​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 17 March 2026

சித்தன் அருள் - 2155 - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6 

நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 
நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


================================
# அன்புடன் இடைக்காடர் சித்தர்  வாக்கு
================================ 


அண்ணாமலையோனே, உண்ணாமலையாளே, பாதம் பணிகின்றேனே, செப்புகின்றேனே , இடையன். 

==================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6 
==================================

இடைக்காடர் சித்தர் :- இவைத்தன் அறிவிக்க அறிந்தும் கூட, இதனாலே நிச்சயம் ஞானிகள், நிச்சயம் அவரவர் மனதில் பின், அதாவது நீங்கள் அனைவருமே எதை என்று அறிய, இவ்வுலகத்தின், அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் புத்தனும் எதை என்று கூற, இயேசுவும் அறிந்தும் கூட, நபிகள் நாகயமும் நிச்சயம் இன்னும் ஞானிய பெருமக்களும் மனதில் உள்நுழைந்து, நிச்சயம் நிறுத்துவோர்கள். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப போரைப் பற்றி சொல்றாரு. அவங்க அவங்க இந்த உலகத்துக்கு நல்லது சொல்ல வந்தாங்க இல்ல, இப்ப அதை வந்து மாத்திட்டு நிறுத்திடுவாங்க என்கிறாருங்க ஐயா.

அடியவர் :-  அவங்களே இறங்கி வந்து மனசை மாத்துவாங்கன்றாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- மனசு, அவங்க ஜீசஸ் வணங்குறாங்க இல்ல, அவர் அங்க போய்….எல்லா ஞானிகளும்….. என்ன பண்ணுவாங்களாம்  ஐயா? போர் நிறுத்துவாங்க ஐயா.

அடியவர் :- அதான் சண்டை போடுறது ஜீசஸ் ஆளுகளும், இவங்க நபிகள் நாயகம் ஆளுகளும், சோ அவங்களே வந்து மாத்துவாங்கன்னு சொல்றாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- அவங்களே அவங்க மனசை அடிக்கிறாங்க பாரு, அவங்களே மனசை மாத்தி இதை நிறுத்தலாம். வேணாம்னு சொல்லிட்டு, சித்தர்கள் நாங்க வந்து அதை நிறுத்திடுவோம்னு சொல்றாரு…. வந்து போர் வந்து. 

இடைக்காடர் சித்தர்:- ஆனாலும் இதன் முன்னே ஏன், எதற்கு என்றால், நிச்சயம் எதை என்று கூற, திருந்த வேண்டும் இவ்வுலகம். இதனால்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அனைவருமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் இது மேல வந்து இது மாதிரி எல்லாம் வருதுன்னா, நமக்கு எச்சரிக்கையா இருக்கணும். நம்ம ஒழுங்கா வாழனும். இது மாதிரி சொன்னா, இது மாதிரி வந்தா தப்பு நடக்கும் ஐயா, புரியுதுங்களா?

அடியவர் :-  அதான் ஜாக்கிரதையா இருக்கணும் எல்லா பேரும்.

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் எப்ப என்ன பண்ணுவாருன்னே தெரியாது.

அடியவர் :-  தெரியாது.

இடைக்காடர் சித்தர்:- நிச்சயம் எதை என்று புரிய அறிந்து கூட, இதனால் கவலைகள் வேண்டாம். நிச்சயம் ஞானிகள், அவரவர் மனதில் எப்பவுமே பின் எதை என்று அறிய, அதாவது நுழைந்து விட்டார்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ஞானியர்கள்.

அடியவர் :-   சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் வந்து போர் அடிக்கிறாங்க பாருங்க ஐயா.

அடியவர் :-   மெயின் யார் சுற்றி நுழைஞ்சிட்டாங்களாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அவங்க மனசுல வந்து ஆல்ரெடி நுழைஞ்சிட்டாங்க.

அடியவர் :-  நுழைஞ்சிட்டாங்க வந்து, அதனால வந்து சீக்கிரம் ஒரு முடிவு கட்டப்படும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  சீக்கிரம் ஒரு முடிவு வந்துரும், நிறுத்துவோம்.

அடியவர் :-  பெருங்கருணை.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

===================================
# 8ஆம் கூட்டுப்பிரார்தனையின் நோக்கம் ரகசியங்கள் 
===================================

குருநாதர் :- அப்பா, அப்பா, அறிந்தும் கூட, இதனால்தான் அப்பனே, இதற்கும் அப்பனே, பின் அதாவது நல் மனிதர்கள் ஒன்று கூடி இறைவனை வேண்ட வேண்டும் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே, பின் வரச் சொன்னேன், அனைவரையும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது அகத்தியர் சொல்றாங்க.

அடியவர் :-  சிவாய நம, சிவாய நம.

அடியவர்கள் :- ( குருநாதர் மீண்டும் வந்த மகிழ்ச்சியில் - கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- மாறிட்டார். இது வந்து அகத்திய பெருமான், அவர் அந்த கண்டினியூ அப்படியே விட்டு இவர் வந்துட்டாரு.

அடியவர் :-   இப்ப அகத்திய பெருமான்  பேசிட்டு இருக்காங்க.

===================================
# 8ஆம் கூட்டுப்பிரார்தனை - போரை நிறுத்த 
===================================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் அனைவரும் ஒன்று கூடி, நிச்சயம் இறைவனை கூப்பிட்டால், இறைவன் மனது இறங்கியே ஆகவேண்டும்.

அடியவர் :-  சிவாய நம

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்து….. 

அடியவர் :-  மாணிக்கவாசகப் பெருமார் பெண்ணா வந்து,  அந்த ஒருவருக்கே இறங்கினார் இறைவன். இத்தனை பேர் சேர்ந்து கூப்பிட்டு வந்துர மாட்டாங்களா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, அதனால வந்து, எல்லாரும் கூப்பிட்டு நல்லபடி வாழனும்னு ,சொன்னாதான் இறைவன் வந்து.

அடியவர் :-  இந்த போர் நிறுத்தணும், எல்லா பேரும் சந்தோஷமா இருக்கணும். அப்படின்றதுக்காக குருநாதர் அந்த கூட்டு பிரார்த்தனை அரேஞ்ச் பண்ணிருக்காங்க.

==========================
# உலக நலன் வேண்டி மாற்றுத்திறனாளி அடியவர்களை பாடல் அங்கு  பாட அருள் உத்தரவு 
===========================

குருநாதர் :-  இவை தன் அப்பனே, இன்னும் அப்பனே, அதோ வந்திருக்கின்றார்களே, அவர்கள் நிச்சயம் பாடச் சொல், எதை என்று அறிய.  அனைத்தும் நலமாகட்டும் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உலக நலம் வேண்டி (நம்ம இல்லம் டிரஸ்ட், குன்றத்தூர், சென்னை) அவங்களை பாட சொல்றாரு. உலகம் நல்லா இருக்கணும் என்று சொல்லி பாட சொல்றாங்க அவங்க வந்து.

===============================
# மேடை ஏறிய நம்ம இல்லம் டிரஸ்ட் - மாற்றுத்திறனாளி  அடியவர்கள்.
===============================

======================================
# நம்ம இல்லம் டிரஸ்ட், குன்றத்தூர், சென்னை
======================================

=======================================
வணக்கம் அடியவர்களே , நம்ம இல்லம் டிரஸ்ட், குன்றத்தூர், சென்னை - சென்னை, குன்றத்தூர் பகுதியில் உள்ள நம்ம இல்லம் டிரஸ்ட் (Namma Illam Trust) , மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் ஆதரவை வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யவும் உதவுகிறது. இது குறிப்பாக பெண்களுக்கான இலவச இல்லமாக செயல்படுகிறது. 

முக்கிய அம்சங்கள்:
பணி: மாற்றுத்திறனாளி பெண்களுக்கான இலவச இல்லம்.
செயல்பாடு: மாற்றுத்திறனாளிகளின் கைவினைப் பொருட்கள் விற்பனை
இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் :- 
https://www.instagram.com/namma._.illam._.trust/


தாெடர்புக்கு : திருமதி. நிபுனா அம்மா:-  +919884913685

முகவரி : Namma illam trust, No 4, West 11th Street, Mehta nagar, kundrathur, chennai - 600069 

வங்கி கணக்கு விவரங்கள் :     {Account details}

Namma illam trust
AC NO :         1760135000005780
IFSC :          KVBL0001760 ,  Kundrathur , Chennai - 69
Ph no : 98849 13685
G pay : 90873 32075.
இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் :- 
https://www.instagram.com/namma._.illam._.trust/
=============================================

சுவடி ஓதும் மைந்தன் :- அவங்களுக்கு மைக் கொடுத்துருங்க. எந்த ஊருங்க இவங்க ஐயா? 

ஒரு அடியவர் :- குன்றத்தூர், சென்னை.

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா நீங்க சொல்லிட்டு பாடுங்கம்மா.


