​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 4 March 2026

சித்தன் அருள் - 2141 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 5

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

அடியவர் 7  :-

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.

குருநாதர் :-  ( தனி வாக்குகள் ) 

==============================================
# முன்னோர்களும் , தனது சந்ததிகளுக்கு சில உதவிகள் செய்வார்கள் 
============================================

அடியவர் 8  :- (பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே
                ஸ்ரீ வேலும் மயலும் துணை. 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய, இப்படி  எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கவலை எவை எவை என்று அறிய. எவ்வளவு கவலைகள் வந்தாலும், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. பின் அதாவது வேலுண்டு என்று நீ பாடிவிட்டாய் அல்லவா? நிச்சயம் வேலே, பின் உன்னை காக்கும். பின் கவலைகள் இல்லை. நிச்சயம் தன்னில் கூட சில சில கர்மாக்கள், நிச்சயம் தன்னில் கூட  ( *** விதி ரகசியங்கள் ***** ) இதனால் நிச்சயம் அனைத்தும் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பது விதி. நிச்சயம் பின் முக்கால் பங்கு அனுபவித்து விட்டாய். கால் பங்குதான். நிச்சயம் இறைவன் பலங்கள் பின் வழிகள் நடத்தும். கவலைகள் இல்லை. 

குருநாதர் :-  ( ***** முற்றுப்பெற்ற ஆன்மாக்களால் (முன்னோர்களால்) மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று  விரிவான தனி  வாக்குகள்  *****  ) 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 9  :-

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 

=====================================================
# இறைவனை வாழ்த்தினால் ,  நிச்சயம் உன்னை வாழ வைத்து விடுவான். 
=====================================================

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, இவ்வாறாக பாடிக்கொண்டே இரு. அப்பனே, வாழ்த்து இறைவனை. அப்பனே, நிச்சயம் உன்னை வாழ வைத்து விடுவான். 

குருநாதர் :- ( *** தனி வாக்குகள் ***  )

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 10   :-  ( சுவாமி ஐயப்பன் பாடல் )

குருநாதர் :- அப்பனே, ஆசைகள், கவலைகள் வேண்டாம். அனைத்தும் அப்பனே, வழி நடத்துகின்றேன். வழியும் செய்வேன். அப்பனே, எதையும் கேட்டு விடாதே. 

அடியவர்கள் :- (சிரிப்பு)

குருநாதர் :-  ( ****** பிறவி  / விதி ரகசியங்கள், தனி வாக்குகள்  ***** )

குருநாதர் :-  அப்பனே, கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு வேலை. அப்பனே, பின் இருக்கின்றது. அவ்வேலை என்னவென்று எனக்கு இப்பொழுது வயதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒரு வேலைக்காக வந்திருக்கின்றாய். அந்த வேலை நோக்கம் இப்ப நான் சொல்ல மாட்டேன். 

குருநாதர் :-  அப்பனே, இதனால் அனைத்தும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து. 

அடியவர் 10   :-  ( தனி கேள்வி ) 

==========================================
# இறைவனை நோக்கி சென்றால் , இறைவன் அனைத்தும் பார்த்துக் கொள்வார்.
==========================================

குருநாதர் :-  அப்பனே,  நிச்சயம் நீ எவை என்று அறிய  இறைவனை நோக்கி சென்றால், இறைவன் பார்த்துக் கொள்வான் அனைத்தும்.

குருநாதர் :-  ( ****** பிறவி  / விதி ரகசியங்கள், தனி வாக்குகள்  ***** )

====================================
# உங்களை நீங்கள் வெல்லும் உபாயம் 
====================================

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, முதலிலே அனைத்தும் உண்மைகளை உங்களுக்கு தெரிந்து, அப்பனே, பின் அதாவது தெளிவுபடுத்தி விட்டால், அப்பனே, சுலபமாக இருக்கும் என்பேன். அப்பனே, நிச்சயம் உங்களை நீங்கள் வெல்ல. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "அகத்தியர் ஏன் எல்லாத்தையும் முன்கூட்டியே சொல்ல மாட்டேங்கிறாருன்னா, ஆரம்பத்துலேயே எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிஞ்சிருச்சுன்னு வைங்க, 'நமக்குத்தான் எல்லாம் தெரியுமே'ங்கிற மிதப்புல நீங்க நடந்துக்கிற விதமே மாறிடும். அப்படி நீங்க மாறுறதுனால, தானாவே உங்க விதியும் மாறிப்போயிடும். அதனாலதான் ஐயா என்ன பண்றாருன்னா, எடுத்தவுடனே உண்மையை உடைக்காம, வர்ற கஷ்டங்கள் மூலமா உங்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்குறாரு. அந்தத் தெளிவு கிடைச்சாதான் நீங்க பக்குவப்பட முடியும்ங்கிறதுக்காகவே அவர் சில விஷயங்களை ரகசியமா வச்சிருக்காரு." ) 

====================================
# அகத்திய மாமுனிவர் பெயரை வைத்து விளையாடும் மனிதர்கள் 
====================================

குருநாதர் :-  ஆனால் அதற்குள்ளே அகத்தியன் அதை கொடுப்பான், இதை கொடுப்பான் என்று மனிதன் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய.

குருநாதர் :-  அப்பனே இதில் கூட என்னை வைத்து. 

குருநாதர் :- அப்பனே, ஏதாவது கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே, சித்தர் வாழ்க்கை, அப்பனே, பின் மாறுபட்டது என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே சொல்வேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, ஆசிகள் , ஆசிகள். 

=======================================
# சித்தர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்?
=======================================

குருநாதர் :-  அப்பனே, எவர் ஒன்றை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் யாங்கள் தேர்ந்தெடுப்போம் என்றால், அப்பனே , நிச்சயம் ராகு கேதுக்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாம்பின் இடையில் பின் சிக்கிக் கொள்வதில் மட்டுமே தேர்ந்தெடுப்போம். 

அடியவர் :- ( ஏற்கனவே ராகு கேதுக்குள் சிக்கிக்கொண்ட அடியவர்கள் குறித்து வாக்கு உரைத்ததை எடுத்து உரைத்தார் )

குருநாதர் :-  ஏனென்றால் அவர்களுக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஏன்னா ராகு கேது பிடிச்சிக்கிச்சுன்னா என்ன பண்ணிருங்க, ஐயா, ஒன்னும் பண்ண முடியாது, மீற முடியாது. கஷ்டத்துல இருந்து.  

====================================
# ராகு கேது பிடியில் சிக்கியவர்கள் 
====================================

குருநாதர் :-  யாங்கள் தான் அப் பாம்பை கையால் பின் நிச்சயம் இழுத்து 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "இந்த ராகுவும் கேது பிடிக்குள்  இருக்காங்களே, அவங்கதான் தேர்ந்தெடுத்துப் பிடிப்பாங்களாம். ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாம்பு பிடிச்சிருச்சுன்னா, அவங்க சரியான கஷ்டத்தைச் சந்திப்பாங்க. அந்த நேரத்துல இறைவன் என்ன பண்ணுவாருன்னா, அவர்தான் நேரா வந்து தேர்ந்தெடுத்துக் காப்பாத்துவாரு. அந்தப் பாம்பை அப்படியே இழு, இழுன்னு இழுத்து, அந்தப் பிடியிலிருந்து உங்களை உருவி அப்படியே வெளியே கொண்டு வந்து விட்டுடுவாரு." )

குருநாதர் :- அதற்கும் நேரங்கள் காத்திருக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   அதற்கும் என்ன பண்ணனும்? உடனே இழுத்து தந்துட மாட்டாரு. 

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே, பின் பாம்பை பின் அப்பனே, நிச்சயம் அப்பனே, கையை வைத்தால் என்ன ஆகும்? உங்களுக்கு தெரியும் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :- பாம்பு மேல உடனே வச்சா என்ன? கையை வச்சா என்ன ஆகும்? 

===========================================
# இறை பக்தி மனிதனுக்கு புரியவில்லையப்பா
===========================================

குருநாதர் :-  அப்பனே, மனிதனுக்கு புரியவில்லையப்பா. இறை பக்தியை அதனால்தான் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. 

குருநாதர் :- அப்பனே, இறைவனை வணங்கினால் அனைத்தும் கொடுத்து விடுவான் என்றுதான் எண்ணம். அனைவருக்குமே 

குருநாதர் :- நிச்சயம் தலைகீழாக பின் நடந்தாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை. 

குருநாதர் :-  அப்பனே, அவையெல்லாம் எடுத்துச் சொல்வேன் வருங்காலத்தில். 

========================================
# நிச்சயம் தர்மத்திற்காக உழை போதுமானது. அனைத்தும் நடக்கும்.
========================================

குருநாதர் :-  அப்ப, நிச்சயம் தர்மத்திற்காக உழை போதுமானது. அனைத்தும் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  தர்மத்துக்காக உழை எல்லாம் நடக்கும். 

==================================================
# பணத்தை வங்கியில் சேர்த்துக்கொண்டே போகாதே 
==================================================

குருநாதர் :-  அப்பனே, காசை பதித்துக் கொண்டிருக்காதே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  காசை பதுக்கிட்டு கொண்டிருக்காதே. பேங்க்ல சேவ் பண்ணி வைக்காதப்பான்னு சொல்லறாரு. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

குருநாதர் :- அப்பனே, எதற்காக வந்தாய் என்பதை எல்லாம் அடுத்தடுத்த வாக்கில் குறிப்பிடுகின்றேன் அப்பனே. ஆசிகள்.

======================================================
# அப்பனே அடிக்கடி வருவேன். நீயும் வரவேண்டும் நிச்சயம். ஆசிகள்.
======================================================

அடியவர் 10   :-  (அகத்தியர் ) ஐயா, (இங்க) வந்தது ( அதுக்கு ) ரொம்ப நன்றி. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வந்துவிட்டேன் என்று அப்பனே. பின் அடிக்கடி வருவேன். நீயும் வரவேண்டும் நிச்சயம் தன்னில். எனக்கு அந்த வேலை, இந்த வேலை என்று சொல்லி சொல்லிக்கொண்டு ஏமாற்றக்கூடாது. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஆசிகள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete