அடுத்த நாள் ராஜசபை மீண்டும் கூடியது. அஷ்டாவக்கிரர் சிம்மாசனத்திற்கு எதிரே உள்ள ஆசனத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஜனக மகாராஜா பணிவுடன் பகவானே இந்த உலகமே பந்தத்திற்கு காரணம் என்றால் நான் எனது ராஜ்ஜியம் குடும்பம் மற்றும் அனைத்து சுகங்களையும் தியாகம் செய்துவிட வேண்டுமா என்று கேட்டார். சபையில் அமர்ந்திருந்த பல சநியாசிகளும் ஆவலுடன் அஷ்டாவக்கரரை பார்த்தனர். அவர் இப்போது ஜனகரை சந்நியாசம் ஏற்றுக் கொள்ளும்படி கட்டளையிடுவார் என்று நினைத்தனர்.
ஆனால் அஷ்டாவக்கரர் புன்னகைத்தார். அவர் கூறினார் மன்னா பொருட்களை துறப்பதன் மூலம் மட்டுமே முக்தி கிடைக்குமானால் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் மிகப்பெரிய ஞானிகளாக இருந்திருக்கும். சபையில் மெல்லிய புன்னகை பரவியது. அஷ்டாவக்கரர் மேலும் கூறினார்
காவி உடைகளை அணிவதால் மட்டுமே ஆத்ம ஞானம் கிடைத்துவிடும் என்றால் ஒவ்வொரு சந்நியாசியும் பிரம்மஞானியாக இருப்பார். முக்தி என்பது உடையை மாற்றுவதால் வருவதில்லை. பார்வையை மாற்றுவதால் தான் வருகிறது.
சபை முற்றிலும் அமைதியானது.
அகங்காரத்தின் கண்ணுக்கு தெரியாத வலையை கலைக்க அஷ்டாவக்கிரர் ஒரு கண்ணாடியை கொண்டு வரச்செய்தார். அதை அவர் அரசர் ஜனகர் முன் வைத்தார். மன்னா இதில் உங்களுக்கு யார் தெரிகிறார்கள்? நான் இந்த கண்ணாடி உடைந்தால் நீங்களும் உடைந்து விடுவீர்களா? இல்லை. பின் யாராவது உங்கள் சுயமரியாதையை புண்படுத்தும் போது உங்கள் இருப்பே சிதைந்துவிட்டதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
ஜனகர் மௌனமானார் ஏனென்றால் நீங்கள் உங்களை உங்கள் பதவி பெயர் மற்றும் கௌரவத்துடன் இணைத்துக் கொண்டீர்கள். இதுதான் அகங்காரம்!
மேலும் ஒரு சாதுவின் கதையை கூறினார் ஒரு சந்நியாசி இமயமலையில் பல வருடங்கள் தவம் செய்து வந்தார் அவர் செல்வத்தை துறந்தார். குடும்பத்தை துறந்தார். அரண்மனையை துறந்தார். ஒரு நாள் அவர் ஒரு கிராமத்திற்கு பிச்சை கேட்கச் சென்றார். ஒரு இளைஞன் அவரை அவமதித்தான். இதை கேட்டவுடன் சந்நியாசிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவர் கத்தினார் நான் 30 வருடங்களாக தவம் செய்கிறேன் என்பது உனக்கு தெரியாதா?
அஷ்டாவக்கிரர் சபையை பார்த்தார், சொல்லுங்கள் தனது 30 வருட தவத்தின் மீது அகங்காரம் கொண்ட ஒருவன் உண்மையில் எதையாவது துறந்திருக்கிறானா சபையில் யாராலும் பதிலளிக்க முடியவில்லை. அவரே கூறினார், அவர் வீட்டை துறந்தார் ஆனால் நான் என்ற அகந்தையை துறக்கவில்லை. தியாகத்தின் உண்மையான அர்த்தம்.
அரசர் ஜனகர் கேட்டார் அப்படியானால் உண்மையான தியாகம் என்பது என்ன?
அஷ்டாவக்கிரர் கூறினார் நான் எனது என்பது எங்கு முடிகிறதோ அங்கிருந்துதான் தியாகம் தொடங்குகிறது. அவர் மேலும் கூறினார் செல்வத்தை வைத்திருப்பது பாவம்ல்ல! செல்வத்தால் தன் அடையாளத்தை உருவாக்குவதுதான் பந்தம். நாட்டை ஆள்வது பாவமல்ல! அரசன் என்ற அகங்காரம் கொள்வது பந்தம்! குடும்பத்தை நேசிப்பது பாவமல்ல அவர்களை தனது நிரந்தர ஆதாரமாக கருதுவதுதான் பந்தம்!
அஷ்டாவக்கிரர் சபைக்கு வெளியே இருந்த ஒரு குளத்தை சுட்டிக் காட்டினார் அதில் நூற்றுக்கணக்கான தாமரைகள் மலர்ந்திருந்தன அவர் கேட்டார் தாமரை தண்ணீரில் இருக்கிறதா?
சபை ஆம் என்றது.
தண்ணீர் அதை நனைக்கிறதா?
இல்லை
ஏன் யாரிடமும் பதில் இல்லை என்று வருகிறது? அஷ்டாவக்கிரர் கூறினார் ஏனென்றால் அதன் இயல்பு வேறுபட்டது. அது நீரில் இருந்தாலும் நீரோடு ஒட்டிக் கொள்வதில்லை.
பின்னர் அவர் ஜனகரை பார்த்து கூறினார் மன்னா நீங்களும் ஒரு தாமரையை போல இந்த உலகில் வாழ வேண்டும். உலகத்திலிருந்து ஓடக்கூடாது. உலகில் வாழ்ந்தாலும் அதனுடன் ஒட்டிக் கொள்ளக்கூடாது.
அதே நேரத்தில் அரண்மனையின் சிப்பாய் ஒருவன் அரசவைக்குள் ஓடி வந்தான். அவன் பதற்றமாக இருந்தான். மகாராஜா அரண்மனையின் மேற்குப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர்கள் வீரர்கள் மற்றும் அரசபையினர் உடனடியாக எழுந்து நின்றனர். சிலர் தங்கள் செல்வத்தை காப்பாற்ற ஓடத் தொடங்கினர். ஆனால் மன்னர் ஜனகர் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரது பார்வை அஷ்டாவக்கிரர் மீது இருந்தது.
அஷ்டாவக்கிரர் கேட்டார் மன்னா நீங்கள் செல்ல மாட்டீர்களா?
ஜனகர் அமைதியான குரலில் பதில்ளித்தார். போக வேண்டிய அவசியம் இருந்தால் செல்வேன். ஆனால் முதலில் பதற்றம் யாருக்கு ஏற்படுகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன் எனக்கா அல்லது என் மனதிற்கா?
அஷ்டாவக்ரரின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது. சிறிது நேரம் கழித்து மற்றொரு சிப்பாய் வந்தான். அவன் வணங்கி மகாராஜா செய்தி தவறானது. அரண்மனையில் தீ பிடிக்கவில்லை. அரண்மனைக்கு வெளியே புல் மேட்டில் தான் தீப்பிடித்தது. இப்போது எல்லாம் பாதுகாப்பாக உள்ளது, என்றான். சபை நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
ஆனால் அஷ்டாவக்கரர் கூறினார் இன்று தீ அரண்மனையில் ஏற்படவில்லை. இன்று தீ உங்களுக்குள் உள்ள அகந்தையை சோதிக்கவே வந்தது.
மூன்றாவது போதனையின் ரகசியம் அஷ்டாவக்கிரர் கூறினார்.
கேளுங்கள் ஜனகரே! தியாகம் என்றால் பொருட்களை கைவிடுவது அல்ல. நான் என்பதை யார் கைவிடுகிறாரோ அவரே உண்மையில் முக்தி அடைகிறார்.
அஷ்டாவக்ரரின் இறுதி போதனைகள் உன்னை நீயே அறிந்து கொள் இதுவே பரம முக்தி மன்னர் ஜனகரின் வாழ்க்கையில் அவர் வெறும் கேள்விகள் கேட்கும் மன்னராக மட்டும் இல்லாத ஒரு காலம் இப்போது வந்திருந்தது. அவருக்குள் தேடல் கொண்டிருந்தவர் இப்போது ஒரு சாதகராக மாறியிருந்தார். மேலும் அந்த சாதகர் மெதுவாக ஒரு சாட்சியாக மாறும் திசையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். அரச சபை முன்பைப் போலவே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று சூழல் வித்தியாசமாக இருந்தது. எந்த விவாதமும் இல்லை யாரும் தங்கள் அறிவை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இன்று அஷ்டாவக்கிரர் தனது இறுதி போதனைகளை வழங்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
சூரிய கதிர்கள் சபையின் பிரம்மாண்டமான தூண்களின் மீது விழுந்து கொண்டிருந்தன. மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. இந்த தெய்வீக உரையாடலை கேட்பதற்காக இயற்கையே சற்று நின்றது போல் தோன்றியது. மன்னர் ஜனகர் இரு கைகளையும் கூப்பி குருதேவா உடலின் மாயையை உடைக்க எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். மனதின் பந்தங்களை அடையாளம் காண கற்றுக் கொடுத்தீர்கள். அகங்காரத்தை கைவிடும் வழியை காட்டினீர்கள். ஆனால் எதை அறிந்த பிறகு வேறு எதையும் அறிய வேண்டியதில்லையோ அந்த இறுதி உண்மையை தயவுசெய்து இன்று எனக்கு கூறுங்கள் என்றார்.
அஷ்டாவக்கிரர் கண்களை மூடிக்கொண்டார். சில கணங்கள் முழு அமைதி நிலவியது பிறகு அவர் மெதுவாக மன்னா நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது தேடும் அந்த இருப்பேதான் என்றார். சபை திகைத்து நின்றது.
நான்காவது போதனை இன்பம் வெளியே இல்லை அது உங்கள் இயல்பிலேயே உள்ளது. அஷ்டாவக்கிரர் கூறினார் மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை இன்பத்தை தேடிக்கொண்டே இருக்கிறான். சிலர் செல்வத்தில் இன்பத்தை தேடுகிறார்கள். சிலர் உறவுகளில். சிலர் புகழில் சிலர் அதிகாரத்தில் சிலர் வழிபாட்டில் சிலர் தவத்தில் தேடுகிறார்கள். ஆனால் இன்பத்தை வெளியே தேடியவன் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டேதான் இருந்தான். சபைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை அவர் சுட்டிக்காட்டினார்.
அவனைப் பாருங்கள் அவனுக்கு இப்போது செல்வம் தேவையில்லை. மரியாதை தேவையில்லை. அதிகாரம் தேவையில்லை. ஆனாலும் அவன் ஆனந்தமாக இருக்கிறான். ஏன்?
சபை அமைதியாக இருந்தது.
அஷ்டாவக்கிரர் கூறினார். ஏனென்றால் ஆனந்தம் அவனது இயல்பு. வளர்ந்து பெரியவனானதும், ஆனந்தம் தனக்குள்ளேயே இருப்பதை அவன் மறந்து விடுவான். அதன் பிறகு உலகம் முழுவதும் அதை தேடி அலைவான்.
ஐந்தாவது போதனை. ஆசைகள் எவ்வளவு அதிகரிக்கின்றனவோ அந்த அளவுக்கு அமைதி குறைகிறது. அவர் ஒரு தீபத்தை ஏற்றினார். தீபத்தின் சுடர்நிலையாக இருந்தது. பிறகு அவர் முன் பலத்த காற்றில் விளக்குச் சுடராட்டம் காண தொடங்கியது. அஷ்டாவக்ரர் கூறினார். தீபம்தான் ஆன்மா! காற்றுதான் ஆசைகள்! ஆசைகள் எவ்வளவு அதிகரிக்கிறதோ மனம் அவ்வளவு நிலையற்றதாக மாறும் பொருட்கள் கிடைப்பதால் ஆசைகள் முடிவதில்லை. அவற்றை புரிந்து கொள்வதாலேயே ஆசைகள் முற்று பெறுகின்றன.
அப்படி என்றால் எல்லா ஆசைகளையும் துறந்துவிட வேண்டுமா என்று ஜனக மகாராஜா கேட்டார்.
அஷ்டாவக்கிரர் கூறினார். இல்லை ஆனால் ஆசை உங்களை இயக்கக் கூடாது. நீங்கள் ஆசையை வேடிக்கை பார்க்க கூடியவராக இருக்க வேண்டும். இதுவே விழிப்புணர்வு.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment