அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அகுதொப்ப விதி, மதி என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்துவிடு. அதே உன்னை காலா காலம் காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள் பார்த்து, பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத்தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள்தான், மனோபலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. மனோபலத்தை உறுதி செய்யவும், வளர்த்துக் கொள்ளவும், துன்பங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். அகுதொப்பத்தான், பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. அவற்றை கண்டு மனம் தளராது, எதிர்த்து, இறையருளோடு போராடினால், இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். அகுதொப்ப இயன்ற பிரார்த்தனைகளை, தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிகள்.
[ROUGH TRANSLATION] You can employ your Intelligence to enquire into destiny, but you cannot control it. So, over-pass both destiny and intelligence, and enter into the stage of prayers. This alone can protect you life-long. Without worrying about past or future, by the regular habit of looking inwards, destiny will change favourably. Life experiences are for the purpose of attaining maturity. Only through experiences, your inner [mental] strength will increase. Without inner [mental] strength, Divine power will not increase. To consolidate and develop mental strength, sufferings have to be borne. Accoridngly only, man is chased by various trials and sufferings. By encoutering sufferings without mental weakness along with with Divine grace, the end results will be positive. Life-long, positive only will accrue. So, follow our path by performing prayers and charity as much as possible. Everything will be beneficial. Full blessings.
ReplyDeleteOm agathisaya namaga
ReplyDelete