​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 14 November 2026

சித்தன் அருள் - 2372 - விதியை மாற்றுவது எப்படி? பகுதி - 1!


ஒரு நாள் மன்னர் ஜனகரின் அரசவையில் நடந்த ஒரு நிகழ்வு அவருக்குள் பல கேள்விகளை எழுப்பியது. 

ஒரு முதிய விவசாயி அழுது கொண்டே அரசவைக்கு வந்தார். அவரது உடைகள் கிழிந்திருந்தன. கண்களில் ஏமாற்றம் காணப்பட்டது. குரல் நடுங்கியது. அவர் கைகூப்பி மன்னா என் வாழ்நாளில் நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. யாருடைய செல்வத்தையும் பறிக்கவில்லை. யாரையும் ஏமாற்றவில்லை. இருந்தும் என் பயிர்கள் அழிந்துவிட்டன. என் மகன் நோய்வாய் பட்டுள்ளான். வீட்டில் ஒரு தானியம் கூட மிஞ்சவில்லை. கடவுள் நீதிமான் என்றால் எனக்கு ஏன் இப்படி நடந்தது? என்று கேட்டான்.

முழு அரசவையும் அமைதியானது. விவசாயியின் கேள்வி அவருடைய கேள்வி மட்டுமாக இல்லை. வாழ்வில் எப்போதாவது துன்பத்தை அனுபவித்த ஒவ்வொரு மனிதனின் கேள்வியாகவும் அது இருந்தது. மன்னர் ஜனகரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அன்றிரவே அவர் மகரிஷி அஷ்டவக்கரரிடம் சென்றார். 

குருதேவா உண்மையில் எல்லாம் விதியால் தான் தீர்மானிக்கப்படுகிறதா? விதி ஏற்கனவே எழுதப்பட்டிருந்தால் பிறகு கர்மம் எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது? என்று அவர் கேட்டார்.

அஷ்டவக்கிரர் புன்னகைத்தார். மன்னா மனிதனின் மிகப்பெரிய மாயையே அவன் விதியையும் கர்மத்தையும் இரண்டு வெவ்வேறு விஷயங்களாக கருதுவதுதான். ஆனால் உண்மையில் இரண்டும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகள் ஆகும் என்று அவர் கூறினார். ஜனகர் கவனமாக கேட்க தொடங்கினார். 

அஷ்டாவக்கிரர் கூறினார் மன்னா இன்று நாம் காணும் விதி என்பது நேற்றைய செயல்களின் கர்மங்களின் விளைவாகும். இன்று நாம் செய்யும் செயல்களே நாளைய விதியாக மாறும். பின்னர் மகரிஷி கேட்டார் ஒரு விவசாயி மாம்பழ விதையை விதைத்தால் நாளை அவனது வயலில் வேப்ப மரம் வளருமா? அதற்கு ஜனகர் இல்லை குருதேவா என்றார். அஷ்டாவக்கரர் கூறினார் சரியாக அதேபோல்தான் செயல்கள் விதைகள் விதி என்பது அவற்றின் பலன். 

ஆனால் பின்னர் அவர் சற்று நிறுத்திவிட்டு, எனினும் பெரும்பாலான மக்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு ரகசியம் இதில் உள்ளது என்றார். 

ஜனகர் ஆர்வத்துடன் அது என்ன ரகசியம் குருதேவா என்று கேட்டார். 

அஷ்டாவக்கிரர் பதிலளித்தார். விதை விதைக்கப்பட்ட பின்னரும் வயலை நிகழ்காலத்தில் பராமரிக்க வேண்டும். நாம் பிறந்த சூழ்நிலை கடந்த காலத்தின் பலனாக இருக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலையை மாற்றி அமைக்கும் உழைப்பும் முயற்சியும் நிகழ்காலத்தில் நமது கைகளில் தான் உள்ளது. வயலுக்கு தண்ணீர் கிடைத்து சரியான பாதுகாப்பு அளிக்கப்பட்டால் பலன்கள்  சிறப்பாக இருக்கும். மாறாக அதை புறக்கணித்தால் அதே விதை பலவீனமான முடிவுகளையே தரும். இதேபோல்தான் கடந்த கால கர்மங்கள் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஆனால் அந்த சூழ்நிலையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நிகழ்கால செயல்களே தீர்மானிக்கின்றன. 

ஜனகரின் மனதில் முதல் முறையாக ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் அதே வேளை புதியதொரு கேள்வியும் எழுந்தது. அவர் கேட்டார். 

அப்படியானால் மனிதன் தன் விதியை மாற்ற முடியுமா? இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு பதிலாக அஷ்டாவகரர் ஒரு கதையை சொல்லத் தொடங்கினார். 

வெகு காலத்திற்கு முன்பு ஒரு நகரத்தில் இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். இருவரும் ஒரே கிராமத்தில் வளர்ந்தவர்கள். தற்செயலாக இருவருடைய ஜாதகமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருந்தது. 

ஒரு நாள் நகரத்தின் புகழ் பெற்ற ஜோதிடர் அவர்கள் இருவரையும் பார்த்து உங்கள் இருவரின் வாழ்விலும் கடினமான போராட்டங்கள் எழுதப்பட்டுள்ளன. பணப்பற்றாக்குறை ஏற்படும் மக்கள் உங்களை மதிக்கவும் மாட்டார்கள் என்று கூறினார். முதல் இளைஞன் இதை கேட்டு மனமுடைந்து போனான். எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்ட பிறகு முயற்சி செய்வதில் என்ன பயன் என்று எண்ணி படிப்படியாக அவன் கடின உழைப்பை கைவிட்டான். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு தோல்விக்கும் விதியை குறை கூற தொடங்கினான். எல்லாமே முன்பே எழுதப்பட்டுவிட்டது என்று நாம் முழுமையாக நம்ப தொடங்கும்போது நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமான முயற்சி செய்யும் திறனை நாமே அழித்து விடுகிறோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவனது வாழ்க்கை உண்மையிலேயே துயரங்களால் நிறைந்தது. 

ஆனால் இரண்டாவது இளைஞன் வித்தியாசமானவன் கஷ்டங்கள் எழுதப்பட்டிருந்தால் நான் அதை எதிர்த்து போராடுவேன் என்று நினைத்தான்.

அவன் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டே இருந்தான். தவறுகளில் இருந்து பாடம் கற்றான். விழுந்து எழுந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான். காலம் உருண்டோடியது அதே இளைஞன் மரியாதையையும் வெற்றியையும் பெற்றான். அஷ்டாவக்கிரர் கேட்டார். மன்னா! இருவரின் தொடக்கமும் சமமாகவே இருந்தது. பின்பு முடிவு மட்டும் ஏன் வேறாக அமைந்தது? 

அதற்கு ஜனகர், ஏனென்றால் ஒருவன் தோல்வியை ஏற்றுக்கொண்டான் மற்றவன் தன் கடமையை செய்வதை நிறுத்தவில்லை என்று கூறினார். 

அஷ்டாவக்கிரர் புன்னகைத்து இதுவே சரியான பதில் என்றார். விதி பிராரப்தத்தை விதிபலனை அளிக்கலாம். ஆனால் முடிவை பெரும்பாலும் கர்மமே, செயலே தீர்மானிக்கிறது. பிறகு மகரிஷி மற்றொரு உதாரணத்தை கூறினார். அவர் கூறினார் இரண்டு பயணிகளுக்கு ஒரே படகு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நதியில் வேகமான நீரோட்டமும் உள்ளது. முதல் நபர் துடுப்பை கீழே போட்டுவிட்டு விதி எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு செல்வேன் என்று கூறுகிறார். இரண்டாவது நபர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி படகை செலுத்துகிறார். இருவரும் ஒரே நதியில் தான் இருக்கிறார்கள். ஆனால் இருவரின் சேருமிடமும் வெவ்வேறாக இருக்கும். நீரோட்டம் என்பது விதி துடுப்பு என்பது கர்மம். நீரோட்டத்தின் போக்கில் மட்டுமே விட்டுவிடுபவர் அடித்துச் செல்லப்படுகிறார். துடுப்பு போடுபவர் திசையையும் மாற்ற முடியும். விதியின் நீரோட்டம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நம்முடைய தொடர்ச்சியான முயற்சியால் கரையைச் சென்றடையும் திசையை நாம் நிச்சயம் மாற்றி அமைக்கலாம். 

மன்னர் ஜனகர் இப்போது இன்னும் தீவிரமானார். ஆனால் அவரது மனதில் இன்னும் ஒரு கேள்வி இருந்தது. அவர் கேட்டார். குருதேவா அப்படியானால் ஏன் சிலர் பிறக்கும்போதே துன்பத்துடனும் சிலர் இன்பத்துடனும் பிறக்கிறார்கள். 

அஷ்டாவக்கிரர் அருகில் எரிந்து கொண்டிருந்த தீபத்தை பார்த்தார். பிறகு கூறினார் இந்த தீபம் இப்போது எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கான எண்ணை முன்பே ஊற்றப்பட்டது. இன்று தெரியும் வெளிச்சத்திற்கு காரணம் கடந்த காலம். அதை போலவே தற்போதைய வாழ்வில் காணப்படும் சூழ்நிலைகளுக்கு பின்னால் பல பழைய கர்மங்கள் உள்ளன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள் தீபத்தின் எண்ணை கடந்த காலமாக இருக்கலாம். ஆனால் சுடர் நிகழ்காலத்தில் எரிகிறது. மற்றும் அந்தச் சுடரை பாதுகாப்பது நிகழ்காலத்தின் செயலாகும். நமக்கான எண்ணை குறைவாக இருக்கிறதே என்று வருந்துவதை விட, இருக்கும் அந்த சுடரை எவ்வளவு பிரகாசமாக எரியச் செய்கிறோம் என்பதே வாழ்க்கையின் உண்மையான விழிப்புணர்வு. இப்படி கூறிவிட்டு மகரிஷி சில கணங்கள் அமைதியானார். பிறகு கூறினார். ஆனால் மன்னா இங்கு மக்கள் மற்றொரு தவறையும் செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு துன்பத்தையும் தண்டனையாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லா துன்பமும் தண்டனை அல்ல. 

ஜனகர் கேட்டார் அப்படியானால் துன்பம் என்றால் என்ன? 

அஷ்டாவக்கிரர் கூறினார் சில நேரங்களில் துன்பம் ஓர் ஆசிரியராக அமைகிறது. இன்பம் பல வருடங்களில் நமக்கு கற்றுக் கொடுக்காத விஷயத்தை துன்பம் சில நாட்களிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறது. பலர் வெற்றியால் மாறுவதில்லை. ஆனால் ஒரு கடினமான அனுபவம் அவர்களின் வாழ்க்கையின் திசையையே மாற்றிவிடுகிறது. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment