[டவுன்லோட் செய்ய]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில், அகத்தியப் பெருமான், இறைவன் உத்தரவால், தன் சேய்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, ஒரு அருள் வாக்கை அருளியுள்ளார். ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, ஒலிநாடாவிலிருந்து, முக்கியமான விஷயத்தை, சுருக்கமாக, அடியேன் புரிந்து கொண்ட வரையில் கீழே தருகிறேன்.
ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும். இந்த காலகட்டத்தில், நிறைய அனிச்சையாக, சம்பவங்கள் நடக்கும். மனித மனதை, எண்ணங்களை விஷப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்துக்குள், பொது வாழ்க்கையில், வேண்டாத விஷயங்களை நடத்திவைக்கும். இது, பக்தி மார்கத்தில், சித்த மார்கத்தில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் தடுமாற வைக்கும். தேவை இல்லாத கெட்ட பெயர், பேச்சு, தூற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும். இவ்வுலகில், நடக்கும் அனைத்தும் இறைவன் அருளால் நடப்பதால், எவ்வளவோ பக்குவத்துடன் இருந்தாலும், சேய்கள் மனம் கலங்கத்தான் வேண்டிவரும். ஆகவே, இறைவன் உத்தரவால், அனைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், அனைத்து ஆத்மாக்களையும், இந்த நேரத்தில், அருகிலிருந்து, வழி நடத்தி, காப்பாற்ற அனுப்பப்பட்டுள்ளனர். நாம் காப்பாற்றப்பட்டு, வழி நடத்திட, என்ன செய்ய வேண்டும் என ஒரு வழியையும் அகத்தியப் பெருமான் அருளியுள்ளார்.
இறைவனை, ஜோதி ரூபமாக, (அதுவே கல்யாணக் கோலம்), தினமும் காலையிலும், மாலையிலும் அவரவர், வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து, முடிந்தவரை, குறைந்தது ஒரு நாழிகையாவது, த்யானம் செய்யச் சொல்கிறார். நடப்பது எதுவாயினும், மனதுக்கு பிடிக்காததாக இருந்தாலும், பொறுமையை கைபிடித்து, பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற திடமான நம்பிக்கையில், இறைவனிடம் அர்ப்பண மனோபாவத்துடன் இருக்கச்சொல்கிறார்.
இன்னொரு அகத்தியர் அடியவருக்கு, தனிப்பட்ட வாக்குரைத்த பொழுது, சூரியனில் எற்பட்ட மாற்றங்களால்தான், தமிழகத்தில், இத்தனை கடுமையான வெயிலும், தண்ணீர் பஞ்சமும் இருக்கிறது எனவும், அதற்காக நாம் கீழ்காணும் மூலிகைகளை, வாங்கி, பொடித்து, தினமும் காலையிலும், மாலையிலும், அவரவர் வீட்டில், தூப புகை போட்டு, முக்கியமாக, இது சித்தர்களுக்கு சமர்ப்பணம் என்று கொடுத்துவிட்டால், நிச்சயமாக, நாம் கொடுக்கும் மூலிகை தூபத்தை ஏற்றுக்கொண்டு, வெம்மையிலிருந்து காப்பாற்றுவோம்! என வாக்குரைத்துள்ளார்.
இதை கேட்ட அடியவர், ஒரு வெம்மை நிறைந்த நாளில், அகத்தியப்பெருமான் கூறியதுபோல் செய்ய, மறுநாளே, வெம்மை குறைந்து, அன்று முழுவதும், மேகம் குடைபோட்டு வெப்பத்தை குறைத்ததாம்.
வேண்டிய மூலிகை பொருட்கள்:-
1. கஸ்தூரி மஞ்சள்.
2. வெண் கடுகு.
3. பச்சை கற்பூரம்.
4. மஞ்சள் தூள்.
5. நாய் கடுகு.
6. மருதாணி விதை.
7. சாம்பிராணி.
8. அருகம் புல்.
9. வில்வ இலை.
10. வேம்பு இலை, குச்சி.
11. வன்னி இலை, குச்சி.
12. கருங்காலி குச்சி.
13. பேய் மிரட்டி குச்சி.
14. வெண் குங்குலியம்.
15. அகில்.
16. சந்தனம்.
மேற் கூறிய இரு விஷயங்களையும், "லோக ஷேமத்துக்காக" என்று வேண்டிக்கொண்டு செய்தால், "எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ, அப்படி வாழ்ந்துவிடு" என நம் குருநாதர் அடிக்கடி கூறுவது, எப்படிப்பட்ட நிலை என்று அனைவராலும் உணர முடியும்.
நலமாக வாழுங்கள்.
ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................... தொடரும்