நம்ம இல்லம் டிரஸ்ட் திருமதி. நிபுனா அம்மா அவர்களின் உரை:- 

நேரலை பதிவு: https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=7h29m34s

=================================
# நம்ம இல்லம் டிரஸ்ட் மாற்றுத்திறனாளி அடியவர்களை பற்றிய உரையின் சுருக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:-
=================================
(மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமும் எம் சேவையும்
நாங்கள் குன்றத்தூரிலிருந்து வருகிறோம். நான் "நம்ம இல்லம்" என்ற பெயரில் ஒரு காப்பகத்தை நடத்தி வருகிறேன். இந்த உலகம் மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும் விதம் பெரும்பாலும் ஏளனமாகவோ அல்லது அலட்சியமாகவோதான் இருக்கிறது. அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பது அரிதாகவே உள்ளது. இந்த நிலையை மாற்ற, என்னால் முடிந்த சிறு முயற்சியாக, ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எனத் தனிப்பட்ட முறையில் இலவசத் தங்கும் விடுதியை நடத்தி வருகிறேன்.
நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: மாற்றுத்திறனாளிப் பெற்றோர்களின் குழந்தைகள் நன்றாகப் படித்தாலும், மேல்படிப்பைத் தொடர அவர்களுக்குப் போதிய வசதிகள் இருப்பதில்லை. அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் குதிரைக்கொம்பாகவே உள்ளது.
அன்றாடத் தேவைகள்: உயரம் குறைந்தவர்களை நாம் சாதாரணமாகப் பார்த்துவிட்டுப் போய்விடுவோம். ஆனால் அவர்களுக்கு ஒரு பேருந்தில் ஏறுவதோ அல்லது கழிவறையைப் பயன்படுத்துவதோ கூட மிகப்பெரிய போராட்டம்தான். இதை நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை.
உடல் ரீதியான வலிகள்: தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண படுக்கை செட் ஆகாது; அவர்களுக்குப் புண்கள் (Bedsores) வராமல் தடுக்க 'ஏர் பெட்' (Air Bed) அல்லது 'வாட்டர் பெட்' (Water Bed) போன்ற வசதிகள் அவசியம்.
எங்களின் பணி:-
வெறும் அனுதாபத்தோடு நின்றுவிடாமல், அவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம்:
பொருளாதார உதவி: சுயதொழில் தொடங்கத் தேவையான உதவிகள் மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருதல்.
கல்வி மற்றும் மருத்துவம்: குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகள் மற்றும் அவசர மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல்.
அத்தியாவசிய உபகரணங்கள்: தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிறப்புப் படுக்கைகள் மற்றும் இதர உபகரணங்களை வழங்குதல்.
தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரர் என்னிடம் ஒருமுறை கூறினார்: "நான் இறந்தால் நேராகச் சொர்க்கத்திற்குத்தான் செல்வேன், ஏனென்றால் நான் இப்போது நரகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." தனது உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒருவரின் வலி எவ்வளவு கொடியது என்பதற்குச் சாட்சி இது.
இப்படிப்பட்டவர்களின் துயர் துடைக்க, என்னால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இன்னும் பலருக்கு இச்சேவை சென்றடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. நன்றி. )


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப சிவபுராணம் பாடட்டும். சிவபுராணம் பாடுறீங்களாமா? பாடுங்கம்மா. அடுத்து அகத்தியர் என்ன சொல்றாரோ அதுபடி நடப்போம். ஃபர்ஸ்ட் சிவபுராணம் பாடுங்கம்மா. 

================================================
#மாற்றுத்திறனாளி அடியவர்கள் சிவபுராணம் பாடல்    ……..
https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=7h31m50s
================================================

( அடியவர்கள் பாடி முடித்தவுடன் , குருநாதர் வாக்குகளை நல்கினார்கள் )

==========================
# தர்மம் - ஒரு நாளைக்கு ஒருவருக்காவது நீங்கள் புண்ணியம் செய்ய வேண்டும். 
==========================

குருநாதர்:- அப்பனே, நல்லாசிகள் அப்பனே. ஏன், எதற்கு அப்பனே, ஒரு நாளைக்கு, அப்பனே, ஒருவருக்காவது நீங்கள் புண்ணியம் செய்ய வேண்டும். இதுதான், அப்பனே, தர்மம் அப்பனே. 

==========================
# உங்கள் தேவைக்கு இறைவன் ஓடி வரும் ரகசியம்.
==========================

குருநாதர்:-  மனிதனாக பிறந்துவிட்டால், ஒவ்வொரு உயிருக்கும், அப்பனே, நிச்சயம் தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொண்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம் உன் தேவைக்கு இறைவன் ஓடோடி வருவான் அப்பா.

================================
#  இறைவன் நடத்திய நாடகத்தை, அப்பனே, இன்றோடு யான் முடித்து வைக்கின்றோம்.
================================

குருநாதர்:-  இதனால், அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, நிச்சயம் இறைவன் நடத்திய நாடகத்தை, அப்பனே, இன்றோடு யான் முடித்து வைக்கின்றோம். 

================================
# மாற்றுத்திறனாளி அடியவர்களுக்கு தானங்கள் இட அருள் ஆசிகள் 
================================

குருநாதர்:-  அதனால், அப்பனே, உங்கள் குறைகளையும் கூட, அப்பனே, வேண்டி, அப்பனே, இவர்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னால் ஆன, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தானங்கள் இடுங்கள் என்பேன், அப்பனே.

====================================
# குருநாதர் அருளால், மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் அளிக்க,  சுவடி ஓதும் மைந்தன் உரை,  மற்றும் அடியவர்கள் தானம் நடந்தது.
====================================

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அடியவர்களால் இயன்ற தானம் அளிக்க உரை )

இதனிடையில் பாடகர் :- (“ ஓடி, ஓடி, ஓடி, ஓடி, உட்கலந்த ஜோதியை நாடி, நாடி, நாடி, நாடி, நாட்களும் கழிந்து போய்” பாடினார்கள் )

சுவடி ஓதம் மைந்தன் :-  அடியவர்கள் சார்பில் ரூ.1,10,000 நிதி தானம் அளித்தார்கள்.

குருநாதர் :- அப்பனே, நல்ல ஆசிகள். அப்பனே, இன்னும் அப்பனே, எது என்று அறிய அப்பனே இவைத்தன் உறங்கும் நேரம். அப்பனே, எழுப்பு அப்பனே, பாடலை பாடி.

பாடகர் :-  ( “பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா… தமிழ் ஞானப் பழம் நீயப்பா”  பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

நேரலை :- https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=8h24m20s

=======================
# பாவத்தை நீக்கி புண்ணியத்தை பெற ஒரு பாடலை பாடு. 
=======================

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் பாவத்தை நீக்கி, புண்ணியத்தை பெற, அப்பனே, ஒரு பாடலை பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பாவத்தை நீக்கி புண்ணியத்தை எல்லாருக்காகவும் ஒரு பாடல் பாடு என்று சொல்கின்றார் அய்யா . 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, அப்பனே, சரியாக நீங்களே தேர்ந்தெடுங்கள். அனைத்தும் புதுமையான விஷயங்கள் யான் சொல்லித் தருகின்றேன். பழையதெல்லாம், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் இதை சொல்ல மாட்டேன்றார் அகத்தியர் வந்து, நீங்களே ஒரு பாட்டு பாடுப்பான்னு சொல்லிட்டார்.

பாடகர் :- இது என்ன? ஏன்னா பாவத்தை நீக்கி... கேட்கலாமா? 

=============================
# பாவத்தை நீக்கி புண்ணியத்தை பெற , அறுபடை வீடு , பஞ்ச பூத ஸ்தலங்கள் உள்ள பாடல்களை இணைத்திட வேண்டும். 
=============================

=============================
பஞ்சபூதத் தலங்கள்: காஞ்சிபுரம் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), திருக்காளத்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) . அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை 
=============================

=============================
# அடியவர்கள் கெட்டியாக, உடுப்புப்பிடியாக  இதனை பிடித்துக்கொள்ளுங்கள், பயன்படுத்திக்கொள்ளுங்கள்  உங்கள் இல்லங்களில் தினமும் நடைபெறும் வழிபாடுகளில்.
=============================

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் இவைத்தன், அப்பனே, இவைத்தன் அறுபடை வீடுகளாகவும், அப்பனே, பின் பஞ்சஸ்தலங்களாகவும், அப்பனே, இணைத்திட வேண்டும் இதிலே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த பாடல் என்பது வந்து அறுபடை வீடுகளையும்... எல்லாமே கனெக்ட் ஆகணும்.

பாடகர் :- ( “அறுபடை வீடு கொண்ட திருமுருகா” என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள் )

நேரலை :- https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=8h31m50s 

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)


பாடகர் :- ( “மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்”  என்ற பதிகம் பாட ஆரம்பித்தார்கள் )
https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=8h36m31s

    மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்    
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்    
    குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த    
    நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.   1
        
    கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்    
    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை    
    மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்    
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  2
        
    நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத    
    என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த    
    பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்    
    நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  3
        
    மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்    
    அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா    
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்    
    நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  4
        
    பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்    
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்    
    தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்    
    நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  5
        
    விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து    
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்    
    அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்    
    நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  6
        
    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்    
    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்    
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த    
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    7
        
    குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை    
    அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்    
    என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்    
    நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  8
        
    வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்    
    சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்    
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்    
    நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  9
        
    வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்    
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்    
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே    
    நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  10
        
    நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்    
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்    
    நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன 
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் குறையுமே.    11

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. "இறைவன் நடத்திய நாடகத்தை இற்றோடு யான் முடித்து வைக்கின்றோம்"னு அகத்தியர் ஐயா எதை குறிப்பிடறாரு?

    ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete