​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 17 March 2025

சித்தன் அருள் - 1815 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை..பம்பை வாக்கு!









16/3/2025.. அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 
வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை..பம்பை.

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!

அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே என்னென்ன? பின் நடக்கப் போகின்றது??? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் பின் பல சித்தர்கள் பல குருமார்கள் அப்பனே நிச்சயம் அப்பனே பின் பல சுவடிகளில் எழுதி வைத்தனர் அழகாகவே. 

அப்பனே (தோஷங்களை) அதை தடுப்பதற்கும் கூட...அப்பனே பின் நலமாக பல வழிகளிலும் கூட அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட எழுதி!!.. எழுதி!!.. அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை தன் அப்பனே அனைத்தையும் அப்பனே பின் மனிதன் வாழ்ந்திடுவான்  என்று எண்ணி...அப்பனே அதை எல்லாம் அழித்து..!!

(சில தீயவர்கள் அச் சுவடிகளை எல்லாம் மனிதர்கள் பயன் படுத்தி நன்றாக வாழ்திடுவார்கள்... இதனால் நமக்கு மரியாதை இருக்காது என்று அழித்து விட்டனர்.இச் சம்பவங்களைப் பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறி இருக்கின்றார்)

இதனால் அப்பனே பின் பல வழிகளிலும் கூட அப்பனே வரும் காலத்தில் அப்பனே மனிதனுக்கு தொந்தரவுகளப்பா!!!

அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே ...என்ன பயன்?? ஏது என்று அறிய அப்பனே..

இன்னும் அப்பனே பின்  கிரகங்கள் அப்பனே பின் அங்கும் இங்கும் செல்வதாலும் கூட அப்பனே அவ் பெயர்ச்சி இவை...அவை .தன் மாறும் என்பதையெல்லாம் அப்பனே... சொல்லிக்கொண்டே!!! சொல்லிக்கொண்டே!!!

அப்பனே இயற்கையை தவறாக அப்பனே சித்தரித்தால் அப்பனே நிச்சயம்...செயற்கையை நாட வேண்டி இருக்கும் அப்பனே.

(இயற்கை என்பது இறைவன் என்பது குருநாதர் வாக்கு இயற்கை என்பதில் கிரகங்களும் அடங்கும் இதில் இயற்கையைப் பற்றி தவறாக கருத்துக்கள் கணிப்புகள் ஜோதிடர்களும் மனிதர்களும் பேசினால் அவர்களுக்கு தண்டனையாக நோய்கள் வந்து செயற்கை யை நாடி அல்லல் பட வேண்டி இருக்கும்)



அதாவது அப்பனே மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இயற்கை இப்படித் தான் பின் நிச்சயம் பின்.. வகுக்கப்பட்டது என்பதையெல்லாம் அப்பனே.

ஆனால் தவறாக பின் சொல்லி சொல்லி அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் அதற்காக அப்பனே இயற்கையே!!!! அவந்தனுக்கு பின் அதாவது செயற்கையை நாடு!!!
என்று அப்பனே பல வழிகளிலும் கூட பின் வருத்தங்கள் தந்து விடும் எவை என்று அறியாமலும் கூட அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..இறைவனைப் பற்றி சிந்தித்தல் நிச்சயம் தன்னில் கூட பலவற்றை கூட பன் மடங்கு கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட...

இவை தன் உணராத அளவிற்கும் கூட நிச்சயம் அப்பனே..இறை சக்திகள் அப்பனே பின் இவ்வுலகத்தில் அப்பனே பின் நிச்சயம் கூடிக் கொண்டே!! கூடிக்கொண்டே!!

ஆனாலும் மனிதனோ!?!?!?! என்னென்ன நினைக்கின்றான்.. என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... சிலவற்றை கூட அப்பனே பின் கிரகங்கள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது.... அருகில் வந்து அப்பனே பின்.....அதை தன் இதை தன் என்று அப்பனே!!!...மனதை மாற்றும் என்பேன் அப்பனே.

(மனிதர்கள் சரியாக சிந்தித்தால் சரியாக இறை பக்தியை கூட்டினால் கிரகங்கள் அருகில் வந்த நன்மையைச் செய்யும்... ஆனால் தவறாக சிந்தித்தால் தவறாக கணித்தால் கிரகங்கள் அருகில் வந்து அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்)


ஆனாலும் மாய வலையில் மனிதன் சிக்குகின்ற பொழுது அப்பனே எப்படி ஏது?? என்று அறியாமலும் கூட அப்பனே...

இப்பொழுது கூட அப்பனே ஒரு ரகசியத்தை யான் சொல்லப் போகின்றேன்!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட கிரகங்கள் அப்பனே அறிந்தும் புரியாமலும் கூட அப்பனே மனிதன் அப்பனே... பெயர்ச்சி ஆகின்றது என்று அப்பனே. 

ஆனாலும் அப்பனே இதனால் என்ன பயன்?? என்பதையெல்லாம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. சனி ஈஸ்வரன் சனி அதாவது அக் கோளானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட...நகரும்.

பின் அதாவது அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது எங்கிருந்து? நகர்கின்றது என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே..

குருவை நோக்கி பின் நகர்கின்றது என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே குருவானவன் அப்பனே பின் அறிந்தும் எதை என்று புரியாமலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. மாறி மாறி... அப்பனே எங்கோ... ஓரிடத்தில் இருக்கின்ற பொழுது.

.(குருபகவான் தற்போது அதன் இடத்தில் இல்லை தன் இடத்தில் இருந்து மாறி நிற்கின்றார் ஆனால் ஜாதக கட்டங்களை போட்டுக் கொண்டு பூமியிலிருந்து மனிதர்கள் கணிக்கும் இடத்தில் குரு பகவான் தற்போது இல்லை) 


 அப்பனே அதாவது அறிந்தும் கூட... அப்பனே சரியாகவே.. அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட சனி கோள்   அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அடுத்து... போக வேண்டியது அப்பனே.. குருவின் இடத்திற்கு!!!

(சனி பெயர்ச்சியாகி செல்ல வேண்டியது குருவின் வீட்டிற்கு) 

ஆனாலும் அப்பனே குருவின் வேகம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அதிகமாக பின் அதாவது பின் அதி வேகத்துடனே நகர்ந்து கொண்டிருக்கையில் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட பின்.. சனி அப்பனே கோளும் கூட...அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அவ் குரு..கோள் ஆனது (வியாழன்) அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே சரியான வேகத்தில் நிச்சயம் தன்னில் கூட இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே இதை தன் அப்பனே மாறி அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் பின் குருவிடத்திற்கு சென்று விடுமப்பா... அப்பனே சனியானவன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே பின் குருவானவன் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய.. இப்பொழுது எங்கு இருக்கின்றான் என்பதை எல்லாம் அப்பனே பார்த்தால் அப்பனே நிச்சயம் புரியும் அப்பா !!!

(தற்போது குருபகவான் எங்கு இருக்கின்றார் என்பதை சரியாக கவனிக்க வேண்டும்)


அடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கு செல்கின்றான்? என்றால் அப்பனே அறிந்தும் இதன் தன்மையையும் கூட உணராவிடில் அடுத்து சென்று விடுவானப்பா!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் இவ்வாறு.... வலதும் ...அப்பனே இடதும்...(வலதுபுறம் இடதுபுறம் என்று சனி கிரகம் )

பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் ஒவ்வொரு....(கோளும்) ஒன்றும் அதாவது சம நிலைக்கு ஏற்பவே!!!... அப்பனே நிச்சயம் செல்கின்ற பொழுது அப்பனே பலன்கள் மாறி மாறி நடக்குமப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே நேராக செல்ல வேண்டியது அப்பனே.... குருவின் தன்மையால் ஈர்க்கப்பட்டு அப்பனே நேரடியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்படியே நிச்சயம் பின் அதாவது பின் சரியாகவே அப்பனே வலது கரத்திற்கு (புறத்திற்கு) அப்பனே பின் அதாவது அப்பனே பின் நேராகச் செல்ல வேண்டிய சனி கிரகம் அப்பனே பின்... அதாவது வலது கரத்தில் சென்று... அப்பனே கடகத்தை நாடி விடும் என்பேன் அப்பனே. 

அதாவது சந்திரனை தொடும்  அப்பனே . இவ்வாறு சந்திரனை தொடும்பொழுது அப்பனே நிச்சயம் மனக்குழப்பங்கள்... அப்பனே அவை மட்டுமில்லாமல் பல வழிகளிலும் கூட தொந்தரவுகள் என்பேன் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய அப்பனே... நிலச்சரிவுகள் ஏற்படும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட தற்பொழுது நிலைமையில் அப்பனே சரியாகவே அப்பனே.. நடுவில் தன்னில் கூட அப்பனே பின்... கடகத்திலும் கூட அப்பனே பின்... ரிஷபத்திலும் கூட அப்பனே.... அதன். நடுவே மீண்டும் அப்பனே பின் எதிரொளித்து... பின் அதாவது குருவானவன் ஈர்த்து அப்பனே பின் நடுவில் நிற்கும் பொழுது... அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது ஆலயத்திற்கு செல்கின்ற பொழுது அப்பனே  மனிதர்கள் சுக போகங்களுக்காக செல்வான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவன் அப்பனே பின் அறிந்தும் அதாவது பின் சனி கோளானது அப்பனே பின் பலவற்றைக் கூட அப்பனே இழப்புக்கள் ஏற்பட நேரிடும் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே பின் நிலச்சரிவுகள்... இன்னும் அப்பனே பின் எவை என்று தெரியாமல் கூட மடிவார்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் மீண்டும் அப்பனே அதை தன் அப்பனே அப்படியே அப்பனே பின் அதாவது பின்னோக்கி வரவேண்டும் என்பேன் அப்பனே...

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது சனிக்கோளானது அப்பனே பின் அதன் இல்லத்தில் தங்கி அப்பனே நேராக செல்கின்ற பொழுது தான் அப்பனே... நிச்சயம் மீனத்தை நாடும்.. என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே இவ்வாறு பின் குறுக்காகவும் அப்பனே நிச்சயம் செல்கின்ற பொழுது அப்பனே... வலது கரமாகவும் அப்பனே இடது கரமாகவும் இருக்கும் குருவானவன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ் சக்தி பின் அதிகமாக ஆகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் தொடுகின்ற பொழுது... அதாவது அடுத்த இல்லத்தை தொடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் சமமாகவே அப்பனே குறைந்துவிடும் என்பேன் வேகம் என்பேன் அப்பனே.

இவ்வாறு குருவானவன் அப்பனே வேகத்தை அப்பனே குறைக்கின்ற பொழுது அப்பனே மீண்டும் அங்கு இருந்து அப்பனே சரியாகவே அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட அப்பனே அதாவது மீண்டும் அப்பனே பின் எதிரொளித்து... அப்பனே வந்த இடத்திற்கே வந்து விடும் அப்பா... சனி கோள் ஆனது அப்பனே!!!


இதனால் அப்பனே மீண்டும் அறிந்தும் பின் புரிந்தும் கூட அப்பனே பின் சரியான வேகத்தில் அப்பனே பின் பூமியானது அப்பனே இயங்கி கொண்டே!!!!!

அப்பனே ஆனாலும் இவ்வாறு பூமி இயங்கிக் கொண்டிருக்கையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சற்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஓரிடத்தில்.. அதாவது அப்பனே சரியாகவே பின் நிச்சயம் தன்னில் கூட.. ஒரு மையம் அப்பனே பின் அறிந்தும் கூட பூமியானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பனே சனிக்கோள் ஆனது கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அப்படியே பின் நிச்சயம் செல்கின்ற பொழுது அப்பனே சரியாகவே...அவ் மைய புள்ளியை அப்பனே பின் நோக்கி அப்பனே பின் செல்கின்ற பொழுது அப்பனே அப்படியே நிற்கும் அப்பா... சனிக்கோளானது அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ்வாறு நிற்கின்ற பொழுது தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஓரிடத்திலே அப்பனே சில வருடங்கள் அப்பனே... நிற்கின்ற பொழுது தான் பலன் தருமே தவிர!!!!!.....................

அப்பனே அங்கும் இங்கும் செல்கின்ற பொழுது பலன்கள் தராதப்பா!!!

அதற்கு பதிலாகவே அப்பனே நிச்சயம் மனநிலை மாற்றங்கள் மனிதனின் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் எதை என்று புரியாமல் கூட அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் வெவ்வேறான கஷ்டங்கள் அப்பனே.

இதனால் பின்...(பெயர்ச்சியால்)
இவ் ராசிக்கு....இவையாகும் அவையாகும்... என்று சொல்கின்ற பொழுது அப்பனே அவையும் பொய்த்து போகும் என்பேன் அப்பனே!!

(சனிப்பெயர்ச்சி குறித்து மனிதர்கள் கூறும் கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்)


அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே....

கிரகங்களைப் பற்றி சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பனே அதாவது நிச்சயம் அவ்வாறு எடுத்துரைக்கவில்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட செயற்கையில் அப்பனே மாட்டிக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட உடம்பை கூட அப்பனே கெடுத்துக்கொண்டு!! கெடுத்துக்கொண்டு!!!

பின் உள்ளோரையும் (இருப்பவர்களையும்) கெடுத்துக்கொண்டு அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட தன்னிடத்தில் வருபவர்களையும் கெடுத்துக்கொண்டு... இவ்வாறு தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது என்பேன் அப்பனே

இதனால் அப்பனே அவ் மைய பகுதியும் அதாவது புவியின் அப்பனே மையப் பகுதியும் அப்பனே பின் சனியின் கோளானது அவ் மைய பகுதியும் அங்கும் இங்கும் அலைகின்ற பொழுது அப்பனே ஓரிடத்தில் நிற்கும் அப்பா...... அப்படியே நின்று விடும் என்பேன் அப்பனே.

நிச்சயம் அப்படி நின்று விட்டால்தான் அப்பனே... நிச்சயம் அப்பனே அனைவருக்கும் யோகங்கள் கிட்டும் என்பேன் அப்பனே.

அதாவது அதிர்ஷ்டத்தை!!!! அப்பனே நிச்சயம் அப்பனே கிட்டும் என்பேன் அப்பனே!!.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இவ்வாறு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய புரிய... இவ்வாறு மீண்டும் அப்பனே... அறிகின்ற பொழுது கூட...அப்பனே அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட.. குருவானவனும் அவ்வளவே அவ்வாறே என்பேன் அப்பனே.

அதாவது அப்பனே பின் அவ்வாறு சுற்றுகின்ற பொழுது அப்பனே... ஓரிடத்தில் பின் சனியவன்.. அப்பனே நிற்பான்.

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் அப்பனே பின் அதாவது...அவ் மைய பகுதியானது அப்பனே சரியான வேகத்தில் அப்பனே இயங்கி அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அறிந்தும் கூட பின்... குருவானவன் சரியான வேகத்தில் இயங்கி. கொண்டிருக்கையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே மையப்பகுதிக்கு வருகின்ற பொழுது அப்பனே குருவானவன் அங்கே நிற்பானப்பா!!!

இவ்வாறு அப்பனே நின்றால் தான்... பலன் என்பேன் அப்பனே. 

ஆனால் அங்கும் இங்கும் அப்பனே பின் அதாவது ஈர்க்கும் (வழி) வகை மாறுகின்ற பொழுது... அப்பனே அங்கும் இங்கும் நிச்சயம் அப்பனே செல்கின்ற பொழுது.... ஒரு பயனும் இல்லையப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே..... நிச்சயம் ஜோதிடம் அப்பனே... பின் அதாவது இவ்வாறு நடக்கும் அவ்வாறு நடக்கும்... பின் நல் நேரங்கள் வந்துவிட்டது.... பின் ராகு காலம் எமகண்டம்... என்பதெல்லாம் அப்பனே... நிச்சயம் பொய்த்து போகும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே சரியாகவே அதனால்தான் அப்பனே முன்னோர்கள் எல்லாம்.... அப்பனே பஞ்சாங்கத்தை படி !!! படி !!... என்றெல்லாம்  சொன்னார்கள் அப்பனே. சரியாகவே. 


அப்பனே ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதை படித்தாலே யோகம் என்பேன் அப்பனே...

ஆனாலும் இன்றளவும் கூட சரியான பின் விகிதத்தில் அப்பனே பின் நவகிரகங்களை அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... யார் ஒருவன் சொல்கின்றானோ... அவந்தனுக்கு இன்னும் யோகம் பெருகும் என்பேன் அப்பனே. 

(பஞ்சாங்கத்தை முறையாக படித்து நவகிரகங்களை சரியாக கணித்து சொல்கின்றவருக்கு யோகங்கள்)

ஆனால் இப்பொழுதெல்லாம் அப்பனே பின் தவறான... விஷயங்களை அப்பனே சொன்னாலும் நிச்சயம் அப்பனே சிறிது காலமே என்பேன் அப்பனே பின் நோய்கள் வந்துவிடுமப்பா!!! அடுக்கடுக்காகவே!!! என்பேன் அப்பனே. 

அனைத்திற்கும் அப்பனே பின் அதாவது... சொல்லிவிட்டேன் அப்பனே... பல வகையிலும் கூட முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்பேன் அப்பனே.

நிச்சயம் தன்னில்  கூட அப்பனே... அதாவது ஒவ்வொரு செயலுக்கும் அப்பனே நிச்சயம் எதிர்வினை உண்டு... என்பதையெல்லாம் அப்பனே அனைத்தும்.... நீங்கள் அறிந்ததே என்பேன் அப்பனே!!

ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய.... ஒவ்வொரு கிரகமும் அப்பனே தவறு செய்யாதே.. என்று உள்நோக்கில் ( மனசாட்சி ஆக) இருந்து.. அப்பனே நிச்சயம் சொல்லுமப்பா!!

ஆனாலும் அப்பனே அதை மதிப்பதே இல்லை என்பேன் அப்பனே.

அவை தன் மதிக்காமல் அப்பனே சென்றால் அப்பனே...

நிச்சயம் அப்பனே கிரகங்கள்... பிடியில் நீங்கள். 

அப்பனே பின்  நிச்சயம் தன்னில் கூட... கிரகங்கள் என்ன செய்ய வேண்டுமோ??? அதை செய்திட்டு நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அறிந்தும் கூட அப்பனே கஷ்டத்தை.!!!!!!!!!


அப்பனே இவ்வாறு அப்பனே பின் அதாவது பின் வலது புறமாக செல்கின்ற பொழுது... சனியவன் அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் அதாவது... துன்பத்தை அள்ளிக் கொடுப்பானே தவிர.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்பத்தை பின் கொடுக்க மாட்டானப்பா!!

ஏன்?? அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அப்பனே அதாவது பின் இவ்வுலகத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அநியாயங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றது......

இதுவும் ஈசனின் கட்டளையே என்று நினைத்துக் கொள்ள அப்பனே!!!!

நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு... அப்பனே செல்கின்ற பொழுது... சில அழிவுகள் அப்பனே அதி பலமாகவே ஏற்படுமப்பா!!!

அப்பனே நிச்சயம் கிரகங்கள்... அப்பனே ஒவ்வொன் பின் ஒன்றாக... அதாவது ஒவ்வொன்றாக செல்ல வேண்டும் என்பேன்... அப்பனே அதாவது ஒரே வரிசையில் செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட... சிறிதளவு விலகினாலும்..‌‌ அதாவது அப்பனே நிச்சயம் பின் வரிசையில் அப்பனே மீண்டும்.. அப்பனே அதாவது அப்பனே பின் உராய்கின்ற பொழுது அப்பனே அறிந்தும் எதை என்று அறிய.... சில வகையிலும் கூட.... கற்கள் (எரி கற்கள்) மேலிருந்து விழுமப்பா!!

அப்பனே  இதை தன் புரிய இதனால் அப்பனே... அனைத்து கிரகங்களும் கூட கடந்து அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே சனியவனை கடந்து கடந்து செல்கையில் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் அவ் ஈர்ப்பு விசை காரணமாக அதிகமாக அப்பனே சனி கோளுக்கு அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அவற்றை நோக்கி அப்பனே செல்கின்ற கிரகங்கள் அப்பனே சற்று நிற்குமப்பா. 

அப்பனே இவ்வாறு நிற்கின்ற பொழுது அப்பனே யோகங்கள் எங்கிருந்து கிடைக்கும் அப்பா???

அப்பனே எவ்வாறு???? பின் சரியாக கணிக்க முடியும்??????????????

இதனால் அப்பனே சரியாக கணிக்க முடியாதப்பா. 


அப்பனே அன்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் பின் வாக்கியத்திலே கணித்தோம். 

அப்பனே இவை தன் உணர உணர அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை தன் அப்பனே என் பக்தர்களுக்கு வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே. 

அதன் வழியே அப்பனே யாங்கள் அதை எப்படி சொன்னோம் என்பதை எல்லாம் அப்பனே... சரியான விகிதத்தில் அப்பனே நிச்சயம் என் பக்தர்களுக்கு எடுத்துரைப்பேன் அப்பனே. 

அவ்வாறு எடுத்துரைக்கும் பொழுது புரியுமப்பா!!

அப்பனே அப்பொழுதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது 

கிணற்றில் சரியாகவே தண்ணீர் இருக்கும் என்பேன் அப்பனே...

ஆனாலும் அப்பனே பின் அதாவது சூரியனை பின் வெளிச்சத்தில் பார்த்து...

( கிணற்றில் நீரில் சூரியனின் பிரதி உருவம் கண்டு கணித்தல்)

அப்பனே  நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட பின் கிரக பெயர்ச்சிகள் இவ்வாறு நடைபெறுகின்றது என்பதை எல்லாம்... கணித்து கணித்து சொல்லலாம் என்பேன் அப்பனே..

ஆனாலும் அவை தன் என் பக்தர்களுக்கு வரும் காலத்தில் உரைப்பேன் என்பேன் அப்பனே. 

இதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.

இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அவை மட்டுமில்லாமல்..

அப்பனே பின் தஞ்சை பெரிய பின் அதாவது திருத்தலத்தில் அப்பனே!!

(தஞ்சை பெருவுடையார் கோயில் திருத்தலம்)

நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது ஒரு குறிமுனை இருந்ததப்பா!!!!


(காந்த ஊசி போல்)
MAGNETIC NEEDLE)
(குறிமுனை... அதாவது காலமானி.போல கிரக மானி...  காந்த ஊசி.  இதன் மூலம் காலம் நேரம் இதையெல்லாம் கணிக்க முடியும்.. உதாரணத்திற்கு மணல் மூலம் எப்படி மணல் கடிகாரம் செயல்படுகின்றதோ அதுபோல...கிரகங்களை கணிப்பதற்கு ஒரு காந்த கருவி... குறிமுனை தஞ்சை பெரிய கோவிலில் இருந்தது. காந்த ஊசி திசைகாட்டி மாதிரி புகைப்படமும் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது


கூடுதல் தகவல்..

தமிழ்நாடு வேலூர் திருவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் அதாவது வழித் துணைநாதர் சோழர்கால திருக்கோயிலில் ஒரு காலச்சக்கரம் சூரிய குறிமுனை கடிகாரம் ஒன்று உள்ளது... சூரிய நிழல்கள் மூலம் காலத்தை கணிக்க முடியும் இன்றளவும் அது செயல்பாட்டில் உள்ளது... அதன் புகைப்படம் இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது) 



தஞ்சையில் அக் குறி முனையில் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட... ராஜராஜ சோழன் சரியாக அப்பனே கணித்தான் அப்பா... அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அக் குறியானது அப்பனே... சரியாகவே அப்பனே ஒவ்வொரு நாளும் கூட அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் சிறிது சிறிதாக அப்பனே.. பின் வேகம் எடுத்து அப்பனே. நிச்சயம் தன்னில் கூட... அப்பொழுது மாறுகின்ற பொழுது மீண்டும் அப்பனே பின் இடது வலது அப்பனே பின் மேற்புறம்... பின் கீழ்புறம் என்றெல்லாம் அப்பனே... சரியாகவே அப்பனே பின் கிரகங்கள் இருக்கின்ற பொழுது... அதை ராஜராஜ சோழன் நிச்சயம் சரியாகவே கணித்தானப்பா!!!

அப்பனே இதன் மூலம் சரியாக கணித்து அவன் பல வெற்றிகள் கண்டானப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சாதாரணமாகவே அப்பனே பின் அதாவது இப்பொழுதெல்லாம் அதாவது...


சித்தர்களுக்கு

""""எங்களுக்கு ராசிகள் இல்லை நாட்கள் இல்லை!!! அறிந்தும் எதை என்று புரிய புரிய அப்பனே!!


ஆனாலும் இருந்தாலும் அப்பனே நிச்சயம் என் பக்தர்களுக்கு அப்பனே இதை எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே. 

சரியாகவே அப்பனே எந் நேரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இவ் ராசியில் பிறந்தவனுக்கு அப்பனே எந் நேரத்தில்?? எதை செய்தால் நன்று... என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ராஜ ராஜ சோழன் சரியாக அறிந்திருந்தானப்பா!!!!!
அப்பனே அக்குறியின்.மூலமாக.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே...


 அதே போலவே அப்பனே சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில்  கூட
அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே காந்தகத்தை... சரியாக சில மூலிகைகளை இட்டு அப்பனே பின் அக் குறியானதில்..(கருவியில்) நிச்சயம் பின் குறியிட்டு வைத்தானப்பா!!

இதனால் அப்பனே அங்கு இருக்கும் பின் கிரகங்கள் அப்பனே... இங்கு படுகின்ற பொழுது... அப்பனே எதன் வேகம்.... அதிகமாகின்றதோ.... அப்பனே எதன் வேகம் சற்று.. குறைவாகின்றதோ... அதில் தன் இட்டு... அதை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஒரு நாள் அப்பனே... அதாவது பின் சனி அப்பனே பின் அதாவது... அவந்தனுக்கு அதாவது சனி கோளுக்கு... ஒரே நாள் என்பேன் அப்பனே மாறுவதற்கு !!!

அப்பனே அதன் தன் தன்மை யை உணர அப்பனே நிச்சயம் அதன் சுற்றுகள்... அப்பனே நிச்சயம் தன்னில்  கூட....

இரண்டு கோடியே அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஒரு.. அறிந்தும் கூட 6 லட்சம். 
அப்பனே அறிந்தும் கூட.. ஒரு நிமிடத்திற்கு என்பேன் அப்பனே. 

இதை அப்பனே நிச்சயம்.... அப்பனே இதனால் அப்பனே பின் கீழே அதாவது அப்பனே அதாவது அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் அப்பனே... நிச்சயம் இதற்கு கீழே வராதப்பா. 

இதற்கு மேலே... அப்பனே போகின்ற பொழுது... அப்பனே நிச்சயம்... அதாவது இவ் முள்ளானது..(குறிமுனை ஆனது) சரியான வேகத்தில் அப்பனே... இயங்குகின்ற பொழுது அப்பனே... ஓரிடத்தில் நின்றுவிடும் என்பேன் அப்பனே!!

(குறிமுனை கருவி (காந்த ஊசி போல்) வேகமாக சுற்றி ஓரிடத்தில் நின்று விடும்.

அப்பொழுது நிச்சயம்  அனைத்து காரியங்களையும் செய்தால் அப்பனே  வெற்றியாகுமப்பா!!!

அப்பனே பின்  மனிதனிடத்தில் அனைத்து திறமைகளையும் கொடுத்திருக்கின்றான் இறைவன் என்பேன் அப்பனே. 

அதை யாரும் உபயோகப்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே. 

ஆனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதே போலத்தான்... அப்பனே குரு பகவானுக்கும் பொருந்தும் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே சரியாகவே அப்பனே பின் அவை நிற்க வேண்டும்.. அங்கே கிரகங்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே சில நேரங்களே அவை நீடிக்கும் என்பேன் அப்பனே...அவ் நேரத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே அதற்கு சக்திகள்... அப்பனே மந்திரங்களை நிச்சயம் தன்னில் கூட அப்பனே... சிலவற்றை எடுத்துரைத்தால் அப்பனே... நீங்கள் பின் உங்களை வென்று... அப்பனே உலகத்தை வெல்லலாம் என்பேன் அப்பனே. 

இவ்வாறு தான் ராஜராஜ சோழன் அப்பனே நிச்சயம் அப்பனே பின் வென்றானப்பா!!!

அப்பனே இதே போலத்தான் பல அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறை நம்பிக்கையை வைத்து அப்பனே எப்பொழுது சரியாக பின்... நின்றிருந்தால் அப்பனே வேலைகள் (சரியாக கணித்து நற்காரியங்கள் மற்றும் போர்கள் அரசர்கள் செய்வது) செய்யலாம் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் பின் யாரும்.... சாதித்து காட்டாத அளவிற்கு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட சாதித்து காட்டினார்கள் என்பேன் அப்பனே.

ஆனால் பின் அவையெல்லாம் அப்பனே சுவடிகளில் அழகாகவே அப்பனே ராஜராஜ சோழன் எழுதி வைத்தானப்பா.

ஆனாலும் அப்பனே குமரிக்கண்டம் அழிந்த பொழுது அப்பனே நிச்சயம் சில ஓலைச்சுவடிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் அழிந்தது என்பேன் அப்பனே. 


ஆனாலும் அப்பனே இன்னும் சில சுவடிகள் அப்பனே அதை தன் அப்பனே நிச்சயம் மனிதர்கள் எடுத்துச் சென்று நிச்சயம் பின் அதாவது... ஓரிடத்தில் வைத்து அப்பனே பின் அதனையே சில சில பின் அறிந்தும் கூட அப்பனே சிலவற்றை எடுத்து எடுத்து அவனை நிச்சயம் பின்... அறிந்தும் கூட... நாங்கள் தயாரித்தோம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

(இங்கிருந்து ஓலைச்சுவடிகள் எல்லாம் திருடிச் சென்று விலை கொடுத்து வாங்கி சென்று வெளிநாட்டில் வைத்துக் கொண்டு நவீன கருவிகள் அனைத்தும் நாங்கள் கண்டுபிடித்தோம் என்றெல்லாம் மனிதர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அதெல்லாம் ஏற்கனவே சித்தர்களால் ஓலைச்சுவடியில் கண்டுபிடித்து எழுதி வைக்கப்பட்டவை) 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கிரகங்கள் எங்கிருந்தால் அப்பனே மனிதர்களுக்கு நோய்கள் வரும்... அப்பனே... ஆனாலும் அப்பனே அதாவது பின் நோய்கள் எல்லாம் கூட வாழலாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.

அதாவது ஓரிடத்திலே சனீஸ்வரன்  நின்றுவிட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சில ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.

நிச்சயம் அவ் ஓரிடத்தில் நின்று இருக்கும் இடத்தில் அப்பனே அதன் எதிரொளிக்கும் திறன் சில இடங்களில் படும் என்பேன் அப்பனே. 

ஆனால் அப்பொழுது அவ் திருத்தலங்களுக்கு சென்றால் அப்பனே உடனே மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா.

அப்பனே அவ்வாறு நிற்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அண்ணாமலையிலேயே பதியும் அப்பனே. 

அதன் பிறகே அப்பனே இன்னும் அப்பனே அதாவது கேதர் நாதன் இடத்திலும் கூட அப்பனே பின் அதாவது தற்பொழுது... நிச்சயம் அப்பனே ஏழுமலையான் (திருப்பதி திருமலை) இடத்திலும் கூட... அப்பனே தற்பொழுது இவர் சபரிமலையிலும் கூட.... அப்பனே செந்தூரிலும் கூட அப்பனே இன்னும் அப்பனே... அறிந்தும் அறிந்தும் இன்னும் கும்பககேஸ்வரன்... அப்பனே அறிந்தும் அப்பனே சங்கரன் கோயிலிலும் கூட. 

(திருவண்ணாமலை கேதர்நாத் திருப்பதி சபரிமலை திருச்செந்தூர் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கும்பகோணம் கும்பேஸ்வரர்
மதுரை மீனாட்சி
காஞ்சிபுரம் காமாட்சி திருத்தலங்கள்)

அப்பனே நிச்சயம் அறிந்தும் மதுரை மீனாட்சி தன்னிலும் கூட... காஞ்சி தன்னில் கூட அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு அப்பனே நிச்சயம்... சிறிது நேரம் அப்பனே பின் அதாவது.. படும் அப்பா. 

அவ்வாறு பின் அந்த நேரத்தில் அப்பனே நிச்சயம் செல்கின்ற பொழுது... யோகங்கள் கிட்டுமப்பா!!!


யோகங்கள் கிட்டி அப்பனே நினைத்தது நிறைவேறி அப்பனே அனைத்தும் நடக்கும் அப்பா...

ஆனாலும் அப்பனே அதை அறியவில்லையே மனிதன்!!!!

முட்டாளாகவே இருக்கின்றான்.. மனிதன் அப்பனே. 

இவ்வாறாக பின் அறிய அப்பனே நிச்சயம் அதற்கும் பின் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே. 

அதனால்தான் என் பக்தர்களுக்கு.... இப்படிச் செய்!!! அப்படி செய்... என்றெல்லாம் சொல்லி சொல்லி... பின் மனதை பக்குவப்படுத்தி... புண்ணியங்களை அப்பனே பின் பெருக்கி அப்பனே அதை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே... உன் குடும்பமே வாழும் என்பேன் அப்பனே. 

பின் நீ அதாவது பிறந்ததற்கு அர்த்தமும் உண்டு என்பேன் அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அவ்வாறு... அப்பனே பின் அதாவது பின் அதாவது அவ்வாறு அர்த்தம் இல்லாமல் வாழ்ந்து சென்றாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும்  இல்லை அப்பா.

மீண்டும் மீண்டும் அப்பனே பின்  அதாவது பிறவிகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

யார் ஒருவன் பின் நிச்சயம் பணத்திற்காகவும்... இன்னும் அப்பனே மாயையில் சிக்கிக் கொண்டு அப்பனே... சென்று கொண்டிருக்கையில் என்ன லாபம்??? என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே சரியான வடிவில் அப்பனே சரியான விகிதத்தில்... அப்பனே கிரகத்தை... கழிக்க அப்பனே கூட்ட....

அப்பனே நிச்சயம் இத்தனை மாதங்கள் என்று எண்ணிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் சரியாகவே அப்பனே சனீஸ்வரன் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.... எண்பதுகளில் அதாவது 80 வயதுகளில் கூட அப்பனே வாழ்க்கை தரத்தை... முடிப்பான் அப்பனே. இது அனைவருக்குமே பொருந்தும் என்பேன் அப்பனே. 

(மனிதர்களின் ஆயுள் 80 வயது வரை சனீஸ்வரன்)

அதாவது ஒரு மனிதனுக்கு அப்பனே 70 வயதுகளில் இருந்து 80 வயது வரை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சனீஸ்வரன் அப்பனே பின் குறி (மனிதர்களுக்கு ஆயுள் 80 வரை என்று)  வைத்துள்ளானப்பா!!!

அதாவது அப்பனே எப்பொழுது இறப்பு தோன்றும் என்பதை எல்லாம் யான் நிச்சயம் அப்பனே ஒவ்வொரு ஆலயத்திலும் கூட கர்மம் சேராமல்...இவ் மைந்தனுக்கு.

 (சுவடி ஓதும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் மூலம் மனிதர்களுக்கு அவருக்கு கர்மா சேராமல் புண்ணிய திருத்தலங்களில் வைத்து வாக்குகள் குருநாதர் கூற போகின்றார்)

அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அதை எடுத்துரைக்கும் பொழுது... அப்பனே என் நிச்சயம் என் பக்தர்களுக்கு.... என் பக்தர்களும் சரியாகவே கணிக்கலாம் என்பேன் அப்பனே. 

உங்களுக்கு அப்பனே நீங்களே கணித்துக் கொள்ளலாம். 

இத்தனை வயதுகளின் தான்... என்று அப்பனே.

ஆனாலும் அப்பனே மீண்டும் 80 வயதிற்கும் மேலே கூட வாழலாம் என்பேன் அப்பனே!!

அறிந்தும் கூட பின் நோய்கள் நொடிகள் இல்லாமல் என்பேன் அப்பனே..

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்...80 வயது ஏன்?? என்று பின் இங்கு சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட அப்பனே...

ஒவ்வொன்றும் அப்பனே நிச்சயம். தன்னில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட 30 வருடங்கள் 30 வருடங்கள் 30 வருடங்கள்... இவை தன் அப்பனே நிச்சயம் கூட அப்பனே மூன்று நாட்களே என்பேன் சனீஸ்வரனுக்கு என்பேன் அப்பனே. 

(30+30+30= 90 வருடங்கள்.

மனிதர்களின் 30 வருடங்கள் சனீஸ்வரனுக்கு ஒரு நாள். 

அதாவது சனீஸ்வரனுடைய மூன்று நாட்கள் மனிதர்களுடைய ஏறத்தாழ 90 வருடம் )

இவை தன் அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட...இவ் மூன்று நாட்களில் அப்பனே பின் அதாவது சிறிய அப்பனே மணித்துளி அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் பின் ஒவ்வொரு சுற்றுக்கும் கூட..‌ அப்பனே அவ் சரியாகவே அப்பனே பின் மனிதன் மூன்றே நாட்கள் தான்.. அப்பனே சனீஸ்வரன் பார்வையில் என்பேன் அப்பனே. 

அவ் மூன்று நாட்களில் கூட அப்பனே இங்கு ஒவ்வொரு அசைவும் கூட அப்பனே... முக்கியமானது என்பேன் அப்பனே.
அவ் அசைகின்ற நேரத்தில் அப்பனே... என்ன செய்ய வேண்டும் என்று அப்பனே....எவ் மந்திரத்தை அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. உச்சரித்து விட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் நிச்சயம்... அதாவது மோட்சம் தான் அப்பா. 

அப்பனே நிச்சயம் அப்பொழுதெல்லாம்... அதாவது பின் எதை என்று புரிய அப்பனே... பின் ஜீவசமாதியும் அடையலாம் என்பேன் அப்பனே மனிதன். 

அப்பனே ஆனாலும் முடியாதப்பா.... இக்கலியுகத்தில் அப்பனே. 

இதனால் தான் அப்பனே தெரிந்து கொண்டு வாழுங்கள் தெரிந்து கொண்டு வாழுங்கள்... என்பதையெல்லாம் யான் சொல்லிச் சொல்லி அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் தெளிவு படுத்திக் கொண்டே இருக்கின்றேன் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே பெயர்ச்சிகள் எப்படி நடக்கின்றது?? என்பதை எல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட..

இதனால் அப்பனே அங்கும் இங்கும் கூட சரியாக நிற்கின்ற பொழுது அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது 

"""குச்சனூர்...

குச்சனூரிலும் கூட சரியாகவே!!!

அப்பனே திரு நள்ளாரிலும் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் திருக்கொள்ளிக்காடு லும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கே படுமப்பா!!!(சனீஸ்வரன் பார்வை) 

அதாவது அது எந் நாள்??? என்பதைக் கூட.. அதாவது மூன்று நாட்கள் மட்டுமே. அப்பனே. 

அதில் ஒரு மணித்துளி அப்பனே அறிந்தும் எதை என்று புரிய புரிய அப்பனே... அங்கு சென்றால் அப்பனே நிச்சயம்... சொர்க்கம் ஆகிவிடும் உங்கள் வாழ்க்கை அப்பனே. உங்கள் குடும்பமும் சொர்க்கமாகிவிடும் அப்பனே... நோய்களும் வராது. உன்னை யாரும் வெல்ல முடியாதப்பா!!!

அப்பனே இப்படி எல்லாம் இப்படி தான் பின் அரசர்கள் பயன்படுத்தினார்கள்... அப்பனே.

இதை சரியாக பயன்படுத்திவன்.. அப்பனே ராஜராஜ சோழன் மட்டுமே... என்பேன் அப்பனே.


(குச்சனூர் சனீஸ்வரர் கோயில் தேனி மாவட்டம். 

திருநள்ளாறு சனி பகவான் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்.

திருக்கொள்ளிக்காடு. 
அக்னிஸ்வரர் திருக்கோயில். பாடல் பெற்ற ஸ்தலம் திருவாரூர். பொங்கு சனீஸ்வரர் 
 இங்கு சனி பகவான் தனி சன்னதியில் வீற்றிருக்கின்றார்.)


அறிந்தும் இன்னும் அப்பனே பல விஷயங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

வரும் வாக்கியத்தில் நிச்சயம் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.

குழப்பிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே. 

(பெயர்ச்சிகள் குறித்து)

நன்முறைகளாக எம்முடைய ஆசிகள்...ஐயனின் (ஐயப்பனின்) ஆசிகள் கூட!!!

ஆசிகள் ஆசிகள்... வெற்றிகள் உண்டு உண்டு! உண்டு! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. வணக்கம் ஐயா ...அய்யா கூறும் ஜோதிட வாக்குகள் மிகவும் ஆழமானது... இவ்வளவு நுணுக்கமான சூட்சம வாக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.. புரிந்தவர்கள் இன்னும் கொஞ்சம் மேலும் விளக்கினால் உதவியாக இருக்கும்....

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete