​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 4 March 2026

சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று  நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 4

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அடியவர் 5:- ( திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38 பாடல் பாடினார்கள் )

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குருநாதர் :-   அப்பனே, இதற்கு அர்த்தங்கள். பின் நிச்சயம் செப்புவது யார்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதுக்கு அர்த்தங்கள் ஒருத்தர் சொல்லணும். 

அடியவர்கள் :- ( விளக்கம் அளித்தார்கள். இவ் பாடலின் முழுமையான விளக்கம் … )
 
(நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய யமனால்தான் என்ன செய்ய முடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.)

குருநாதர் :-   தாயே, நிச்சயம் இதுதான் (.......தனி வாக்குகள் ..........)

குருநாதர் :-  தாயே, கேள். 

( பல தனி வாக்குகள் , உரையாடல்கள் )

======================================
# கலியுகத்தின் கட்டாயம்  - நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே 
# அடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் 
======================================

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் , அதாவது கலியுகத்தின் கட்டாயம் எவை என்று புரிய பின் ஏமாற்றுவதே என்பேன் அப்பனே, அதுவும் தாயே, நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கலியுகத்தில் என்ன ஃபர்ஸ்ட் ஏமாத்துறது? பணம் தான் ஏமாத்துவாங்க. அதுலதான் உஷாரா இருக்கணும். அடுத்து எல்லாம்.

குருநாதர் :-  தாயே, ஒரு மனிதனுக்கு உண்மை நிலை எப்பொழுது புரிகின்றது? சொல், 
அனைத்தும் இழந்துதான் பின் உண்மை நிலை தெரிகின்றது. அதனால்தான் உண்மை நிலை முதலிலேயே பின் எடுத்து உரைத்துவிட்டால், அது மனிதனுக்கு தெரியாது. தாயே, 

குருநாதர் :-  ஆனால் சொல்வதற்கு ஆள் இல்லை. அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்திருக்கின்றோம். 

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :- தாயே, பின் நிச்சயம் எவை என்று புரிய அனைவருமே இங்கு இருப்பவர்கள், அனைவருமே ஏமாற்றப்பட்டவர்கள் தான். ஒரு வகையில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இங்கு இருப்பவர்கள் எல்லாமே ஒரு வகையில ஏமாந்து தான் நிக்கிறாங்கமா? 

=====================================================
# சித்தர்களுக்கு  ஏன் பாதிக்கப்பட்டவர்களே தேவை ?
=====================================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் எமக்கு யார் தேவை என்றால், நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களே என்றால், அவருக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :-  ( அகத்தியர் சொல்வது என்னவென்றால்: “ஏமாந்தவர்கள், துன்பப்பட்டவர்கள், மனத்தில் காயம் பெற்றவர்கள் — இவர்கள் தான் எங்களுக்கு தேவை.” ஏமாந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்களுடைய அந்த வேதனையை நீக்கி, அவர்களை நல்வழிப்படுத்தி, பிறருக்கும் உதவக்கூடியவர்களாக மாற்றுவதே நோக்கம். இதைச் செய்தால் மனத்தில் பக்குவமும் தெளிவும் வரும்; அப்போதுதான் இறைவனைப் பற்றிய உணர்வு ஆழமாகும். இப்படியாக நம்முள் மாற்றம் வந்த பிறகு, எங்களுக்கு தேவையான பணிகளைச் செய்ய அவ் அடியவர்களை சித்தர்கள்  தேர்ந்தெடுப்பார்கள். )

====================================
# ஆன்மா - துகள் விருப்பம்  என்ன ?
====================================

குருநாதர் :-  அதன் மூலம் பாவத்தையும் தொலைத்து இறைவனையும் காட்டுவோம். அவ்வளவுதான். ஏனென்றால் பின் நிச்சயம் எவை என்று ஒரு துகள் நிச்சயம் எங்கு சென்றடைய வேண்டுமோ, அங்கு பின் சென்றடையும். ஆனாலும் நிச்சயம் தன்னில் உள்ள துகளுக்கு எவை என்று விருப்பம் இறைவனை காணவே ஆனாலும் காண்பதில்லையே. 

குருநாதர் :-  நிச்சயம் இறைவனை காண்பித்துவிட்டால், அனைத்தும் நீங்களே செய்து கொண்டு விடுவீர்கள். 

குருநாதர் :-  அதற்கு ஏமாந்தவர்கள் தான் யான் தேர்ந்தெடுப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப அகத்தியர் என்ன பண்றாரு? ஏமாந்தவங்க, ஏமாற்றப்பட்டவர்கள், துன்பப்பட்டவர்கள் எல்லாம் வந்து என்ன பண்ணுவாரு? தேர்ந்தெடுப்பாரு. ஜாலியா இருக்கிறவங்களை வந்து தேர்ந்தெடுக்க மாட்டாரு. தேர்ந்தெடுக்க மாட்டாரு. 

========================================
# இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே
========================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின். அதனாலதான் இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே. நிச்சயம் தன்னில் கூட இவ்வன்பு மற்றவரிடம் செலுத்தினால், இறைவன் நிச்சயம் தன்னில் கூட பின் . அன்புக்குரிய பின் மதிப்பு கொடுத்து விடுவான். 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய? ஏதாவது அனைவருக்கும் பின் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் உலகத்தில் பல பல வழிகளில் கூட அனைத்தும், அனைத்தும் கொடுத்துவிட்டால், இறைவனுக்கு எது மதிப்பு?. 

குருநாதர் :-  கலியுகத்தில் நிச்சயம் கட்டாயம் பின் கஷ்டத்தோடு பின்னிப் பிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் விதி. கவலை வேண்டாம். 

================================
# நாம் வாழும் நிலம் யாருடையது?
================================

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். முதலில் பின் , அதாவது இவ்நிலத்து பின் யாருடையது? சொல்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- முதல்ல யாருடையது? இந்த நிலம் கடவுளுக்கு உடையதுதான். 

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். அனைத்தும் இவ்வுலகமே இறைவனுக்கு சொந்தம். ஆனாலும் மனிதன் என்னவோ எனக்கு சொந்தம், எனக்கு சொந்தம் என்று பின் போட்டி, பின் பொறாமைகள் நிச்சயம் தன்னில் கூட அழிந்து விடுகின்றான் கடைசியில். ஆனால் நிச்சயம் அந்நிலம் தான் ஜெயிக்கின்றது. 

குருநாதர் :-  தாயே, பின் ஒன்றுமே சொந்தமில்லை. எது உந்தனுக்கு சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒன்றுமே சொந்தமில்லை. 

குருநாதர் :-  இதனால் யாருக்கு யாருக்கு பின் எதை என்று கூட சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- யாருக்கு யாருக்கு சொந்தம்? அதுவும் யாரும் சொந்தமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- இங்க வந்து யாருக்கு யாருக்கு சொந்தம்னு கேக்குறாரு. 

குருநாதர் :-  ஆனால் மனிதனோ என் பிள்ளை எவை என்று கூற. அப்படியெல்லாம். ஆனால் இறைவனோ சிரிப்பான். நிச்சயம் பின் அடடா என்று 

குருநாதர் :-  தாயே, இதை உணரத்தான் கஷ்டம். 

சுவடி ஓதும் மைந்தன்  :- புரியுதுங்களா? இதை நீங்க உணர்ந்து கொண்டீங்கன்னா அப்ப சொந்தம் இல்லை. 

================================================
# ஏன்  சில ஆலயங்களுக்கு சென்றால் கஷ்டங்கள் வந்துவிடும் ?
# கர்மா கரையும் ரகசியங்கள் 
===============================================

அடியவர் 5:-  ( திருவண்ணாமலை குறித்த கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, எதனால் பயம்? இவை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் எவை என்று அறிய. அதாவது உப்பு மூட்டையை பின் சுமந்து கொண்டு சென்றால் இப்படித்தான். 
சுவடி ஓதும் மைந்தன்  :-  ( உப்பு மூட்டை சுமந்து கொண்டு சென்றால் மழை பெய்து உப்பு கரையும் போல, நாமும் வாழ்க்கையில் சுமந்து செல்லும் கர்மா மெதுவாக கரைந்து கொண்டே இருக்கும். மூட்டை முழுவதும் சுமந்துகொண்டே போகிறோம் என்று தோன்றினாலும், ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் கொஞ்சமாக அது குறைந்து கொண்டே வருகிறது. ஒரு மூட்டை இருந்தது என்றால், மழை பெய்து அரை மூட்டை ஆகிறது; மறுபடியும் போகும்போது அது இன்னும் குறைகிறது. இப்படியாக நம்முடைய கர்மா மெதுவாக கரைந்து, சுமை குறைந்து கொண்டே வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். )
அடியவர் 5:-  ……….

குருநாதர் :-  தாயே, நிச்சயம் அதாவது எவை என்று அறிய. எதை என்று கூட ஈசன் நிச்சயம் அனைவருக்குமே எவை என்று கூட தந்தை. 

குருநாதர் :-  இதனால் கவலைகள் வேண்டாம். நிச்சயம் இவ்வாறு பின் துன்பப்பட்டால் மட்டுமே இறைவனை பின் நிச்சயம் அதாவது இறைவன் அருகில் இருக்க முடியும். இப்பொழுது சொல், மனிதன் அருகில் இருக்க வேண்டுமா? இறைவன் அருகில் இருக்க வேண்டுமா? 

அடியவர் 5:-  கண்டிப்பா கடவுள் அருகில் இருக்க வேண்டும். 

குருநாதர் :-  இதனால் நிச்சயம் அனைத்தையும் சகித்துக் கொள்ளாத சகித்துக் கொண்டாய் அல்லவா? இறைவன் அருகிலே இருக்கின்றான். இறைவனுக்கு சேவை செய். நிச்சயம் தன்னில் கூட பல ஆலயங்களுக்கு செல். நிச்சயம் எவை என்று கூட வழிகாட்டு. நிச்சயம் பின் திருத்தங்களுக்கு சுத்தங்களை செய். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து…. 

அடியவர் 5:-  ( …… ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் இன்னும் உருவாக்குகின்றேன். மனிதர்களை அதற்கும் நீங்கள் பின் தயாராக இருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   நான் இன்னும் நிறைய விஷயம் பண்றதுக்காக இருக்கிறேன். நீங்க தயாராக இருங்கள். 

குருநாதர் :-  இப்பொழுது புரிகின்றதா? இறைவன் ஏன் கஷ்டத்தை வைத்திருக்கின்றான் என்று உனக்கு கஷ்டம் பின் எவை என்று வைத்தால்தான் மற்றவர்கள் பற்றி சிந்திப்பார்கள். மனிதர்கள் 

============================================
# அகத்திய மாமுனிவரிடம் தேர்ச்சி பெற …..
============================================


குருநாதர் :-  நிச்சயம் என்னிடத்தில் நிச்சயம் பின் அதாவது தேர்ச்சி பெற வேண்டுமென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏமாந்து இருக்க வேண்டும். உணவுக்கு கஷ்டப்பட்டு இருக்க வேண்டும். தோல்வி அடைந்திருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு தான். ஆனால் மனிதன் என்னவோ பின் அதாவது பின் இவ்வாறு மந்திரத்தை சொன்னால் யாங்கள் கொடுத்து விடுவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். மனிதன் முட்டாள் 

குருநாதர் :-  ( ………………..) 

குருநாதர் :-  இதனால் தாயே, புண்ணியங்கள் நிச்சயம் தன்னில் கூட பெற்று தந்து விடுகின்றேன். 

========================================
# மந்திரம் செப்பினால் சித்தர்கள் அனைத்தும் கொடுத்து விடுவார்களா?
========================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அதனால் பின் எதை என்று கூற பின் அதாவது அம்மந்திரம் செப்பினால், இம்மந்திரம் செப்பினால் சித்தர்கள் வந்து விடுவார்கள். நிச்சயம் அனைத்தும் பின் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் நிச்சயம் இல்லை. 
……….

குருநாதர் :-  அப்பனே, சித்தனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதனால் சொல்வேன், வருங்காலத்தில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-   சித்தரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்றேன் என்றார். 

குருநாதர் :-  ஆசிகள், தாயே, கேள். இன்னும் 

============================================
# சித்தர்கள் யாரை தேர்ந்து எடுக்க உள்ளார்கள் ?
============================================

அடியவர் 5:-  எப்படி ஒரு நாடி வாசிக்கிறதுக்கு? ஐயா, வந்து தம்பியை வந்து நீங்க செலக்ட் பண்ணீங்களோ, அதே மாதிரி இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் நல்ல தலைவர்களை செலக்ட் பண்ணினா, இவ்வளவு கஷ்டப்பட மாட்டோம் இல்லையா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் எவை என்று ஒரு நாடு அழிந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான், தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் உங்களைப் போன்று எவை என்று அறிய பின் கஷ்டப்பட்டு இருப்பவர்கள் மட்டும் சேர்த்து, அவர் மூலம் நிச்சயம் ஒருவனை தேர்ந்தெடுத்து நல்லதே செய்வோம். கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து….

=========================
# ஒரு பொது வேண்டுதல் 
=========================

அடியவர் 5:-  அடுத்து அம்மா, எல்லாருக்கும் உங்க ஆசிகள் கிடைச்சா போதும். இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளும்…. 

குருநாதர் :-  தாயே கவலை இல்லை. அதனாலதான் நிச்சயம் தன்னில் கூட எல்லாமே கிடைக்காது. எவை என்று கூட பின் சித்தர்கள் பின் நாங்கள் வந்து நிச்சயம் தன்னில் கூட. அதனால் பல வழியில் கூட நிச்சயம் சித்தன் எங்கு இருக்கின்றான்? இன்னும் சித்தன் பொய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எப்படியோ பின் உண்மையை நிரூபிக்க பல வழியிலும் கூட பல கோணங்களில் கூட நாங்கள் செய்வோம். பின் கவலைகள் வேண்டாம், தாயே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அம்மா, வேற எதாவது? 

குருநாதர் :-  தாயே, இன்னும் கூட சொல்கின்றேன். இப்பொழுது போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இன்னொன்னு நான் சொல்லணும். இப்பொழுது போதுமா?  

அடியவர் 5:-  இவ்வளவு பேர் இருக்காங்க. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அடுத்த முறை பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்த முறை நான் சொல்றேன். ஓகே, வாழ்த்துக்கள். அம்மா.

========================
# அடுத்து அடியவர்  ……
=======================

அடியவர் 6:- ( பாடல் பாட ஆரம்பித்தார் ) 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


குருநாதர் :-  தாயே, ஈசன் தான் நிழல். அவ்வளவுதான். நிச்சயம் உன் வாழ்க்கை சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் ஈசன் இப்பொழுது குடை பிடித்துக்கொண்டு பின் குடை வழி நடத்துகின்றான். நிச்சயம் தன்னில் கூட முடியட்டும். பின் எப்பொழுது அக்குடையை பின் மடக்குகின்றானோ, அப்பொழுது நான் சொல்வேன். 

……

குருநாதர் :-  தாயே, நிச்சயம் சொல்வேன். நிச்சயம் கேட்டுவிட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கண்டிப்பா சொல்லுவேன். ஆனா இப்ப ஈசன் வந்து குடையின் பாதுகாப்போட தான் உனக்கு வரணும்ன்றாருமா? அதை கேளுமா? 

அடியவர் 6:- வேற எதுவும் கேட்கல. 

குருநாதர் :-  எவை என்று புரிய? நிச்சயம் தன்னில் கவலைகள் விடு, தாயே. நிச்சயம் உன்னுடைய ஆசிகளும் அருளும் கூட கவலை வேண்டாம். (***** பிறவி ரகசியங்கள் ******  ) அதனால்தான் இறைவன் இப்பிறப்பில் உனக்கு குடை பிடித்துக் கொண்டே இருக்கின்றான். கவலை விடு. 

அடியவர் 6:-  இந்த பிறவியிலே கடைசி பிறவியா - இந்த பிறவி இருக்கா? 

குருநாதர் :-  தாயே, அதாவது குடை பின், அதாவது பின் எவை என்று கூட பின், அதாவது பின் மடிக்கட்டும் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   குடை இப்படி மடிக்கட்டும் . அப்புறம் நான் சொல்றேன். 

அடியவர் 6:- ( அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: