​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 13 November 2016

சித்தன் அருள் - 502 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறை காத்திருக்கிறது. ஆனால், இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும், அது இன்பமோ, துன்பமோ, ஒரு மாய வலைதான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும்போது, "எனக்கு உன்னை தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீதான் வேண்டும்" என்று, உளமார ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே, அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஒடத் துவங்கும். பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது. தேவைகளுக்காக இறைவனை அணுகினால், கடைசிவரை ஒரு தேவை போக, இன்னொரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். தேவைகளுக்காக வழிபாடு என்பதை விட, ஒரு மனிதன் இறை மறுப்புக் கொள்கையிலேயே இருந்து விடலாம்.

2 comments:

  1. The Divine is waiting. But, man is lacking the maturity to receive grace from the Divine. Please understand this first. All situations happening now, be it pleasure of pain, it is trap of maya only. To cross this and reach the Divine, “I need nothing except You. I need You only”, if a man sincerely prays like this, his destinies will start going away step by step. Then he will have no needs left. If you approach the Divine only for your needs, till the end, one need will keep arising after another. Rather than pray for needs, a man can have the philosophy of denial of the Divine.

    ReplyDelete
  2. Om AGATHEESAAYA NAMAHA

    “I need nothing except You. I need You only”

    ReplyDelete