உங்களுக்குத் தெரியுமா? மனிதனிடம் பேசுவதற்கு ஆயிரக்கணக்கான வார்த்தைகள் உள்ளன. ஆனால் தனக்குள் இறங்கி பார்ப்பதற்கு அவனிடம் சில கணங்கள் கூட ஏன் இருப்பதில்லை? வெளியே எல்லாம் அமைதியாக இருந்த பிறகும் உள்ளே எண்ணங்களின் சத்தம் ஒலித்துக் கொண்டே இருப்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இன்று நாம் வாழும் அவசர உலகில் கைகளில் கைபேசியும் தலையில் ஆயிரம் சிந்தனைகளுமாக ஒரு நிமிடம் கூட நம்மோடு நாம் அமைதியாக இருப்பதில்லை. உள்ளே எண்ணங்களின் சத்தம் ஒலித்துக் கொண்டே இருப்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
மேலும் முனிவர்கள் தனிமைக்கும் மௌனத்திற்கும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை நீங்கள் எப்போதாவது புரிந்து கொள்ள முயன்று இருக்கிறீர்களா? மௌனம் என்பது வெறும் அமைதியாக இருப்பது மட்டுமாக இருந்தால் அமைதியாக இருக்கும் ஒவ்வொருவரும் ஞானியாகி இருப்பார்கள் ஆனால் உண்மை அப்படிய அல்ல ஏனென்றால் உண்மையான மௌனம் உதடுகளில் பிறப்பதில் இல்லை உண்மையான மௌனம் மனதிற்குள் இறங்குகிறது. உள்ளே இருக்கும் சத்தம் எப்போழுது அடங்க தொடங்குகிறதோ அப்போதுதான் மனிதன்தான் உண்மையில் யார் என்பதை முதன்முறையாக காண முடிகிறது.
ஒரு நாள் மகரிஷி அஷ்டவக்கரர் இதே ரகசியத்தை பற்றி மன்னர் ஜனகரிடம் கூறினார். ஆனால் அந்த கேள்விக்கான பதில் வெறும் மௌனத்தை பற்றியது மட்டுமல்ல அது மனிதனின் முழு வாழ்க்கையையும் நோக்குவதற்கான ஒரு புதிய பார்வையாக அமைந்தது.
மிதிலையின் அரண்மனையிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தோட்டத்தில் அன்று காலை மகரிஷி அஷ்டாவக்கரர் ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருந்தார். மன்னர் ஜனகரும் அவருக்கு எதிரே நீண்ட நேரமாக கண்களை மூடி மௌனமாக அமர்ந்திருந்தார். ஆனால் அவருக்குள் ஒரு கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அவர் மெதுவாக கண்களை திறந்து அஷ்டாவக்கரரை பார்த்துச் சொன்னார். குருதேவா மனிதனின் முழு வாழ்க்கையும் வார்த்தைகளுக்கு இடையிலேயே கழிகிறது. அவன் மற்றவர்களுடன் பேசுகிறான்.
தன் எண்ணங்களை புரிய வைக்கிறான். தன் தரப்பை நிரூபிக்கிறான். அவனைச் சுற்றி யாரும் இல்லாத போதும் அவனுக்குள் எண்ணங்களின் தொடர்ச்சியான உரையாடல் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. மௌனம் ஏன் இவ்வளவு முக்கியமானது? சும்மா அமைதியாக இருப்பதால் மட்டுமே மனிதன் தன் வாழ்க்கையின் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா? அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் ரகசியம் மறைந்துள்ளதா?
அஷ்டாவக்கரர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் கூறினார்.
மன்னா பேசுவதை நிறுத்துவது மட்டுமே மௌனம் என்றால் கற்களே மிகப்பெரிய ஞானிகளாக இருந்திருக்கும்.
ஜனகர் அவரை கவனமாக பார்க்க தொடங்கினார்.
அஷ்டாவகரர் மேலும் கூறினார். மௌனம் என்பது வார்த்தைகள் இல்லாத நிலை அல்ல. மௌனம் என்பது உள்ளே இருக்கும் தேவையற்ற சலசலப்புகள் அமைதி அடைவதாகும். அதாவது நேற்று நடந்ததை நினைத்து வருந்துவதும் நாளை நடப்பதை நினைத்து கவலைப்படுவதுமான மனதின் ஓயாத ஓட்டம் அடங்குவதே உண்மையான மௌனம். அமைதியான நீரில் வானம் எவ்வாறு தெளிவாக தெரிகிறதோ அதேபோல மனிதன் தன் உண்மையான இயல்பை அறிந்து கொள்ள எப்போதுமே புதிய தகவல்கள் தேவைப்படுவதில்லை. பல நேரங்களில் அவன் தனக்குள்ளே எழும் தேவையற்ற சலனங்களை அமைதிப்படுத்தினால் மட்டுமே போதுமானது.
ஜனகர் கேட்டார். குருதேவா இதன் பொருள் மௌனம் மனதிற்கு அறிவை தருகிறது என்பதா? அஷ்டாவகரர் கூறினார் மௌனம் அறிவை வெளியிலிருந்து கொண்டு வருவதில்லை. ஏற்கனவே உள்ள தெளிவை மறைத்துக் கொண்டிருக்கும் இறைச்சலை மௌனம் குறைக்கிறது ராஜா ஜனகர் கவனமாக கேட்டு கொண்டிருந்தார். அஷ்டாவக்கிரர் கூறினார் மன்னா ஒரு தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. அதன் முன் தொடர்ந்து புகை சூழ்ந்து கொண்டே இருந்தால் ஒளி குறைந்ததா அல்லது பார்வைக்கு தெரிவது குறைந்ததா? ஜனகர் கூறினார் ஒளி அங்கேயேதான் இருக்கிறது குருதேவா ஆனால் புகையின் காரணமாக தெளிவாக தெரியவில்லை.
அஷ்டாவக்ரர் கூறினார். இதுதான் மனிதனின் நிலையும் அவனுக்குள் புரிந்து கொள்ளும் திறன் உள்ளது. அவனுக்குள் அமைதியாக இருக்கும் திறன் உள்ளது. அவனுக்குள் உண்மையை உணரும் திறன் உள்ளது. ஆனால் தொடர்ந்து எழும் எண்ணங்களின் இறைச்சல் அந்த தெளிவை மறைத்து விடுகிறது. அதனால்தான் மௌனம் அவசியமானது.
ஜனகர் கேட்டார். ஆனால் குருதேவா மனதில் எண்ணங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தால் மௌனம் சாத்தியமா? அஷ்டவக்கரர் புன்னகைத்தார்.
மன்னா மௌனம் என்பது எண்ணங்களை வலுக்கட்டாயமாக நிறுத்துவது அல்ல. எண்ணங்களை நிறுத்த நீங்கள் அவற்றுடன் போராடினால் உங்களுக்குள் மற்றொரு போராட்டம் உருவாகும். எண்ணங்களுக்கு நடுவே உங்களை நீங்களே தொலைத்து விடுவதை நிறுத்துவதே மௌனமாகும். ஜனகர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் கேட்டார். குருதேவா அப்படியானால் மனிதனுக்கு தனிமை ஏன் தேவைப்படுகிறது? அஷ்டவக்ரர் கூறினார். ஏனென்றால் கூட்டத்தில் மனிதனுக்கு அவனது உள்மனதின் குரலை கேட்பது கடினமாகி விடுகிறது. பின்னர் அவர் அரசவையை சுட்டிக்காட்டி கூறினார்.
மன்னா இந்த சபைக்கு தினமும் எத்தனை பேர் வருகிறார்கள். ஏராளமான மக்கள் இத்தனை பேர் உங்களைச் சுற்றி இருக்கும்போது உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் எப்போதும் தெளிவாக கேட்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?
