கந்த குற வள்ளி மலைவாக்கு பாகம் 3 தொடர்கின்றது
பின் வள்ளி அழகாகவே அறிந்தும் கூட இவன் மலையில் வந்து நின்றாளாப்பா!!! சுவடியோடு அழகாகவே!!! அமர்ந்து நிச்சயம் தியானங்கள் மேற்கொண்டு...யான் இங்கு தான் இருப்பேன்.... நிச்சயம் பின் வரப்போவதில்லை... அதாவது மக்களை காப்பாற்றி விட்டேன்.... இனிமேலும் நிச்சயம் யான் அங்கு வரப் போவதில்லை !!
(அதாவது வள்ளி தேவி இந்த மலையிலேயே தங்கி விடுகின்றேன் திருத்தணி மலைக்கு மீண்டும் வரப்போவதில்லை என்று முருகனிடம் இங்கிருந்தே சொல்லிவிட்டார்)
முருகன் இங்கு வந்தான்!!! அதாவது பிள்ளையோனும் (கணபதி ) இங்கு வந்தான்!! அதாவது பின் சித்தர்களும் கூட வந்தார்கள்... அனைத்து சித்தர்களும் கூட.. அறிந்தும் எதை என்று கூட... தேவாதி தேவர்களும் கூட இங்கு வந்தார்களப்பா..
இதற்கு சிறப்பு.... தனியான சிறப்பு உண்டு என்பேன் அப்பனே... பின் இவ் ஊருக்கே என்பேன் அப்பனே... அதாவது சுற்று வட்டார பகுதிகள் கூட... அனைவரும் இங்கு வந்தார்களப்பா..
அதனால் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே... சற்று பின் அப்பனே அதாவது ஆடியது என்பேன் இவ் மலைகள் எல்லாம் அப்பனே!!!
(அனைவரும் இந்த மலைக்கு வந்து விட்டனர் இந்த மலை அப்படியே அசைந்தது)
இன்னும் அப்பனே யான் அறிந்தும் கூட அதாவது அசையாமல் இருக்க அப்பனே பின் இன்னும் எதை என்று அறிய அறிய மலைகளை உருவாக்கினேன் என்பேன் அப்பனே.... இதனால் பெரும் மலைகள் அப்பா... இதனைச் சுற்றி!! சுற்றி!!!
(இந்த மலையை சுற்றிலும் பெரிய பெரிய மலைகள் இருக்கின்றது இவை அனைத்தும் குருநாதர் அகத்தியர் பெருமான் உருவாக்கினார்)
இதனால் அப்பனே தேவர்களும் அங்கும் இங்கும் வந்து பின் வள்ளியை கூட அறிந்தும் கூட பின் நிச்சயம் எதை என்று அறிய அறிய.. எதை என்று கூட பின் அதாவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய...
ஆனாலும் விட்டு அதாவது இங்கு விட்டு மனம் வரவில்லை.
( இந்த இடத்தை விட்டு செல்வதற்கு வள்ளி தேவிக்கு மனம் வரவில்லை).
இவ் காடுகளிலும் மலைகளிலும் வள்ளி தெய்வானைக்கு நிச்சயம் பின் அறிந்தும் கூட
தெய்வானை எதை என்று கூட அப்பனே!!
நிச்சயம் வள்ளி தெய்வானை என்றெல்லாம்... ஏன் குறிப்பிடுகின்றீர்கள்???... என்றெல்லாம் அறிவு...
இன்னொரு பின் சக்தி பின் எவை என்றும் அறிய அறிய மூலாதாரம்... எவை இங்கு என்றெல்லாம்... வரும் வரும் காலத்தில் யான் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே...
ஆனால் தெரியாத மனிதனோ
நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே.... பின் இரண்டு என்றெல்லாம் அப்பனே!!! பொய் பேசி கொண்டிருக்கின்றான் அப்பனே... பின் மனிதனப்பா!!!
(முருகனுக்கு இரு மனைவிகள் என்று)
மனிதனுக்கு இன்னும் அறிவுகள் பின் நிச்சயம் குறைந்து கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றது கலியுகத்தில் என்பேன்!!! பைத்தியக்காரனாக திரிவான் என்பேன் அப்பனே!!!
உலகம் அதாவது அப்பனே எதை என்றும் அறிய அறிய..புவி தன்னும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே சுற்றும் விசை குறைவாகும் பொழுது அப்பனே பின் கடலில் உள்ள தண்ணீர் எல்லாம் வெளியே வரும் என்பேன் அப்பனே...இவ் மலைகள் எல்லாம் அப்பனே சாய்கின்ற பொழுது அப்பனே எவை என்று கூட மனிதன் அழியப்போவது உண்மையப்பா!!.... பைத்தியக்காரனப்பா!!!
இவை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே... இவையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய விவரமாகவே இன்னும் அப்பனே...இவ் தேசத்தை காப்பாற்றவே அப்பனே சித்தர்கள் யாங்கள் எதை என்றும் அறிய அறிய
இதனால் அப்பனே அழகாகவே அப்பனே அனைத்தும் முனிவர்களும் கூட அப்பனே இங்கு இருக்கின்றார்களப்பா
இப்பொழுது கூட இதனை சுற்றி தவங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்களப்பா!!
இதனால் அப்பனே மனிதனால் முயற்சிகள் மட்டுமே!!!!
ஆனால் எப்பொழுது எதை பின் எப்பொழுது யாங்கள் ஏற்க வேண்டும்??? என்பவை எல்லாம்... எங்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!
(மனிதர்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும் முயற்சி முயற்சியாக மட்டும் இருக்கும் அதை பரிசீலித்து ஏற்றுக் கொண்டு அருள் புரிவது சித்தர்கள் கையில் !!சித்தர்கள் எடுக்கும் முடிவில் தான் உள்ளது)
அப்பனே யாங்கள் பல மனிதர்களையும் பார்த்து விட்டோம் அப்பனே.... திருத்தலத்தை அமைக்கின்றார்கள் என்பேன் அப்பனே... கடும் முயற்சி எடுத்து...
ஆனாலும் அப்பனே பின் திருத்தலத்தை எப்பொழுது அமைத்தால் நன்கு என்பவை எல்லாம்..தாங்களே அறிவோம் என்பேன் அப்பனே...
அதனால் யாங்கள் அழகாகவே தொந்தரவு இல்லாமல் இங்கு இருக்கின்றோம்... அப்பனே
அவ்வளவுதான் என்பேன் அப்பனே
மனிதன் அப்பனே பின் அதாவது பின் தொந்தரவு எவை என்று அறிய அறிய வந்து விட்டால் அப்பனே... அதாவது இக்கலி யுகத்தில் இன்னும் இன்னும் அப்பனே... எவை என்று கூட பின் அதாவது அனைத்தும் செய்து விட்டு தான்... திருத்தலத்திற்கு எல்லாம் வருவான்
என்பேன் அப்பனே
அவ் திருத்தலத்தை அப்பனே அதாவது... இப்பொழுதெல்லாம் திருத்தலத்தை அப்பனே பின் எதை என்று அறிய அறிய கட்டுகின்றார்கள் என்பேன் அப்பனே...
ஆனாலும் அப்பனே சரியான மனிதர்களை இறைவனே அழைப்பான் என்பேன் அப்பனே...
ஆனால் அப்பனே புத்தி கெட்ட மனிதன் வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம் அப்பனே அதாவது தீய செயல்களை எல்லாம் செய்திட்டு பின் வந்தார்களென்றால் அப்பனே....அக் கர்மா அப்பனே எவை எங்கு அதாவது அவ் பாவம் கட்டியவனுக்கே சேரும் என்பேன் அப்பனே!!!!
(மனிதர்கள் புதிது புதிதாக அமைக்கும் ஆலயங்களுக்கு அனைவருக்கும் அழைப்புகள் கொடுத்து வரவழைத்தாலும் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் தீய செயல்கள் செய்துவிட்டு ஆலயங்களுக்கு வந்தால் அந்தப் பாவம் கர்மா அந்த ஆலயத்தை கட்டியவருக்கு சேரும்
எங்கெங்கு சக்திகள் விழுகின்றது கதிர்வீச்சு விழுகின்றது என்பதை எல்லாம் சித்தர்கள் ஆராய்ந்து இறைவன் தானாக எழும்பிய கோயில்கள் ஆகட்டும் சித்தர்கள் அமைத்த கோயில்கள் ஆகட்டும் மனிதர்களுடைய கர்ம வினையையும் பாவத்தையும் நீக்கும் வல்லமை படைத்தது.
ஆனால் மனிதர்கள் சுய நலமாக இதை ஒரு தொழிலாக பக்தியை வியாபாரமாக பார்த்துக் கொண்டு ஆலயத்தை கட்டி அங்கு வரும் மனிதர்களின் பாவ கர்மா வினைகளையும் அவர்கள் சேர்த்துக் கொள்கின்றார்கள்
இறைவன் தானாக இருந்த ஸ்தலங்கள் அதாவது சுயம்பு சித்தர்கள் கதிர்வீச்சை கவனித்து எழுப்பிய ஸ்தலங்கள் இதில் சித்தர்கள் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களே அனுமதி கொடுத்து ஆலயம் எழுப்ப உத்தரவு கொடுத்திருப்பார்கள்....
உதாரணத்திற்கு ராஜராஜ சோழனுக்கும் நெடார் பிரம்மபுரீஸ்வரர்...
சித்தன் அருள் 1117..
ராசராசனால்... கட்டப்பட்டதே இதனையும் கூட ...( ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட சிவாலயம்)
நன்று!!! இதை உணர்வதற்கு!!!
ஆனாலும் விளக்கங்கள் ஓர் முறை என்னை (அகத்தியரை) நாடினான் ராச ராச சோழன்.
மகேந்திரவர்ம பல்லவன் வன்னிவேடு புவனேஸ்வரி அகத்தீஸ்வரர் சக்தி ஆலயம்
சித்தன் அருள் 1164 குருநாதர் அகத்தியர்.
சப்தரிஷிகள் எழுப்பிய திருத்தலங்கள்.
சித்தன் அருள் 1181
விக்கிரமங்கலம் மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில்.
பாண்டிய மன்னன்.
திருமூலர் வாக்கு கொங்கணர் சித்தர்
சித்தன் அருள் 1149
கொங்கணனுக்கு மனதில் தெரிந்துவிட்டது
யாரோ!!! ஒருவன் வந்து நம்தனை நாடுகிறான் உதவிக்கு என்று கூட...
ஆனாலும் இதையன்றி கூற கொங்கணன் மறைமுகமாகவே ஈசனிடம் உரையாடினான்.
ஆனாலும் வந்திருப்பது நல்லவனே!!!!!
கொங்கணன்!! கண்ணைத் திறந்து பார்த்தான் ..
மன்னா!!! எவை வேண்டும்?? சொல்!!!!
ஆனாலும் இவ்வுலகத்தில் நியாயங்கள் நீதிகள் இல்லை!!!!
இதனையே யாங்கள் மேற்ப்படுத்த, மேற்ப்படுத்த இவை என்றுமே அழியாத அளவிற்கு கூட ...எவையென்று ஓர் திருத்தலம் அமைக்க வேண்டும்....அது எவையென்று. ...
கொங்கணன் விருப்பப்படியே அவ் அரசன் ஒவ்வொன்றையும் அழகாகவே எதையன்றி ஆனாலும்.... இதற்கெல்லாம் தகுதி படைத்தவன் கொங்கணனே!!!
மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம்.
சித்தன் அருள் 1152
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஈசனே ஆட்கொண்டு திருத்தலத்தை அமை !! என்று உத்தரவு இட்டு பாண்டிய மன்னன் குருநாதர் அகத்தியர் பெருமானிடம் ஆலோசனை கேட்டு எழுப்பிய ஆலயம்.
மன்னா!!!!!
எதையன்றி கூற நீ மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கின்றாயா!!!! அதனால் யான் இங்கேயே இருக்கின்றேன்.... எந்தனுக்கு எதையன்றி கூற இங்கே பல பல உருவங்களை எப்படி என்பதை கூட உன் கனவிலே செப்புகின்றேன் அதனை இங்கே தலம் அமைத்தால் நீ எண்ணிய எண்ணங்கள்!!!! உன் மக்களும் நலமடைவார்கள் வெற்றி பெறுவார்கள் பல நோய்களும் பின் நிச்சயம் ஒழிந்துவிடும்.
பாண்டியன் எதை என்று கூற அகத்திய முனிவரே!!!! எதையென்று எவற்றையென்று கூற உணராமலே... எதையென்று கூற ஈசனை விட்டு விட்டேனே.... இப்பொழுது என்ன செய்ய வேண்டும் !!??என்று கூட...
பின் எதையன்றி கூற நீதான் எந்தனுக்கு வழிகள் காட்ட வேண்டும் என்றுகூட என்னிடத்தில் வந்துவிட்டான்!!!
ஆனாலும் பொறு மகனே எந்தனுக்கு எதை என்று கூற அனைத்தையும் யான் சொல்லித் தருகின்றேன்!!!
அவ்வாறே தலத்தை அமை!! என்று.
அடியவர்களே உதாரணத்திற்கு மேற்கூறிய ஐந்து ஆலய வாக்குகளையும் மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
சித்தன் அருள் என்று கூகுள் இல் பதிவு எண்களை டைப் செய்தால் சம்பந்தப்பட்ட வாக்குகள் வரும் மீண்டும் ஒருமுறை படித்து இறையால் சித்தர்களால் உத்தரவு இடப்பட்டு அமைத்த கோயில்கள் பற்றிய முழு விபரங்கள் தெரியவரும்.
சரியான மனிதர்களை இறைவனே அழைப்பான் என்று குருநாதர் அகத்தியர் பெருமான் இந்த வாக்கில் மேற்கூறிய வாக்கின் பொருள் புரியும்.
இறைவனும் சித்தர்களும் அமைத்த கோயில்களுக்கும்
மனிதர்கள் எழுப்பிய கோயில்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள்
பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்)
அதனால்தான் திருத்தலங்களை கட்டுபவனக்கு அப்பனே கஷ்டங்கள் வருகின்றதப்பா!!!
இதை யாரும் அறிவதில்லை என்பேன் அப்பனே
இதனால் அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள்!!!
ஏன்?? கர்மா.. என்றெல்லாம் அப்பனே!!
இதனால் அப்பனே வள்ளியே நிச்சயம் அமைத்துக் கொடுப்பாளப்பா.. இத்திருத்தலத்தை.. நன் முறைகளாகவே அப்பனே... மெது மெதுவாகத்தான் நடக்குமப்பா!!!
அப்பனே பல தடை தாமதங்கள் வருமப்பா!!!
ஆனாலும் யாங்கள் இருக்கின்றோம்... அப்பனே சரியாகவே அப்பனே கந்தனும் இங்கு இருக்கின்றான் அப்பா!!!
கந்த குற வள்ளி மலை வாக்கு பாகம் 4 ல் தொடரும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஇந்த மலையின் கூகுள் மேப் லிங்க் கிடைக்குமா அன்பரே?
இறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
வணக்கம் அடிவர்களே
கந்த குற வள்ளி மலை வட்டமலை.
தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம்.635001.
ஆலய கூகிள் மேப்
https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteவணக்கம் ஐயா ஆலயத்தின் முழு முகவரி மலை இருக்கும் இடம் அனைத்தும் அடுத்த பதிவில் வெளிவரும் கூகுள் மேப் அனைத்தும் நன்றி வணக்கம் ஐயா
ReplyDeleteநன்றி அன்பரே 🙏
Deleteஇறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
வணக்கம் அடிவர்களே
கந்த குற வள்ளி மலை வட்டமலை.
தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம்.635001.
ஆலய கூகிள் மேப்
https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !
OM SRI AGATHEESAYA NAMO NAMAHA. GURUVE SARANAM SARANAM
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
வணக்கம் அடிவர்களே
கந்த குற வள்ளி மலை வட்டமலை.
தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம்.635001.
ஆலய கூகிள் மேப்
https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !