவேண்டாம். அகுதொப்ப செய்திகள் வந்தாலும் "கொடுத்தது கொடுத்ததுதான். கொடுக்க வைத்தது இறைவன், எப்படி சேர்க்க வேண்டுமோ, எங்கு சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்துவிடுவார், என்று எண்ணி, பயமில்லாமல், குழப்பமில்லாமல் தொடர்ந்து ஒரு மனிதன் அற வழியில் சென்று கொண்டே இருக்கவேண்டும். இந்த கருத்தைத்தான் எம்முன் அமரும் ஒவ்வொரு மனிதனுக்கும் கால காலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். இகுதொப்ப நிலையிலே செய்த பாவத்தை குறைத்துக் கொள்ளவும், இனி பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழவும் தான் இந்த உடல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் லௌகீக சுகங்களை நுகர மட்டும் அல்ல. லௌகீக சுகங்களை நுகர்வதோடு, நாங்கள் கூறுகின்ற இந்த கருத்துக்களையும் மனதிலே பதிய வைத்துக்கொண்டால் கட்டாயம் நல்ல பலன் ஏற்படும்.

1 comment:

  1. [ROUGH TRANSLATION] One must develop the attitude and determination to do charity [தர்மத்தை]. After that, in the next stage, because he is ready to give and give, he will be hassled by cheaters with ill-intentions. In such situation, one can think and evaluate whether I am being approached for a genuine need or just because I am giving. If, later on, it emerges that the charity given earlier was not properly utilised and hence maybe I was cheated, no need to have regret. Even if such information comes, better to think that “Given is given. It is the Divine that was behind this charity, He will make it reach where and when properly” and to continue to follow the path of dharma, free from fear and confusion. This is the advice we have always been giving to those [devotees] who approach us. It is for the purpose of reducing past sins and to avoid sins in future by living attentively, that this [human] body has been given. It [body] is not merely for worldly enjoyments. Apart from wordly enjoyments, if you assimilate our advice, definitely good results shall fructify.

    ReplyDelete