இல்லை குருதேவா இதுவே தனிமையின் முதல் ரகசியம் தனிமை உங்களை உலகத்திலிருந்து துண்டிக்க வருவதில்லை. தனிமை உங்களுக்குள்ளேயே திரும்புவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
ஜனகர் கேட்டார் அப்படியானால் தனிமை என்றால் உலகத்தை விட்டுச் செல்வதா? அஷ்டவக்கரர் கூறினார் இல்லை மன்னா உலகத்தை விட்டுச் செல்வது தனிமை அல்ல. ஒரு அரண்மனையில் வாழ்ந்தாலும் மனிதனால் உள்ளுக்குள் அமைதியாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்தாலும் அவனுக்குள் ஆயிரக்கணக்கான குரல்கள் ஒலிக்கலாம். இடத்தை மாற்றுவது தனிமை அல்ல. தன்னுள் திரும்புவதே தனிமையாகும். ஜனகன் தீவிரமாக குருதேவரே அப்படியானால் உண்மையில் தனிமை என்றால் என்ன என்று கேட்டார். அஷ்டவக்கரர் கூறினார் ஒரு மனிதன் மற்றவர்களின் அங்கீகாரம் எதிர்வினைகள் மற்றும் தொடர்ச்சியான உரையாடல்களில்ிருந்து விலகி சிறிது நேரம் தன்னுடனேயே அமர முடிந்தால் அதுதான் தனிமையின் ஆரம்பம். அங்கு எந்த வேடமும் தேவையில்லை. அங்கு நீங்களும் உங்கள் மனமும் மட்டுமே இருக்கிறீர்கள்.
ஜனகன் கேட்டார். ஆனால் குருதேவரே ஒரு மனிதன் தனியாக உட்காரும் பொழுது அவனுக்குள் பல எண்ணங்கள் எழுகின்றன. சில நேரங்களில் பழைய நினைவுகள் வருகின்றன. சில நேரங்களில் எதிர்காலத்தை பற்றிய கற்பனைகள் ஓடுகின்றன. சில நேரங்களில் தன்னுடனேயே பல கேள்விகள் எழுகின்றன. அப்போது அவன் என்ன செய்ய வேண்டும்? அஷ்டவகிரர் கூறினார் மன்னா இதுதான் பயிற்சிக்கான நேரம் ஒரு நதி அமைதியாகி அதன் அடியில் உள்ள கல் தெரிய ஆரம்பித்தால் அதற்காக கல்லை குறை கூற முடியுமா? முடியாது. அதேபோல தனிமையில் எழும் எண்ணங்களை கண்டு பயப்பட தேவையில்லை. முதல் முறையாக ஒரு மனிதன் உள்ளே அமைதியாக உட்காரும் போது அவனுக்குள் இருக்கும் சத்தம் அவனுக்கு மிகவும் தெளிவாக கேட்கிறது. இதனால் பலரும் தியானம் தங்களுக்கு சரி வராது என்று பயந்து விலகி விடுகிறார்கள். ஆனால் இந்த சத்தத்தை தனிமை உருவாக்கவில்லை. பல ஆண்டுகளாக உங்களுக்குள் புதைந்திருந்த சத்தங்களை தனிமை உங்களுக்கு காட்டியுள்ளது அவ்வளவே.
ஜனகன் கேட்டார். குருதேவரே அப்படியானால் மௌனம் உள்ளே மறைந்திருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறதா? அஷ்டவகரர் கூறினார். ஆம் மன்னா சூரிய ஒளியில் அறைக்குள் இருக்கும் பொருட்கள் எப்படி தெளிவாக தெரிகிறதோ அதேபோல மௌனத்தில் மனதின் செயல்பாடுகள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் தெளிவாக தெரிவதை புரிந்து கொள்வதும் சாத்தியமாகிறது. ஜனகன் கேட்டார் அப்படியானால் மௌனமே ஒரு கண்ணாடியா? அஷ்டவக்கரர் கூறினார். இது மிகவும் அழகான கேள்வி. மௌனம் என்பது ஒரு கண்ணாடியாகும் அதில் ஒரு மனிதன் எந்த ஒரு வெளிப்புற பாத்திரமும் இல்லாமல் முதல் முறையாக தன் உள்ளத்தை பார்க்க முடியும்.
வெளியில் ஒரு மனிதன் அரசனாக, தந்தையாக, கணவனாக, அமைச்சராக, குருவாக, சீடனாக அல்லது வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மௌனத்தில் ஆனால் மௌனத்தில் இந்த அனைத்து பாத்திரங்களில் இருந்தும் அவன் சிறிது நேரம் விலகி இருக்க முடியும். உலகத்திற்காக நாம் அணியும் முகமூடிகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு நம்மை நாமே உண்மையாக சந்திக்கும் தருணம் அது. அப்பொழுது அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளலாம் நான் உண்மையில் எந்த அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என் எதிர்வினைகள் எவ்வாறு உருவாகின்றன நான் எதை பார்க்கிறேன் நான் எதை கேட்கிறேன் மேலும் நான் எதை உண்மை என்று நம்புகிறேன் இங்கிருந்துதான் மனிதனின் உள்நிலை பயணம் தொடங்குகிறது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போர்வீரன் கேட்டான் குருதேவே அதிகமாக பேசுவது மனிதனின் தெளிவை குறைத்து விடுமா அதற்கு அஷ்டாவகரர் கூறினார் மகனே எல்லா வார்த்தைகளும் அப்படி செய்வதில்லை உண்மையை பேசுவது அவசியமாக இருக்கலாம் அன்பாக பேசுவதும் அறிவை பகிர்வதும் கூட அவசியமாக இருக்கலாம் ஆனால் தேவையின்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது மனதின் ஆற்றலை அழித்து விடுகிறது. எனவே ஒரு அறிவாளிதான் என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் பார்ப்பதில்லை. எப்போது பேச வேண்டும் எப்போது மௌனமாக இருப்பது அதிக அர்த்தம் உள்ளது என்பதையும் அவன் கவனிக்கிறான்.
ஜனகர் கேட்டார் குருதேவே இதனால்தான் பல ஞானிகள் மௌனத்தை தங்கள் ஆன்மீக பயிற்சியின் சாதனையின் ஒரு பகுதியாக ஆக்கினார்களா? அஷ்டாவக்கரர் பதிலளித்தார். ஆம் ஏனென்றால் வார்த்தைகள் குறையும் போது கேட்பது கவனிப்பது ஆழமாகிறது. வெளிப்புற சத்தங்கள் குறையும் போது உள்ளே நடக்கும் நுட்பமான இயக்கங்கள் தெரிகின்றன. மேலும் உள்ளே நடக்கும் இயக்கங்கள் தெளிவாக தொடங்கும்போது மனிதன் தன் வாழ்க்கையை இன்னும் அதிக புரிதலுடன் பார்க்க முடியும். உண்மையான மௌனம் என்பது உதடுகள் அமைதியாக இருப்பது மட்டுமல்ல. உண்மையான மௌனம் என்பது ஒரு மனிதனுக்குள் தன்னை தொடர்ந்து நிரூபித்து கொள்ள வேண்டிய அவசியம் குறைய தொடங்கும் நிலையாகும். அங்கு ஒவ்வொரு விஷயத்திற்கும் பதிலளிப்பது அவசியமாக தெரியாது. ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்வினையாற்றுவது அவசியமாக தோன்றாது. ஒவ்வொரு கேள்விக்கும் உடனடியாக பதிலளிப்பதற்கு பதிலாக சில கணங்கள் நிதானிக்கும் திறன் அங்கு வருகிறது. இதுவே மௌனத்தின் சக்தி.
ஜனகர் கேட்டார் குருதேவே மௌனம் ஒரு மனிதனை அதிக சக்தி வாய்ந்தவனாக ஆக்குகிறதா? அஷ்டாவகரர் கூறினார். மௌனம் புரிதலோடு இருந்தால் ஆம். ஏனென்றால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உடனடியாக எதிர்வினையாற்றாத ஒருவருக்கு அதை கவனிக்க வாய்ப்பு கிடைக்கிறது. எவரால் கவனிக்க முடிகிறதோ அவரால் புரிந்து கொள்ள முடியும். எவரால் புரிந்து கொள்ள முடிகிறதோ அவரால் சரியான முடிவை எடுக்க முடியும். எனவே பல நேரங்களில் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஒருவரின் 100 வாக்கியங்களை விட அமைதியான ஒரு நபரின் ஒரே ஒரு வாக்கியம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜனகர் கேட்டார். அப்படியானால் மௌனத்திற்கும் முடிவெடுப்பதற்கும் தொடர்பு உள்ளதா? அஷ்டாவகரர் கூறினார் மிகவும் ஆழமான தொடர்பு உள்ளது. மனம் தொடர்ந்து சத்தங்களால் நிறைந்திருக்கும் போது ஒரு சிறிய விஷயம் கூட பெரிதாக தோன்றலாம். ஆனால் மனம் அமைதியாக இருக்கும்போது அதே சூழ்நிலை மிகவும் தெளிவாக தெரிகிறது. எனவே முடிவெடுப்பதற்கு முன் சில கணங்கள் மௌனமாக உட்கார்ந்திருப்பது என்பதே ஒரு வகையான தியானமாகும்.
ஜனகர் கேட்டார் குருதேவே ஒரு நபர் தினமும் சிறிது நேரம் தனிமையில் அமர விரும்பினால்அவர் என்ன செய்ய வேண்டும்?
அஷ்டாவக்கிரர் கூறினார் எந்த ஒரு சிறப்புச் செயலும் செய்ய தேவையில்லை அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடு சிறிது நேரத்திற்கு உனது சாதனங்களை தூர வைத்துவிடு யாரிடமும் பேச வேண்டாம். கண்களை மூட வேண்டும் என்பது அவசியமில்லை. வெறுமனே அமைதியாக அமர்ந்து உனது சுவாசத்தை உணர். உன்னைச் சுற்றியுள்ள ஒலிகளை கேள் உனது எண்ணங்களை வந்து செல்ல அனுமதி. மேலும் நான் இப்போது முற்றிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்ளாதே. வெறுமனே முழுமையாக அங்கிரு.
ஜனகர் கேட்டார் குருதேவா எவ்வளவு நேரம் அமர வேண்டும். அஷ்டாவகரர் கூறினார் நேரத்தை விட தொடர்ச்சிதான் முக்கியமானது. நீ அந்த தருணங்களை உண்மையாக உணர்ந்து வாழ்ந்தால் சில கணங்கள் கூட போதுமானது. ஒருவன் தினமும் ஒரு செடிக்கு சிறிது நீர் ஊற்றுகிறான். ஆனால் அது ஒரே நாளில் மரமாகி விடாது. எனினும் தொடர்ச்சியான செயல் மெதுவாக முடிவுகளை காட்டும். மௌனமும் அப்படித்தான். ஒரே நாளில் உள்ளிருக்கும் முழு அமைப்பும் மாறிவிடாது. ஆனால் தினமும் சிறிது நேரம் தன்னுடனேயே அமர்ந்திருப்பதன் மூலம் மனிதனின் பார்க்கும் திறன் மாற தொடங்குகிறது.
ஜனகர் கேட்டார் குருதேவா தனிமையில் அமர்வதால் மனிதனுக்கு ஏற்படும் முதல் அனுபவம் என்ன? அஷ்டாவகரர் கூறினார் முதல் அனுபவம் பெரும்பாலும் மனம் எவ்வளவு பரபரப்பாக இருக்கிறது என்பதாகத்தான் இருக்கும். வெளியே சத்தம் குறையும் போது உள்ளிருக்கும் இயக்கம் தெரியவரும். பிறகு மெதுவாக ஒவ்வொரு எண்ணத்தின் பின்னும் ஓட வேண்டிய அவசியமில்லை என்பதை மனிதன் புரிந்து கொள்ள தொடங்குகிறான். ஒவ்வொரு எண்ணத்தையும் உண்மையாக கருத வேண்டிய அவசியமில்லை. எழும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கிருந்துதான் மௌனம் ஆழமாக தொடங்குகிறது.
ஜனகர் கேட்டார் மௌனம் என்றால் எண்ணங்களிலிருந்து விடுபடுவதா? அதற்கு அஷ்டாவகரர் கூறினார். இல்லை மன்னா எண்ணங்கள் தோன்றுவது இயற்கையின் ஒரு அங்கம். மௌனம் என்பது எண்ணங்கள் இல்லாதிருப்பதை விட மேலானது. மௌனம் என்பது நீங்கள் அறியாமலேயே எண்ணங்கள் உங்களை அதன் திசையில் இழுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருப்பதே ஆகும். நீங்கள் எண்ணங்களை கவனிக்க முடியும். எண்ணங்கள் வருவதை உணர்ந்து தேவைப்பட்டால் அதனுடன் பயணியுங்கள். தேவையில்லை என்றால் அதை விட்டுவிடுங்கள். இதுவே அகச் சுதந்திரத்தின் தொடக்கமாகும்.
ஜனகர் மீண்டும் கூறினார். குருதேவா மௌனம் என்பது வெறுமனே பேசுவதை நிறுத்துவது மட்டுமல்ல என்பதை இப்போது நான் புரிந்து கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment