​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 6 November 2016

சித்தன் அருள் - 494 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இகுதொப்ப நிலையிலே, மிகப் பெரிய ஞானிகளும், மகான்களும் தோன்றி இறைவனின் கட்டளைப்படி "மனிதன்  எங்ஙகனம் வாழ வேண்டும்? எங்ஙகனம் வாழக்கூடாது?" என்றெல்லாம் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த பரந்த பாரத மண்ணிலே, ஏராளமான ஞானிகள் தோன்றியும், இன்னமும் தோன்றவும் இருக்கிறார்கள். என்றாலும், எம் போன்ற ஞானிகளுக்கு, என்ன வருத்தம் தெரியுமா? இகுதொப்ப ஞானக் கருத்துக்களை கேட்க அதிகம் வாய்ப்புகளைப் பெறாத அல்லது பெற முடியாத மேலை தேசத்து மனிதர்கள் கூட அடிப்படை தர்மத்தை மறக்காமல் ஓரளவு வாழ்கிறார்கள். தான் வாழும் நாட்டையும், வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சகல தர்மங்களும், நியாயங்களும் போதிக்கப்பட்ட இந்த தேசத்தில்தான் சுத்தம் என்றால் என்ன? என்றே தெரியாத நிலைக்கு மனிதன் ஆட்பட்டுவிட்டான். எதை, எங்கே செய்யக்கூடாதோ, அதை அங்கே செய்வதும், எதை எங்கே செய்யவேண்டுமோ அதை செய்யாமல் இருக்கும் ஒரு சராசரி நிலையில், கல்வி கற்றவன், கல்வி கொள்ளாதவன் என்று அனைத்து தரப்பினரும் இருக்கிறார்கள். நதியை பாழ்படுத்துதல், வ்ருக்ஷங்களை வெட்டி சாய்த்தால், தான் வாழவேண்டும் என்றால் இந்த பூமி எந்த சூழலுக்கு ஆட்பட்டாலும் பாதகமில்லை, இன்றைய தினம், நானும் என் சமுதாயமும் வாழ்ந்தால் போதும், என்று வ்ருக்ஷங்கள் மீது கருணையே இல்லாமல் அடியோடு, வேரோடு வெட்டிச் சாய்த்தல், நீரை மாசுபடுத்துதல் என்று பஞ்ச பூதங்களையும் எந்த அளவுக்கு பாழ்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு பாழ் படுத்திக்கொண்டிருக்கிறான், இங்குள்ள மனிதன். இந்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு புரிதலோடு, ஒன்று தவறு என்று தெரிந்து விட்டால், அதை உற்பத்தி செய்யாமல், நாட்டிற்கும், தன் சமுதாயத்திற்கும், பின்னால் வரும் சந்ததிக்கும் நன்மையே செய்யவேண்டும் என்ற சிந்தனை இங்குள்ள மனிதர்களை விட கடல் தாண்டிய தேசத்தில் வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. எல்லா விதத்திலும் தன்னை பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும் மனிதன், அவனை பார்த்து அடிப்படை தர்மத்தை, ஒழுங்கை கற்றுக்கொண்டால், இந்த தேசமும் நன்றாக இருக்கும். இதெயெல்லாம் கூட ஒரு சித்தன் சொல்லி செய்ய வேண்டிய அவசியமேயில்லை. இவையெல்லாம் மிக மிக அடிப்படை விஷயமாகும். எனவே, இந்தக் கருத்தையும் இங்குள்ள அனைவரும் மனதிலே வைத்து தம்மை நாடும் நட்புக்கும், உறவுக்கும் இது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறினால், சஹஸ்ரம் எனப்படும் ஆயிரம் மனிதரிடம் உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினால், அதில் கட்டாயம் ஒரு மனிதன் பின்பற்றுவான் என்ற அளவிலே அனைத்தும் நலம், நலம் என்று நலமாய் மாறும் அப்பா!

2 comments:

  1. Very great gnanis and mahaans take birth and as per Divine command, they keep guiding humanity as to how to live and how not to live. In India so many gnanis have lived and will continue to come. In spite of this, our grief is that people in other countries, who don’t get opportunity to hear the wise counsel still follow basic dharma somewhat. They desire to maintain their country and their neighbourhood in a healthy way. But what is the status of cleanliness in this country where all kinds of dharmas and rules have been preached? – what is cleanliness itself has been forgotten. Doing prohibited things and not doing prescribed things is the average behaviour of both educated and un-educated. Polluting the rivers, cutting down trees, I and my society have to prosper even at the cost of mother earth and environment – with this motive, with no pity on trees cutting and up-rooting them, polluting the water—in this manner, he is damaging the panca bhutas to the maximum. Compared to people of this country, people overseas have some care towards their country, society and future generations. The (local) people who have the habit of comparing themselves to others, should take a look at the overseas citizens and learn basic dharma and rules from them. This is such a basic/obvious thing and it is not necessary that a Siddha is needed to give this advice. Even if one out of 1000 implements wise counsel, the future will get better and better.

    ReplyDelete
  2. Om Agatheesaya Namah
    True, This need to implement from "I" first then "We" can do together.

    ReplyDelete